Jun 27, 2013

கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா


”Machi.. busya? ungkitta konjam pesanumda”

ஜிடாக்கில் அவனிடம் இருந்து இப்படி ஒரு மெசெஜ் வந்தவுடன் புரிந்துவிட்டது ஏதோ முக்கியமான பிரச்சினை என்று. நைட்டு எட்டு மணிக்கு கால் பண்றேண்டா என்றேன். அவன் சொன்னது போல் பிரச்சினையை உங்களுக்கு சொன்னால் விசு படமோ, குட்டிப்புலியோ பார்த்தவர் போல் ஆகிவிடுவீர்கள் என்பதால் சுருக்கமாக சொல்கிறேன். ( புரியிற மாதிரி நீ சொல்லிட்டாலும்..)

இவன் பேரு மதி. ஓக்கே? ஓக்கே.

அவ பேரு ஆண்ட்ரியா. ஓக்கே? ஓக்கே.

  ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. வீட்ல பெரிசா ஒன்னும் எதிர்ப்பு இல்ல. ஆனா ஆண்ட்ரியாவுக்கு சர்ச்சில் திருமணம் நடக்கனும்ன்னு ஆசைங்க. நம்மாளுக்கு டாஸ்மாக்கே கோயில், வோட்காவே தெய்வம். இப்ப பையனோட அம்மா என்ன சொல்றாங்கன்னா, சர்ச்ல கல்யாணம் பண்ணா மதம் மாத்திடுவாங்க. நான் விசாரிச்சிட்டேன். மதம் மாறாம கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னு சொல்றாங்க. ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல கூட வச்சிக்கோங்க. கோயில பண்ணியாகனுன்னு நான் சொல்லல. ஆனா இவன் மதம் மாறக்கூடாதுன்னு சொல்றாங்க.கரெக்டுதானே?

  என்ன கரெக்டு?   சின்ன வயசில இருந்து கல்யாணம்ன்னா சர்ச்ல மட்டுமே பார்த்து வளர்ந்துட்டேன். அங்க நடந்தாத்தான் எனக்கு கல்யாணம் ஆன ஃபீல் இருக்கும்ன்னு ஃபீலிங்கா சொல்லுது பொண்ணு அதாங்க.. ஆண்ட்ரியா .அப்ப ஒரு கிறிஸ்டியன் பையனா பார்த்து லவ் பண்ண வேண்டியதுதானேன்னு சொல்றது அவளோட வருங்கால நாத்தனார், அதான் நம்ம ஹீரோவோட தங்கச்சி. ரைட்டுதானே?

  என்ன ரைட்டு? இதெல்லாம் பார்த்தா லவ் வரும்?அவ கோயில், சர்ச் ரெண்டுலயும் பண்ணலாம்ன்னுதானே சொல்றா? அப்புறம் என்னன்னு எகிறுவது நம்ம ஹீரோ. இந்த கதைல  வில்லனே இல்லை என்பதால் அம்மாவிடம் எகிறுகிறார். அது மட்டுமில்லாமல் மதம் மாறத் தேவையில்லையாம்ன்னு சொல்றாரு ஹீரோ. சரிதானே?

   என்ன சரி? உங்களுக்கு தெரியாதுடா. சர்ச்ல அப்படி பண்ன மாட்டாங்க. பேரையே மாத்திடுவாங்களாம். உனக்காக ஒத்துக்கறேண்டா. ஆனா ரெண்டு கண்டிஷன். சர்ச்ல உன் பேர மதின்னு தான் சொல்லனும். வேற பேரு சொன்னா புது கோட்டுன்னு கூட பார்க்காம அப்படியே உன்னை தரதரன்னு இழுத்துட்டு வந்துடுவேன். ரெண்டாவது , சர்ச்ல முதல்ல நடக்கட்டும். அதுக்கப்புறம் நாம கோயில்ல பண்ணிக்கலாம். இதுக்கு ஒத்துக்கறீயான்னு கேட்கறாங்க அவங்க அம்மா. வாஸ்தவம்தானே?

  என்ன வாஸ்தவம்? சர்ச்லதான் கடைசியா நடக்கனும்ன்னு அவங்க சொல்றாங்க. கோயில்ல அப்படி எந்த ரூல்ஸூம் இல்ல. அதனால் முதல்ல கோயில்ல பண்ணிடலாம். பேரு நான் மாத்தாம பார்த்துக்குறேன். என்ன சொல்றீங்கன்னு பதில் கேட்கிறார் மதி, பேரில் மட்டுமே வச்சிருக்கிறார்.
இப்படியே போது பிரச்சினை. பொண்ணு கல்யாணத்துக்கு பிறகும் சர்ச்சுக்கு போவதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மாளு, கொஞ்ச நாள் அவள தாஜா பண்ன சர்ச்சுக்கு போவாரு. அப்புறம் அதுவும் ஸ்டாப் ஆகிடும். அவனையெல்லாம் மாத்த முடியாது. இப்ப பிரச்சினையே, 
மதம் மாறாம அவனால சர்ச்ல கல்யாணம் பண்ண முடியுமா? அந்த பொண்ணு ரோமன் கத்தோலிக். இவன் இந்து ,இல்ல இல்ல இவங்க அப்பா அம்மா இந்து. அதுக்கு பிஷப்பிடம் அனுமதி வாங்கினா பண்ணலாம்ன்னு இணையத்தில் தேடிய போது கிடைச்சது. என்ன விதி? 

இப்ப என் கவலையெல்லாம் அவன் கல்யாணம் என்னாகும்ன்றது பத்திலாம் இல்லைங்க.. கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி “அதை ஏண்டா என்ன பார்த்து கேட்ட”.. கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா மாதிரி எனக்குன்னு வர்றானுங்க.. ச்சை

7 கருத்துக்குத்து:

ராஜி on June 27, 2013 at 10:54 AM said...

அந்த காட்சில்லா யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும்..,

Joe on June 27, 2013 at 11:12 AM said...

I don't think they will allow him to marry a Catholic girl without him getting converted as a Christian.

Asha on June 27, 2013 at 11:56 AM said...

இது எவ்வளவு வருஷத்து காதல்? ரொம்ப பிரச்சினையோ?? ஏன் கேட்குறேனா, இந்த பதிவ ஏற்கனவெ படிச்ச மாதிரி ஒரு பீலிங். அதான்.

BTW, பிஷப் கிட்ட இருந்து பெர்மிஷன் லெட்டெர் வாங்கிட்டா மதம் மற்றும் பெயர் மாறாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நானும் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் சில Implications உள்ளது. கலப்பு திருமணம் சஎய்து கொள்பவர்களுக்கு சர்ச்சிலிருந்து வரும் சலுகைகள் கிடைக்காது. முதன்மையாக அவர்களுடைய குழந்தைக்கு Baptism குடுக்க முடியாது. ஆக அவர்களுடைய குழந்தை இந்துவாக தான் வளரும். இதை மனதில் வைத்து கொண்டு தான் அந்த பெண் சர்ச் திருமணம் என்று அடம் பிடிக்குதோ என்னமோ? காதலுக்கு கண்ணில்லைனு எவன் சொன்னது :)

karki bava on June 27, 2013 at 4:22 PM said...

ராஜி,
:))

ஜோ,
நன்றி

ஆஷா,
எபப்டி இருக்கிங்க?? மெயில் அனுப்புங்க.. என்கிட்ட ஆஃபீஸ் மெயில் ஐடிதான் இருக்கு

இரசிகை on June 28, 2013 at 7:46 PM said...

:)

Denzil on June 30, 2013 at 2:48 PM said...

தாரளமாக! இது போல திருமணங்கள் சர்ச்சில் அனுமதிக்கப்படுகின்றன. மணமக்களில் ஒருவர் கத்தோலிக்கராக இருந்தால் போதும். என் நண்பனின் தங்கை திருமணம் இப்படி நடந்ததுதான். (off the record - அதிகப்படியான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான் மற்ற கிறிஸ்தவ சபைகளுக்கு "மத" மாற்றப்படுறாங்கன்னு RC சபை நினைக்குது, அதுனாலதான் இந்த மாதிரி நிறைய flexibilty :-))

Kishore Sheik Ahamed on June 30, 2013 at 3:13 PM said...

என் நண்பனுக்கு மூணு நாள் முன்னால தான் இப்டி கல்யாணம் ஆச்சு.
பொண்ணு கதோலிக்
கொஞ்ச நாள் மதம் மாத்தி புது பேர் வச்சாங்க ஆனா கல்யாணத்தப்போ இந்து பேர் தன சர்ச்ல சொன்னங்க.
முதல் நாள் சர்ச்ல, அடுத்த நாள் மண்டபத்துல

 

all rights reserved to www.karkibava.com