Jul 28, 2013

மொட்டை  எல்லோர் வாழ்விலும் இசை இருக்கிறது. சட்டை பட்டன் போடுவதில் இருந்து படிக்கட்டு ஏறுவது, பல்லு விளக்குவது என பெரும்பாலும் எல்லா வேலைகளையும் ஒரே rhythmல் தான் நாம் செய்கிறோம். இந்த பாட்டு பிடிக்காது, அந்த பாடகர் பிடிக்காது என்று சொன்னாலும், ஏதோ ஒரு வகை இசை பிடிக்கத்தான் செய்கிறது. இசையில்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேற்கத்திய நாடுகளில் 5 வயதிற்குள்ளாகவே எல்லா குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைக்கருவியை பயிற்றுவிக்க தொடங்கிவிடுகிறார்கள். சீன, ஜப்பான் கலாச்சாரத்திலும் இது உண்டு. கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் நம் முன்னோர்களும் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கர்ம சிரத்தையாக பின்பற்றிய தகவல் கிடைக்கக்கூடும்.ஆனால் நிச்சயம் இப்போது நிலைமை அப்படி இல்லை.  விஷயத்திற்கு வந்து விடுகிறேன். http://365rajaquiz.wordpress.com/  இந்த தளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தினம் ஒரு பாடலின் இசைத்துண்டை அதுப்பற்றிய சில வார்த்தைகளோடு பகிர்கிறார்கள். சின்ன சின்ன க்ளுக்களும் உண்டு. அது எந்த பாடலென்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். விடையை அடுத்த நாள் வெளியிடுவார்கள். பாடலை கண்டுபிடிப்பதோடு முடிந்துவிடுவதில்லை சுவாரஸ்யம். மேலதிக விஷயங்களை பின்னூட்டங்களில் பேசுகிறார்கள். இசை நுணுக்கங்கள், படங்களை பற்றிய தகவல்கள் என படிக்க படிக்க போய்க் கொண்டேயிருக்கும். முக்கியமான விஷயம் எல்லாமே இளையராஜா பாடல்கள். இப்போது ஒரு வருடத்தை கடந்துவிட்டார்கள். யோசித்து பாருங்கள். வேறு எந்த இசையமைப்பாளரின் 365 பாடல்களை தேடி எடுத்து இப்படி செய்ய முடியும்? MSV?

  ரெக்ஸ், சொக்கன், KRS என சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த புதிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்தது. ஒரு வருடத்தின் முடிவில் Active participants எண்ணிக்கை மட்டும் 100ஐ தாண்டியிருக்கும் போலிருக்கிறது. அதில் 100 முறைக்கு மேல் சரியான பதில் கொடுத்த பல சச்சின்களும் அடக்கம். நான் இரண்டு முறை முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட் முழுநாளும் அந்தப் பாடலை கண்டறியும் முயற்சியிலே கழிந்தது. அதோடு மூட்டை கட்டிவிட்டேன்.
ஆனால் இந்த மாஃபியா விடுவதில்லை. ஆம், இவர்களை ம்யூசிக் மாஃபியா என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இணையத்தில். இந்த குழுவில், 50 வினாடிகள் ஓடும் க்ளுவை 10 வினாடிகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனே பதில் சொல்லும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள். ஒரு வேளை விடை தெரியாமல் போனால் மற்ற எல்லா பஞ்சாயத்துகளையும் ஒரமாக வைத்துவிட்டு தேடுதல் வேட்டையை மட்டுமே நடத்தும் கடமைவீரர்களும் இருக்கிறார்கள். இவர்களின் ஒரே நோக்கம், இளையராஜவின் எந்தவொரு இசைப்படைப்பையும் கேட்காமல் விட்டுவிடக்கூடாது. அவ்வளவே..

   ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில்  ஒரு get together ஏற்பாடு செய்திருந்தார்கள். பெங்களூர் கோவையில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்தார்கள். Google hangoutல் அமெரிக்க வாழ் ராஜா பக்தர்களும் அவர்கள் நேரத்திற்கு விடிய விடிய ஆன்லைன் வழியே இணைந்திருந்தார்கள். அப்போது சிலரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆச்சரியத்தில் திறந்த வாய் ஷ்ரேயாவில் வாயை விட பெரிதாக இருந்தது.

  பெங்களூர்வாசி அவர். தமிழ் படிக்க தெரியாது. இப்புதிரில் சில க்ளுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதை வைத்து கண்டறிய முயல்வாராம். முடியாதபட்சத்தில் தன் மனைவிக்கோ அல்லது சொக்கனுக்கோ அலைபேசி பதிவை அப்படியே படிக்க சொல்வாராம். அதை வைத்து கண்டறிவாராம். இது போல பல கதைகள். கிட்டத்தட்ட ஒரு குடும்பம் போல ஆகிவிட்டார்கள் இந்த பங்கேற்பாளர்கள்.

  நேற்றைய நிகழ்வு அமாஸ் என்பவரது இல்லத்தில் நடந்தது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டவர்கள். ராஜாவின் பாடல்கள் பாடியும், வயலினில் வாசித்தும் கலந்துரையாடியும் அட்டகாசமாய் நடந்தது. திருவாசகமும் இளையராஜாவும் என்ற தலைப்பில் சொக்கனின் பேச்சும் கூட சுவாரயஸ்மாய் இருந்தது. (http://nchokkan.wordpress.com/2013/07/28/tvskmrja/). ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருந்தேன். இந்த ஒப்புமை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு, நன்கு தெரிந்த நண்பர்கள் ஒன்றாய் அமர்ந்து மது அருந்துவதை விட  அதிகமான ஒரு ஆக்ரோஷமான போதையை அனுபவத்துக் கொண்டிருந்தது போல் இருந்தது. எல்லோரையும் இணைத்து கட்டியிருந்தது இசை, ராஜாவின் இசை.

  365 நாட்களும் கேட்கப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை ஒருவர் எல்லோருக்கும் வழங்கினார். இன்னொருவர் ராஜாவின் அபூர்வமான பாடல்கள் அடங்கிய தகட்டை வழங்கினார். தமிழே தெரியாத ஒருவர் தனது வயலினோடு இதற்காக பெங்களுரில் இருந்து வந்திருந்தார். எல்லோரும் கூடி இசைக் கேட்டார்கள். பாடினார்கள். மகிழ்ந்தார்கள்.
ஒருவர் தனது ஆயுள் முழுவதும் கேட்டு ரசிக்குமளவிற்கு இசைத்திருக்கிறார் ராஜா. நீங்கள் ஆராய்ச்சி செய்வீரோ அனுபவித்து கேட்பீரோ. துன்பத்தை குறைப்பீரோ இன்பத்தை சேர்ப்பீரோ. உங்கள் எல்லா நோக்கங்களுக்கும், எல்லா உணர்வுகளுக்கும், எல்லா வயதுக்கும் ஏற்ற இசையை கொடுத்திருக்கிறார் இந்த மொட்டை. நினைக்கும் போதே புல்லரிக்கிறது.

  ரகுமான் – ராஜா இசை பஞ்சாயத்து இணையத்தில் பிரபலம். எதிர்ந்து வாதாட ரகுமானுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் இப்படியொரு குழு அமைத்து, இசையை கொண்டாட, இளையராஜாவை கொண்டாடத்தான்  ஆட்கள் இருக்கிறார்கள். 


26 கருத்துக்குத்து:

Anonymous said...

#SameBlood "நான் இரண்டு முறை முயற்சி செய்திருக்கிறேன். கிட்டத்தட் முழுநாளும் அந்தப் பாடலை கண்டறியும் முயற்சியிலே கழிந்தது. அதோடு மூட்டை கட்டிவிட்டேன்."

rajasundararajan on July 29, 2013 at 4:24 AM said...

ஆஹா!

amas on July 29, 2013 at 6:47 AM said...

நான் எழுத வேண்டும் என்று நினைத்ததை அற்புதமாக எழுதிவிட்டீர்கள். ரொம்ப நன்றி கார்க்கி :-)அதுவும் உங்கள் பார்வையிலும், உங்கள் எழுத்திலும் நிகழ்ச்சித் தொகுப்பு excellent!

amas32

Aravind on July 29, 2013 at 7:28 AM said...

// ரகுமானுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் இப்படியொரு குழு அமைத்து, இசையை கொண்டாட, இளையராஜாவை கொண்டாடத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். //

ராஜாவை கொண்டாட நினைத்தாலும் நீங்க ரஹ்மனை பற்றி தான் பேசுவீர்கள் போல!

கிணற்று தவளையாக இருந்தால் இது தான் பிரச்சனை.
ரஹ்மான் இசையை கொண்டாட ஆட்கள் இல்லையா?
Twitter எல்லாம் வருவதற்கு முன்பே ரஹ்மான் ரசிகர்கள் இது போல ஒன்று கூடி ரஹ்மான் பாடல்கள் பாடி, சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் துணுக்குகளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். அதுவும் ஒரு ஊரில் இல்லை. சென்னையில் நடக்கும். கோவையில் நடக்கும். பெங்களுருவில் நடக்கும். மும்பையில் மாதம் ஒரு முறை தவறாமல் நடக்கும்.

Rahmania என்று ஒரு இசைக்குழு மும்பயில் உண்டு - ரஹ்மான் இசையை மட்டுமே இசைக்கும் இசைக்குழு அது. தேசிய விருது பெற்ற sound engineer ஒருவர் அதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மிகவும் அருமையான குழு அது.

அட, இந்தியா வை விடுங்க.
அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பங்கு பெரும் குளோபல் ரிதம்ஸ் குழு ஆரம்பிக்கப்பட்டதே ரஹ்மானின் இசையை கொண்டாடுவதற்காக தான்!

ஜெர்மனியின் மிக பாரம்பரியம் மிக்க Babelsburg Orchestra ரஹ்மானின் இசையை கொண்டாட வில்லையா? இந்தியாவில் 6 நகரங்களில் அவர்கள் வந்து ரஹ்மான் இசையை வாசித்தார்கள். இப்பொழுது அதை உலகின் மற்ற நகரங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். இந்த concert-களில் கூட ரஹ்மான் மிக பெருந்தன்மையாக "Tribute to indian composers" என்று ஒரு segment வைத்து அதில் ராஜா உப்டட நிறைய இசையமைப்பாளர்களின் பாடல்களை இசைக்க செய்து அனைவருக்கும் மரியாதை செய்தார். அந்த மனப்பான்மை யாருக்கு வரும்?

ராஜா வை கொண்டாடணும் என்றால் கொண்டாடுங்கள். அதுல ஏன் யா ரஹ்மானை இழுத்து, தேவை இல்லாம உங்க ராஜ புகழாரத்துல ரஹ்மான் புகழ் பாட வெக்கறீங்க!

முரளிகண்ணன் on July 29, 2013 at 7:37 AM said...

சூப்பர். கார்க்கி, உங்க படத்தில் தனுஷ் ஹீரோவாவும், இளையராஜா மியூஸிக் டைரக்டராகவும், விஜய்-அனுஷ்கா ஒரு கேமியோ ரோலிலும் இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

thamizhparavai on July 29, 2013 at 10:56 AM said...

NICE WRITE UP AND COVERAGE...
comedy illaatha kuRaiyai aravindin comment pokkiyathu. tnx..!

karki bava on July 29, 2013 at 11:12 AM said...

@அரவிந்த்,

நான் அதை எழுதாவிட்டால் இந்த விஷயஙக்ள் எல்லாம் தெரியாமலே போயிருக்கும். நியாயமா, நீங்க எனக்கு நன்றி சொல்லணும். அப்புறம், ஒரு விஷயம். நீங்க சொன்ன குழுக்கள் எல்லாம் சிறுகதைகள். ராஜா ஆட்கள் நாவலே எழுதலாம்

Aravind on July 29, 2013 at 11:33 AM said...
This comment has been removed by the author.
Aravind on July 29, 2013 at 11:37 AM said...

Thamizhparavai,
Karki avargaloda last line thaan saar comedy! Adhu yaen comedy nu en comment-a padichu koodavaa ungalukku puriyala?

@Karki,

Oru group of Raaja fans serndhu meet panna adhu periya vishayam. Naan sonnadhu ellam chinna vishayamaa?? Babelsburg Symphony Orchestra chinna vishayamaa?
Meesai la mann ottalai nu solreenga. Idhukku mela pesa onnum illa!

karki bava on July 29, 2013 at 2:03 PM said...

aravind,


உங்களுக்கு புரியல. நான் சொன்ன விஷயம்னு சொல்லல.. சிறுகதைன்னு சொன்னேன். அதாவது ரகுமான் பாடல்களில் பெஸ்ட்ன்னு எடுத்தா 100 பாட்டு பாடலாம். ராஜா நிறைய இசயமைத்திருக்கிரார் என்ற அர்த்தத்தில்.. சின்ன விஷயம்னு சொல்லல

Aravind on July 29, 2013 at 3:35 PM said...

@Karki,
yaen naan sonnadhukku sambandhame illaama badhil sollreenga?

Neenga unga post la Rahman-ai kondaaada yaarum illa, Raja-vai kondaada thaan aatkal irukkiraargal nu sonneenga.

Adhu thappu nu naan sonnen.

adhuku apparam neenga yaen sambandhamey illaama vera topic pesareenga? andha kuzhu-kkal ellam sirukadhai nu solreenga!

Music-a kondaadum fans-a pathi pesittu irukkumbodhu sambandhamey illaama number of songs paththi pesareenga!

Andha topic la madakki-aachu. idhukku mela edhuvum pesa mudiyaadhu nu topic change panreengalo?

karki bava on July 29, 2013 at 5:11 PM said...

Aravind, romba madakatheenga boss. Muthugula goon vizunthuduchu enakku :((((

Kafil on July 29, 2013 at 10:56 PM said...

ராசாவோட இசை அம்மாவோட தாலாட்டு மாதிரி அய்யா, ரகுமானோட இசை மச்சினி / மனைவி சினுங்கல் மாதிரி .. ஒவ்வொரு மூட் / வயசுல ஒவ்வொன்னு புடிக்கும். திடீர்னு சம்பந்தமே இல்லாமே பக்கத்து ஸ்டேட் முசிசியன கூட புடிக்கும் இதுக்கெலாம் பஞ்சாயத்து பேசிகிட்டு ..

இசைப்பிரியன் on July 29, 2013 at 11:32 PM said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் on July 29, 2013 at 11:38 PM said...

ஏண்டா என்கிட்ட சொல்லல.. என்னைக் கூப்பிடல?

இசைப்பிரியன் on July 30, 2013 at 12:34 AM said...

அப்டி கேளுங்க சார் ....

Aravind on July 30, 2013 at 2:53 PM said...

sabbaa! oru vishayam pesa aarambichaa adhuku sambandhamey illama pesareenga ellarum?

Karki avargal ezhudhina post la kadaisi 2 varigal unnecessary and factually wrong.
adhai thaan naan point out pannen.
summaa irundhavana seendi vittutu ipdi mokkai pottu paduthareengale?

adhukku mela argue panna onnum illa.
neenga solradha naan accept panna maaten, naan solradha ellam neenga accept panna poradhu illa.

But, naan state panna facts mattum unmai! avlo thaan.

naan kelambaren!

"ராஜா" on July 30, 2013 at 4:29 PM said...

// ரகுமான் – ராஜா இசை பஞ்சாயத்து இணையத்தில் பிரபலம். எதிர்ந்து வாதாட ரகுமானுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் இப்படியொரு குழு அமைத்து, இசையை கொண்டாட, இளையராஜாவை கொண்டாடத்தான் ஆட்கள் இருக்கிறார்கள்.

இன்னும் இந்த பழக்கத்தை நீங்க விடலையா பாஸ் ... நீங்க சரியாகிட்டீங்க போலன்னு தப்பா நெனச்சுட்டேன் ..

இசைப்பிரியன் on July 30, 2013 at 7:17 PM said...

I've deleted my comment as i also felt it is more moving more towards arguement.

But, Wanted to somehow make others understand that today's music is not composed by individual conposer as everybody is thinking.

It contains a more hierarchy and creative force of them like - COmposer, Programer, Rythm programing seperately at times, Mixing/Recording Engineer ... Apart from them the creativity usage from Singer, INstrument players etc Works as a Company rather than individual.

So NOW no point in assuming OR feeling about the intricacies that Rahman, Yuvan did that note/piece/changeover fantastically without knowing whose creation it is. Be it from India or abroad.

Raja doesn't have that problem, He works almost like a classical composer who needs the song to the shape on to what he decided. (Atleast 99% of times).

So i feel the comfortability of saying this song is nice/ or not from Raja.

Hope i make my point clear again - It is not an arguement about Rahman or Raja. But, about how much of our 'silaagichifying' about one composer may be authentic.karki bava on July 30, 2013 at 11:03 PM said...

aravind,

ரகுமான் குழுக்கள் சிறுகதை என சொன்னது quantity based. அதாவது ரகுமான் பாட்டு 300 தேறுச்சுன்னா, ராஜா பாட்டு 3000 தேறும் என்ற அடிப்படையில்.

நான் உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லல. அல்லது நீங்க புரிஞ்சிக்க கூடிய அளவுல இல்லை. ஏதோ ஒண்ணு உண்மை.

அதனாலதான் விவாதம் போதும்னு மொக்கையை போட்டு முடிச்சேன்.

நான் ராஜா பக்தன் எல்லாம் கிடையாது. ட்விட்டரில் இருந்தால் தெரிந்திருக்கும். ரகுமானையும் பிடிக்கும். அனிருத்தையும் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்துல ராஜா ரசிகர்கள் கலக்கியதா நினைச்சேன்

எனக்கு நீங்க என்ன சொன்னாலும் கன்வின்ஸ் ஆகாது.கைக்குலுக்கிட்டு கிளம்புவோம் :)

karki bava on July 30, 2013 at 11:04 PM said...

ராஜா,

பேரு வச்சிட்டாங்க போல.. சாக்லெட்லாம் கிடையாதா?

இரசிகை on July 31, 2013 at 10:55 AM said...

superb..

karki ku illa antha team kku..
:)

Rex Arul on August 1, 2013 at 8:55 AM said...

அருமையான நடை. நல்ல பதிவு. நன்றி கார்க்கி. ஞாயிறு அன்று சுஷிமா வீட்டில் உங்களை ஹேங்கவுட்டின் மூலமாக சந்தித்ததில் மகிழ்ச்சி :)

Vasandha on August 3, 2013 at 1:37 AM said...

Karki, indha vishayathil naanum muranpadugiren..

eppadi 1000 Rahman vandhaalum Thamizh naattil Raja va replace panna mudiyaadho...

adhu pola 10,000 Raja vandhaalum Rahmana replace panna mudiayadhungaradhu unmai..

They are very different in the way they compose.. and they are 2 diff poles and people. and is there any scale for a good music and bad music?? and why do we unnecessarily hurt the feelings of others when we want to praise our hero? and why do we expect every one to compose music like Raja when he has already done everything possible for tamil/Indian music??

And polladhavan la oru dialog varum,, Bayappaduravandhaan aduthavana vambukkizhuthuttey iruppan nu.. Raja rasigargalukku bayamey irukka koodadhu :-).. same for Rahman fans too..

innum 100 years aanalum Raja will live..

And the same is true with Rahman too..

myself Is fan of both..

Raja bakthanellam kidayaadhunna? what is the meaning for that photo?? :-)

P.K.K.BABU on August 18, 2013 at 8:59 PM said...

RAJA EPPAVUM NOTES EZHUDHIDHAAN MUSIC COMPOSE PANNUVARU AANAA MATHAVANGALAI POALA COMPUTER MIXING PANRATHUKKU AAYIRAM SOTWARE ELLAM VACHU ULAGATHU MUSIC ELLAM SAETHU KULUKKI POATTU ADHULA ORU VITTHIYASAMAAN KALAVIAYA EDUTHU RECONSTRUCT PANNI THIRUMBA POLISH PANNI APPURANDHAAN VELIYA VIDURAVANGADHAAN ULAGA MUSIC POSDURAVNGANNU SONNAA ..........SIRICHHUTTU POADALAAM.........AVVAALSVUDHAN........

nimmathiillathavan on June 25, 2014 at 1:05 AM said...

yenna irundalum theriyatha vizhayathai therinjikurm. athu pothumilla

 

all rights reserved to www.karkibava.com