Feb 8, 2013

what next?


 

திருப்பூர்.

கடந்த ஒரு மாதமாக திருப்பூர் தான் என் வசிப்பிடம். பதிவுலகம் வந்த பின் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரசனையொத்த நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களை போலவே எனக்கும் அதில் யாராவது ஒரு நண்பரின் வீட்டிற்கு அருகே நாமும் வசித்திருக்கலாமே என தோன்றியதுண்டு. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் என்னை அவரது alter egoவாக ஆரம்பத்தில் இருந்தே கருதிவரும் பரிசல்காரானின் வீட்டிற்கு அருகே. இன்னும் சொல்லப் போனால், ஒரே வீட்டில் வெவ்வேறு அறை என்பது போல, முதல் மாடியில் ஒரு போர்ஷனில் அவரும் இன்னொரு போர்ஷனில் நானும் இருக்கிறோம். சாளரம் வழி வந்த நட்பு இப்போது கதவை திறந்தால் தெரிகிறது. யானை பலம் வந்தது போல் உண்ர்கிறேன், கிருஷ்ணருடன் இருந்த அர்ஜூனனை போல.

திருப்பூர் என்னை ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியப்படுத்துகிறது. Migrants அதிகமாக இருப்பதாலோ என்னவோ, எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக தெரிகிறது. சென்னையிலும் வட மாநிலத்தவர் அதிகம் வேலைக்கு வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோனோர் முறைப்படுத்தப்படாமல், கிடைத்த வேலையை செய்கிறார்கள். இது போன்ற சமயங்களில் வருமானத்திற்கு பங்கம் வரும்போது survivalக்காக அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உலகெங்கும் பொதுவான ஒரு செயல் தான். ஆனால் திருப்பூரில் அது எளிதில் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட எல்லா பணியாளர்களின் அடையாள அட்டையும், தகவல்களும் வைத்திருக்கிறார்கள். போலவே, வருமானத்திற்கும் பங்கம் அதிகமில்லை என்பதால் அவர்களும் வேலையை மட்டும் செய்கிறார்கள். என்ன, ட்ராஃபிக் சென்ஸ் என்பது மட்டும் இல்லை. திருப்பூர் சாலைகளில் தினம் ஒரு விபத்து கண்ணில் படுகிறது. இதில் வட, தென் என பாகுபாடில்லை. திருப்பூர்வாசிகள் எல்லோருமே சாலையை கடக்க லைசென்ஸ் வாங்கி விடுவது நல்லது.

திருப்பூர் மாநகராட்சி ஆகிவிட்டதாம். எந்த அடிப்படையில் என தெரியவில்லை. மக்கள் தொகை அல்லது பணப்புழக்கம் காரணமாக இருக்கலாம். ஏ.டி.எம்மை விட முத்தூட் நிறைய இருக்கிறது. மசால் பூரி கடைகளை விட மணப்புரம் அதிகமாக கண்ணில் படுகிறது. சினிமா போஸ்டரை விட “டெய்லர்கள் தேவை” அதிகம் ஒட்டப்பட்டிருக்கிறது. மக்கள் மூச்சு விடுவதை கூட திட்டமிட்டு செய்தாக வேண்டியிருக்கிறது. மாநகராட்சிக்கான அடையாளங்கள் என ஏதுமில்லை. Tripod கேட்டால் கோவைக்கு வண்டி கட்ட சொல்கிறார்கள். Bean bag இருக்கா என்றால் பீன்ஸ் வாங்கும் கூடையா என்கிறார்கள். சில்லி சிக்கன் என சிக்கன் 65 ஐ திணிக்கிறார்கள். அய்யங்கார் பேக்கரியில் முட்டை பப்ஸ் தருகிறார்கள். இங்கு ஏசிக்கு என்ன அர்த்தம் என தெரியவில்லை. தலைக்கு மேலே 3,4 றெக்கைகளுடன் சுத்துவதை நான் ஃபேன் என்றே அறிந்திருக்கிறேன். ஒரே ஆறுதல் யார் படமாக இருந்தாலும் பகல் காட்சி (முதல் நாளே) 20,30 பேர்தான். மாலை , இரவுக்காட்சிகள் மட்டுமே ஹவுஸ்ஃபுல் ஆகின்றன.

திருப்பூர்வாசிகளின் உழைப்பு அசாத்தியாமனது. எல்லோரும் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். சிங்கப்பூரில் நான் வேலை செய்த போது பகல் நேரங்களில் கடல் படம் ஓடும் தியேட்டர் போல் அனாமத்தாக கிடக்கும். கிட்டத்தட்ட எல்லோருமே வேலை செய்வார்கள் அங்கே.. திருப்பூரும் அப்படித்தான். இவர்களை போல் நம் நாடு முழுவதும் இருந்தால் ஜப்பான் ஆகி விடும் இந்தியா. என்ன, என் மூக்கு சற்று பெரியதென்பதால் எனக்கு அதில் உடன்பாடில்லை. பகல் நேரங்களில் வீட்டிலே முடங்கி கிடக்கும் ஒரு சிலரின் எண்ணிக்கையை உயர்த்தியதை தவிர திருப்பூருக்கு என் பங்களிப்பு ஏதுமில்லை.

  எல்லா நோனாவட்டமும் சரி. நீ என்ன அங்க கிழிக்கிற என்கிறீர்களா? வேலையை விட்டுவிட்டேன். Freelance recruitment செய்கிறேன். முன்பை விட வருமானம் குறைவென்றாலும் எனக்கென அதிக நேரம் கிடைக்கிறது. அதனால் நண்பர்கள்(பரிசல், ராஜன், கெளதம்) சேர்ந்து SOB Network என யூட்யூப் சேனல் தொடங்கியிருக்கிறோம். ப்ளாகில் எழுதி கிழித்தாகிவிட்டது. ட்விட்டரில் நாமதான் டாப்பு என சொல்ல வைத்தாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் உறவினர்களை எல்லாம் உள்ளே விட்டதால் அம்மாஞ்சியாகவே இருக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாம் போரடித்து இப்போ visual mediumத்துகுள்ள் இறங்க முடிவெடுத்தாகிவிட்டது. சினிமா பார்வைகள், Spoof videos, Talk shows, Discussions, Stand up comedy, Parody என ப்ளூ பிரிண்ட் தயார். சேனல் தொடங்கி 7,8 வீடியோக்களும் அப்லோடாகி விட்டன. SOB என்றால் Science of bachelors என பெயரிட்டு இருக்கிறோம். வெறும் வீடியோ சேனலாக மட்டுமின்றி SOBஐ ஒரு இணையதளமாக, இளைஞர்களுக்கான Entertainment & other stuff என்ற ரீதியில் எடுத்து செல்ல திட்டம். அடுத்தடுத்த அறிவிப்புகளின் போது இன்னும் விளக்கமாய் சொல்கிறேன்,

image

இப்போது, நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வீடியோக்கள் பிடித்திருந்தால் subscribe செய்து கொள்ளுங்கள். நண்பரக்ளுடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். கருத்துகளை சொல்லுங்கள். இது எங்களுக்கு புதிய களம். எழுத்து மட்டுமின்றி விஷுவலாக சுவாரஸ்யப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. முடியுமென்ற நம்பிக்கையில் இறங்கிவிட்டோம். முடித்து விடுவோம்

எல்லாம் சரி. எதுக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்து செய்ற? என்னதான் உன் ஃப்யூச்சர் ப்ளான் என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். ஒரு வேளை நான் உண்மையை சொல்வேயானால், நீங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரலாம்.Smile

See you.

__________

Our website   :  www.sobnetwork.in

Youtube Channel: www.youtube.com/sobnetwork

FB Page: https://www.facebook.com/pages/SOBnetwork/506385586073066

Twitter account : www.twitter.com/sobnetwork

கடைசியாக அப்லோடிய வீடியோ:

40 கருத்துக்குத்து:

குழந்தபையன் on February 9, 2013 at 12:00 AM said...

நல்லவங்களுக்கு நல்லதுதான் நடக்கும்.. கலக்குங்க.. சென்னைல இருக்கும் சொந்தங்களை பார்க்க அடிக்கடி வந்து போங்க.. முடிந்தா sobல எதாவது டிங்கரிங் வேலை பார்க்க வாய்ப்பு தரலாம்

jroldmonk on February 9, 2013 at 12:05 AM said...

கலக்குங்க பாஸு.. ஆல் த வெரி பெஸ்ட் பார் யூ & SOB

Nataraj (ரசனைக்காரன்) on February 9, 2013 at 12:05 AM said...

ஆல் தி பெஸ்ட்..எழுத்து கச்சிதம் அப்படியே இருக்கு..

Nataraj (ரசனைக்காரன்) on February 9, 2013 at 12:06 AM said...

பைதிவே, என்ன தான் தம்பி செய்றீங்க எனக்கேட்டு மங்கூஸ் மண்டையனாக மாறும் உத்தேசமில்லை :-)

Prabu Krishna on February 9, 2013 at 12:10 AM said...

வாழ்த்துகள் கார்க்கி,ராஜன், கௌதம் & பரிசல்.

வீடியோக்கள் எல்லாவற்றையும் Youtube - இல் பார்த்தேன். நல்ல முயற்சி.

சினிமா காட்சிகள், இசை தவிர்த்து Youtube - இல் நீங்கள் உங்கள் படைப்புகளை மட்டும் அப்லோட் செய்தால் Monetize மூலம் Earn செய்யலாம். அல்லது உங்கள் வீடியோக்களை Youtube Partners க்கு கொடுத்தும் பணம் பண்ணலாம்.

இன்னும் பல வழிகள் உள்ளன. பேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொள்கிறேன்.

Sarav on February 9, 2013 at 12:21 AM said...

Already SOB video s good reached.u can continue.v ll support u..

karki bava on February 9, 2013 at 12:52 AM said...

குழந்த,

:)).. ஒரு வீக்கேண்ட் வாஙகடா

@ஓல்ட்மன்க்,
நன்றொ :)

@நட்டு,
ஆவ்வ்.. சந்தோஷமா இருக்கு. முடிஞ்சா ஒரு நாள் கால் பண்னுங்க

@பிரபு,
சூப்பர்.. 15,20 வீடியோ போட்டுட்டு இத பத்தி யோசிக்கலாம் முடிவெடுத்திருக்கோம். நன்றி

@சரவ்,

நன்றி :)

Pulavar Tharumi on February 9, 2013 at 1:13 AM said...

உங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran on February 9, 2013 at 1:15 AM said...

கார்க்கி, SOB வீடியோஸ் எல்லாம் அருமையா இருக்கு... குறிப்பாக தேவர் மகன் நையாண்டியை எங்க வீட்டில் அம்மா அப்பா எல்லோரும் பார்த்து ரசித்தார்கள்... ஏற்கனவே subscribe செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்... இல்லையென்றாலும் எல்லா வீடியோக்களையும் தொடர்ந்து பார்ப்பேன்... வாழ்த்துகள்...

M.G.ரவிக்குமார்™..., on February 9, 2013 at 1:27 AM said...

கலக்கல்!வாழ்த்துகள்!நானும் இந்த முயற்சியில் பங்குபெற முடியவில்லையே என்ற ஏக்கம் இப்போது இருக்கிறது!...

Ram on February 9, 2013 at 1:32 AM said...
This comment has been removed by the author.
Ram on February 9, 2013 at 1:33 AM said...
This comment has been removed by the author.
Ram on February 9, 2013 at 1:35 AM said...

I have seen in your blogs that you had an idea about what all we can do here other than writing and you tried those stuffs at times. I remember you did a post of slide show with your tour pics and your thuppakki song review with smilies, very thoughtful. So it was no wonder to me when you guys started a youtube channel, I just felt you moved to another level. I have to say this as I am being rejoiced by your blogs, thalabathi and dengue mock videos and of course the latest SOBnetwork videos, Best Wishes!!!

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா. உங்களுக்கு நல்ல படைப்பாற்றலும், நகைச்சுவை உணர்வும் இருக்கிறது. அது ஏதோ ஒரு உருவில் மக்களை மகிழ்விக்கும் அதே நேரத்தில் உங்களுக்கும் வேண்டிய செல்வம் வந்து சேர வாழ்த்துகிறேன். என்றும் உங்கள் முன்னேற்றத்தில் பங்கேற்க விரும்பும் ஒரு உண்மையான நண்பன் - பலராமன்.

Vijayakumar Ramdoss on February 9, 2013 at 2:22 AM said...

all the best bro

துளசி கோபால் on February 9, 2013 at 3:04 AM said...

குட் லக் !

முரளிகண்ணன் on February 9, 2013 at 6:15 AM said...

வாழ்த்துக்கள் சகா

எல் கே on February 9, 2013 at 6:21 AM said...

வாழ்த்துகள் நண்பரே

Unknown on February 9, 2013 at 7:50 AM said...

All the best for your new venture friends.Saw few videos and it has come out well.

amas on February 9, 2013 at 8:04 AM said...

பழகிய பாதையில் இருந்து விலகி வேறு பாதைக்குச் செல்ல துணிவு வேண்டும். அது உங்களிடம் இருப்பது கண்டு ரொம்ப மகிழ்ச்சி. குடும்பத்தை விட்டு விலகி இருப்பதும் உங்களுக்கு உங்களைப் பற்றிய தெளிவு வர உதவி செய்யும். அனால் திட்டமிடுதல் அவசியம். எதையும் யோசித்து செய்யுங்கள். உங்களை அறிந்த வரையில் அதை செய்வீர்கள் என்று திடமாக நம்புகிறேன். நல்ல உயரத்தை நீங்களும் உங்கள் டீம் மேட்சும் அடைய என் வாழ்த்துகள் :-)

amas32

கும்க்கி கும்க்கி on February 9, 2013 at 9:08 AM said...

வாழ்த்துக்கள் ப்ரதர்..
அரசியல் தவிர்ப்பது வளர்ச்சிக்கு நன்று.
தேவையில்லாத விஷயங்களை தொட வேண்டாம்.மற்றபடி ரசனையான காணொளிகள்.சிகரங்களை நோக்கிய பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள் என்றும்.

தீப்பெட்டி on February 9, 2013 at 9:31 AM said...

வாழ்த்துகள் கார்க்கி..

Shankar G on February 9, 2013 at 9:51 AM said...

வாழ்த்துகள் சகா,

பிப்ரவரி 14க்கு ரெட் கலர்ல ஒரு ஜெர்கின் போட்டுகிட்டு வேலண்டைன் டேவ கலாய்ச்சு ஒரு வீடியோ விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :))

Shankar G on February 9, 2013 at 9:52 AM said...

ஹீரோ சான்ஸ் எதுனா பாரின் லொக்கேஷன்ல இருந்தா ஒரு எஸ் எம் எஸ் அனுப்பவும். :)

துளசி கோபால் on February 9, 2013 at 10:07 AM said...

ஷங்கர்,

ஃபாரின் லொகேஷனுக்கு நியூஸி ஓக்கேவா? :-)

Sankar P on February 9, 2013 at 11:00 AM said...

உங்களுடைய நகைச்சுவை உணர்வு மிகவும் இனியது. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். கரும்புச்சாறு பற்றி கேள்விப்பட்ட போதே உங்கள் இரசிகன் ஆகி விட்டேன். இந்த நிகழ்வும் உங்கள் மேல் உள்ள மரியாதையை உயர்த்தி விட்டது. நாட்டில் லட்சக்கணக்கில் மனிதவள மேலாண்மை கூலிகள் இருக்கலாம், ஆனால் உங்களைப் போல முதலாளியாக ஆவதுதான் பெருமை. முடிவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் முயற்சியை அனுபவித்து மகிழவும் :)

அருண்மொழித்தேவன் on February 9, 2013 at 11:13 AM said...

ஒரு மாசம் ஆச்சா !!! வீடியோ பார்த்து அதை எல்லாம் சென்னைல எடுத்து இருக்கீங்கன்னு தான் நினைச்சேன்.. கோயம்புத்தூர் 1 மணி நேரம் தான்,, நேரம் இருப்பின் இந்த பக்கம் வந்து செல்லவும் :) - Romeo

யுவகிருஷ்ணா on February 9, 2013 at 11:16 AM said...

வாழ்த்துகள் கார்க்கி. நீங்கள்லாம் நல்லா வருவீங்க.

அதிஷா on February 9, 2013 at 3:12 PM said...

அப்படியா மச்சி!

அனுஜன்யா on February 9, 2013 at 4:31 PM said...

நெருக்கத்தால் இருக்கும் பதட்டம் எப்பவும் போல் இப்பவும் இருக்கு. என்றாலும்... ஆல் தி பெஸ்ட்.

நல்லா வரணும். வருவ. வர்ர!

அன்புடன் அருணா on February 9, 2013 at 9:41 PM said...

It's the right time to take risk and to break the comfort zone!! Well done! All the very best! with a bouquet!!!

மதன்ராஜ் மெய்ஞானம் on February 10, 2013 at 9:13 PM said...

All the best :)

karki bava on February 10, 2013 at 11:40 PM said...

Thanks allll :)

ராம்குமார் - அமுதன் on February 11, 2013 at 1:19 PM said...

வாழ்த்துகள் கார்க்கி... Wish you all success in all your future endeavours bro... :)

இரசிகை on February 11, 2013 at 7:44 PM said...

vaazhthukal....

:)

Dubukku on February 14, 2013 at 2:53 AM said...

வாழ்த்துகள் கார்க்கி. comfort zone-ஐ விட்டு விட்டு மனதுக்குப் பிடித்ததை செய்வதற்கு ஒரு தில் வேண்டும். வெற்றி நிச்சயம். வாழ்த்துகள் !!

Standup comedy - நல்லா வந்திருக்கு. ஆனா உங்கள் ஜோக்குளை கேட்பவர்கள் உள்வாங்குவதற்கு எதுவான வேகத்தில் பேசுங்கள் இல்லையென்றால் புரியாமலே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த இன்வெஸ்ட்மெண்ட் ஒரு காலர் மைக்குக்கு (or boom mic) வைத்துக்கொள்ளுங்கள். Better quality sound will give more justice to what you are doing :)

செழியன் on March 2, 2013 at 3:33 PM said...

அது நீங்க தான kalakunga பாஸ்

Uma on March 22, 2013 at 11:53 PM said...

வாழ்த்துக்கள் கார்க்கி!

shalini subramanian on March 29, 2013 at 6:30 PM said...

All the best.I definitely find this blog a great way to spend my leisure time happily.

ராஜன் on May 4, 2013 at 6:17 PM said...

வாழ்த்துகள் கார்க்கி.

 

all rights reserved to www.karkibava.com