Dec 14, 2012

நீதானே என் பொன் வசந்தம்

13 கருத்துக்குத்து

 

Micro review:

NEPV is a grammar for love.Starts off refreshingly.Makes u confused in between. Ends with disappointment. And finally says move on.

______________

கெளதமின் காதல் படங்கள் பொதுவாக எனக்கு பிடிப்பதில்லை. ராஜாவோடு சேர்ந்த ஒரு விஷயத்தில் சறுக்கி (கண்டுபுடிச்சிட்டிங்களா) முதல் நாளே ஏழுமலையானை காண முண்டியடிக்கும் முரட்டு பக்தன் கணக்காக போனேன்.அவரது வழக்கமான ஸ்டைலில் கையை தரையில் ஊன்றி, காலை மேலே தூக்கி அவர்தம் குழுவினர் ஆடத் தொடங்கினர்.  “உடம்பில் சிறகு முளைக்கட்டும்” என்ற ராஜாவின் செமத்தையான குத்துக்கு கூட இண்டோரில், வலதுபக்க மூலையில் ஒரு லைட்டை எரியவிட்டு அதே சாயலில் படமெடுத்து வைத்திருக்கிறார். We have been cheated raja sir என கெளதம் ஸ்டைலிலே சொல்லிக்கொண்டேன்.

டைட்டில் போடும்போதும், அறிமுகமாகும் போது சந்தானம், சமந்தா, ஜீவா என்ற வரிசையில் விசில் சத்த டெசிபல் இருந்தது. ராஜாவின் பேர் போட்டபோது சின்னத்தம்பி கவுண்டமணி கணக்காக நான் மட்டும் கத்தினேன். போகட்டும், சைலன்ஸ் தான் சிறந்த பின்னணி இசைக்கான அடையாளம் என ராஜா சார் சொல்லியிருக்கிறார்.

கதைக்கு வருவோம். வருணும், நித்யாவும் சிறு வயதிலே நண்பர்கள். சிறுவயது என்றால் இரண்டாம் வகுப்பு. அப்போது ஒரு சண்டை. அதே கோவத்தோடு நித்யா ஏரியா மாறி போகிறார். 7 வருடம் கழித்து 10ஆம் வகுப்பு ட்யூஷன் செண்ட்டரில் சந்திக்கிறார்கள். மீண்டும் சேர்கிறார்கள். அப்போது கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களாக இருப்பதால் கன்னத்தில் கிஸ் செய்து கொள்கிறார்கள். இருவருமே ஈகோயிஸ்ட். ஈகோ என்றால் அதான். அகம்பிடிச்ச கழுதை. மீண்டும் சண்டை. மீண்டும் பிரிகிறார்கள். அடுத்து காலேஜ். காலேஜ் கல்ச்சுரசில் வருண் நித்யாவை பார்க்கிறார். நினைவெல்லாம் நித்யா என்று சொல்லிவிட்டு, பிராக்டீஸ் செய்த பாடலை பாடாமல் “நீதானே எந்தன் பொன் வசந்தம்” என கெளதமின் குரலில் வருண் பாடுகிறார். நித்யா தன் பங்குக்கு debate competetionல் “Giving a second chance is the best thing you can give to a person u love” என்று சிக்னல் காட்டுகிறார். இருவரும் பரஸ்பரம் நம்பர் மாற்றிக் கொள்ள முடியாத சூழல். ஏனென்றால் ஜீவாவிடம் மொபைல் இல்லை. எனவே மொபைல் நம்பரோடு மொபைலையே கொடுக்கிறார் பணக்காரர் நித்யா. ஏற்கனவே ஸ்கூலில் கன்னத்தில் கிஸ் எல்லாம் கொடுத்ததால் நாம் அவர்கள் காதலிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இல்லையாம்.

  ஒரு மழை இரவில், காருக்குள்ளே இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திடிரென சமந்தா “ஐ லவ் யூ” என்கிறார். இதுக்கு முன் இப்படியொரு சொல்லாடலையே கேட்டதில்லை என்ற ரீதியில் ஜீவாவும் ஒரு ரியாக்‌ஷன் தருகிறார். ”அப்ப இதுவரைக்கும் நீங்க லவ்வே பண்ணலையா” என முன் சீட்டு நண்பர் ஒருவர் ஜீவாவுக்கு மேல் ரியாக்‌ஷன் காட்டினார். சிக்னல் கொஞ்சம் லேட்டானாலே டைம்பாஸ்க்கு கிஸ் அடிப்பார்கள் கெளதமின் நாயகர்கள். இந்த சூழ்நிலையில் சொல்லவா வேண்டும்! நான், நீ என்றால் உதடுகள் ஒட்டாது. வா நாம் ஆவோமென தமிழனத்தலைவரின் மேல் பாரத்தை போட்டு கிஸ் அடிக்கிறார் வருண். 40 கலோரியை பர்ன் செய்த பின்னால் நித்யா “என்ன சொல்லு” என்கிறார்.(அவர் லவ் யூ சொல்லலையாம்). பதிலுக்கு வருண் “அதான் சொன்னேனே” என்கிறார். என்ன சொன்ன என்ற நித்யாவை இழுத்து “இப்படி” என கலைஞருக்கு இன்னொரு கிலோ பாரம் ஏற்றுகிறார்.  டேய் இது cadburys ADடா என நான் கத்தினதை ரசிகர்கள் கேட்கும் மனநிலையில் இல்லை. படத்தோடு ஒன்றிப் போனார்களா, சமந்தாவை கிஸ் அடிச்சிட்டானே என ஏங்கிப் போனார்களா தெரியவில்லை. எனக்கு பிளாக் இருக்கு அங்க எழுதிக்கிறேன் போங்கடா என மனதுக்குள்ள் சொல்லிக் கொண்டேன்.

இதுவரைக்கும் படம் ஓக்கே. திடிரென வருண் வீட்டில் ஒரு பிரச்சினை. (படத்துக்கும்தான்). அதே நாளில் நித்யாவும் ஹாலிடேஸ்க்கு ஆஸ்த்ரேலியா போகிறார். வருணுக்கு குடும்ப பொறுப்பு வருகிறது. வாரணம் ஆயிரத்தில் சூர்யாவுக்கு வந்ததே. அதேதான். வி.தா.வ.வில் படம் எடுக்கணும் என சிம்புவுக்கு வந்ததே அதேதான். பூனை தேர்வு எழுதி எம்பிஏ படித்தாக வேண்டுமென வசூல்ராஜா. எம்.பி.ஏ முடிவு செய்கிறார். நித்யாவை அடிக்கடி சந்திக்காமல் ஏமாற்றுகிறார். கோழிக்கோட் IIMல் இடம் கிடைக்கிறது. என்னுடன் நீ வரக்கூடாது என்கிறார் வருண். கூடவே நீ வெட்டியென நித்யாவின் ஈகவை டச் செய்துவிடுகிறார். மீண்டும் பிரிகிறார்கள்.

(இருங்க பாஸ். மூணு பத்தி கதை சொன்னதுக்கே பதிவு போரடிக்குதுன்னா, மூணு மணி நேரம் பார்த்த எனக்கு எப்படி இருக்கும். மரியாதையா கொட்டாவி விடாம படிங்க)

3 வருடம் கழித்து எம்.பி.ஏ முடித்து, நல்ல வேளைக்கு போனதும் ஒரு நாள் வருணுக்கு நித்யாவை பார்க்க தோன்றுகிறது. மூன்று வருடத்தில் மீசை வளர்த்துவிடுகிறார் சந்தானம். அவரும், அவர் டாவும், வருணும், நித்யாவை தேடி ஒரு கடற்கரை கிராமத்துக்கு போகிறார்கள். வருதா? கோவம் வருதா? அமெரிக்கா, கேரளா என பழையக் கதையெல்லாம் ஞாபகம் வருதா?அதுதான் இரண்டாம் பாதி. அந்தக்கதையை நான் சொல்வதாய் இல்லை.

வருணின் கேரக்டர் யாரென யூகிக்க முடிகிறதா? ஆம். வி,தா.வ. ஜெஸ்ஸிக்கு மீசை வைத்து யோசித்திருக்கிறார் கெளதம். (ஜீவாவுக்கு மீசையில்லைன்னு கமெண்ட் போட்டால் டெலீட் செய்துவிடுவேன். ஜாக்கிரதை). அதுதான் நீ.எ.பொ.வ. இறுதியிலும் ஜெஸ்ஸியை போலவே வருணும் இன்னொரு பெண்ணை திருமனம் செய்துக் கொண்டு அமெரிக்கா ஓட பிளான் செய்கிறார்.

This could be your love story என்று போஸ்டரில் போட்டிருந்தார்கள். ஆக்ச்சுவலி இது எஸ்.ஜே.சூர்யா கதை சார். குஷியை கிவி பாலிஷ் போல கெளதம் பாலீஷ் போட்டு கொடுத்தால் மறந்துவிடுவோமா? இடைவேளைக்கு முந்தைய மொட்டைமாடி சீன், க்ளைமேக்ஸில் உதட்டு முத்தம், “மயிறு”, ஈகோ போன்ற சகலமும் இருக்கிறது. கட்டிப்பிடி கட்டிபிடிடாவும் மும்தாஜும் மிஸ்ஸிங்.

நிற்க. இதோடு படம் மொக்கையென முடித்துக் கொள்ளலாம். நானும் அதே முடிவோடுதான் AGS, OMR பார்க்கிங்கில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். இந்த தியேட்டருக்குத்தானே அவளோடு படம் பார்க்க வந்தோம் என லேசாக பொறி கிளம்பியது. என்னையறியாமல் “என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்” என முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். சற்று தூரம் கடந்த பின் அந்த காஃபி ஷாப்பை பார்த்தேன். வண்டியை நிறுத்தி ஒரு deep breath எடுத்தேன். “அன்று பார்த்தது.. அந்த பார்வை வேறடி அந்த பார்வை வேறடி” என கரகர குரலில் ராஜா மூளைக்குள் பாடினார். வருணும் நித்யாவும் இருந்த காருக்குள் நானும், அவளும் இருந்தோம். ”தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா போல கண்ண வச்சுக்கடா கார்க்கி” என சொல்லிக் கொண்டு கிளம்பினேன். வருணும் நித்யாவும், ராஜாவும், அவளும் கூடவே வந்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் படத்தில் ராஜாவுக்கு வேலை குறைவு. ஆனால் நெஞ்சை விட்டு நீங்காத சில மேஜிக்கல் மொமெண்ட்ஸும் படத்தில் இருப்பதற்கு ராஜாதான் காரணம்.

முடிவு செய்துவிட்டேன். இன்னொருமுறை இப்படத்தை பார்க்க போகிறேன். முதல் முறை தவறவிட்ட தருணங்கள் இந்தமுறை எனக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.அப்போது மீண்டுமொரு முறை இப்படம் குறித்து முழுமையாய் எழுத வேண்டும்.  After all, Giving a second chance is the best thing you can give to a person u love. I Love you raja sir.

Dec 7, 2012

நான் காலியான கதை

3 கருத்துக்குத்து

 

நான் காலியான கதை – 1

நான் காலியான கதை – 2

நான் காலியான கதை – 3

   அந்த SMS அன்றைய பொழுதை துள்ளலுடன் தொடங்கி வைத்தது. அன்றிரவே ஜிடாக்கில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்போம் என எந்த கேலண்டர் ராசிபலனிலும் குறிப்பிடவில்லை.தொலைக்காட்சி ஜோசியர்களும் சொல்லவில்லை. சின்னத்திரை சூப்பர்ஸ்டார் ராதிகாவை பார்த்துக்கொண்டு, கண்ணை கசக்கிக்கொண்டே  அம்மா கணக்கு பார்க்காமல் சுட்டு தந்த 7 தோசைகளையும் அமுக்கிவிட்டு லேப்டாப்போடு சரணாகதி அடைந்தபோது மணி 9.27(மன்மோகன் சிங்).

வந்திருந்த 22ஸ்பேம் மெயில்களை டெலிட்டிவிட்டு அடுத்த Tabஐ திறக்கும்போதே ஜிமெயில் டேப் மின்னியது

Hi

இவ்வுலகில் காவியமான, வரலாறான, காணாமல் போன, கந்தலாகி போன, எல்லா வகையிலான பல கோடி காதல்களையும் ஆரம்பித்து வைத்த அதே ஹாய்.

hey. surprise.

yup. 100 sms over. dats why pinged you here.

(கதை நடக்கும் காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆட்சியில் ஒவ்வொரு நம்பருக்கும் ஒரு நாளைக்கு 100 SMS மட்டுமே என்ற ஆஃபர் அமுலில் இருந்ததை கவனத்தில் கொள்ளுங்கள்)

100ம் காலியா?

Yes.Sent forward sms to many.

நல்லது.எனக்கும் வந்துச்சு.பேசிக்கலி நான் சோம்பேறி. அதான் ரிப்ளை பண்ணல. Smile

Its ok. It was jus a forward.

(நம்பரையே யாருக்கோன்னு அனுப்பிய ஆளு இப்ப மெசெஜ் Jus forward என்பது தெரியாமலா சுத்துறேன் நான்?இருக்கட்டும் என்று சிரித்துக் கொண்டேன். )

ஓக்கே..

One doubt. How do ur friends call u? Carkey or any pet name?

கார்க்கிதான். எனக்கு நிறைய பேர் வச்சாங்க. எதுவும் செட் ஆகல.

mm. Shall I call you boss?

இதுக்கு லூசுன்னு நேராவே சொல்லியிருக்கலாம்

Haha.. read that boss-loosu tweet . gud one Boss

பாஸ் வேணாமே.. கார்க்கினு சொல்லுங்க

car key is nice aana flow la vara maatengudhu

கெட்டியான பேராச்சே.. அதான் தண்ணி மாதிரி Flow ஆக மாட்டேங்குது

ufff.i shall start calling car key for few days. palakam aagudha nu paakalam.. aachu na ok.. illana shall fix with boss..deal ah no deal ah? =P

இதெல்லாம் ஒரு மேட்டரா?? விடுங்க..y shud bother for something which really doesn't matter :))

doesnt matter na naan edhukku unga kitta pesa poren. poitey irukka vendiyadhu dhane! too much pa ungaluku! =@ =X

அச்சோ.. நீங்க என்ன சொன்னாலும் ஒண்ணுதானேன்னு சொன்னேன்!

adhu epdi? boss and car key same ah?

உனக்கு கார்க்கி செட் ஆகல.. பாஸ்தான் வருது. அதுக்கு சொன்னேன்

naana dhane car key try panren nu sonnen.. pinna enna.. innum car key nu koopdavey aarambikkala.. adhu kulla vandhutaaru!

ஓக்கே.. நிஜமா கோவப்பட்டியா?

lemme make this clear.u do mean something to me. You've been such a nice friend till now..thats y i am speaking to you. else i wouldnt have made any efforts at all. avlo dhan.

ஓக்கே நீயே ஒரு பேரு வை.

Wait. What about car?

Car? இதுவரைக்கும் யாரும் சொல்லல.. ஆனா நல்லாதான் இருக்கு

Hey super car..

ஹலோ வெறும் காரா, சூப்பர் காரா? ஏன்னா பாண்டியராஜன் படத்துல வர்ற சூப்பர் கார் பாதியா பிரிஞ்சிடும்.

Car car..

என் பேரென்ன கவிதையா? ரெண்டு தரம் சொல்றீங்க?

Am super excited. Car..super illa.. Smile

பொண்ணு கூப்பிட்டா ஓக்கே. பசங்க கார்ன்னா நல்லாவா இருக்கும்?

I don’t mind pa.. I jus love the name car.. car car ..hihi

ட்விட்டர்ல சொல்லிடாதீங்க. எவனாச்சும் வந்து “நீங்க வரும் காரா இல்லை சொப்பனசுந்தரி காரா”ன்னு கேட்பான்

LOL. Mokkai maharaaja

(சட்டென மூளையில் பல்பெரிய அந்த அரிய விளையாட்டை தொடங்கினேன்)

ஒரு கேம் ஆடலாமா?

Game? What is that?

(தொடரும்)

Dec 5, 2012

நான் காலியான கதை

14 கருத்துக்குத்து

 

நான் காலியான கதை – 1

நான் காலியான கதை – 2

வியாதியே இல்லாத டாக்டர்தான் தினம் தினம் மாத்திரைகளோடு காலம் கழிக்கிறார் இல்லையா? அது போலதான் நானும் பிளாக், ட்விட்டர்னு தோழி அப்டேட்ஸா எழுதிட்டு இருந்தேன். உண்மையிலே எனக்கு தோழி இருக்காளா இல்லையா என்பதை ஏதோ மன்மோகன் சிங்கை பேச வைக்கும் அதிசய மந்திரத்த தேடுற மாதிரி கூட சிலர் பேசிக்கிட்டாங்க. ”எனக்கு அழுகை வந்தா அழுவேன். அழறேன்னு சொல்ல மாட்டேன்”ன்னு சொன்ன மாதிரி எனக்கு காதல் வந்தா காதலிப்பேன். இப்படி காதலிக்கிறேன்னு சொல்லிட்டு இருக்க மாட்டேன்.

ஒரு நாள் வழக்கம் போல ட்விட்டர்ல தோழி அப்டேட்ஸ் எழுதினேன்.

”தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஸ்வீட் கொடுக்கும் வேலை வழக்கமாக தோழியிடம் வருமாம். இந்த வருடம் கொடுக்க மாட்டேன் என்றாள். காரணம் கேட்ட போது சொன்னாள் “ வழக்கமா ஸ்வீட் கொண்டு போய் கொடுப்பாங்க. ஸ்வீட்டே கொண்டு போய் கொடுக்குமான்னு நீ கிண்டல் பண்ணுவ”.”

”சாமி மீது அதீத‌ ப‌ற்று உள்ள‌வ‌ர்க‌ள் சாமியார் ஆகும் போது நான் ஏன் தோழியார் ஆக‌ கூடாது?”

சற்று நேரத்தில் “You got a direct message” என்றது ஜிமெயில். திறந்து பார்த்தேன்.

loved ur last 2-3 tweets ! so cuweet !! :)) keep going

அனுப்பியவரின் புரொஃபைலை திறந்து பார்த்தேன். கன்னத்தில் கைவைத்து இடதுபுறம் மூழ்கியிருந்த கப்பலை பார்த்தபடி ஒரு புகைப்படம் இருந்தது. தமிழகத்தில் காணாமல் போன மொத்த மெகாவாட்ஸூம் அவ்விரு கண்களில் காண முடிந்தது. ஒரு கணம் சிவாஜியை போல ஓவர்ஆக்டிங் செய்யாமல் இருக்க முடியவில்லை. பதில் அனுப்பினேன். பதில்கள் வந்தன.

தேங்க்ஸ்.

Most of the times I am in mobile.  cant read tamil fonts.Today read all  thozi tweets in laptop. Loved it.

You rock. Do write more.

இது போன்ற பாராட்டுகள் வருவதுண்டு என்றாலும் என்னால் வித்தியாசத்தை உணர முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் டைரக்ட் மெசஜில் அதிக நேரம் போனது. கெளதம் துணையுடன் சொல்வதென்றால் It jus happened.

No updates today?

கொஞ்சம் பிசி. ட்விட்டருக்கே வரல

Oh. With thozhi?

ம்க்கும்.அதெல்லாம் சும்மாங்க.. ஆள் இருந்தா நான் ஏன் ட்விட்டர்லயே கிடக்கிறேன்?

That veena tweet was awesome. me and my roomie were reading that nth time and every time we were  literally ROTFL

“ப‌க்க‌த்து வீட்டு பொண்ணு வீணா, பொறுப்பா காலேஜுக்கு போனாலும் வீணா போனான்னுதான் சொல்லும் இந்த‌ உல‌க‌ம்”  இதுவா?

Yup. have u written any other veena tweet?

இல்லை. உங்கள மறுபடியும் கீழ தள்ளி, உருண்டு  சிரிக்க வைக்கலாம்னுதான்..

HAHA. Aren’t u in any relationship? Really? Cant believe that thozi updates are not true.

ஒரே ஒரு பொண்ண லவ் பண்ணா அவ்ளோ தோணாதுங்க.

hihi. I wish you get a girl who deserves all those updates. They r really awesome.

கிடைச்சா அப்டேட்ஸ் ஸ்டாப் ஆயிடுமே..

Is it? Its ok. engalukku karkithaan mukiyam. updates illai. LOL

மாட்டி விடுறதுல பொண்ணுங்கள மிஞ்ச முடியுமா? ரைட்டு

9677******

என்ன இது?

Oh.sorry.. Its for my other friend. Btw, Dats my number.

ஓக்கே..9789887048.இது என் நம்பர்தான். உங்களுத்தான் அனுப்பினேன்.

Smile

_____________

-----------------------

மணி 12.30 ஐ தாண்டியிருக்கும். தூங்கிப் போயிருந்தேன். மறுநாள் காலை 7.30க்கு அடிக்கும் அலாரத்திற்கு முன்பே கதறியது மொபைல்.

 

“Nevr miss the first opportunity bcoz the second opportunity will b much difficult than first 1. Gud Mrning”

யாரோ ஃபார்வர்ட் அனுப்பியிருந்தார்கள். நம்பரை பார்த்தேன். 9*******

ஒரு பாடலில் நாயகியை பார்த்தும் பார்க்காதது போல கடந்துவிட்டு நொடியில் திரும்புவாரே கமல்ஹாசன். அது போல மீண்டும் மொபைலை பார்த்தேன்

9677******

 

all rights reserved to www.karkibava.com