Jun 22, 2013

Best actor ever


சினிமாவை நான் காதலோடு ஒப்பிடுவேன். அது இரண்டு மனங்களுக்கு இடையே பேசப்படும் மொழி. திரைக்கும் பார்வையாளனுக்கும். இதில் படம் constant. பார்வையாளன் variable. பார்க்கும் இடம், சூழ்நிலை, மனநிலை என பல காரணிகளால் அனுபவம் மாறும். ஒரு படம் ஒருவருக்கு பிடிக்காமல் போவதும் இன்னொருவருக்கு all time fav ஆவதும் இதனால் கூட இருக்கலாம். ஒரே படம் முதலில் பிடிக்காமலும், பின்பு பித்து பிடித்தது போல் பிடிப்பதும் கூட இப்படித்தான். எதுவாயினும், அந்த மேஜிக் நடக்க வேண்டும். அதற்கான சூத்திரத்தை தாதா சாகேப் பால்கேவிலிருந்து இன்றைய இயக்குனர்கள் வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. காதலைப் போல, அதுவும் ஒரு மேஜிக்.

  தமிழ்நாட்டில் ஒவ்வொருவனுக்குள்ளும் ஓர் இயக்குனர் இருப்பான். ஒவ்வொருவரிடம் ஒரு கதை இருக்கும். ஆனால் நடிக்க சொன்னால் மட்டும் முடியாது. நடிப்பு என்பது என்னளவில் தனித்துவமானது. ஒரு படத்தை பார்த்து காப்பியடித்து இன்னொரு படமெடுக்கலாம். ஆனால் ஒருவரின் நடிப்பை பார்த்து அப்படியே காப்பியடிக்க கூட திறமை வேண்டும்

  தமிழ் சினிமா கதாநாயர்களில் எனக்கு பிடித்த “நடிகர்” என்றால் அது ரஜினிதான். ஏனோ எனக்கு கமல் வகையறாக்கள் செய்யும் Method actingல் நம்பிக்கையில்லை. தளபதி படத்தில் ஓர் காட்சி. ரஜினியின் ஆட்கள் ஒருவனை ரோட்டில் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் வந்துவிடுகிறது. வேடிக்கை பார்க்கும் ரஜினி “போதும்” என்பது போல் கைக்காட்டுகிறார். 200 கிலோ தடியன்கள் உடனே அடிப்பதை நிறுத்துகிறார்கள். அந்த ஒல்லி உருவம் ஒரு தொள தொள சட்டையை போட்டுக் கொண்டு ஆட்டுவிக்கிறது. அந்த காட்சியில் ரஜினியின் உடல்மொழி அதை நம்ப வைக்கும். ரஜினி ஒரு பெரிய டான் என சிரத்தையின்றி நம்ப வைப்பார். 

   அப்படிப்பட்ட ரஜினிக்கு பிறகு ஒருவரை நடிப்பிற்காக பிடிக்கிறது. ஆபத்தான விஷயம் என்னவென்றால் ரஜினியை பிடித்ததை விட 100 மடங்கு அதிகமாய் பிடித்து தொலைகிறது. டிவியிலோ, அல்லது யாரோ ஒருவரின் மொபைலிலோ இவர் நடித்த காட்சி வருகிறதென்றால் அனுஷ்காவை பார்ப்பதை விட 4 மிமி அதிகமாய் வாய் பிளந்து பார்க்கிறேன். தளபதியில் ரஜினுக்கு இருந்ததை விட சில எலும்புகளும், சில மீட்டர் தோலும் இவருக்கு குறைவுதான். மாப்பிள்ளையின் மாப்பிள்ளை தனுஷைத்தான் அப்படி வெறித்தனமாக பார்த்து தொலைக்கிறேன்.   நேற்று ராஞ்சனா பார்க்க நேர்ந்தது. அசாத்தியமான நடிப்பை அசால்ட்டாக செய்திருக்கிறார் தனுஷ். வாரணாசி தெருக்களில் இவர் எப்போது வாழ்ந்திருப்பார் என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆடுகளம் படத்தில் மதுரையில் சுற்றிய அதே உருவம், மொழியிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு நடிக்கிறது. நடிப்பு என்பது முகபாவங்கள் அல்ல. அது ஒரு thought process. மூளைக்குள் சென்று யோசிப்பதுதான் மேட்டர். தனுஷ் இந்த வகையறா. ஒரு சின்ன ஷாட் என்றாலும் அது தவறின்றி இருக்கிறது. கதை என்ன? எங்கு நடக்கிறது? இந்த பாத்திரத்தின் மேனரிசங்கள் என்ன? இவையெல்லாம் ஒரு கணிணியில் இன்புட் செய்வது போல, தனுஷிடம் சொல்லிவிட்டால் போதும், படத்தின் எங்கேயும் பிசிறாமல் பார்த்துக் கொள்கிறார். இதற்கு அசாத்திய உழைப்பும், அதீத திறமையும் தேவை. குன்னக்குடி வைத்தியநாதன் காம்போதி ராகத்தையே டீக்குடிப்பது போல் வாசிப்பாரே.. அதைத்தான் நடிப்பில் செய்கிறார் தனுஷ்.

   இவர் சிரித்தால் பிடிக்கிறது. அழுதால் அழ தோன்றுகிறது. ஏனெனில் அந்த பாத்திரம் எதற்காக அதை செய்கிறதோ, அதை உணர்ந்து செய்வதால். ராஞ்சனா படம் பெரிய அதிசயமெல்லாம் இல்லை. 3 படத்தின் இந்தி வெர்ஷன் எனலாம்., முதல் பாதி குதுகலமான காதல். இரண்டாம் பாதி கொஞ்சம் ஹெவி மெட்டிரியல்.(ஆனால் கதை முற்றிலும் வேறு). தனுஷின் தோற்றமும் 3 போலவேதான். இரண்டாம் பாதியில் திரைக்கதை தொப்பென விழுந்து படம் படுத்து விடுகிறது. ஆனால் நான் படம் முழுவதும் தனுஷை மட்டுமே பார்த்ததால் அத்தனை சோர்வாக தெரியவில்லை.

  கோடம்பாக்கத்தில் காலடி வைத்தபோது நலம் விரும்பி ஒருவர் என்னிடம் சொன்னது “உனக்கென ஒரு goal வைத்துக் கொள்”. அப்போது முடிவு செய்த ஒரே விஷயம். தனுஷை இயக்கிவிட வேண்டும். அது முடிந்ததும், இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் என அவர் சொல்ல வேண்டும். இது நடக்காமல் போகத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால் என் goal ல் கூட தனுஷ் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்பதால் இதை வைத்துக் கொண்டேன். 

  ஒரு நாள் ட்விட்டரில் தனுஷை தமிழ் சினிமாவில் best actor என சொல்லியிருந்தேன்.ராஞ்சனா எனக்கே அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. Why dis kolaiveri பாடலுக்கு அந்த உலகப்புகழ் அதீதமாக தோன்றலாம். But dhanush truly deserves that. I am proud of him And love him. You rock man.

தனுஷுக்காக நான் நூறு முறைக்கு மேல் பார்த்த ஒரு காட்சி18 கருத்துக்குத்து:

ராம்குமார் - அமுதன் on June 22, 2013 at 1:20 AM said...

அருமையான பதிவு மாம்ஸ்... என்னுடைய மயக்கம் என்ன அனுபவத்திலே கிறுக்கியது...

தனுஷ் நடிப்பில் அடுத்த கட்டத்தைத் தொட்டிருப்பதற்கான சத்தியமான சான்று இந்தப் படம். பிரமாதமான ஆக்டிங். படத்துல ஒரு சீன். அதுல தன்னுடைய உழைப்பு நிரகரிக்கப்படும் ஒரு பொழுதில், தன்னுடைய கிரியேட்டிவிட்டி அவமானப்படுத்தப்படும் ஒரு பொழுதில் ஒரு முகபாவம். கட் பண்ணினால் பீச்சில் இருந்து வந்து ஒரு டீக்கடையில் தம் பற்ற வைக்கும் ஒரு சீன். Thatz it. தனுஷுக்கு ஏற்கனவே தேசிய விருது கிடைத்து விட்டதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமே இல்லை.

Balu Sv on June 22, 2013 at 1:21 AM said...

விஜய் பிறந்தநாளான இன்று 'best actor'ன்ற தலைப்போட ரிலிஸ் பண்ணினதும், அவரை தான் அப்படி சொல்றிங்களோ என்ற ஷாக்கோட படிக்கவந்தேன்! அழகான வரிகளில் உண்மையை பகிர்ந்திருக்கிறீர்கள்! அருமையான பதிவு! :-)

Anonymous said...

ரஜினியை, தனுஷை உயர்த்திப் பேசுவதற்காக கமலின், விக்ரமின் நடிப்புத் திறமையைப் புறந்தள்ளி ஒப்பனையைக் கேலி செய்து கட்டுரை ஆரம்பிக்கும்போதே புரிந்து கொண்டேன் இது "அதி மேதாவிகளின் பார்வையில் சினிமா" வகையைச் சார்ந்தது என்று...

அதி மேதாவிகள் பொதுவாக மக்கள் சொல்லும் கருத்தைச் சொல்லவே கூடாது... அப்படியே சொன்னாலும் எவனையாவது நல்லா இருக்கிறவன மட்டம் தட்டி அதுக்கு மேல தான் தன்னுடைய புத்தியை ஏத்தி வைக்கணும்...

புதிதாக எதாவது சொல்லியே ஆகணுங்கற உங்க ஆதங்கம் புரியுது... எனக்கு என்னவோ, இந்த மாதிரி கட்டுரைகள் தங்களைப் போன்ற அதிமேதாவிகளைப் (புதிய பார்வை, புதிய கோணம்) பின்னூட்டங்கள் மூலம் அடையாளம் காண எழுதப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது....

நான் ரொம்ப சாதரணமான ரசிகன்...

Giri Ramasubramanian on June 22, 2013 at 5:16 AM said...

//தனுஷுக்காக நான் நூறு முறைக்கு மேல் பார்த்த ஓர் காட்சி
http://www.youtube.com/watch?v=H5t2PJKHq6I //

agree.... இது ரொம்பவும் விவரணையான ஒரு piece. படம் பார்த்த ஒவ்வொருத்தருக்கும் பிடிக்கும்.

என்வரையில் இந்தப் படத்தின் master piece, ஆட்டோவில் தன் நண்பர்களிடம் தனுஷ் சொல்லும்,

“எனுக்கு என் வண்டி வேணும்”, என்று சொல்லும் இடத்தின் மாடுலேஷன்தான்.

ஒரு சின்னூண்டு டயலாக் டெலிவரியில் கூட அத்தனை அக்கறை எடுத்துக் கொண்ட நடிகனை நான் பார்த்ததில்லை.

Sathish Kumar on June 22, 2013 at 5:41 AM said...

Correct sir...

முரளிகண்ணன் on June 22, 2013 at 8:30 AM said...

பல இடங்களில் ஒத்துப்போகிறேன். ஆனால் எலும்பும் தோளுமான ரஜினி நிறுத்து என்று சொன்னால் 200 கிலோ வில்லன்கள் நிறுத்தியதை நாம் ரசிக்க பல சமூக காரணங்கள். அது தமிழ்நாட்டை புரிந்து கொண்டதற்கான அடையாளம்.

தனுஷ் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை.

இரண்டு வகையான வேடங்கள் மட்டுமே இன்று வரை அவர் நடித்திருக்கிறார். அதில் இருந்து வயது காரணமாக வெளிவரும்போதுதான் அவருக்கு இருக்கிறது ஆசிட் டெஸ்ட்

Kathasiriyar on June 22, 2013 at 8:36 AM said...

Good piece of writing. Wishing yr dream comes true.

karki bava on June 22, 2013 at 11:08 AM said...

//விக்ரமின் நடிப்புத் திறமையைப் புறந்தள்ளி ஒப்பனையைக் கேலி செய்து கட்டுரை//

கட்டுரை அங்கே ஆரம்பிக்கவில்லை. இபப்டியெல்லாம் புரிந்துக் கொள்ளப்படும் என தெரிந்தே ஒவ்வொருவரின் ரசனை எப்படி மாறுகிறது என்பதை எனக்கு தெரிந்த வகையில் சொல்லிவிட்டு தொடங்கினேன். எனக்கு method acting பிடிக்காது என சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தேன்.

//அதி மேதாவிகள் பொதுவாக மக்கள் சொல்லும் கருத்தைச் சொல்லவே கூடா//

கமலை சிலாகிப்பவர்கள் தானே அதிமேதாவிகள்? மாத்திட்டாங்களா? :))

karki bava on June 22, 2013 at 11:19 AM said...

@murali,

நீங்க சொல்வதை ஏற்றுக்கொண்டால் யார் வேண்டுமென்றாலும் நடிக்கலாம். ரெளத்திரம் என்று ஒரு படம். ரொம்ப நல்லா இருக்கும். அதில் சென்ராய் வில்லனாய் பண்ணதாலே தோற்றதால பலரும் சொல்றாங்க.

தனுஷ் இரண்டு வகை பாத்திரங்கள் தான் நடிச்சார்னு ஏத்துக்க முடியல. ஆனா இன்னும் பல விஷயம் பண்ண வேண்டியிருக்கு. அது உண்மைதான்

karki bava on June 22, 2013 at 11:29 AM said...

இந்த பதிவுக்கு ட்விட்டர், ஃபோனுன்னு வரும் எல்லா எதிர்வினைகளும் பெரும்பாலும் கமல் ரசிகர்களிடம் இருந்தே வருகிறது. கமல் வளர்ந்தபோது சிவாஜி ரசிகர்கள் இப்படித்தான் ஃபீல் செய்திருப்பார்களோ என்னவோ.

தமிழ் சினிமாவை கைப்பிடித்து கூட்டி சென்றவர்களில் சிவாஜியும், கமலும் மிக முக்கியமானவர்கள். அதில் மாற்றமே இல்லை.தனுஷின் வேலையை எளிதாக்கியவர்கள் இவர்கள்.

உங்களுக்கு பிடிக்காததாலே தனுஷ் சிறந்த நடிகர் இல்லை என்றாக போவதில்லை. போலவே நான் சொல்வதால் மட்டுமே அவர் ஆகி விடபோவதுமில்லை. என் ரசனை, அறிவு சார்ந்து ஒன்றை சொல்லியிருக்கிறேன். தட்ஸ் ஆல். இதுல அறிவாளி வேஷம் போட வேண்டுமென்று ஏதுமில்லை.

வரலாற்றை நானோ நீங்களோ மட்டும் எழுத முடிவதில்லை. தனுஷ் எழுதுவார்(என நான் நம்புகிறேன்)

David Jebaraj on June 22, 2013 at 12:03 PM said...

Simply superb... like DHANUSH.

ஆதி தாமிரா on June 22, 2013 at 12:39 PM said...

சர்வ நிச்சயமாக புதியதலைமுறையின் மிக முக்கியமான, இன்னும் சொல்லப்போனால் முதலிடத்திலிருக்கும் திறமைசாலி என்று தனுஷை எந்த தயக்கமும் இன்றி சொல்லலாம்!

முரளிகண்ணன் சொல்லும் ஆசிட் டெஸ்டையெல்லாம் அவர் அனாயசமாக கடப்பார் என்றே நம்புகிறேன்.

ஆனால் இந்தக் கட்டுரை ஒரு ரேர் ஃபீலிங்கில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த ரேர் ஃபீலிங்குக்கும் விசிலடிச்சான் குஞ்சுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அது தனுஷுக்கும் தனுஷ் ரசிகனால் எழுதப்படலாம், விஜய்க்கும் விஜய் ரசிகனால் எழுதப்படலாம். இரண்டுமே ஓவர் ஃபீலிங்ஸ் ஆப் இண்டியாதான்! கி.ராவைப்பற்றி எழுதுங்கள் ஆதினு சொன்னால் நானும் இப்படித்தான் எழுதிவைப்பேன். கி.ரா படிச்சாலும் அட லூசேனு சிரிப்பார். அவ்வளவுதான் இந்தக்கட்டுரையின் தகுதி!

மணி ஜி. on June 22, 2013 at 12:42 PM said...

சூப்பர்,

senthil kumar on June 22, 2013 at 12:47 PM said...

தில்லு முல்லு (படம்) விமர்சணதிற்கு பரிகாரம் செஞ்சிட்டீங்க. Well written :)

senthil kumar on June 22, 2013 at 12:48 PM said...

தில்லு முல்லு (படம்) விமர்சணதிற்கு பரிகாரம் செஞ்சிட்டீங்க. Well written :)

karki bava on June 22, 2013 at 3:08 PM said...

ஆதி, ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருந்த விஷயம். ஓவர் ஃபீலிங்கா இருக்கலாம். அந்த ஃபீலிங்தான் மேஜிக் என்கிறேன்.

மத்தபடி உங்க ஆதர்ச நாயகனும் கமல்தான்னு பொதுவுல உடைச்சிட மாட்டேன் :))

Vasandha on June 23, 2013 at 7:38 AM said...

Read this in a review by one of the North Indian media..

நீங்க சொன்னத இங்கிலீஷ்ல எழுதிருக்காங்க.. நாம fans கொஞ்சம் biaseda இருக்க வாய்ப்பு இருக்கு.. but from the way the below has been written, looks like straight from the heart after watching the movie..

"And now we come to Dhanush. Five minutes into the film, the audience knows , they are watching a force of nature, someone made for the moving camera. And not because he is heart-stoppingly beautiful though he is if you look beyond what he looks like. But because his presence is a visual magnet. He fills you with awe because something within him makes you as a viewer transcend your own limitations of perception to see beyond that almost puny frame, that plain face, that lack of conventional glamour and tune into something deeper. Something full of pathos, pain and humanity. Something that no acting school can teach you. The ability to be alive, vital and present in every gesture, line, word, silence. The ability to live a character to its last gasp. The ability to sit silently on a ghat and look at a distance and make us look too, deep in the heart of sorrow.

There is no doubt that he is a legend in the making and even though he does not need the Hindi film industry, we need him to remind us that there is formidable talent waiting to be celebrated beyond star sons and entrenched superstars. Rai like Imtiaz Ali is now a man with a distinctive colour palette, someone unafraid of his own vision and it will be interesting to see where he goes from here. The music by AR Rahman is part of the narrative that Rai weaves around the first flush of love, heart break and disillusionment and grief. Himanshu Sharma’s writing like always speaks convincingly of a millieu and of the people who crowd it. This is a film to be seen for an ensemble of actors and craftsmen who know the formula of success but know also how to go beyond it
**
Watch it most of all for Dhanush."

Vasandha on June 23, 2013 at 7:45 AM said...

வலுக்கட்டாயமா என் friend காதல் கொண்டேன் கூட்டிட்டு போனான்.. படம் முடிஞ்சு 2 நிமிஷம், theatre காலியான பிறகும் உட்கார்ந்து இருந்த அந்த feeling இன்னும் அப்படியே இருக்கு..

இது அந்த மாதிரி ஒரு feelingla எழுதப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஆதி, ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருந்த விஷயம். ஓவர் ஃபீலிங்கா இருக்கலாம். அந்த ஃபீலிங்தான் மேஜிக் என்கிறேன். ----- வழி மொழிகிறேன்..

 

all rights reserved to www.karkibava.com