Nov 13, 2012

நான் காலியான கதை - 2


 

நான் காலியான கதை - 1

   இப்படியொரு மகோன்னத வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்த என்னை ஒருத்தி திரும்பி பார்க்க வைக்கிறாள்ன்னா அவ எப்படிப்பட்ட ஆளா இருக்கணும்??அட அக அழகு விடுங்க. அது சொல்லி புரியாது. பார்க்கிறதுக்கு எப்படி இருப்பானாச்சும் சொல்லணும் இல்லை? சொல்றேன்.

    ரெயின் போன பின்னாடி வருமே ரெயின்போ... அந்த வில்லை நேராக்கி அங்கங்க செதுக்கி வச்ச மாதிரி இருப்பாங்க. ஊட்டிப் பக்கம் டூர் போகும்போது ஃப்ரெஷா எடுத்து வச்சிருப்பாங்களே கேரட். அத பார்க்கும்போதெல்லாம் அவளோடு உதடு மாதிரி அதுவும் பேசுமான்னு டவுட்டு வருங்க.. "உண்மையில் உன் மையில் கரைகிறது காலம்"ன்னு எழுத வச்சதே அவ கண் மை தான். அந்தக் காலத்துல அரசர்கள் அரண்மனையை சுற்றி அகழி வைப்பாங்க இல்லை. அதுதான் ஞாபகம் வரும் அவ கண்ண பார்க்கும்போதெல்லாம். அவ கேரட் உதட்ட சுழித்து அந்த அகழி கண்ணால ஒரு மாதிரி பார்ப்பா பாருங்க.. அதுக்கு நான் "யார்க்கர்"ன்னு பேரு வச்சிருக்கேன்.. தோனி மாதிரி ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அடிக்க முயற்சி பண்ணதே இல்லை நான். ஏன்னா அவுட் ஆக்கிட்டு, அவுட் ஆனவனை ஓடி வந்து கட்டிப்பிடிக்கும் வித்தியாச ப்ரீத்தி ஜிந்தா அவள். ஆனால் அந்த யார்க்கர் எனக்கென பிரத்யேகமாய் அவள் வீசும் பந்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மைக்ரான் அளவே விழும் அவள் கன்னக்குழியில் நான் விழுந்து பல நாளாயிடுச்சு. ம்ஹூம். அவளா கைக்கொடுத்து தூக்கி விட்டால்தான் தாண்டி போக முடிகிறது. காதுல விழும் முடியை லைட்டா ஒதுக்கிட்டு ஐ லவ் யூ டின்னு சொல்லலாம்ன்னுதான் போறேன். தேவர் மகன் ரேவதி கணக்கா வெறும் காத்துதான் வந்து தொலைக்குது. கிட்டத்தட்ட ஒரு பொண்ணு எப்படியெல்லாம் இருக்கணுமோ அப்படியெல்லாம் இருப்பான்னு வச்சிக்கோங்க. மொக்கை மாபாதகன் சிவா சொன்னது போல "குட்டு ஃபிகருக்கு அட்டு பையந்தான் கிடைப்பான்" என்பது உண்மையாயிடுச்சு என் விஷயத்துல. இத நான் அவக்கிட்ட சொன்னபோது நீ அட்டான்னு சண்டைக்கு வந்துட்டா. "இல்லை செல்லம். என் ட்விட்டர் ஹேண்டில் @iamkarki தானே?. அத சொன்னேன்"ன்னு சமாளிச்சேன். அப்படி பார்த்தா அவ பேருக்கும் முன்னாடி @ தானே வரும்னுலாம் அவ யோசிக்கல. அப்ப‌டி யோசிச்சா என்னை எப்படி லவ் பண்ணுவான்னு எவனாச்சும் கமென்ட் போட்டீங்க.. கபாலத்துல காளியாம்பாள் கதகளி ஆடிடுவா. உங்க கபாலாம் வேற கால் கிரவுண்ட் இருக்கும். ஈசியா ஆடிடுவா ஜாக்கிரதை.

இது எல்லாமே சூப்பர்னாலும் நான் மொத்தமா விழுந்தது அவ சிரிப்புலதாங்க. சரக்க வாங்கி, மிக்ஸிங் வாங்கி,சைட் டிஷ் வாங்கி,கூட அடிக்க நண்பன கூப்பிட்டு, இடம் பார்த்து உஸ்ஸ்ஸ்ஸ்ஸ். இதெல்லாம் எதுக்குங்க? கொஞ்சம் சிரியேன் செல்லம்ன்னு சொல்லி அத பார்த்தா போதும். கிர்ருன்னு ஏறிடும். நிறைய தடவ அவள சிரிக்க வச்சு பார்த்துட்டு சந்தோஷமா பைக் ஓட்டிட்டு போறப்ப போலீஸ் மாமா என்னை Drunk&drive ல புடிச்சிட்டாருன்னா பார்த்துக்கோங்களேன். யாருக்காவது அந்த தோழி யாருன்னு கேட்கணும்ன்னு தோணுச்சுன்னா ஒரு க்ளு தர்றேன். "யார் சிரிக்கிறத பார்த்தா உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை ஒரு வித சிலிர்ப்பு வந்து குஜாலாகிறீங்களோ.. அவதான் அவ".

image

இப்ப கவிதைக்கு வருவோம். மடக்கி மடக்கி எழுதறது எல்லாம் கவிதை இல்லீங்கண்ணா.. அவள மாதிரி ஒருத்திய மடக்கிய பிறகு எழுதறோம் பாருங்க.. அது கவிதை. சேம்பிளுக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்க. அன்னைக்கு நாங்க வழக்கமா மீட் பண்ற இடத்துல சந்திச்சிட்டு டைமாயிடுச்சுன்னு அவ கிளம்பி போனா. வழக்கமா ஒரு ஆப்ஜெக்ட் நம்ம கண்ண விட்டு தூரமா போனா சின்னதாதானே தெரியும்? ஆனா அன்னைக்கு அந்த ஃபிசிக்ஸே எங்க கெமிஸ்ட்ரி முன்னால மாறிடுச்சு. அந்த அற்புத தருணத்த நான் கவிதையா எழுதி வச்சிருக்கேன். படிங்க‌ளேன்.


அவள் விசித்திரமானவள்.
விட்டு விலகி தூரம் செல்ல செல்ல
பெரிதாகிக் கொண்டேயிருக்கிறாளென் கண்களுக்கு

இதான் சார் அவ. அப்படியே சட்டுன்னு அதுவரைக்கும் நாம வாழ்ந்த உலகத்த திருப்பி போட்டுடுவா. ஒண்ணுமேயில்லாத சப்பை விஷயத்த கூட அவ இருக்கும்போது அழகா பார்க்க வச்சிடுவா. இன்னொரு நாள் அப்ப‌டித்தான் வெயில்ல நடந்து போயிட்டே இருக்கேன். அவ பின்னாடி வர்ற மாதிரி ஒரு பிரமை. உடனே மூளை பேனாவ எடுக்க, மனசு பேப்பர நீட்ட ரெடியாயிடுச்சு இன்னொரு கவிதை

"நான் தானே நடக்கிறேன்.
அது என்ன?
என் பின்னால்
உன் நிழல்

காதலிச்சா மட்டும் கவிதை வராது சார். அவள மாதிரி ஒரு பொண்ண காதலிக்கணும். அட.. நான் எப்படி அவள காதலிச்சேன்? எப்ப காதல சொன்னேன்? அவ ஓக்கே சொன்னாளா? இது எதுவுமே சொல்லாம ஃபீலிங்க்ஸ கொட்டுறேன் இல்லை. அடுத்த பார்ட்ல அந்த விஷயத்தையும் சொல்லிடறேன்.

24 கருத்துக்குத்து:

Azhagesan Jayaseelan on May 25, 2012 at 2:12 PM said...

/////மடக்கி மடக்கி எழுதறது எல்லாம் கவிதை இல்லீங்கண்ணா.. அவள மாதிரி ஒருத்திய மடக்கிய பிறகு எழுதறோம் பாருங்க.. அது கவிதை////

தல எங்கயோ போய்டிங்க நீங்க.....

நவின் குமார் on May 25, 2012 at 2:22 PM said...

//நான் காலியான கதை// நல்ல லவ் ஸ்டோரின்னு பார்த்தா அடுத்த அடுத்த பார்ட்ல லவ் ஃபெயிலியர் ஸ்டோரில ஆகிடும் போலையே ...இருங்க இப்பையே என்னோட கண்ணீர சேமிச்சி வச்சிக்கிறேன்....

Sen22 on May 25, 2012 at 3:01 PM said...

செம-யா இருந்தது கார்கி..

கொடுத்து வச்சவங்க அவங்க....

யுவகிருஷ்ணா on May 25, 2012 at 3:35 PM said...

செம கார்க்கி. பயங்கர ஸ்பீட். இதே குவாலிட்டியை அடுத்தடுத்த பதிவுகளிலும் மெயிண்டெயின் பண்ணுங்க. பொறுமையா எழுதுங்க பிரச்சினை இல்லை. அடுத்த பதிவை வாசிக்க காத்துக்கிட்டிருக்கேன்.

மின்னுது மின்னல் on May 25, 2012 at 4:08 PM said...

காலி பயலுக்கு இப்பதான் அர்த்தம் தெரிஞ்சது :))போட்டோவில் உள்ள ஹார்ட்டின் கொஞ்சம் குண்டா இருக்கே எதாவது குறியீடா தல ?

manjoorraja on May 25, 2012 at 4:55 PM said...

கார்க்கி.... கலக்குறீர்.... தொடரட்டும். சமீபத்து நிகழ்வுகளையும் அருமையாக இணைக்கும் விதம் அருமை..

வள்ளி on May 25, 2012 at 5:30 PM said...

Wow… Interesting!


தோனியின் ஹெலிகாப்டர் பற்றி குறிப்பிட்டு இருப்பதால் இன்னுமொரு வாவ்..! :)

வலைஞன் on May 25, 2012 at 6:42 PM said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

KSB on May 25, 2012 at 7:58 PM said...

உங்க அப்ரோச் எனக்கு புடுசுருக்கு ...

சுசி on May 25, 2012 at 11:17 PM said...

கலக்ஸ் கார்க்கி..

amas on May 26, 2012 at 7:52 AM said...

// ஆனா அன்னைக்கு அந்த ஃபிசிக்ஸே எங்க கெமிஸ்ட்ரி முன்னால மாறிடுச்சு.//
very good! ;-)
amas32

Sathish on May 26, 2012 at 7:54 AM said...

ஆஹா அருமை .. உன் எழுத்துக்கு நான் அடிமை ..

Sathish on May 26, 2012 at 7:55 AM said...

ஆஹா அருமை .. உன் எழுத்துக்கு நான் அடிமை ..

மல்லிகார்ஜுனன் on May 26, 2012 at 8:06 AM said...

ஃபீல் பண்ண வெச்சுட்டீங்க... சூப்பர்!

இதோ உங்களுக்காக... http://www.youtube.com/watch?v=YeAc2wBKjC8

குழந்தபையன் on May 26, 2012 at 4:50 PM said...

இது உண்மையா இதெல்லாம் நம்பலாமா.. நீ நல்லவனா... !!


இதே போல் ஆயிரம் கேள்விகளுடன்
- உங்கள் எழுத்து விசிறி

புலவர் சா இராமாநுசம் on May 27, 2012 at 4:55 AM said...

நன்று!தொடரத் தொடர்வேன்!

புலவர் சா இராமாநுசம்

KSGOA on May 27, 2012 at 8:36 PM said...

சூப்பரா எழுதியிருக்கீங்க!அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெய்ட்டிங்!!!

நாமக்கல் சிபி on May 28, 2012 at 12:50 AM said...

தலைவா! சிக்கிட்டீங்க போல!

வாழ்த்துகள்!

கார்க்கி on May 28, 2012 at 10:27 AM said...

நன்றி அழகேசன்

நவீன், அப்படியெல்லாம் இல்லை :))

நன்றி சென்..

நன்றி யுவா. நெசமாத்தான் சொல்றீங்களா????

மின்னல், ஜெமோவெல்லாம் படிக்கிறத்வ் இடுங்க முதல்ல‌

நன்றி மஞ்சூர்

நன்றி வள்ளி.. தல நேத்து கவுத்துட்டாரே??

நன்றி கே.எஸ்.பி

நன்றி சுசி

நம்றி அமாஸ் :)

சதீஷ், கிர்ர்.. நன்றி

அர்ஜூன் , டேய்ய்ய்ய்..கேப்புல நீ விஜய்யா?

குழந்தைப்பையன், கதை போகுற போக்குல போகட்டும்ப்பா

நன்றி புலவரே

நன்றி கோவா

சிபியண்ணே, அபப்டியா??? இது ஆட்டோ ஃபிக்ஷன் :)

logesh kumar on May 30, 2012 at 2:25 AM said...

anna ithu yaara maiyama vachu eluthuringanu therinjikalama????

sathish on June 1, 2012 at 6:06 PM said...

"நிறைய தடவ அவள சிரிக்க வச்சு பார்த்துட்டு சந்தோஷமா பைக் ஓட்டிட்டு போறப்ப போலீஸ் மாமா என்னை Drunk&drive ல புடிச்சிட்டாருன்னா பார்த்துக்கோங்களேன்" உங்க core competencya நீங்க விட்டு கொடுக்கறதே இல்ல........superp........

Sathish on June 2, 2012 at 10:51 AM said...

அவள் விசித்திரமானவள்.
விட்டு விலகி தூரம் செல்ல செல்ல
பெரிதாகிக் கொண்டேயிருக்கிறாளென் கண்களுக்கு

- Ithe kavithai_ya Parthiban sir, avaorda "Kirukkalkal" ingara book_la ezhuthitaar, Karki....but with different words "thoram sella sella nee mattum vishvaroopam aagirai" ingara maathiri varum...

Krishna... on November 20, 2012 at 2:06 PM said...

நீங்க ஏன் ஒரு படம் பண்ணகூடாது??

Shanmuganathan on December 9, 2012 at 6:38 PM said...

Great sir.. Wonderful starting.. Expecting more...

 

all rights reserved to www.karkibava.com