Mar 10, 2013

ஆன்ம வெளி




ஒவ்வொருவரிடமும் இருக்கிறது - ஒரு சுவாரஸ்யமான கதை, நல்ல கவிதை, பொய்த்துப் போன உண்மையான நம்பிக்கை

நான் வலிந்துதிர்க்கும் சிறுபுன்னகை கூட போலியானது என்று புரியாதவர்களை பற்றி நான் ஏன் கவலைக் கொண்டிருக்கிறேன்??

உன் ஞாபக கற்களை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன் காலக்குடுவையை

என் காதல் தான் மெய். நீ என் விருப்பம்

தலை திருகப்பட்ட பறவையின் கடைசி துள்ளல் அடங்க காத்திருப்பது போல் உணர்கிறேன்..

வெறிச்சோடியிருக்கும் மதிய நேர கிராமத்து தெருவைப் போல கிடக்கிறது என் வாழ்வு

நீ அறியாத நான். நான் அறிந்த நீ.. இந்த இடைவெளி தவிர என்ன இருந்து விட போகிறது!

தவளைகள் கத்தாத மழையிரவின் நிசப்தத்தை ஒத்திருக்கிறது நீயில்லாத இத்தருணம்.

முதல் தூறல் எழுப்பும் மண்வாசனையை அவளின் ஒவ்வொரு துளி நினைவும் எழுப்புவதில் இருக்கிறது எங்கள் காதல்

மெல்லிய விசும்பலோடு தொடங்கி பின் பெருங்குரலெடுத்து அழுவதில் மூன்றாவது மழலையின் அழுகை..இரண்டாவது மழை.. முதலாவது உன் நினைவுகள்

நீரின் பற்றுதலை விட்ட மீனொன்றின் மரண அவஸ்தையோடு உறங்க செல்கிறேன். இந்த இரவும் நாசமாய் போகட்டும்

6 கருத்துக்குத்து:

அனத்தலாம் வாங்க on March 10, 2013 at 2:29 PM said...

U r the inspiration for me to get into blogs, now tweeter too.. Excellent as ever..
Super like for உன் ஞாபக கற்களை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன் காலக்குடுவையை.

www.anathal.com

David Jebaraj on March 10, 2013 at 2:43 PM said...

வலிகளின் மேல் நிற்கும் போது வார்த்தைகள் வெள்ளமாய்... #நீ நல்லாருப்பே கார்க்கி :)

sutha on March 10, 2013 at 3:07 PM said...

ஒய் புலம்பல்ஸ்? மீண்டும் மொக்கைக்கு திரும்பி வர வாழ்த்துக்கள் :-) @sweetsudha1

Sankar P on March 10, 2013 at 7:01 PM said...

> கவலைக் கொண்டிருக்கிறேன்??

இங்கு 'க்' தேவையில்லை :) எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டவே நான் பின்னூட்டமிட்டாலும், படிக்கையில் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் உணர்வுகள். இன்னும் நிறைய எழுதுக :)

Raghav on March 11, 2013 at 12:05 PM said...

"படிக்கையில் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் உணர்வுகள்" - வழி மொழிகிறேன்!

Balaji on March 29, 2013 at 7:15 AM said...

:), thanks Karki..

 

all rights reserved to www.karkibava.com