Feb 15, 2013

வனயுத்தம்

0 கருத்துக்குத்து

 

அப்படியே இதையும் பார்த்துடுங்க.காதலர் தினத்திற்கு நான் செய்த வீடியோ. Smile

http://telly.com/2OEFL9

Feb 8, 2013

what next?

40 கருத்துக்குத்து

 

திருப்பூர்.

கடந்த ஒரு மாதமாக திருப்பூர் தான் என் வசிப்பிடம். பதிவுலகம் வந்த பின் எல்லோருக்கும் போலவே எனக்கும் ரசனையொத்த நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களை போலவே எனக்கும் அதில் யாராவது ஒரு நண்பரின் வீட்டிற்கு அருகே நாமும் வசித்திருக்கலாமே என தோன்றியதுண்டு. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் என்னை அவரது alter egoவாக ஆரம்பத்தில் இருந்தே கருதிவரும் பரிசல்காரானின் வீட்டிற்கு அருகே. இன்னும் சொல்லப் போனால், ஒரே வீட்டில் வெவ்வேறு அறை என்பது போல, முதல் மாடியில் ஒரு போர்ஷனில் அவரும் இன்னொரு போர்ஷனில் நானும் இருக்கிறோம். சாளரம் வழி வந்த நட்பு இப்போது கதவை திறந்தால் தெரிகிறது. யானை பலம் வந்தது போல் உண்ர்கிறேன், கிருஷ்ணருடன் இருந்த அர்ஜூனனை போல.

திருப்பூர் என்னை ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியப்படுத்துகிறது. Migrants அதிகமாக இருப்பதாலோ என்னவோ, எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக தெரிகிறது. சென்னையிலும் வட மாநிலத்தவர் அதிகம் வேலைக்கு வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோனோர் முறைப்படுத்தப்படாமல், கிடைத்த வேலையை செய்கிறார்கள். இது போன்ற சமயங்களில் வருமானத்திற்கு பங்கம் வரும்போது survivalக்காக அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உலகெங்கும் பொதுவான ஒரு செயல் தான். ஆனால் திருப்பூரில் அது எளிதில் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட எல்லா பணியாளர்களின் அடையாள அட்டையும், தகவல்களும் வைத்திருக்கிறார்கள். போலவே, வருமானத்திற்கும் பங்கம் அதிகமில்லை என்பதால் அவர்களும் வேலையை மட்டும் செய்கிறார்கள். என்ன, ட்ராஃபிக் சென்ஸ் என்பது மட்டும் இல்லை. திருப்பூர் சாலைகளில் தினம் ஒரு விபத்து கண்ணில் படுகிறது. இதில் வட, தென் என பாகுபாடில்லை. திருப்பூர்வாசிகள் எல்லோருமே சாலையை கடக்க லைசென்ஸ் வாங்கி விடுவது நல்லது.

திருப்பூர் மாநகராட்சி ஆகிவிட்டதாம். எந்த அடிப்படையில் என தெரியவில்லை. மக்கள் தொகை அல்லது பணப்புழக்கம் காரணமாக இருக்கலாம். ஏ.டி.எம்மை விட முத்தூட் நிறைய இருக்கிறது. மசால் பூரி கடைகளை விட மணப்புரம் அதிகமாக கண்ணில் படுகிறது. சினிமா போஸ்டரை விட “டெய்லர்கள் தேவை” அதிகம் ஒட்டப்பட்டிருக்கிறது. மக்கள் மூச்சு விடுவதை கூட திட்டமிட்டு செய்தாக வேண்டியிருக்கிறது. மாநகராட்சிக்கான அடையாளங்கள் என ஏதுமில்லை. Tripod கேட்டால் கோவைக்கு வண்டி கட்ட சொல்கிறார்கள். Bean bag இருக்கா என்றால் பீன்ஸ் வாங்கும் கூடையா என்கிறார்கள். சில்லி சிக்கன் என சிக்கன் 65 ஐ திணிக்கிறார்கள். அய்யங்கார் பேக்கரியில் முட்டை பப்ஸ் தருகிறார்கள். இங்கு ஏசிக்கு என்ன அர்த்தம் என தெரியவில்லை. தலைக்கு மேலே 3,4 றெக்கைகளுடன் சுத்துவதை நான் ஃபேன் என்றே அறிந்திருக்கிறேன். ஒரே ஆறுதல் யார் படமாக இருந்தாலும் பகல் காட்சி (முதல் நாளே) 20,30 பேர்தான். மாலை , இரவுக்காட்சிகள் மட்டுமே ஹவுஸ்ஃபுல் ஆகின்றன.

திருப்பூர்வாசிகளின் உழைப்பு அசாத்தியாமனது. எல்லோரும் குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். சிங்கப்பூரில் நான் வேலை செய்த போது பகல் நேரங்களில் கடல் படம் ஓடும் தியேட்டர் போல் அனாமத்தாக கிடக்கும். கிட்டத்தட்ட எல்லோருமே வேலை செய்வார்கள் அங்கே.. திருப்பூரும் அப்படித்தான். இவர்களை போல் நம் நாடு முழுவதும் இருந்தால் ஜப்பான் ஆகி விடும் இந்தியா. என்ன, என் மூக்கு சற்று பெரியதென்பதால் எனக்கு அதில் உடன்பாடில்லை. பகல் நேரங்களில் வீட்டிலே முடங்கி கிடக்கும் ஒரு சிலரின் எண்ணிக்கையை உயர்த்தியதை தவிர திருப்பூருக்கு என் பங்களிப்பு ஏதுமில்லை.

  எல்லா நோனாவட்டமும் சரி. நீ என்ன அங்க கிழிக்கிற என்கிறீர்களா? வேலையை விட்டுவிட்டேன். Freelance recruitment செய்கிறேன். முன்பை விட வருமானம் குறைவென்றாலும் எனக்கென அதிக நேரம் கிடைக்கிறது. அதனால் நண்பர்கள்(பரிசல், ராஜன், கெளதம்) சேர்ந்து SOB Network என யூட்யூப் சேனல் தொடங்கியிருக்கிறோம். ப்ளாகில் எழுதி கிழித்தாகிவிட்டது. ட்விட்டரில் நாமதான் டாப்பு என சொல்ல வைத்தாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் உறவினர்களை எல்லாம் உள்ளே விட்டதால் அம்மாஞ்சியாகவே இருக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாம் போரடித்து இப்போ visual mediumத்துகுள்ள் இறங்க முடிவெடுத்தாகிவிட்டது. சினிமா பார்வைகள், Spoof videos, Talk shows, Discussions, Stand up comedy, Parody என ப்ளூ பிரிண்ட் தயார். சேனல் தொடங்கி 7,8 வீடியோக்களும் அப்லோடாகி விட்டன. SOB என்றால் Science of bachelors என பெயரிட்டு இருக்கிறோம். வெறும் வீடியோ சேனலாக மட்டுமின்றி SOBஐ ஒரு இணையதளமாக, இளைஞர்களுக்கான Entertainment & other stuff என்ற ரீதியில் எடுத்து செல்ல திட்டம். அடுத்தடுத்த அறிவிப்புகளின் போது இன்னும் விளக்கமாய் சொல்கிறேன்,

image

இப்போது, நான் கேட்டுக் கொள்வதெல்லாம் வீடியோக்கள் பிடித்திருந்தால் subscribe செய்து கொள்ளுங்கள். நண்பரக்ளுடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். கருத்துகளை சொல்லுங்கள். இது எங்களுக்கு புதிய களம். எழுத்து மட்டுமின்றி விஷுவலாக சுவாரஸ்யப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. முடியுமென்ற நம்பிக்கையில் இறங்கிவிட்டோம். முடித்து விடுவோம்

எல்லாம் சரி. எதுக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்து செய்ற? என்னதான் உன் ஃப்யூச்சர் ப்ளான் என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள். ஒரு வேளை நான் உண்மையை சொல்வேயானால், நீங்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரலாம்.Smile

See you.

__________

Our website   :  www.sobnetwork.in

Youtube Channel: www.youtube.com/sobnetwork

FB Page: https://www.facebook.com/pages/SOBnetwork/506385586073066

Twitter account : www.twitter.com/sobnetwork

கடைசியாக அப்லோடிய வீடியோ:

 

all rights reserved to www.karkibava.com