Jun 17, 2013

இணைய மொண்ணையர்களும், எழுத்துலக ஜமீன்தார்களும்  நேற்று நடந்த நீயா நானாவில் பங்கேற்றதை குறித்தும்,அதை தொடர்ந்த சில இணைய விவாதங்கள் குறித்தும் சில விஷயங்களை பேசலாம் என நினைக்கிறேன்.

  நேற்றைய நீயா நானாவின் சிறப்பு விருந்தினர் என யாருமில்லை. இதுவா அதுவா என இரண்டு பக்க விவாதமும் இல்லை. தெளிவான தலைப்பும் இல்லை. கோபி கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக யோசித்து யார் தொடர்புடைய பதிலை, சுவாரஸ்யமாக, முக்கியமாக முதலாவாதாக மைக் கிடைத்து சொல்கிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு. அந்த கதையை விட்டுவிடுவோம். இந்தப் பதிவின் நோக்கம் நீயா நானா குறித்தல்ல. அதன் பின் நடந்த உரையாடல் பற்றியது.

  கெளதம சித்தார்தன் என்பவர் வந்திருந்தார். ஆரம்பம் முதலே அமைதியாகவே இருந்தவருக்கு இறுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச கோபி இடமளித்தார். ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான் தெரியும், அவர் அதற்கு முன் தன் ஒரு சிறுப்பத்திரிக்கையில் நீயா நானாவை கிழித்து தோரணம் தொங்க விட்டுருந்தாராம். நேற்று மனுஷ்யபுத்திரன் அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். கெளதம சித்தார்தன் என்ற அறிஞர் பேசும்போது எல்லோரும் அசிரத்தையாக இருந்ததாகவும், 2 நிமிடமே பேசிவிட்டு “நான் நிறைய பேசிட்டேனோ” என கெளதம் சொன்னது வருத்தமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். நேரலைக்கு மட்டுமே மனுஷ் செல்வதால் இப்படி நினைத்துவிட்டார் போலும். அன்று அவர் பேச ஆரம்பித்த முதல் 10 நிமிடங்கள் அவர் என்ன பேசினார் என்பது கோபிக்கே விளங்கவில்லை. அவர் பேசியதை அவரே கேட்டு கெளதமுக்கே கிட்டத்தட்ட தூக்கம் வந்துவிட்டது. பின்னர்தான் சமாளித்து ஏதோ பேசினார். கெளதம சித்தார்தன் பெரிய எழுத்தாளராக இருக்கலாம். நிறைய செய்திருக்கலாம். நீயா நானா அரங்கிற்கு வரும் முன்பு வரைக்கும் அவர் செய்த எல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரும் நிகழ்ச்சிக்கு வந்தார். 10 நிமிடம் தொடர்ந்து அசுவாரஸ்யமாக பேசினார். அதுவும் இரவு 1 மணிக்கு. அப்போது பார்வையாளர்கள் அசிரத்தையாக இருப்பது யதார்த்தமான ஒன்றுதான். இதிலென்ன தவறென தெரியவில்லை. நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவருக்கு மட்டும் அரை மணி நேரம் மைக் கிடைப்பது சாதாரண வாய்ப்பில்லை. கோபிக்கே கூட சில சமயம் அது வாய்ப்பதில்லை. அந்த சூழ்நிலையில் மொக்கையாக பேசிய கெளதம சித்தார்தனை ஏன் கொண்டாடவில்லை என கேட்பது, ஆழ்வாருக்கு ஏண்டா அஜித்துக்கு ஆஸ்கர் கொடுக்கல என்பது போன்றதுதான். அஜித் நல்ல நடிகராக இருக்கலாம். ஆழ்வார் மொக்கை என்பதே பாயிண்ட்.

  இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. ஜெமோ, சாரு இப்போதும் மனுஷும் சேர்ந்து தொடர்ந்து தமிழ் இணையவாசிகள் என்றாலே இணைய மொண்ணையர்கள் என்று ஸ்தாபிக்க பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள். நேற்று கெளதம சித்தார்தனும் இதையேதான் சொன்னார் என்றாலும் அவரின் நோக்கம் வேறு. அவரை விட்டுவிட்டு மும்மூர்த்திகளுக்கு செல்வோம். இணையத்தின் மிக முக்கியமான பாசிடிவ் என்னவென்றால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கும் தூரம் குறைவு. எழுத்தாளன் செய்யும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக் காட்டுவதுடன் ஸ்க்ரீன்ஷாட் வேறு எடுத்து வைத்துவிடுகிறான் இந்த இணைய மொண்ணை. விசிலடிச்சான் குஞ்சுகள் என சினிமா ரசிகனை கிண்டலடித்தாலும் இவரக்ளும் கிட்டத்தட்ட அந்த இடத்தில் வைத்து வாசகன் தங்களை வழிபட வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள். சாருவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கும், ஜெமொவின் எழுத்தல்லாத மற்ற நடவடிக்கைகளை கவனித்தாலும் இது புரியும்.

  ஒரு முறை சாரு  வாரமலர் லெவல் கவிதையை இதுதான் இலக்கியம் என சிலாகித்தார். அடுத்த சில நாட்களிலே அந்த கவிதாயினியுடனான சாரு செய்த chat வெளியானது. சாரு சிலாகித்ததற்கான காரணம் தெரிந்தவுடன் அந்த பதிவை தளத்திலிருந்து எடுத்துவிட்டார். ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவிட்டார்கள் இணைய மொண்ணைகள். இன்னொருமுறை விக்கிபீடியாவை நம்பி, அதிலிருந்த கதையை படித்து விமர்சனமே எழுதுவிட்டார் சாரு. ப்ளீச்சிங் பவுடர் என்ற பதிவர் அதையும் குறிப்பிட்டு பதிவு எழுதியவுடன் கேப்டன் போல கண் சிவந்தார் சாரு.
ஜெமோவும் விதிவிலக்கல்ல. ராம்ஜீ யாஹூ என்பவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கமெண்ட் பாக்ஸையே மூடிவிட்டார்.

   இந்த இணைய மொண்ணைகளின் வெற்றி என்ன தெரியுமா? ஜெமோவின் விஷம் கக்கும் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டு புனைவுகளை மட்டும் கொண்டாடுகிறார்கள். சாருவின் வாசகர் கடிதத்தை கூட புனைவு என்ற பிரிவில் சேர்த்து படித்து மகிழ்கிறான். ஒரு அன்னப்பறவை போல இவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை கேலி பேசுகிறார்கள்.. இவர்களின் பிம்பம் சரிய காரணமாயிருக்கிறார்கள். என்ன செய்வார்கள்? பேசி,விவாதித்து காப்பாற்றிக் கொள்வது சாத்தியமில்லாத போது அவ்வாறு சொல்பவனையே மொண்ணை என்று சொல்லிவிட்டால்?? இதைத்தான் செய்கிறார்கள். திமுகவுக்கு சமீபகாலமாக காவடி தூக்கும் மனுஷுக்கும் இந்த வழி எளிதானதாக தெரிந்தது. ராசா, வண்டியை அந்த பக்கமே விட்டுவிட்டார்.

   ஆக, இணையத்தில் மொண்ணைகளே இல்லையா என்பீர்களேயானால், இருக்கிறார்கள். முன்பெல்லாம் அரசியல் நிகழ்வு குறித்தோ, அல்லது ஒரு சமூக அவலம் குறித்தோ எத்தனை பேர் விவாத்திருப்பார்கள்? இணையம் வந்த பின் இந்த விழுக்காடு எங்கேயோ போய்விட்டது. செக்கோஸ்லோவேக்கியா என்ற நாட்டின் பெயரை எந்த குழந்தையும் முதல் தடவையே சரியாக சொல்லிவிடாது.(அந்த நாடு இரண்டாக பிரிந்தபோது அதிக சந்தோஷமடைந்தவன் நானாகத்தான் இருப்பேன்) ஆர்வம் காரணமாக இது போன்ற விஷயத்தில் கருத்து சொல்கிறவர்கள் மொண்ணையாக தெரியலாம். ஆனால் அவர்கள்தான் பிற்காலத்தில் பக்குவப்படுகிறார்கள். இதற்கு பல பேரை உதாரணமாக சொல்ல முடியும். விஷயம் என்ன்வென்றால், சரியோ தவறோ இது போன்ற நிகழ்வுகள் குறித்து பல பேர் பேசுவது மிக மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். இதுதான் எழுத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை. என் வேலையை நீ செய்தால் எப்படி? பிறகு நான் எதற்கு என்ற ஈகோ.
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது ட்விட்டரில் ஒரு hashtag - வோடு ஒரு பெரிய கூட்டம் கிளம்பியது. கிட்டத்தட்ட எல்லாமே பகடி வகை ட்வீட்ஸ்தான். ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் அசாத்தியமானது. ஈழ விஷயத்தை முன்வைத்து காங்கிரசை ஒதுக்கியவர்கள் அன்று ஏராளம். அதில் பாதி பேருக்கு மேல் இன்று காங்கிரசை புறக்கணிக்க வேண்டிய காரணம் புரிந்து புறந்தள்ளுகிறார்கள். இந்த தொடர்பை புரிந்துக் கொள்ள வேண்டும். அன்று மொண்ணையாக காங்கிரசை சாடியவர்கள் பிற்காலத்தில் தொடர்ந்த வாசிப்பாலும், கவனிப்பாலும் புரிந்துக் கொள்கிறார்கள். முன்னோக்கி செல்கிறார்கள். ஆனால் ஜெமொவுக்கும், சாருவுக்கும் சாதாரணமானவர்கள் செய்யும் இந்த பங்களிப்பு பிடிக்கவில்லை. அவர்களுக்கான முக்கியத்துவம் குறைவதாக கவலைக் கொள்கிறார்கள்.

  இதில் சாரு ஒரு படி அதிகம். அவருக்கு உரிய அந்தஸ்தை தமிழ்ச்சூழல் வழங்கவில்லையாம். அவர் புத்தகங்கள் போதிய அளவு விற்கவில்லையாம். அதனால உலக சந்தைக்கு செல்கிறார்களாம். முதலில் ஜெமோ, எஸ்ரா அளவிற்கு இவர் புத்தகங்கள் விற்கிறதா? இல்லை. சோம.வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம், மதனின் வந்தார்கள் வென்றார்களோடு சாருவை ஒப்பிடவில்லை. சக இலக்கிய எழுத்தாளர்களின் விற்பனையயே சாரு தொடவில்லை. அடுத்த சுஜாதா என சொல்லிக்கொள்பவர், அவரின் ராயல்டியில் 10% கூட வாங்கியிருக்க மாட்டார் என்பதுதான் நிதர்சனம். ஜெமொவை பார்த்து நீங்க ஏழாவது பாஸ்ஸூன்னே. நான் sslc ஃபெயில்ண்ணே என சொல்லும்பொருட்டு ஆங்கில சந்தைக்கு செல்லும் சாரு, இன்னும் ஏழாவதே பாஸாகவில்லை என்பதை என்றுதான் உணர்வாரோ.


(தொடரும்)

34 கருத்துக்குத்து:

நாகராஜசோழன் எம்ஏ on June 17, 2013 at 11:55 AM said...

அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்..


--எழுத்தாளர் நாகராஜசோழன்.

srilakshmi rajeev on June 17, 2013 at 11:59 AM said...

குழப்பமானவற்றை தெளிவாகச் சொல்லும் வித்தை கார்கி உங்களுடையது. Brought it down to brass tacks. Superb:)

நாய் நக்ஸ் on June 17, 2013 at 12:05 PM said...

Adichchi aaduvom.....
Welcome to
everybody.....

thamizhparavai on June 17, 2013 at 12:11 PM said...

superb....nice points....!

selva ganapathy on June 17, 2013 at 12:17 PM said...

Brilliantly written. I seriously feel that there is a scope for people to think after reading!... and the webspace provides that!... anyone can write and that is trouble for many!

கூத்தாடி on June 17, 2013 at 12:20 PM said...

ஆழ்வாருக்கு ஏன்டா அஜித்துக்கு ஆஸ்கார் குடுக்கல!

செம :)

தங்கள் பிம்பம் உடைவதை கொண்டு இவர்கள் கவலை கொள்கிறார்கள். கேள்விக்கு விடை தெரியாத போது கேள்வியே தவறென்றோ அல்லது கேள்வி கேட்பவனே மொன்னையானவன் என்றோ சொல்லி தங்கள் ஒளிவட்ட இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் பிரயத்தனம் தெரிகிறது.

இவ்வளவு சொல்கிறார்களே, இணையத்தை விட்டு மீண்டு அச்சு ஊடகத்திற்கே செல்லலாமே. அது நடக்காது. இது தான் எதிர்காலம்.

ambalam on June 17, 2013 at 12:26 PM said...

நல்ல திறனாய்வு ,தொடருங்கள்

Ram on June 17, 2013 at 12:30 PM said...

நல்லா இருக்கு...

Ragupathi Raja Chinnathambi on June 17, 2013 at 12:44 PM said...

//தங்கள் பிம்பம் உடைவதை கொண்டு இவர்கள் கவலை கொள்கிறார்கள். கேள்விக்கு விடை தெரியாத போது கேள்வியே தவறென்றோ அல்லது கேள்வி கேட்பவனே மொன்னையானவன் என்றோ சொல்லி தங்கள் ஒளிவட்ட இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் பிரயத்தனம் தெரிகிறது. //

Point made :)

jeevan on June 17, 2013 at 1:21 PM said...

#ISNKK

pattasu balu on June 17, 2013 at 1:21 PM said...
This comment has been removed by the author.
jeevan on June 17, 2013 at 1:22 PM said...

#ISNKK

pattasu balu on June 17, 2013 at 1:22 PM said...
This comment has been removed by the author.
jeevan on June 17, 2013 at 1:22 PM said...

#ISNKK

Anonymous said...

உளி உடைக்க உடைக்கத் தான் சிலையாகும், குத்துப்படுதலையே பொறுக்காமல் தாம் சுயம்புகள் என பீற்றிக் கொண்டால், மக்கள் பார்வைக்கு உருவமற்ற கற்களே. ஜெமோ, சாரு, மனுஸ் மட்டுமல்ல நாஞ்சிலின் பேச்சிலும் இதே கருத்து தென்பட்டது, புத்தகங்கள் சில எழுதியதும் தம்மை படைப்பாக்கங்களின் பிரம்மன் என்ற நிலையில் இருத்திக் கொள்வதும், ஏனையோர் தரும் வினாவை புறக்கணிப்பதும் இழுக்கே. படைப்பாளிகளை விட படைப்புக்களையே யாம் மக்கள் கொண்டாட விரும்புகின்றோம். பெயர் தெரியாத ஒருவர் எழுதிக திருக்குறள் என்ற படைப்பே இன்று வரை படைப்பாளியையும் சேர்த்து வாழ வைக்கின்றது என்பதை உணரக் கடவார்கள்.

Perungaya Dappa on June 17, 2013 at 1:31 PM said...

Superb Thala! Nice One!

- பெருங்காய டப்பா™

Anonymous said...

/ தங்கள் பிம்பம் உடைவதை கொண்டு இவர்கள் கவலை கொள்கிறார்கள். கேள்விக்கு விடை தெரியாத போது கேள்வியே தவறென்றோ அல்லது கேள்வி கேட்பவனே மொன்னையானவன் என்றோ சொல்லி தங்கள் ஒளிவட்ட இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் பிரயத்தனம் தெரிகிறது. / சத்தியமான வார்த்தைகள் இவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் பழைமைவாதிகளின் மனோபாவமும் இதே, இது தான் வன்முறைகள், அடக்குமுறைகளின் பிறப்பிடமும் கூட. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை இத்தகையோர் உணர்ந்தால் தமிழும் வளரும் தாமும் வளர்வர் .

pravinfeb13 on June 17, 2013 at 1:39 PM said...

semma anna

நடராஜன் on June 17, 2013 at 2:03 PM said...

Well done na! :) Welcome back. waiting for the 2nd part.

Nattu_G! :)

Muthalib on June 17, 2013 at 2:19 PM said...

ரொம்ப அழகா சொல்லிருக்கேள்... கிழி கிழி கிழி

accept the pain on June 17, 2013 at 2:56 PM said...

ULTIMATE

Bricksnsand on June 17, 2013 at 3:14 PM said...

தெளிவான புரிதல் ..தெளிவான எழுத்து...வாழ்த்துக்கள்....do write more...jokin.jey

Bricksnsand on June 17, 2013 at 3:15 PM said...

தெளிவான எழுத்து...தெளிவான புரிதல்...நிறைய எழுதுங்கள்....வாழ்த்துக்கள்

பழமைபேசி on June 17, 2013 at 3:20 PM said...

’மொண்ணை’ எனச் சரியாகக் கூட எழுதத் தெரியவில்லை என அடுத்த பாய்ச்சல் வரலாம்!!

sakthi on June 17, 2013 at 5:17 PM said...

அருமை நண்பா! கலக்குங்க....

Praveen on June 17, 2013 at 5:35 PM said...

உண்மையாகவே நமது காலத்து வாசகர்கள் இதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். பெண்வேடமிட்டு கூத்து நிகழ்த்தும் ஒரு கலைஞனை (கலைஞரை-னு போட்டா அப்புறம் அதுக்கு அர்த்தம் தேடுவீங்க!) ஆண் என்று அறிவதோடு ஆனால் அவன் அவதானிக்கும் பெண்வேடத்தை ஏற்றுக்கொள்வதைப்போல, இந்த வேறுபடுத்தலில் மிகத் தெளிவாக இருக்கிறான்...இதை உணர்ந்து கொள்ளாமல் ‘வெளிச்சம்’ ஓவரான படைப்பாளிகள் திரிவாராயின் ஏமாற்றம் அவர்களுக்கே...

குழந்தபையன் on June 17, 2013 at 6:55 PM said...

இதனால தான்..நானெல்லாம் சாரு,ஜெமோ,எஸ்.ரா யாரையும் படிக்கறதே இல்ல.. google சொல்லாததா அப்புடி என்ன இவுங்க சொல்லிட போறாங்க.. nativity கலந்து படிச்சாதான் அறிவு சார்ந்த தேடல் தீருமா.. போங்க பாஸ்...

santhana krishnan on June 17, 2013 at 8:51 PM said...

நண்பரே கார்கி,
இவர்களை தவிர நல்ல எழுத்துக்களை அடுத்த பகுதியில் அறிமுகம் படுத்துங்கள் இவர்களை புறகனிப்பது நல்லது

நன்றி

சந்தான கிருஷ்ணன்

! சிவகுமார் ! on June 18, 2013 at 12:31 AM said...

Superb Karki.

chinnapiyan on June 18, 2013 at 7:25 AM said...

அந்த எழுத்தாளர் பேசும்போது எனக்கே எரிச்சல் வந்தது. என்ன சொல்ல வராரு என்பதிலேயே நேரம் போய்விட்டது. இந்த லட்சணத்துல மனுசின் ஸ்டேடஸ் வேறயா. நல்லா சாடியிருக்கீங்க பாவா.

இரசிகை on June 18, 2013 at 6:31 PM said...

ajith .......:)))

Anonymous said...

அருமையான கட்டுரை. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான்கு ஆண்டுகளில் என் எழுத்தும் கருத்தும் எவ்வளவோ தேறிவிட்டது. வலைப்பதிவு எழுத்தாளர்களும் வாசகர்களும் எழுத்தாளர்களுக்கு/இலக்கியவாதிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை.

//அவர் அதற்கு முன் தன் ஒரு சிறுப்பத்திரிக்கையில் நீயா நானாவை கிழித்து தோரணம் தொங்க விட்டுருந்தாராம். //

இதுதான் எனக்கு புரியவில்லை. கிழித்து தொங்கவிட்டவரே ஏன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்?!

Sasidaran Chinnasamy on June 21, 2013 at 3:35 PM said...

கார்க்கி டா

Sasidaran Chinnasamy on June 21, 2013 at 3:49 PM said...

ஆமாம் சாமி பாட்டு பாடுபவர்கள் தானே சிறந்த வாசகர்கள்...ஆனால் இணைய மொன்னைகளிடம் பட்டை தீட்டப்படவேண்டிய விஷயங்கள் நிறைய

 

all rights reserved to www.karkibava.com