May 14, 2012

டி டி டி டி & டி  முந்தா நேத்து தெரியாம ஒரு மொக்கையை போட்டாலும் போட்டேன். 4 பேர் பாராட்டியும், 12 பேர் கெட்ட வார்த்தையால் திட்டியும் மெயில் அனுப்பியிருக்காங்க. பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் என்று அடுத்த கடமைக்கு வந்துவிட்டேன். இன்றைக்கு குடிமகன்களுக்கு நமது ஸ்பெஷல் அறிவுரைகளை பார்ப்போம்.

நாட்டுக்கு அதிக வருமானம் தருவது “குடி”மகன்கள் தான். ஆனால் அவர்கள் சரக்கடிக்கிற இடத்த பார்த்தாலே உவ்வே. யுனிவெர்சல் டேக்லைன் தெரியுமா? “Where you buy,matters”. டாஸ்மாக்க எல்லாம் நம்மால மாத்த முடியாது. ஆனா சரக்க எப்படி அடிக்கிறதுன்னு சொல்ல முடியும். ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் சொல்வா. நம்ம வயித்துக்குள்ள போடுறத எப்படி போடுறதுன்னு பார்ப்போம்.  சரக்கடிக்கிற எல்லோரும் 4D யை கண்டிப்பா ஃபாலோ செய்யணும். இப்ப ஒவ்வொரு  டி யா பார்ப்போம்.

1) Drink:
       எங்க வாங்கறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. என்ன வாங்குறோம்ன்றது ரொம்ப முக்கியம். சில பேருக்கு விஸ்கி அடிச்சா மறுநாள் மூச்சா வராது. சில பேருக்கு பியரடிச்சா வந்துட்டே இருக்கும். வோட்காவ பார்த்தாலே நாக்குல ஜலம் வருபவரும் உண்டு. பிராந்தின்னு சொன்னாலே வாந்தியெடுப்போரும் இப்பூவுலகில் உண்டு. அதனால் அவா அவா டேஸ்டுக்கும், பாடி கண்டிஷனுக்கும் ஏத்தது மாதிரி சரக்க வாங்க வேண்டியது முதல் டி.

2) Dilution:
   On the rocks அடிப்பியான்னு கேட்டா கல்லு மேல உட்கார்ந்து அடிக்கிறதா மச்சின்னு கேட்கிற அப்பிராணிகளும் இருக்காங்க. ஏழு மாதிரி பியருக்கே தண்ணி கலக்குற மொடா குடிகாரர்களும் இருக்காங்க. ஆனா சரியான மிக்சிங்ல தான் இருக்கு சூட்சமம். வோட்கான்னா லைட்டா லைம் கார்டியலும், ஸ்ப்ரைட்டும் சரியா இருக்கும். இல்லைன்னா ஆரஞ்சு ஜீஸ் மிக்ஸ் செய்து ஸ்க்ரூ டிரைவர் என்ற காக்டெயில் ஆக்கியும் அடிக்கலாம். அதே மாதிரி பிராந்திக்கு தண்ணியும், சோடாவும் சரி விகிதத்தில் கலக்கணுமாம். மாமா சொல்வாரு. விஸ்கிக்கு தண்ணியும் கோக்கும் தானாம். டக்கீலா எல்லாம் அப்படியே ராவா அடிச்சாதான் ரெஸ்பெக்ட். ரெமி மார்ட்டினுக்கு என்ன கலக்கணும்னு எனக்கு தெரியல. ஏன்னா எனக்கு மிஷ்கின தெரியாது பாருங்க. அதனால் ரெண்டாவது டி என்னன்னு ஞாபகம் வச்சிக்கோங்க. டைல்யூஷன்

3) Duration:
    எப்போ அடிக்கிறோம்ன்றது முக்கியமே இல்லை. 24X7 அடிக்கலாம். ஆனா எவ்ளோ நேரம் அடிக்கிறோம்ன்றது ரொம்ப முக்கியம்ன்னு World Health Organization சொல்லுது. வாயில வச்ச உடனே சர்ருன்னு காலி செய்றது டீசன்சியும் இல்லை. நல்லதும் இல்லை. வயசுப் பொண்ணு உதட்டுல முதல் தடவ கிஸ் பண்றது மாதிரி முதல் பெக் அடிக்கணும். அந்த நெருக்கம் அதிகம் ஆனதும் உதட்ட சுருக்குன்னு கடிக்கிற மாதிரி ரெண்டாவது பெக்க நல்ல ரசிச்சு அடிக்கணும். அப்படியே மூணாவது ரவுண்டு போகும் போது ஒரு மணி நேரமாச்சும்  ஆயிருக்கணும். அப்படி ரசிச்சு அடிச்சாதான் தண்ணி. இல்லைன்னா…

4) Dinner:
    கல்யாணதுக்கு போனா சாப்பிட சொல்லி தொல்லை செய்வாங்க. நாங்க சாப்பிட்டுதான் சாப்பிடுவோம்னு சொன்னா ரெண்டு பந்தில உட்காருவாங்கன்னு நினைச்சுட்டு போற ஆட்கள விட்டு தள்ளுங்க. ஆனா சாப்பிட்ட பிறகு சாப்பிட மறக்காதீங்க. சைட் டிஷ் சாப்பிட்டே வயித்த நிரப்புறது நல்லதில்லை. கடைசியா கொஞ்சம் தயிர் சாதமோ இல்லைன்னா புரோட்டாவோ சாப்பிட்டாதான் அடிச்ச சரக்குக்கே மதிப்புன்னு பிரியாணியோனந்தா சொல்லியிருக்காரு. அதனால் சரக்குக்கு காசு எடுக்கும்போதே ஃப்ரைட் ரைஸுக்கும் காச எடுத்து வைக்கிறவன் தான் உண்மையான குடிமகன்.

4D ஆச்சா? இப்போ குடிச்ச பிறகு செய்யக்கூடாத ஒரு டி இருக்கு. அதான் Driving. மப்புல தரையில டைவிங் அடிக்கலாம். தப்பில்லை. ஆனா டிரைவிங் பண்ணாம இருக்கிறது நல்லது. நாமலாம் நாடு முன்னேற மொத்த காசையும் அரசாங்க கேளிக்கை விடுதில (அதாங்க டாஸ்மாக்) கொட்டுற ஆளுங்க. நாட்டு மேல அவ்ளோ அக்கறை இருக்கிறப்ப நாட்டு மக்கள் மேலயும் கொஞ்சம் கருணை காட்டலாம் இல்லையா? அதனால் டிரைவ் பண்ணாம இருக்கிறது நல்லது. குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.

அடுத்த முறை குடிக்கிறப்ப Cheers சொல்வீங்க இல்லை? அப்போ ஒரு செகண்ட் நான் சொன்னதை ஞாபகத்துல வச்சிட்டு எனக்கும் ஒரு சியர்ஸ் சொல்லுங்க.  புளகாங்கிதம் (அது என்ன பேப்பர்டா?) அடைவேன்

ஆக இப்படியாக குடித்து வந்தால் இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே. மீண்டும் நாளை சந்திப்போமா?

30 கருத்துக்குத்து:

தமிழ்ப்பறவை on January 5, 2011 at 11:24 PM said...

:D :D :D :D :D

Dinesh on January 5, 2011 at 11:25 PM said...

என்ன ஏதுன்னு படிக்காமலே ரெண்டு சைட்ளையும் ஓட்டு போட்டுட்டேன்.... நீங்க ஏமாத்த மாட்டீங்கன்னு ஒரு தகிரியம் தான்.

யோ வொய்ஸ் (யோகா) on January 5, 2011 at 11:28 PM said...

நல்ல கருத்துகள் சகா

ம.தி.சுதா on January 5, 2011 at 11:35 PM said...

நல்ல கருத்து.. இந்த குடிகாரப் பயலுகளை திருத்தவே முடியாதா..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

பலே பிரபு on January 5, 2011 at 11:37 PM said...

//குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.//

சூப்பர்♥♥♥

வார்த்தை on January 5, 2011 at 11:38 PM said...

ஜின் பார்டிகளுக்கு....

2 parts gin
1 part lemon cordial

or

2 parts gin
1 part lemon juice
sugar to taste
chilled soda
and Tom collins' ready

வடகரை வேலன் on January 5, 2011 at 11:46 PM said...

தம்பி அது புளகாங்கிதம். காகிதம் அல்ல.

காவேரி கணேஷ் on January 5, 2011 at 11:58 PM said...

சரி D.

தர்ஷன் on January 6, 2011 at 12:42 AM said...

அருமை சகா,
கடைசியில் ஒரு மெசேஜ் சொன்ன இடத்தில்தான் சகா நீங்கள் இன்னமும் ஸ்டடியாக நிற்கிறீர்கள்
ம்ம் துரதிஷ்டவசமாக முக்கியமான இடத்திலிருந்து வந்த புலம்பலால் சத்தியம் எல்லாம் செய்து கொடுத்து குடிப்பதை விட்டு விட்டேன். உங்கள் பதிவைப் படிக்கும் போது நா ஊறுகிறது.

Arul Senapathi on January 6, 2011 at 1:18 AM said...

மிக அருமையான யோசனைகள் .

பா.ராஜாராம் on January 6, 2011 at 1:31 AM said...

drink-ஐ நல்லா dilute பண்ணி நல்ல duration-னும் விட்டு drive பண்ண முடியாமல் நடந்தே வீடு வந்தால் dinner இல்லை என்ற மனைவியை வாடி போடி என்றதில் பாடி போனதே தலைவா! (சிம்பு அப்பா?..d-யை சொன்னதுக்கு அப்புறம்தான் ரொம்ப அடிச்சாங்கண்ணே)

சுசி on January 6, 2011 at 3:03 AM said...

//மாமா சொல்வாரு. //

ஓஹோ.. ரைட்டு!!

செம சிரிப்புதான் போங்க.

மாணவன் on January 6, 2011 at 5:58 AM said...

தெய்வமே வயித்துல பீர வார்த்த...

மாணவன் on January 6, 2011 at 6:08 AM said...

//இந்த நாள் மாத்திரமல்ல, வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளே. மீண்டும் நாளை சந்திப்போமா?//

ஓகே ரைட்டு.... தொடர்ந்து இது போன்ற மருத்துவ தகவல்களையும் ஹெல்த் தகவல்கலையும் வழங்குங்கள்....

மாணவன் on January 6, 2011 at 6:09 AM said...

//அதனால் டிரைவ் பண்ணாம இருக்கிறது நல்லது. குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.//

செம்ம கலக்கல்....

vinu on January 6, 2011 at 9:40 AM said...

மாணவன் said...
//அதனால் டிரைவ் பண்ணாம இருக்கிறது நல்லது. குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்.//

செம்ம கலக்கல்....


athu appudi illlea machi

செம "Dilution" ippudi sollanum he he he

மோகன் குமார் on January 6, 2011 at 10:14 AM said...

:)))

வள்ளி on January 6, 2011 at 10:30 AM said...

:)
என்ன ஒரு டியூஷன்...

shiva on January 6, 2011 at 10:55 AM said...

ண்ணா! பிராந்தின்னா அது finest french brandy தாண்ணா!

ஜெனோவா on January 6, 2011 at 12:38 PM said...

சகா, நீங்க ஒரு" டி டோட்டலர் " னு சொன்னப்ப முதல்ல நம்பினேன் , இப்ப லைட் ஆ டவுட் வருதே :)
ஆயினும் ஒரு தேவையான பதிவு !

வாழ்த்துகள்!

kumaresh on January 6, 2011 at 1:41 PM said...

குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்
Bar ku poittu vandu comment podarean thala....

kumaresh on January 6, 2011 at 1:46 PM said...

குடிச்சிட்டு யார வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா வண்டி மட்டும் வேணாம்
Bar ku poittu vandu comment podarean thala....

ஜ்யோவ்ராம் சுந்தர் on January 6, 2011 at 2:28 PM said...

சூப்பர்!

அமுதா கிருஷ்ணா on January 6, 2011 at 3:14 PM said...

என்னவாச்சும் D-யில ஆரம்பிக்கும் சொல்லை சொல்லி திட்டணும் போல இருக்குதே.ஆனா தெரியலையே.

Rishi on January 6, 2011 at 9:39 PM said...

Saga,
Bacardi, Bloody Mary, Sambuka, Margarti ellamthukum Patham sollunga

கார்க்கி on January 7, 2011 at 12:35 AM said...

அனைவருக்கும் நன்றி

jeeva on January 10, 2011 at 5:07 AM said...

குடிமகனே ...பெரும் குடிமகனே .....வாங்க போலாம் டாஸ்மாக் ...

“நிலவின்” ஜனகன் on January 12, 2011 at 9:13 PM said...

சம்ம கிக்கு.................மாப்பு மப்பு இறங்கல......பின்னீட்டீங்க.....அருமையான பதிவு.

Ŝ₤Ω..™ on January 26, 2011 at 11:21 PM said...

அடக்கடவுளே.. இதை இன்று தான் படிக்கிறேன்... :-)

நடராஜன் on October 29, 2011 at 9:12 PM said...

ஐந்தாவது Dக்கு லைக்கு! :)

 

all rights reserved to www.karkibava.com