Dec 14, 2012

நீதானே என் பொன் வசந்தம்


 

Micro review:

NEPV is a grammar for love.Starts off refreshingly.Makes u confused in between. Ends with disappointment. And finally says move on.

______________

கெளதமின் காதல் படங்கள் பொதுவாக எனக்கு பிடிப்பதில்லை. ராஜாவோடு சேர்ந்த ஒரு விஷயத்தில் சறுக்கி (கண்டுபுடிச்சிட்டிங்களா) முதல் நாளே ஏழுமலையானை காண முண்டியடிக்கும் முரட்டு பக்தன் கணக்காக போனேன்.அவரது வழக்கமான ஸ்டைலில் கையை தரையில் ஊன்றி, காலை மேலே தூக்கி அவர்தம் குழுவினர் ஆடத் தொடங்கினர்.  “உடம்பில் சிறகு முளைக்கட்டும்” என்ற ராஜாவின் செமத்தையான குத்துக்கு கூட இண்டோரில், வலதுபக்க மூலையில் ஒரு லைட்டை எரியவிட்டு அதே சாயலில் படமெடுத்து வைத்திருக்கிறார். We have been cheated raja sir என கெளதம் ஸ்டைலிலே சொல்லிக்கொண்டேன்.

டைட்டில் போடும்போதும், அறிமுகமாகும் போது சந்தானம், சமந்தா, ஜீவா என்ற வரிசையில் விசில் சத்த டெசிபல் இருந்தது. ராஜாவின் பேர் போட்டபோது சின்னத்தம்பி கவுண்டமணி கணக்காக நான் மட்டும் கத்தினேன். போகட்டும், சைலன்ஸ் தான் சிறந்த பின்னணி இசைக்கான அடையாளம் என ராஜா சார் சொல்லியிருக்கிறார்.

கதைக்கு வருவோம். வருணும், நித்யாவும் சிறு வயதிலே நண்பர்கள். சிறுவயது என்றால் இரண்டாம் வகுப்பு. அப்போது ஒரு சண்டை. அதே கோவத்தோடு நித்யா ஏரியா மாறி போகிறார். 7 வருடம் கழித்து 10ஆம் வகுப்பு ட்யூஷன் செண்ட்டரில் சந்திக்கிறார்கள். மீண்டும் சேர்கிறார்கள். அப்போது கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களாக இருப்பதால் கன்னத்தில் கிஸ் செய்து கொள்கிறார்கள். இருவருமே ஈகோயிஸ்ட். ஈகோ என்றால் அதான். அகம்பிடிச்ச கழுதை. மீண்டும் சண்டை. மீண்டும் பிரிகிறார்கள். அடுத்து காலேஜ். காலேஜ் கல்ச்சுரசில் வருண் நித்யாவை பார்க்கிறார். நினைவெல்லாம் நித்யா என்று சொல்லிவிட்டு, பிராக்டீஸ் செய்த பாடலை பாடாமல் “நீதானே எந்தன் பொன் வசந்தம்” என கெளதமின் குரலில் வருண் பாடுகிறார். நித்யா தன் பங்குக்கு debate competetionல் “Giving a second chance is the best thing you can give to a person u love” என்று சிக்னல் காட்டுகிறார். இருவரும் பரஸ்பரம் நம்பர் மாற்றிக் கொள்ள முடியாத சூழல். ஏனென்றால் ஜீவாவிடம் மொபைல் இல்லை. எனவே மொபைல் நம்பரோடு மொபைலையே கொடுக்கிறார் பணக்காரர் நித்யா. ஏற்கனவே ஸ்கூலில் கன்னத்தில் கிஸ் எல்லாம் கொடுத்ததால் நாம் அவர்கள் காதலிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இல்லையாம்.

  ஒரு மழை இரவில், காருக்குள்ளே இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திடிரென சமந்தா “ஐ லவ் யூ” என்கிறார். இதுக்கு முன் இப்படியொரு சொல்லாடலையே கேட்டதில்லை என்ற ரீதியில் ஜீவாவும் ஒரு ரியாக்‌ஷன் தருகிறார். ”அப்ப இதுவரைக்கும் நீங்க லவ்வே பண்ணலையா” என முன் சீட்டு நண்பர் ஒருவர் ஜீவாவுக்கு மேல் ரியாக்‌ஷன் காட்டினார். சிக்னல் கொஞ்சம் லேட்டானாலே டைம்பாஸ்க்கு கிஸ் அடிப்பார்கள் கெளதமின் நாயகர்கள். இந்த சூழ்நிலையில் சொல்லவா வேண்டும்! நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது. வா நாம் ஆவோமென தமிழனத்தலைவரின் மேல் பாரத்தை போட்டு கிஸ் அடிக்கிறார் வருண். 40 கலோரியை பர்ன் செய்த பின்னால் நித்யா “என்ன சொல்லு” என்கிறார்.(அவர் லவ் யூ சொல்லலையாம்). பதிலுக்கு வருண் “அதான் சொன்னேனே” என்கிறார். என்ன சொன்ன என்ற நித்யாவை இழுத்து “இப்படி” என கலைஞருக்கு இன்னொரு கிலோ பாரம் ஏற்றுகிறார்.  டேய் இது cadburys ADடா என நான் கத்தினதை ரசிகர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை. படத்தோடு ஒன்றிப் போனார்களா, சமந்தாவை கிஸ் அடிச்சிட்டானே என ஏங்கிப் போனார்களா தெரியவில்லை. எனக்கு பிளாக் இருக்கு அங்க எழுதிக்கிறேன் போங்கடா என மனதுக்குள்ள் சொல்லிக் கொண்டேன்.

இதுவரைக்கும் படம் ஓக்கே. திடிரென வருண் வீட்டில் ஒரு பிரச்சினை. (படத்துக்கும்தான்). அதே நாளில் நித்யாவும் ஹாலிடேஸ்க்கு ஆஸ்த்ரேலியா போகிறார். வருணுக்கு குடும்ப பொறுப்பு வருகிறது. வாரணம் ஆயிரத்தில் சூர்யாவுக்கு வந்ததே. அதேதான். வி.தா.வ.வில் படம் எடுக்கணும் என சிம்புவுக்கு வந்ததே அதேதான். பூனை தேர்வு எழுதி எம்பிஏ படித்தாக வேண்டுமென வசூல்ராஜா. எம்.பி.ஏ முடிவு செய்கிறார். நித்யாவை அடிக்கடி சந்திக்காமல் ஏமாற்றுகிறார். கோழிக்கோட் IIMல் இடம் கிடைக்கிறது. என்னுடன் நீ வரக்கூடாது என்கிறார் வருண். கூடவே நீ வெட்டியென நித்யாவின் ஈகவை டச் செய்துவிடுகிறார். மீண்டும் பிரிகிறார்கள்.

(இருங்க பாஸ். மூணு பத்தி கதை சொன்னதுக்கே பதிவு போரடிக்குதுன்னா, மூணு மணி நேரம் பார்த்த எனக்கு எப்படி இருக்கும். மரியாதையா கொட்டாவி விடாம படிங்க)

3 வருடம் கழித்து எம்.பி.ஏ முடித்து, நல்ல வேளைக்கு போனதும் ஒரு நாள் வருணுக்கு நித்யாவை பார்க்க தோன்றுகிறது. மூன்று வருடத்தில் மீசை வளர்த்துவிடுகிறார் சந்தானம். அவரும், அவர் டாவும், வருணும், நித்யாவை தேடி ஒரு கடற்கரை கிராமத்துக்கு போகிறார்கள். வருதா? கோவம் வருதா? அமெரிக்கா, கேரளா என பழையக் கதையெல்லாம் ஞாபகம் வருதா?அதுதான் இரண்டாம் பாதி. அந்தக்கதையை நான் சொல்வதாய் இல்லை.

வருணின் கேரக்டர் யாரென யூகிக்க முடிகிறதா? ஆம். வி,தா.வ. ஜெஸ்ஸிக்கு மீசை வைத்து யோசித்திருக்கிறார் கெளதம். (ஜீவாவுக்கு மீசையில்லைன்னு கமெண்ட் போட்டால் டெலீட் செய்துவிடுவேன். ஜாக்கிரதை). அதுதான் நீ.எ.பொ.வ. இறுதியிலும் ஜெஸ்ஸியை போலவே வருணும் இன்னொரு பெண்ணை திருமனம் செய்துக் கொண்டு அமெரிக்கா ஓட பிளான் செய்கிறார்.

This could be your love story என்று போஸ்டரில் போட்டிருந்தார்கள். ஆக்ச்சுவலி இது எஸ்.ஜே.சூர்யா கதை சார். குஷியை கிவி பாலிஷ் போல கெளதம் பாலீஷ் போட்டு கொடுத்தால் மறந்துவிடுவோமா? இடைவேளைக்கு முந்தைய மொட்டைமாடி சீன், க்ளைமேக்ஸில் உதட்டு முத்தம், “மயிறு”, ஈகோ போன்ற சகலமும் இருக்கிறது. கட்டிப்பிடி கட்டிபிடிடாவும் மும்தாஜும் மிஸ்ஸிங்.

நிற்க. இதோடு படம் மொக்கையென முடித்துக் கொள்ளலாம். நானும் அதே முடிவோடுதான் AGS, OMR பார்க்கிங்கில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இந்த தியேட்டருக்குத்தானே அவளோடு படம் பார்க்க வந்தோம் என லேசாக பொறி கிளம்பியது. என்னையறியாமல் “என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்” என முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். சற்று தூரம் கடந்த பின் அந்த காஃபி ஷாப்பை பார்த்தேன். வண்டியை நிறுத்தி ஒரு deep breath எடுத்தேன். “அன்று பார்த்தது.. அந்த பார்வை வேறடி அந்த பார்வை வேறடி” என கரகர குரலில் ராஜா மூளைக்குள் பாடினார். வருணும் நித்யாவும் இருந்த காருக்குள் நானும், அவளும் இருந்தோம். ”தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா போல கண்ண வச்சுக்கடா கார்க்கி” என சொல்லிக் கொண்டு கிளம்பினேன். வருணும் நித்யாவும், ராஜாவும், அவளும் கூடவே வந்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் படத்தில் ராஜாவுக்கு வேலை குறைவு. ஆனால் நெஞ்சை விட்டு நீங்காத சில மேஜிக்கல் மொமெண்ட்ஸும் படத்தில் இருப்பதற்கு ராஜாதான் காரணம்.

முடிவு செய்துவிட்டேன். இன்னொருமுறை இப்படத்தை பார்க்க போகிறேன். முதல் முறை தவறவிட்ட தருணங்கள் இந்தமுறை எனக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அப்போது மீண்டுமொரு முறை இப்படம் குறித்து முழுமையாய் எழுத வேண்டும்.  After all, Giving a second chance is the best thing you can give to a person u love. I Love you raja sir.

13 கருத்துக்குத்து:

அமுதா கிருஷ்ணா on December 14, 2012 at 5:32 PM said...

டைரக்டர் எந்த சீனில் வருகிறார் என்று சொல்லவேயில்லை.

தேசாந்திரி on December 14, 2012 at 5:59 PM said...

’ஜக் மோகன் முந்த்ரா’ன்னு ஒருத்தர் ஏ சர்டிபிகேட் படம் எடுத்துகிட்டு இருந்தாரு. படம் முழுக்க மொக்கயா இருந்தாலும், கண்டிப்பா 5 நிமிஷமாவது ‘சீன்’ வெச்சுடுவான் புண்ணியவான். அந்த வயசுல வெளிய வந்தவுடனே சொல்லுவோம், ‘குடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணல மச்சான், நாளைக்கும் வருவோம்’.

அது தான் ஞாபகம் வருகிறது, உங்கள் விமர்சனம் படித்தவுடன்.

சந்திரானந்தா சுவாமிகள் on December 14, 2012 at 6:00 PM said...

After all, Giving a second chance is the best thing you can give to a person u love. I Love you raja sir.# எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் தெகட்டாத பின்னணி இசை ராஜாவினுடையது

ராம்குமார் - அமுதன் on December 14, 2012 at 6:09 PM said...

பிரமாதமான விமர்சனம்... படத்தைத் தாண்டி சில விஷயங்கள் பீல் பண்ணிருக்கீங்க... இன்னோரு வாட்டி வேணா பாத்துட்டு சொல்லுங்க :))

karki bava on December 14, 2012 at 6:24 PM said...

அவர்ய் வரலையே.. ஏன்??

_____
@தேசாந்திரி,
நான் வஞ்சகம் பன்ணாம எழுதறேனா, இல்லை சீன் வைக்கிரேனா??? தெளிவா சொல்லுங்க சார் :))

@சுவாமிகள்,

:)))))))

நடராஜன் on December 14, 2012 at 9:13 PM said...

இந்த கொடுமை படத்துக்கு எழுதின விமர்சனத்தை உங்களுக்காக ஒரு தடவை படிச்சாச்சு. இரண்டாவது தடவை விமர்சனம் எழுதினிங்க, /After all, Giving a second chance is the best thing you can give to a person u love/னு எல்லாம் விடமாட்டோம். மாப்பிளை டிவிடி அனுப்பிவைப்பேன். எச்சரிக்கை

Cable சங்கர் on December 14, 2012 at 10:43 PM said...

எனக்கென்னவோ ராஜாவின் இசை இப்படத்திற்கு ஒட்ட்வேயிலலை என்று தோன்றுகிற்து.

உதய் பிரபு on December 15, 2012 at 10:39 AM said...

நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேக்காம சண்டே போயே ஆகனும்னு அடம்பிடிக்கிறானுங்க. என்னோட அகம்பிடிச்ச கழுதை நண்பர்கள் !!

David Jebaraj on December 15, 2012 at 11:11 AM said...

//(இருங்க பாஸ். மூணு பத்தி கதை சொன்னதுக்கே பதிவு போரடிக்குதுன்னா, மூணு மணி நேரம் பார்த்த எனக்கு எப்படி இருக்கும். மரியாதையா கொட்டாவி விடாம படிங்க)// ஹஹ்ஹா!! அல்டிமேட்

இரசிகை on December 15, 2012 at 8:23 PM said...

m...

இரசிகை on December 15, 2012 at 8:26 PM said...

:))

yaaroda voice-ppa athu....???

niraiyaa sirichen.

இரசிகை on December 15, 2012 at 8:29 PM said...

solla maranthuten....

ungaloda oru post-i paththi veetil pesittu irunthen thambi kooda..

amma kaathula yetho vizhunthurukkum pola,
yentha car-oda key ppaannu nnu kettaanga.

:)

manasukkulla sorry carkey-nnu sollikiten.

murugan g on December 18, 2012 at 3:17 PM said...

I am also going to watch second time for Ilayaraja....We love you Raja!

 

all rights reserved to www.karkibava.com