Jun 14, 2013

தில்லு முல்லு & தீயா வேலை செய்யணும் கொமாரு - விமர்சனம்


தில்லுமுல்லு:



  க்ளாசிக், KB, சூப்பர்ஸ்டார், தேங்காடா என்றுபெண்ணை பெற்ற தந்தை போல  வறட்டு கெளரவம் பேசாமல் ஒரு சிரிப்பு விழாவுக்கு செல்லும் மனதோடு மட்டும் தியேட்டருக்கு போனால் ஒரு பட்டாசான படம் பார்த்த திருப்தி நிச்சயம். சிவா பாலுக்கு பால் சிக்சர், ஃபோர் என விளாசுகிறார். பிராக்‌ஷ்ராஜ் இதை தனக்கான CAT exam என நினைத்து தயாராகியிருப்பார் போல.படத்தில் பங்குபெற்ற அனைவருமே கலக்குவதை பார்க்கும்போது இந்த டீமுக்கும்  தோனிதான் கேப்டனோ என தோன்றுகிறது. என்னதான் ஸ்க்ரிப்ட் சூப்பர் என்றாலும், நான் தான்யா நிஜமான காமெடி சூப்பர்ஸ்டார் என க்ளைமேக்சில் வந்து தன் மார்க்கெட்டை காப்பாற்றிக்கொண்டு விடுகிறார் சந்தானம். மனுஷன் கொட்டாவி விட வாய் திறந்தால் கூட நமக்கு சிரிப்பு வருகிறது. பத்ரிநாத்தை போல இஷா தல்வார் ஒரு திருஷ்டி அட்டு. சாரி, பொட்டு. இயக்குனர் பத்ரிக்கு முதல் பெரிய வெற்றி. வாழ்த்துகள் சார்.

தீயா வேலை செய்யணும் கொமாரு:



  குருவும் சிஷ்யரும் சென்ற ஆண்டு இணைந்து கலகலப்பு என்ற வெற்றியை கொடுத்தார்கள். இந்த ஆண்டு ஒரே நாளில் (யார் போட்ட ப்ளானோ) இருவரின் படங்களும் வெளியாகியிருக்கின்றன. உப்பில்லாத பொங்கலில் கூட முந்திரி நல்லாதானே இருக்கும் என்பது போல் சந்தானம் மட்டுமே படத்தை காப்பாற்றுகிறார். பின், உப்பில்லாத பொங்கலை சாப்பிட்டு நாக்கு செத்தவுடன் முந்திரியின் ருசியும் தெரியாமல் போய்விடுகிறது. இசை படு த்ராபை.RJ பாலாஜி தனக்கு தெரிந்த ஒரே ஜோக்கான் i am a shy boy from decent familyஐ சினிமாவுக்கும் கொண்டு போயிருக்கிறார்.  இந்த கணேஷ வெங்கட்ராம் எல்லாம் அழகாய் இருப்பதாக நிஜமாகவே பெண்கள் நினைக்கறீர்களா??அப்படியெ நாலு தட்டு தட்டி முறுக்கு சுற்றி அவரை பரோட்டா போடத்தான் தோன்றுகிறது. முதல் பாதி சுமார். இரண்டாம் பாதி குமார்.
அடுத்த படத்துக்கு தீயா வேலை செய்யணும் சுந்தரு.

verdict: தில்லு முல்லு ஜெயிக்க மார்க்கெடிங் டீம் தீயா வேலை செஞ்சா போதும். தீயா வேலை செய்யணும் குமாரு ஜெயிக்க ஏதாச்சும் தில்லு முல்லு பண்ணாத்தான் முடியும்

4 கருத்துக்குத்து:

sakthi on June 14, 2013 at 11:07 AM said...

ஹாஹாஹா..எப்படிங்க இப்படி வார்த்தையை வெச்சி விளையாட முடியுது உங்களாலே..
கலக்குங்க..கார்க்கி!!

sakthi on June 14, 2013 at 11:08 AM said...

ஹாஹாஹா..எப்படிங்க இப்படி வார்த்தையை வெச்சி விளையாட முடியுது உங்களாலே..
கலக்குங்க..கார்க்கி!!

Gokula Achyuthan on June 14, 2013 at 8:51 PM said...

அப்படியெ நாலு தட்டு தட்டி முறுக்கு சுற்றி அவரை பரோட்டா போடத்தான் தோன்றுகிறது

Yov kalakkal :)
ggewrites.blogspot.in

இரசிகை on June 18, 2013 at 6:37 PM said...

அடுத்த படத்துக்கு தீயா வேலை செய்யணும் சுந்தரு.verdict: தில்லு முல்லு ஜெயிக்க மார்க்கெடிங் டீம் தீயா வேலை செஞ்சா போதும். தீயா வேலை செய்யணும் குமாரு ஜெயிக்க ஏதாச்சும் தில்லு முல்லு பண்ணாத்தான் முடியும்



kalakkureenga karki
:))


 

all rights reserved to www.karkibava.com