Jul 5, 2013

சிங்கம் சிங்கம்(அதாங்க சிங்கம் 2)    எங்க பக்கத்து வீட்டுல மகேஷ்னு ஒரு பையன் இருந்தான். எப்ப பார்த்தாலும் சிகரெட் பிடிச்சிட்டே இருப்பான். அதனால அவனுக்கு 23 வயசுலயே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. சோகம்,என்னன்னா மகேஷ எங்களால காப்பாத்த முடியல.

   ஹலோ. டென்ஷன் ஆவாதீங்க.படத்துக்கு முன்னாடி இத போட்டா கம்முன்னு பார்க்குறீங்க.பதிவுல போட்டா மட்டும் விண்டோவ க்ளோஸ் பண்ண போறீங்க.எனக்கும் சமூக அக்கறை இருக்கு. ராஸ்கல்ஸ்.

இன்னைக்கு நாம பார்த்த படம் சிங்கம்2. படத்துல ஓப்பனிங்ல அஞ்சலி வச்சு ஒரு குத்து பாட்டு போட்டுதான் கதைக்கு போறாங்க. நாம அப்படியெல்லாம் பண்ணாம நேரா கதைக்கு போவோம்.துரைசிங்கம் முதல் பார்ட் முடிவுல சொன்ன மாதிரி ஒரு சீக்ரெட் மிஷனுக்காக வேலை செய்றாரு. தூத்துக்குடி ஹார்பர்ல நடக்கிற ஆயுதக்கடத்தலை கவனிக்க வந்தவருக்கு அது ஆயுத கடத்தலல்ல. போதை மருந்து கடத்தலென்பது தெரிய வருகிறது. அதற்கு காரணமான இரண்டு லோக்கல் வெள்ளை வில்லன்களையும், ஒரு கருப்பு வெளிநாட்டு வில்லனையும் பிடிச்சு தூத்துக்குடி ஜெயிலில் அடைப்பதுதான் கதை. இந்த சீக்ரெட் மிஷனை அப்பாவுக்கு கூட தெரியாமல் செய்கிறார்.ஆனா அப்பாவோ போலிஸ் வேலையை விட்டுட்டியே படவான்னு அவர்கிட்ட பேசாம இருக்காரு. இதனால அனுஷ்காவுடனான திருமணமும் நின்னு போயிடுது. ஆனா அதை பத்தி கவலைப்படாத போலீஸ் சிங்கம் ஒரு ஸ்கூல்ல NCC masterஆ இருக்காரு.அங்க ஹன்சிகா என்ற மாணவி,ஆம் மாணவி இவரை லவ்வுகிறார். இதான் கதை. கதையை எல்லாம் சொல்லிட்டு ஜெயிக்கிறதுதானே ஹரி பாலிஸி..இதிலும் அப்படியே டெம்ப்ளேட்.

சிங்கமாக சூர்யா கலக்கியிருக்கிறார். குற்றவாளிகளை தேடிப் பிடிக்கும் போலீஸைத்தானே நாம பார்த்திருக்கிறோம்! இதுல சூர்யா ஓடியே பிடிக்கிறார். தூத்துக்குடியோ, தென்னாப்பிரிக்காவோ.ஓடுறாரு ஒடுறாரு. பால் போட வர்ற மலிங்காவ விட அதிக தூரம் ஒடுறாரு.ஒரு வேளை சூர்யா கால்ஷீட் இல்லாம ஹரி இத விஷால வச்சு எடுத்திருந்தா படம் 10 நிமிஷம் முன்னாடியே கூட முடிஞ்சிருக்குமோன்னு தோணுது. வீட்டுக்கு பைக்ல வர்றப்ப கூட திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்தேன்.பின்னாடி சூர்யா ஓடி வர்றாரான்னு. நீ என்ன குற்றவாளியான்னு கேட்காதீங்க.ஒரு கதை இருக்கு எனக்கும். சூர்யா ஒரு சீன்ல ஹை டெசிபலில் இண்டேர்னேஷனல் வில்லனிடம் பேசுறாரு. ஆப்பரிக்க மொழியை கூட எவ்ளோ அழகா பேசுறாருன்னு சொன்னதுக்கு முன் சீட்டுபொண்ணு திரும்பி முறைச்சிட்டு Dats englishன்னு சொல்லுச்சு. சூர்யா ஃபேன் போல. நானும் என் பங்குக்கு “சாரி.யூ ப்யூட்டிஃபுல் கேர்ள்”ன்னு சொன்னேன். அதுக்குத்தான் சூர்யா துரத்துறாரோன்னு ஒரு டவுட்டு எனக்கு. ஆனா இந்த  படத்துல தானும் ஒரு Mass Maharajaதான்னு நிரூபிக்கிறாரு சூர்யா. எனக்கு இதுல ரொம்ப புடிச்சு போச்சு நம்ம ஜோ புருஷன.

வசனம் தான்.. தேசிய கீதம் பாடுறப்ப உள்ள வந்து பிரச்சினை பண்ற வில்லனை போட்டு 5 நிமிஷம் துவம்சம் பண்றாரு துரைசிங்கம். அப்பலாம் சாதாரண ரியாக்‌ஷன கொடுக்கிற வில்லன், அடிச்சு முடிச்சு சூர்யா பேச ஆரம்பிச்ச உடனே ஒரு ரியாக்ஷன் தருவாரு பாருங்க.நீ அடிச்சப்பலாம் வலிக்கல சிங்கம். கடைசியா 5நிமிஷம் தேசிய கொடிய பத்தி பேசினியே.அதான் வலிக்குது” ன்ற மாதிரியே இருக்குமது. சில சமயம் இதெல்லாம் தானா அமையும் போல. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே பக்கத்துல இருந்த ஒரு பீட்டரு “Strange. This lion barks”ன்னு யாருக்கோ sms அனுப்பிட்டு இருந்தான். டைட்டில் கார்ட சரியா பார்க்கல. அநேகமா கதை திரைக்கதை கர்புர் டைரக்‌ஷன்னுதான் போட்டிருப்பாரு ஹரி. அந்தளவுக்கு உறுமலோ உறுமல்.

ஆனா ஒரு விஷயம் புரியல. பெண் சிங்கம் தான் வேட்டையாடும். ஆண்சிங்கம் டிஸ்பீட் தான் பண்ணும்னு நம்ம உலகநாயகன் சொன்னது உண்மையில்லையா? இதுல சூர்யாதான் வேட்டையோ வேட்டை ஆடுறாரு. ஹன்சிகா ஸ்கூல் பொண்ணாம். அவங்களுக்கு வருவது இன்ஃபேச்சுவேஷனாம். அப்ப அனுஷ்காவுக்கு நடப்பது பால்ய விவாகமான்னு நக்கலா கேட்கலாம். ஆனா யோசிச்சு பாருங்க. நிஜமாவே 10வது படிக்கிற லக்‌ஷ்மி மேனன விட ஹன்சிகா இளமையாதானே இருக்காங்க. அப்படிலாம் இல்லைன்னு சொன்னா நமக்கு ”காதல்” சந்தியா மாதிரி டொக்கு ஹீரோயின்தான் கிடைக்கும். அதனால ஹன்சிகாவுக்கு ஓக்கே சொல்லிட்டு நகரலாம்.அனுஷ்கா..ம்ம்டிவைன்.எத்தனை வருடம் ஆனாலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இதற்காகவே சிங்கம் 30 வந்தா கூட எனக்கு ஓக்கே.

ஹரி படத்தின் பலமென திரைக்கதை, இயக்கத்தைத்தானே சொல்ல முடியும். இதிலும் அப்படியே. ஒரே ஒரு ஃபோன வச்சு என்னலாம் பண்ண முடியும்னு டாக்டரேட் பண்ணியிருக்காரு மனுஷன். ஒரு சீன்ல வில்லனோட ஃபோன் அவுட் ஆஃப் ரேஞ்சுக்கு போயிடும்.(அவன் கடலுக்கு போனதால்). அவன் நம்பருக்கு ஒரு டம்மி sms அனுப்ப சொல்வாரு. அவன் ரீச்சபிள் ஏரியாவுக்கு வந்தவுடன் டெலிவரி ரிபோர்ட் வருமில்லையா என்பார். ஆச்சரியமாக இருக்கிறது. சூர்யா மொபைல் என்ன மாடல் என பார்க்க முடியாத அளவுக்கு ஃப்ரேம் வேகமாக நகருது. அவர் ஃபோன் மட்டும் low batteryஏ காட்டாம ட்யூரோசெல்ல விட அதிக நேரம் உழைக்குது.  ஹரி வீட்டுக்கு ஒரு தடவை போக வேண்டும். டாடா சுமோ வகையறா வண்டிக்களின் படங்களையும், மொபைல் ஃபோன் படங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கலாம்.

ஒரு மசாலா படத்தில் நச்சென மூன்று சீன்கள் வேண்டும். ஆடியன்ஸ் எழுந்து விசிலடிக்க நினைக்க வைக்கணும். இதிலும் இருக்கு. சூர்யா சார்ஜ் எடுத்துக் கொள்ளும் சீன், Police with family.without weaponஎன சொல்லிவிட்டு வில்லன்களை வீட்டு வாசலில் துவம்சம் செய்யும் காட்சி. அப்புறம் இடைவேளை.

முதல் பாகத்தோட ஒப்பிட்டா சூர்யாவின் நடிப்பு எனக்கு இதில் பிடித்திருக்கிறது. + என்றால் ரெண்டு பாயிண்ட் கூட்டி வைக்கப்பட்ட சத்தத்தை சொல்லலாம். 18+ படங்களை போல இதை 5+ படம். ஒரு கைக்குழந்தை சத்தம் தாங்காமல் அழுது கொண்டேயிருந்தது. அதன் பெற்றோரும் படம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். வாழ்க. முன்னலாம் அடிக்கடி தியேட்டர்ல வாய்ஸ் மட்டும் வராம போயிடும்.உடனே ஆடியன்ஸ் எல்லாம் கத்துவார்கள்.சிங்கத்தில் அப்படி ஆனா”அப்பாடா” என்பார்கள். மைனஸ் என்றால் பிரகாஷ்ராஜ் இல்லாததை சொல்லலாம். மூன்று வில்லன்கள் இருந்தாலும் கதையிலும் அவர்கள் வீக்.நடிப்பிலும் வீக்.

காமெடிக்கு விவேக்கும் சந்தானமும்.விவேக் சுமார். சந்தானமும் சுமாரானது தான் ஏனென தெரியவில்லை. “யார்ரா இவன்.கடை கடையா போய் நெய் பிஸ்கட் விக்கிறவன் மாதிரி” என்ற வசனத்தில் இருக்கும் உண்மை தான் என்னை அவரின் தீவிர விசிறியாக்கியது. தானத்தில் பெரியது ஈடன் கார்டன் மைதானம் அல்ல. சந்தானம் என நம்பும் அளவுக்கு அவரை பிடிக்கும். ஆனா இப்போது எல்லாம் ரைமிங்காக சொன்னால் போதுமென ஆனது பிடிக்கவில்லை. ஆனாலும் சிரிக்கிறேன். “காடையை வளர்த்து கல்லால உட்கார வச்சது” மாதிரி 100 வசனம் எல்லோராலும் எழுத முடியும். ஆயில்பெயிண்ட்ல வரைஞ்ச ஆந்தை, கோட்சூட் போட்ட கோட்டான், தட்டு கழுவறவன் தத்துவம் பேசக்கூடாது”. இதற்கா சந்தானம் வேண்டும்? யோசிங்க பாஸ். இந்த படத்துல விழுந்து விழுந்து சிரிக்க முடியாததால் சந்தானம் மத்தவங்க கால்ல விழுந்து விழுந்து காமெடி செய்கிறார். நாம் சிரித்தால் மட்டும் போதும்.

இசையெல்லாம் தூக்கி தூரமா வைங்க. படத்தின் இன்னொரு மைனஸ் நீளம். இப்பலாம் முன்ன மாதிரி யாரும் 3 மணி நேரம் கேட்பதில்லை. பொழுதுபோக்க பல வழிகள் வந்தாச்சு. சிக்னல்ல நிக்குற நேரத்துல ட்வீட் போடுற காலமிது. 2 மணி நேரம் மட்டுமே ஓடிய பிஸா, பில்லா1, போன்ற படங்களில் யாருமே அதை குறையாக பார்க்கல..ஆக, 2.15 மணி நேரம் குவாலிட்ட்டியா கொடுத்தா போதும்.2.45 மணி நேரமென்பது சுமை. இந்த வருடமே பல படங்கள் ரிலீஸ் ஆனவுடன் ட்ரிம் செய்யப்பட்டது. ஆனால் மவுத் டாக் வெளியானதை அது மாற்றாது. கொஞ்சம் வெட்டுங்க பாஸ்.

ஹரி வென்றிருக்கிறார் என்றுதான் சொல்வேன். இவர் பேரை Hurry என எழுதலாம். அத்தனை வேகம். இவர் போலீஸ் ஆகனும்ன்னு ஆசைப்பட்டாராம். அப்படி ஆக முடியாததால அவர் செய்ய நினைத்ததை படமா எடுக்கிறாராம். நீங்க நாசா விஞ்ஞானி ஆகனும்ன்னு ஆசைப்பட்டிருக்கலாம் ஹரி சார். கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கும் எங்களுக்கு.

சிங்கம் – காதுல கொஞ்சம் பஞ்ச வச்சிட்டு போனா நிறைய எஞ்சாய் செய்யலாம்.

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எல்லாமே உண்மை. ஆனால் யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி ஆகியிருந்தால் இனிமேல ஆகாம பார்த்துக்கோங்க J


11 கருத்துக்குத்து:

dr_senthil on July 6, 2013 at 9:18 AM said...

சூரியா மாறுவேசம் போடாமேலே NCC மாஸ்டர் ஆனது ஹரி யால் மட்டுமே முடிந்தது

சக்கர கட்டி on July 6, 2013 at 4:17 PM said...

சூர்யா ஒரு சீன்ல ஹை டெசிபலில் இண்டேர்னேஷனல் வில்லனிடம் பேசுறாரு. ஆப்பரிக்க மொழியை கூட எவ்ளோ அழகா பேசுறாருன்னு சொன்னதுக்கு முன் சீட்டுபொண்ணு திரும்பி முறைச்சிட்டு Dats englishன்னு சொல்லுச்சு. சூர்யா ஃபேன் போல. நானும் என் பங்குக்கு “சாரி.யூ ப்யூட்டிஃபுல் கேர்ள்”ன்னு சொன்னேன். அதுக்குத்தான் சூர்யா துரத்துறாரோன்னு ஒரு டவுட்டு எனக்கு.\\\\\\\\

“நீ அடிச்சப்பலாம் வலிக்கல சிங்கம். கடைசியா 5நிமிஷம் தேசிய கொடிய பத்தி பேசினியே.அதான் வலிக்குது”\\\\\\\\\

ஹரி வீட்டுக்கு ஒரு தடவை போக வேண்டும். டாடா சுமோ வகையறா வண்டிக்களின் படங்களையும், மொபைல் ஃபோன் படங்களையும் ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கலாம்./////

ஹாஹா ரொம்ப நாள் ஆச்சு இப்படி நகைச்சுவையான விமர்சனம் படிச்சு கலக்கல்

"ராஜா" on July 8, 2013 at 10:29 AM said...

இப்படியே போனால் அடுத்து சிம்பு தனுஷ் படங்களுக்கும் முதல் நாள் பாத்திட்டு "இதே போல" விமர்சனம் எழுதுவீங்க போல ... சிங்கம் படம் வேற யாரோ ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படமாம்ல , ஆனால் ஒன்னு அவர் மட்டும் நடித்திருந்தால் இந்த இரண்டாம் பாகம் எடுத்து உங்களை இம்சித்த பாவம் ஹரிக்கு வந்திருக்காது ...

Raghav on July 8, 2013 at 12:15 PM said...

"அனுஷ்கா..ம்ம்டிவைன்." +
"இதற்காகவே சிங்கம் 30 வந்தா கூட "
இதற்காகவே நானெல்லாம் சிங்கம் 300 வந்தாகூட இதுக்காகவே பார்பேன்!

;)

karki bava on July 9, 2013 at 12:08 AM said...

@ராஜா,

இன்னும் சரியாகலையா சகா?

சதீஸ் கண்ணன் on July 9, 2013 at 1:51 AM said...

Youtube review enga boss..!
No activity in SOB Network!

"ராஜா" on July 9, 2013 at 2:13 PM said...

தல நீங்க இவ்ளோ யோசிச்சு எனக்கு ரிப்ளை பன்னுனதிலேயே தெரியுது நீங்க எப்படி இருக்கீங்கன்னு?

அது என்னமோ தெரியலை தல இந்த மாதிரி பதிவுகள் மூலம் நீங்க கஷ்டப்பட்டு மறைக்க பாக்குற கொண்டை அப்பப்ப வெளிய எட்டி பாக்குது ...

"ராஜா" on July 9, 2013 at 2:15 PM said...

உங்க வீரத்தை கண்டு நான் வியக்கிறேன் ..

இரசிகை on July 15, 2013 at 2:08 PM said...

:))
nice

புன்னகை on July 16, 2013 at 5:44 PM said...

//தட்டு கழுவறவன் தத்துவம் பேசக்கூடாது//
இது தேவதை-ல வர வசனம்ல?

Karikalan on July 16, 2013 at 6:01 PM said...

Thala, enna aachu ungalukku. I have seen the movie only after your good review, but this time, it was a complete disappointment.

Enna solrathune theriyala. Kaaichi eduthuttaainga... shabbbaaaa. Inimel Surya padame paakka koodathu nu irukken.. appidi oru adi... 10.5 ton adi... thaanga mudiyala.

 

all rights reserved to www.karkibava.com