Oct 7, 2012

ஏழுவும் பிளாக் டாகும்


 

எத்தனை பேருக்கு ஏழுவை நினைவிருக்கிறது என்று தெரியவில்லை. புதியவர்கள் இத ஒரு தடவ படிச்சிட்டு வந்தா வசதியா இருக்கும்.

சென்ற வாரம் கல்லூரி நண்பன் ஒருவன் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.. ஏழுவும் வந்திருந்தான். ஏழுவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் கூட பிறந்தாகிவிட்டன. ஆனால் எடை மட்டும் கூடவில்லை. கிராம் கணக்கு கூட துல்லியமாக இருப்பதாக சொன்னான். மேல் பாக்கெட்டை முன்பெல்லாம் ஆஸி அணி ஃபீல்டிங்கில் லெக் சைடு போல் காலியாக வைத்திருப்பான். இப்போது ஆஃப் சைடு கணக்காக துருத்திக் கொண்டிருந்த சட்டை பாக்கெட் அவனொரு குடும்பஸ்தன் என்பதை பறை சாற்றியது. எட்டி பார்த்ததில் சிலபல விசிட்டிங் கார்டுகளும், ஏடிஎம் அட்டைகளும் சில நூறு ரூபாய் நோட்டுகளும் மொய் கவர் ஒன்றும் தெரிந்தன. பர்ஸ் வாங்கும் செலவை கூட மிச்சப்படுத்துகிறான் போல.

குடும்பத்துடன் வந்திருந்ததால் ஏழுவை சரக்கு பார்ட்டிக்கு அழைக்கலாமா வேண்டாமா என்ற சஞ்சலம் எனக்கும் பாலாஜிக்கும் இயல்பாக எழுந்தது. விஷயத்தை கேட்டு முறைத்த ஏழு “பொண்டாட்டி முறுக்கு மாதிரி மச்சி. ஃப்ரெண்ட்ஸ் சரக்கு மாதிரி. சரக்குக்கு அப்புறம்தான் முறுக்கு” என்றான். இன்னொரு அபாய இரவுக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருன்ந்தது இம்முறை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அண்ணியையும், குழந்தைகளையும் ஒரு ரூமில் தங்க வைத்தாயிற்று. “எவ்ளோ லேட் ஆனாலும் இங்க வந்துடுங்க” என்றார் அண்ணி அண்ணனிடம். பின்  சரக்கு வாங்க சென்றோம். மறுநாள் காந்தி ஜெயந்தி.

நான் தான் ஆரம்பித்தேன். ”ஏன் மச்சி. காந்திக்காக ஒரு நாள் டாஸ்மாக்க மூடினா, பெரியாருக்காக ஒரு நாள் கோவில மூடுறதுதானே நியாயம்”

ஏழுவுக்கு எங்கிருந்தோ வந்துவிட்டது கோபம். ”ஏன் மூடணும்? கண்ணதாசன் பொறந்தநாளைக்கு சரக்க டிஸ்கவுண்டலயா கொடுக்குறானுங்க?”

கண்ணதாசனும், காந்தியும் ”க”னாவில் ஆரம்பிப்பதால் ஒன்றாக நினைத்துவிட்டான் ஏழு. கரண்ட் கட்டினால் விளைந்த சொற்ப நன்மைகளில் ஒன்று தைரியமாக டாஸ்மாக்கில் சரக்கு வாங்குவது.வழக்கம் போல் ஒரு ஃபுல் பிராந்தி எங்களுக்கும், ஒரு ஃபுல் கிங்ஃபிஷர் பியர் ஏழுவுக்கும் வாங்கிக் கொண்டோம்.

பாலாஜிதான் மிக்ஸீங்கை சேர்த்தான். முதல் ட்ராப் எடுத்து நாக்கில் விட்ட ஏழு “மச்சி. லைட்டா பெப்சி ஊத்து.ராவா இருக்கு” என்றான். ஏழுவை முதன் முதலில் சந்தித்த இன்னொரு நபருக்கு அவனை பற்றி எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். அடுத்த ட்ராப்பை சுவைத்தவன் சொன்னான் ”சட்னி நல்லா இல்லைன்னா மிக்ஸி பிராப்ளம். சரக்கு நல்லா இல்லைன்னா மிக்ஸீங் பிராப்ளம். உனக்கு கைப்பக்குவம் போயிடுச்சுடா மாப்ள”. எரிச்சலில் பீர் போலவே பொங்கினான் பாலாஜி.

“டென்ஷன் ஆகாத மச்சி. கல்யாண வாழ்க்கை கூட இப்படித்தான். சரக்க ஊத்திக்கிட்டே இருக்கும். தண்ணி சேர்க்கிறதும், கூல் ட்ரிங்க்ஸ் சேர்க்கிறதும் நம்ம கைலதான் இருக்கு”. கல்யாணாமாகத நாங்கள் புரியாமல் முழித்தோம்.

  “பேச்சிலர் வாழ்க்கன்றது வாழக்கா மாதிரி. மாவு கிடைச்சா பஜ்ஜி. இல்லைன்னா சிப்ஸ்.” என இருக்கும் ஆடியன்ஸ் பல்ஸ் தெரிந்து தொடர்ந்தான்.ஏழுவின் ஏகாந்த நிலை நாலாவது ட்ராப்பிலே ஆரம்பித்ததை எண்ணி சிரித்துக் கொண்டிருந்தேன் நான்.கல்யாண மேட்டர் சொன்ன நேரம் கல்யாண மாப்பிள்ளை அறைக்குள் வந்தான்.

“ஊறுகாய் வேணும்டா மச்சி” – பாலாஜி.

டேய். உங்களுக்காக நான் பிளாக் டாக் வாங்கி வச்சிருக்கேன். என்னடா லோக்கல் சரக்கு” என்றான் மறுநாள் மாப்பிள்ளை.

அத அடிக்கவும் ஊறுகாய் வேணும்டா” –இதுவும் பாலாஜி.

“டாக அடிக்க கல்லு போதுமே மச்சி. எதுக்கு ஊறுகாய்” என்ற ஏழுவை அறையில் இருந்த ஏழு பேரும் கையில் கல் இல்லாத போது கண்ட நாயாக பார்த்தோம்.

ஏதேனும் சொல்லி தப்பித்தாக வேண்டும் என்ற அளவிற்கு ஸ்டெடியாக இருந்த ஏழு “திரைகடல் ஓடியும் திரவியம் தேடுனுன்னா என்ன? பாரின் சரக்கு உசார் பண்ணி அடிங்கடானு முன்னோர்கள் சொல்லி இருக்காங்க மச்சி. ஐ லைக் இட்” என்றான்.

“டேய் ஏழு. பாட்டிலுக்கு வாயும் இருக்கு. அதுக்கிட்ட சரக்கும் இருக்கும். அது என்னைக்காச்சும் சலம்புதா? நீ ஏண்டா இப்படி இருக்க” மாப்பிள்ளை கிட்டத்தட்ட ஸ்ரீஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ மாப்பிள்ளையாந்தா சுவாமிகளாக மாறும் அளவிற்கு கடுப்பேற்றியிருந்தான் ஏழு.

”சூப்பர் மாப்பி. இங்க வா. நான் உனக்கு ஜென் சொல்லித் தறேன்” என்ற ஏழு இன்னும் எச்சில்ப்படுத்தப்படாமல் இருந்த பாலிஜி கிளாசில் ஒரு ஐஸ் க்யூபை போட்டான். பாதி சரக்கு வெளியே தெறித்தது

“அமைதியான க்ளாஸ்

ஐஸ் க்யூப் போட்டால்

க்ளக் க்ளக்”

கிட்டத்தட்ட சிவாஜியை போல இருக்கும் எல்லா பார்ட்டையும் ஆட்டி கவிதை சொல்லிக் கொண்டிருந்தான் ஏழு. ஒரு சரக்கு கிளாஸ்தான் எத்தனை தத்துவ கிளாஸ் எடுக்க உதவுகிறது என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன் நான். சரக்கு வேஸ்ட்டான கடுப்பில் இருந்தான் பாலாஜி. ஒரு ஜென் துறவி போல இதையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த புதிய நண்பர்.

ஏழுவை மட்டையாக்க பிளான் செய்த பாலாஜி, அவன் பியரில் கொஞ்சம் பிளாக் டாகை சேர்த்துக் கொடுத்தவிட்டான். கோரஸாக சிரித்த எனக்கும் ஏதோ கல்பசிங்கிள்ஜிக்கான் செய்துவிட்டான். ஏழுவிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். முதுகுல குத்துனவன் சரக்கு வாங்கி குடுத்தவனா இருந்தா வாந்தி எடுக்குற வரைக்கும் வெளிய சொல்ல கூடாது என்பது நட்பு விதியென்பதால் வாந்தி வருமா என காத்துக் கொண்டிருந்தேன். எப்படியாவது ஏழுவை ரூமில் சேர்க்க வேண்டுமென்பதால் கைத்தாங்கலாக அந்த நாலு மீட்டர் தோலையும், நாலஞ்சு எலும்பையும் சுமந்தபடி நடக்க தொடங்கினேன்.

“மச்சி. உன் தோள்ல சாஞ்சுட்டு வரும்போதுதாண்டா தெரிது”

என்ன தெரிது?

நாம சரக்கு கொஞ்சம் ஓவராதாண்டா அடிச்சிடோம்”

ஏழுவை ரூமில் ட்ராப் செய்தபின், கதவை தட்டிவிட்டு அண்ணியை பார்க்காமல் ஓடி வந்துவிட்டேன். மறுநாள் கொலைவெறியில் எங்களை தேடி வந்தான் ஏழு.

“என்ன எழவடா மிக்ஸ் பண்னீங்க.”

“பாலாஜிதான் மச்சி பீரு இல்லைன்னு விஸ்கிய மிக்ஸ் பண்ணிட்டான். என்ன ஆச்சு”

ஏழு அரங்கம் அதிர கத்தினான் ”சாக்கு சொல்லாதீங்கடா. ஏம்ப்பா நைட்டு என்கிட்ட இங்க்லீஷுல பேசுனேன்னு கேட்கிறான் என் பையன். பிளாக் டாக் கதையவாடா சொல்ல முடியும்”

_________________

பிகு: எனக்கு பிடித்த சிலரின் ட்வீட்ஸ்களை பதிவில் பயன்படுத்தி இருக்கிறேன். யார் யார் எழுதியது என்பதெல்லாம் நினைவிலில்லை. ஒரு உரிமையில் சேர்த்திருக்கிறேன். Smile

28 கருத்துக்குத்து:

வெண்பூ on October 7, 2012 at 12:58 AM said...

செம..

//
“டாக அடிக்க கல்லு போதுமே மச்சி. எதுக்கு ஊறுகாய்” என்ற ஏழுவை அறையில் இருந்த ஏழு பேரும் கையில் கல் இல்லாத போது கண்ட நாயாக பார்த்தோம்.
//

சிரிச்சிட்டு இருக்கேன்... :))))

நடராஜன் on October 7, 2012 at 1:02 AM said...

எம்புட்டு நாளாச்சு. இதெல்லாம் பாத்து. :) ஆஸி அணியின் லெக் ஸைட் ஃபீல்ட் இந்த பதிவின் பிக் ஆஃப் தி உவமை. :)

Nataraj (ரசனைக்காரன்) on October 7, 2012 at 1:05 AM said...

ஒல்ட் பன்னீர்செல்வம் ஹஸ் அரைவ்ட்..

sum1 spcl on October 7, 2012 at 1:09 AM said...

// ஒரு சரக்கு கிளாஸ்தான் எத்தனை தத்துவ கிளாஸ் எடுக்க உதவுகிறது //என்ன ஒரு தத்துவம்??!! நைஸ்...!!
சந்து என்கிற லாஓசி

sum1 spcl on October 7, 2012 at 1:09 AM said...

பினிஷிங் டச் அபாரம்..!!!

புதுகை.அப்துல்லா on October 7, 2012 at 8:38 AM said...

அல்டிமேட் :))

Sen22 on October 7, 2012 at 9:05 AM said...

Superb..!!

முரளிகண்ணன் on October 7, 2012 at 9:26 AM said...

ஆஸி செம. கலக்கல் சகா

KSGOA on October 7, 2012 at 9:38 AM said...

welcome back!!!!!

சுரேகா.. on October 7, 2012 at 9:53 AM said...

ஜூப்பரு..!! :)

வள்ளி on October 7, 2012 at 10:00 AM said...

எழுவை மீண்டும் சந்திச்சதில் மகிழ்ச்சி:)

karki bava on October 7, 2012 at 11:12 AM said...

வெண்பூ, :)))

நடராஜன், அது என் மேட்டர்தான் :)

நட்டு, ஹிஹிஹி

சந்து, நன்றி

அப்துல்லா, நன்றிண்ணே.. டச் விடல :)

சென், :))

முரளி, உங்களுக்கு அதான் புடிக்கும்னு தெரியும் சயிண்ட்டிஸ்ட் :)

கே.எஸ்.கோவா நன்றி

சுரேகா, நன்றிண்ணே

வள்ளி, நன்றி

குழந்தபையன் on October 7, 2012 at 11:35 AM said...

ஏழு வால் பாறைகள்.... வெல்கம் பேக் குரு....விராத் கோஹலி மாதிரி கன்சிஸ்டன்ஸி இருக்கு எழுத்துல....

amas on October 7, 2012 at 1:08 PM said...

Nice post after a long time. Your post must also come with a warning-குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு! :-)

amas32

SenthilMohan on October 7, 2012 at 2:10 PM said...

Welcome back 7. வரணும். பழைய ஏழர ஏழுவா வரணும். btw, அதுக்குள்ள ஏழுவுக்கு கண்ணாலம் கட்டி வெச்சுட்டியே சகா. பாவமில்ல அந்த அப்பாவி. :))

பரிசல்காரன் on October 7, 2012 at 8:31 PM said...

பதிவுல ஒரு வரில பொய் தெரியுது.

வெண்பூ on October 7, 2012 at 8:32 PM said...

பார்ட்னர்... ஹி.ஹி.. பதிவைப் படிச்சதும் நானும் அதேதான் நினைச்சேன் :)

Vijayakumar G on October 8, 2012 at 10:53 AM said...

nice post...

M.G.ரவிக்குமார்™..., on October 8, 2012 at 1:34 PM said...

க்ளக் க்ளக் ட்வீட் என்னுது,அப்புரம் கடைசியா வந்த இங்கிலீஷ் பேசுன ட்வீட் இலவசமா விடு மாமுவோடது!

இரசிகை on October 8, 2012 at 5:14 PM said...

nallyirukku..

இரசிகை on October 8, 2012 at 5:20 PM said...

//நான் தான் ஆரம்பித்தேன். ”ஏன் மச்சி. காந்திக்காக ஒரு நாள் டாஸ்மாக்க மூடினா, பெரியாருக்காக ஒரு நாள் கோவில மூடுறதுதானே நியாயம்”

ஏழுவுக்கு எங்கிருந்தோ வந்துவிட்டது கோபம். ”ஏன் மூடணும்? கண்ணதாசன் பொறந்தநாளைக்கு சரக்க டிஸ்கவுண்டலயா கொடுக்குறானுங்க?”
//


//
பர்ஸ் வாங்கும் செலவை கூட மிச்சப்படுத்துகிறான் போல//

ithu pola niraiya idangal pidichathu...

vazhthukal karki

nd raja on October 11, 2012 at 3:19 PM said...

nice karki...

nd raja on October 11, 2012 at 3:20 PM said...

classic ya classic ya pinniteenga ponga

nd raja on October 11, 2012 at 3:22 PM said...

nice karki...

Sathish on October 12, 2012 at 6:38 AM said...

முதல் மூன்று பத்திய படித்ததும் நான் போட நினைத்த கமன்ட் "இத வச்சு நிறைய கீச்சு தேத்தலாம் போல இருக்கே" -- ஆனா கடசீல இதெல்லாம் ஏற்கனவே ட்வீட்டினதுன்னு சொல்லி கவுத்துடீங்களே !

Sathish on October 12, 2012 at 6:39 AM said...

முதல் மூன்று பத்திய படித்ததும் நான் போட நினைத்த கமன்ட் "இத வச்சு நிறைய கீச்சு தேத்தலாம் போல இருக்கே" -- ஆனா கடசீல இதெல்லாம் ஏற்கனவே ட்வீட்டினதுன்னு சொல்லி கவுத்துடீங்களே !

sethu on October 12, 2012 at 10:21 AM said...

Elukku rasiganaitten

saruban balasingam on February 12, 2013 at 6:16 AM said...

super.
http://techwar1.blogspot.com

 

all rights reserved to www.karkibava.com