Dec 5, 2012

நான் காலியான கதை


 

நான் காலியான கதை – 1

நான் காலியான கதை – 2

வியாதியே இல்லாத டாக்டர்தான் தினம் தினம் மாத்திரைகளோடு காலம் கழிக்கிறார் இல்லையா? அது போலதான் நானும் பிளாக், ட்விட்டர்னு தோழி அப்டேட்ஸா எழுதிட்டு இருந்தேன். உண்மையிலே எனக்கு தோழி இருக்காளா இல்லையா என்பதை ஏதோ மன்மோகன் சிங்கை பேச வைக்கும் அதிசய மந்திரத்த தேடுற மாதிரி கூட சிலர் பேசிக்கிட்டாங்க. ”எனக்கு அழுகை வந்தா அழுவேன். அழறேன்னு சொல்ல மாட்டேன்”ன்னு சொன்ன மாதிரி எனக்கு காதல் வந்தா காதலிப்பேன். இப்படி காதலிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன்.

ஒரு நாள் வழக்கம் போல ட்விட்டர்ல தோழி அப்டேட்ஸ் எழுதினேன்.

”தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் வேலை வழக்கமாக தோழியிடம் வருமாம். இந்த வருடம் கொடுக்க மாட்டேன் என்றாள். காரணம் கேட்ட போது சொன்னாள் “ வழக்கமா ஸ்வீட் கொண்டு போய் கொடுப்பாங்க. ஸ்வீட்டே கொண்டு போய் கொடுக்குமான்னு நீ கிண்டல் பண்ணுவ”.”

”சாமி மீது அதீத‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் சாமியார் ஆகும் போது நான் ஏன் தோழியார் ஆக‌ கூடாது?”

சற்று நேரத்தில் “You got a direct message” என்றது ஜிமெயில். திறந்து பார்த்தேன்.

loved ur last 2-3 tweets ! so cuweet !! :)) keep going

அனுப்பியவரின் புரொஃபைலை திறந்து பார்த்தேன். கன்னத்தில் கைவைத்து இடதுபுறம் மூழ்கியிருந்த கப்பலை பார்த்தபடி ஒரு புகைப்படம் இருந்தது. தமிழகத்தில் காணாமல் போன மொத்த மெகாவாட்ஸூம் அவ்விரு கண்களில் காண முடிந்தது. ஒரு கணம் சிவாஜியை போல ஓவர்ஆக்டிங் செய்யாமல் இருக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன். பதில்கள் வந்தன.

தேங்க்ஸ்.

Most of the times I am in mobile.  cant read tamil fonts.Today read all  thozi tweets in laptop. Loved it.

You rock. Do write more.

இது போன்ற பாராட்டுகள் வருவதுண்டு என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் டைரக்ட் மெசஜில் அதிக நேரம் போனது. கெளதம் துணையுடன் சொல்வதென்றால் It jus happened.

No updates today?

கொஞ்சம் பிசி. ட்விட்டருக்கே வரல

Oh. With thozhi?

ம்க்கும்.அதெல்லாம் சும்மாங்க.. ஆள் இருந்தா நான் ஏன் ட்விட்டர்லயே கிடக்கிறேன்?

That veena tweet was awesome. me and my roomie were reading that nth time and every time we were  literally ROTFL

“ப‌க்க‌த்து வீட்டு பொண்ணு வீணா, பொறுப்பா காலேஜுக்கு போனாலும் வீணா போனான்னுதான் சொல்லும் இந்த‌ உல‌க‌ம்”  இதுவா?

Yup. have u written any other veena tweet?

இல்லை. உங்கள மறுபடியும் கீழ தள்ளி, உருண்டு  சிரிக்க வைக்கலாம்னுதான்..

HAHA. Aren’t u in any relationship? Really? Cant believe that thozi updates are not true.

ஒரே ஒரு பொண்ண லவ் பண்ணா அவ்ளோ தோணாதுங்க.

hihi. I wish you get a girl who deserves all those updates. They r really awesome.

கிடைச்சா அப்டேட்ஸ் ஸ்டாப் ஆயிடுமே..

Is it? Its ok. engalukku karkithaan mukiyam. updates illai. LOL

மாட்டி விடுறதுல பொண்ணுங்கள மிஞ்ச முடியுமா? ரைட்டு

9677******

என்ன இது?

Oh.sorry.. Its for my other friend. Btw, Dats my number.

ஓக்கே..9789887048.இது என் நம்பர்தான். உங்களுத்தான் அனுப்பினேன்.

Smile

_____________

-----------------------

மணி 12.30 ஐ தாண்டியிருக்கும். தூங்கிப் போயிருந்தேன். மறுநாள் காலை 7.30க்கு அடிக்கும் அலாரத்திற்கு முன்பே கதறியது மொபைல்.

 

“Nevr miss the first opportunity bcoz the second opportunity will b much difficult than first 1. Gud Mrning”

யாரோ ஃபார்வர்ட் அனுப்பியிருந்தார்கள். நம்பரை பார்த்தேன். 9*******

ஒரு பாடலில் நாயகியை பார்த்தும் பார்க்காதது போல கடந்துவிட்டு நொடியில் திரும்புவாரே கமல்ஹாசன். அது போல மீண்டும் மொபைலை பார்த்தேன்

9677******

14 கருத்துக்குத்து:

vimalashri on November 20, 2012 at 1:18 PM said...

your partner will be the happiest girl in the world :-)கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு அவங்க மேல ...

Jana on November 20, 2012 at 2:18 PM said...

ottu motha aan samuthayathin veruppaiyum poramaiyum sambathithu kondirukkireergal enbathu ninavil irukkatum boss!!! poya vaitherichalla kottikaathaya..
Jana.

நடராஜன் on November 20, 2012 at 2:34 PM said...

:D

Shankar G on November 20, 2012 at 11:25 PM said...

Work like you don't need the money, love like you've never been hurt and dance like no one is watching.

karki bava on November 21, 2012 at 11:10 AM said...

@விமலா,
ரைட்டு

@ஜனா,
ஏன்யா ஏன்??? :))

@நடராஜன்,
:E

@ஷங்கர்,
blog like you dont need readers. Comment like you dont read the post. Reply like you dont understand the comment :))

"ராஜா" on November 21, 2012 at 3:12 PM said...

இப்பத்தான் இதுவே நடக்குதா? போங்க பாஸ் நீங்க ரொம்ப லேட்டு ... சாமியார் ஆக வேண்டிய வயசுல தோழியார் ஆகியிருக்கீங்க , நடக்கட்டும்

enjoy...

Lakshmi.R on November 22, 2012 at 10:36 PM said...

எனக்கும் பொறாமையா இருக்கு..... ஒரு தடவயாவது அந்த தோழிய பாத்தே தீரனும்...

Sen22 on November 23, 2012 at 12:30 PM said...

Semaya irukku Karki..

Congrats.. ;)

இரசிகை on November 23, 2012 at 5:01 PM said...

yellaaththaiyum azhahaakkeedureenga kaarkki..:)

இரசிகை on November 23, 2012 at 5:02 PM said...

appuram..antha kamal xample nice.

thuppaakki pathi yethaavathum yezhuthalaiyaa?

SHAN Shylesh on November 24, 2012 at 4:47 PM said...

இது கற்பனையா இல்லை தேவதை சந்திப்பு நிகழ்ந்த நிஜம் தானா?

SHAN Shylesh on November 24, 2012 at 5:13 PM said...

இது கற்பனையா இல்லை தேவதை சந்திப்பு நிகழ்ந்த நிஜம் தானா?

RaGhaV on November 27, 2012 at 10:00 PM said...

தல கிட்டதட்ட ஒன்றரை வருஷம் கழிச்சு ப்ளாக் பக்கம் வந்திருக்கேன்.. நேரா உங்க ப்ளாக் தான்.. தல இந்நேரம் கல்யாணமெல்லாம் முடிஞ்சு மனைவி அப்டேட்ஸ் கொடுத்திட்டு இருப்பர்ர்னு நெனைச்சு வந்தா.. ம்ம்மம்ஹும் இன்னமும் தோழி அப்டேட்ஸ் தானா? போயா..

பதிவு பட்டாசு.. :) :)

karki bava on December 7, 2012 at 8:32 PM said...

அனைவருக்கும் நன்றி

ராகவ்,

:))
முடிஞ்சா கால் பண்ணுங்க..

 

all rights reserved to www.karkibava.com