Jun 30, 2013

தாயம்ஒரு ஹீரோயிச பில்டப்புடனே தொடங்குவோம். என்னாயிட போகுது? J

  பள்ளி நாட்களில் நன்றாக படிக்கும் பையனாகத்தான் இருந்தேன். ஒரு நன்னாளில் என் ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசான் புத்தகத்தில் இருந்து கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் சரியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது அவர் கபாலத்தில் மின்னி மறைந்தது அந்தக் கேள்வி.

“எதிர்காலத்தில் நீ என்னவாக போற?”

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் எதை சொல்லிக் கொடுக்கிறார்களோ இல்லையோ.. இதை கேட்க வேண்டுமென சொல்லியிருப்பார்கள் போலும். பாதிப் பேருக்கு பவர்ஸ்டாராகும் ஆசை இருந்தது. டாக்டர் என்றார்கள். மீதியில் பாதி பேர் எஞ்சினியர் ஆகிக் கொண்டிருந்தார்கள். கணக்கில் எப்போதும் ஃபெயிலானவன் கூட ஆடிட்டர் என்றான். நான் எழுந்த போது ஒரு அமைதி நிலவியது. ஏனென்றால் அதற்கு முந்தைய வருடம் இதே கேள்விக்கு “பெரியவன் ஆவேன்” என சொல்லி அடி வாங்கியிருந்தேன். இந்த முறை “அப்படிலாம் எதுவும் ஆசையில்லை சார். அப்படியே போய்ட்டு இருக்க வேண்டியதுதான்” என்றேன்.

  கிட்டத்தட்ட அது மாதிரிதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. 2005 வரை சிங்கப்பூர் வாழ்க்கை. ஓரளவிற்கு வீட்டின் பொருளாதார தேவை பூர்த்தியானவுடன் இந்தியா வந்துவிட்டேன். இடையில் ஆஸ்திரேலியாவுக்கு migrate ஆக வாய்ப்பு வந்தும் போகவில்லை. இரண்டு வருடங்கள் TATA steelல் வேலை. அப்போது IT மீது ஆர்வம் வந்து ERP முடித்து, oracle corporationல் இரண்டு வருடங்கள். பின் Recruitment consultant. ஆனால் எந்த லைனுக்கு சென்றாலும் Mechanical Engineering consultant என்பதை விட்டுக்கொடுக்கவில்லை. இப்போது அந்த வேலைக்கும் கல்தா கொடுத்தாகிவிட்டது. வாழ்க்கை எங்கெங்கோ கைப்பிடித்து இழுத்து சென்று கடைசியில் கலைத்துறையில் விட்டுருக்கிறது.

  ஆம். ஒரே நேரத்தில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறேன். எழுத்தாளர் பா.ராகவன் கதை திரைக்கதை எழுத, நீராவி பாண்டியன் இயக்கும் “தேவதை” நெடுந்தொடருக்கு நான் வசனம் எழுதுகிறேன். சன் தொலைக்காட்சியில் திங்கிள் – வெள்ளி வரை பகல் 12 மணிக்கு தேவதை நாளை முதல் வரவிருக்கிறாள். முதலில் பாரா என்னிடம் கேட்டபோது ஙே எனதான் நானும் முழித்தேன்.  அவர்தான் “எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கு ஆர்வம் இருந்தா முயற்சி செஞ்சு பாறேன்” என நம்பிக்கை விதைத்தார். அதோடு நில்லாமல் முதல் ஷெட்யுலில் நான் செய்த சொதப்பல்களை நேரம் செலவிட்டு செப்பனிட்டும் தந்தார். சீரியலின் சூட்சமங்களை சொல்லிக் கொடுத்தார். ஆக, முதன் முறையாக என் பெயர் திரையில் வரவிருக்கிறது.

   அடுத்து சினிமா. இதுவும் நான் எதிர்பாராத நேரத்தில் அமைந்தது. நம்ம கேபிள் சங்கர் படம் இயக்குகிறார். ”காமெடி போர்ஷன்” எழதுறியாடா எனக் கேட்டவருக்கு என் மீது பல வருடங்களாகவே நம்பிக்கை உண்டு. சரியென போய் நின்றேன். இப்போது முழு நேரமாக பணிபுரிகிறேன். பாரா போல கேபிளும் எனக்கு கிடைத்த ஜாக்பாட். கிட்டத்தட்ட எல்லா வேலைகளிலும் என்னால் ஈடுபட முடிகிறது. ஸ்க்ரிப்ட்,டிஸ்கஷன், ஸ்டோரி போர்ட், நடிகர்களுக்கு கதை சொல்லுதல், லோகேஷன் பார்த்தல், இசை என எல்லாவற்றிலும் என்னை அனுமதிக்கிறார். எது வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதை நிராகரிக்கும் காரணங்களை சொல்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. மேலதிக விஷயங்கள் விரைவில்.

    சினிமாவா, சின்னத்திரையா என எந்த முடிவும் எடுக்கவில்லை. இரண்டிலும், ஒரு script writer ஆகத்தான் என்னை நினைத்துக் கொண்டு பணிபுரிகிறேன். வீட்டு டிவிக்கள் 42 இன்ச், 46 இன்ச் என பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது. எதிர்பக்கம், திரையரங்க திரைகளின் அளவு சிறிதாகிக் கொண்டேயிருக்கிறது. அப்புறம் என்ன?  வழக்கம் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருக்கிறேன். இந்த இரண்டு புராஜெக்ட் முடிந்தபின்னால் திரும்பவும் வேலைக்கே போனாலும் சந்தோஷம் தான்.

   இந்த இரண்டு வாய்ப்புகளும் கிடைக்க ஒரே காரணம் இணையம்தான். பாரா, கேபிள் இருவரும் இணையம் மூலம் மட்டுமே எனக்கு அறிமுகம். எனக்கு ஏதோ தெரியுமென அவர்களை நம்ப வைத்ததும் இந்த இணையம் தான். ஆக, தொலைக்காட்சி & சினிமா குல வழக்கப்படி என்னை படித்து, உற்சாகமூட்டிய bloggers, twitters என உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். வேறு என்ன செய்ய? J

   தேவதை பகல் நேரத்தில் வருவதால் எப்படி பார்க்க என அலுத்துக் கொள்ள வேண்டாம். இணையத்தில் ஒரே நாளில் வந்துவிடுகிறது. அந்த இணைப்பை ஓரிரு நாளில் பகிர்கிறேன். அதை விட முக்கியமானது, target audience ஆன உங்கள் வீட்டு அம்மணிக்களையும், அம்மாக்களையும் பார்த்து கருத்துக் கேளுங்கள். மற்ற தொடர்களை விட சற்று காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கதாசிரியர்.

   நாளை என் பெயரை திரையில் காண ஆவலுடன் உள்ளேன். சொல்ல மறந்துட்டேனே.. ஏற்கனவே ஒரு கார்க்கி இருப்பதால், என் அப்பாவின் பெயரையும் இணைத்து “கார்க்கி பவனந்தி” ஆகியிருக்கிறேன். 

First Episode:
61 கருத்துக்குத்து:

SenthilMohan on June 30, 2013 at 4:16 PM said...

வாழ்த்துகள் சகா. Keep it up. :-)

rathinamuthu on June 30, 2013 at 4:17 PM said...

வாழ்த்துகள்! இதற்காகவே சன் டிவியை யூட்யூப்பில் subscribe செய்துள்ளேன்.

இந்தியன் on June 30, 2013 at 4:29 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி பவனந்தி!

M.G.ரவிக்குமார்™..., on June 30, 2013 at 4:44 PM said...

உங்களுடன் எப்போதும் ஒட்டியிருப்பதாகவே நினைத்திருப்பவன் நான்!எனவே தனியாய் வாழ்த்து சொல்வதற்கு நானே கை குலுக்கிக் கொள்வதைப் போல இருக்கிறது!ஆனாலும் ...... வாழ்த்துகள் சகா!..இன்னும் உயர...உயர ......

Unknown on June 30, 2013 at 5:10 PM said...

Vazhthukal anna

கூத்தாடி on June 30, 2013 at 5:35 PM said...

வாழ்த்துக்கள் :-) கார்க்கிபவா வே நல்லாயிருந்திருக்கும் :)

Selvaa Rocky on June 30, 2013 at 5:42 PM said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்

அமுதா கிருஷ்ணா on June 30, 2013 at 5:44 PM said...

சூப்பர் கார்க்கி.

Perungaya Dappa on June 30, 2013 at 5:45 PM said...

Congrats Thala!

பூங்குழலி on June 30, 2013 at 5:51 PM said...

congrats

சே. குமார் on June 30, 2013 at 6:17 PM said...

வாழ்த்துகள்...
வாழ்த்துகள்...

Nondavan on June 30, 2013 at 6:19 PM said...

wow...!! வாழ்த்துகள் நட்பூஸ்... இந்த களத்திலும் அடிச்சு நொறுக்குங்க... ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.

Karthi on June 30, 2013 at 6:22 PM said...

உங்களை நாங்கள் புரிந்து கொண்ட வரை, உங்களுக்கு மற்ற எல்லாவற்றையும் விட எழுத்தில் ஈடுபாடு அதிகம். இப்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஒரே நேரத்தில் பிடித்த எழுதும் தொழில்.. சிறப்பாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் நண்பரே..

pandidurai.v. Durai on June 30, 2013 at 6:25 PM said...

உங்கள் படிகள் எல்லாமே வெற்றிகளால் அமையும் தோழா

pandidurai.v. Durai on June 30, 2013 at 6:26 PM said...

உங்கள் படிகள் எல்லாமே வெற்றிகளால் அமையும் தோழா

கும்க்கி கும்க்கி on June 30, 2013 at 6:35 PM said...

வாழ்த்துக்கள் ப்ரதர்...

மேலும் உயரங்களை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

love is life on June 30, 2013 at 6:35 PM said...
This comment has been removed by the author.
love is life on June 30, 2013 at 6:36 PM said...

உங்கள் திரையுலக வாழ்க்கை இனிதே தொடர வாழ்த்துக்கள் கார்க்கி.

- twitter.com/143di

.:dYNo:. on June 30, 2013 at 7:10 PM said...

வாழ்த்துகள் கார்க்கி... மேலும் பல வெற்றிகளை குவியுங்கள்!

மங்களூர் சிவா on June 30, 2013 at 7:15 PM said...

WOW. NICE. CONGRATS.

சரவணகுமரன் on June 30, 2013 at 7:41 PM said...

Congrats

காசி - Kasi Arumugam on June 30, 2013 at 7:58 PM said...

ச்சியர்ஸு கார்க்கீ :)

ஜோசப் பால்ராஜ் on June 30, 2013 at 8:21 PM said...
This comment has been removed by the author.
ஜோசப் பால்ராஜ் on June 30, 2013 at 8:22 PM said...

நல்லா வருவடா நீ . வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் on June 30, 2013 at 8:38 PM said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சகா.

amas on June 30, 2013 at 8:54 PM said...

வாழ்த்துகள் கார்க்கி பவனந்தி! பெயர் சூப்பர்! :-)

amas32

காவேரிகணேஷ் on June 30, 2013 at 9:30 PM said...

கார்க்கி,
உன் திறமைகள் மீது என்றென்றும் எனக்கு நம்பிக்கை உண்டு..

உன்னதமாய் சிறப்பாய் வருவாய்... வாழ்த்துக்கள்

jroldmonk on June 30, 2013 at 9:44 PM said...

அப்படியே போய்க்கிட்டே இருங்க... வாழ்த்துகள்.

ரோகிணிசிவா on June 30, 2013 at 9:45 PM said...

Good news ,congrats.please do upload it online....waiting to watch and criticize.

Anonymous said...

உங்கள் சேவை திரைக்கு தேவை. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் 'கார்க்கி பவனந்தி'. :)

உமா கிருஷ் on June 30, 2013 at 9:56 PM said...

மன மார்ந்த வாழ்த்துகள் கார்க்கி .முற்றிலும் நீங்கள் தகுதியானவரே.எனக்கு துளி கூட ஆச்சர்யமே இல்லை.எந்த ஒரு விசயத்திலும் உடனுக்குடன் சமயோசிதமாக பதில் சொல்வதில் உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது.உங்கள் வாழ்க்கையின் தேடல் நிச்சயம் ஏதேனும் ஒரு புள்ளியில் நிறைவு பெறும் .நிறைய வாழ்த்தனும்னு தோணுது.மகிழ்வில் பேச்சு வரல:) உங்களை 2வருடமாக பார்த்திருக்கிறேன் என்பதால் உங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. சின்னத்திரை வெள்ளித்திரை இரண்டிலும் ஜெயிப்பீங்க.நிச்சயம் உங்க தளபதி கூடவும் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும்.அதையும் கொண்டாடுவோம் :)

O.R.B Raja on June 30, 2013 at 10:07 PM said...

Great to know these developments, bro. I am sure you will succeed. All the very best :)

Raju N on June 30, 2013 at 10:48 PM said...

வாழ்த்துகள் சார்! :-)

kailash on June 30, 2013 at 11:37 PM said...

Congrats and best wishes for your new assignment .

Swaminathan Thiyagarajan on July 1, 2013 at 12:15 AM said...

Congratulations. ..

Swaminathan Thiyagarajan on July 1, 2013 at 12:16 AM said...

Congratulations. ..

Gopi R on July 1, 2013 at 1:22 AM said...

தாயத்திற்குப் பிறகு ஐந்து, ஆறு, பன்னிரண்டு என்று விருத்தமாக வாழ்த்துகள்!

vanila on July 1, 2013 at 1:44 AM said...

Soooperu. Keep going..

Vasandha on July 1, 2013 at 6:07 AM said...

Vaaazhthukkal!!

Vasandha on July 1, 2013 at 6:07 AM said...

Vaaazhthukkal!!

T.V.ராதாகிருஷ்ணன் on July 1, 2013 at 7:16 AM said...

வாழ்த்துக்கள்

சேலம் தேவா on July 1, 2013 at 8:28 AM said...

விமர்சனத்துல தூள் பறத்துவிங்க...உங்க வசனங்களை பார்த்து விட்டு விமர்சனம் செய்ய காத்திருக்கிறோம் கார்க்கி.வாழ்த்துகள். :)

Mayil on July 1, 2013 at 9:06 AM said...

வாழ்த்துகள் கார்க்கி :-) நண்பேன்டா

தீப்பெட்டி on July 1, 2013 at 9:38 AM said...

வாழ்த்துக்கள்.. :)

மோகன் குமார் on July 1, 2013 at 9:52 AM said...

Very happy for you Karki. All the best.

Kalakkunga.

karki bava on July 1, 2013 at 10:13 AM said...

Thanks allllllllll

தாரணி பிரியா on July 1, 2013 at 10:28 AM said...

வாழ்த்துகள் கார்க்கி :)))))))))))))))))))))))))))

taaru on July 1, 2013 at 10:36 AM said...

Great KarkiBavanandhi. Kongrats.

eager to watch online;
வாழ்த்துக்கள் உங்களுக்கு.. ஆனால் விமர்சனம் எல்லாம் பிச்சு உதறப்படும்... ஆதலால் நல்ல எழுதுங்க...

Murugesh K on July 1, 2013 at 10:54 AM said...

வாழ்த்துக்கள் கார்க்கி !!!

thamizhparavai on July 1, 2013 at 11:10 AM said...

congrats bro....! keep rocking...!

ஆதி தாமிரா on July 1, 2013 at 11:32 AM said...

மென்மேலும் உயரங்கள் தொட அன்பு வாழ்த்துகள் கார்க்கி!

பொன்கார்த்திக் on July 1, 2013 at 12:30 PM said...

Vallthukkala Sagaa!!!

Santhappanசாந்தப்பன் on July 1, 2013 at 1:33 PM said...

சகா, வாழ்த்துகள்...

Santhappanசாந்தப்பன் on July 1, 2013 at 1:36 PM said...

சகா வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்..

nila on July 2, 2013 at 5:05 PM said...

Congrats Karki :)

IKrishs on July 2, 2013 at 10:14 PM said...

டயலாக் ல உங்க ஸ்பெஷல் டச் கள் பளிச்..வேலை க்கு வர முன்பு பல சீரியல் களை விடமா பாத்தவன் experienced ங்கற வகையில வித்தியாசமான சீரியல் முதல் episode இப்போதான் பாக்குறேன். செம டீம் !
வாழ்த்துக்கள்!

புதுகை.அப்துல்லா on July 2, 2013 at 11:22 PM said...

நீ வசனம் எழுதுறியோ இல்லையோடா... அந்த காலத்து பழைய பிளாகர்ஸ் பலரையும் இங்க கமெண்ட் எழுத வச்சுட்ட பாரு!! நல்லாருடா :)

பிரதீபா on July 4, 2013 at 4:09 AM said...

Very happy for you entering a domain,where you could give your best !! Congrats and wishes for success

வி.பாலகுமார் on July 4, 2013 at 8:31 PM said...

வாழ்த்துகள் !

நாஞ்சில் நாதம் on July 5, 2013 at 12:17 PM said...

வாழ்த்துகள்

Netaji Prabu on July 11, 2013 at 6:17 PM said...

வாழ்த்துக்கள் Sir....

 

all rights reserved to www.karkibava.com