Aug 16, 2012

அட்டகத்தி


 

30 வயதை ஜஸ்ட் தாண்டியவர்கள் அல்லது தாண்டபோகிறவர்களுக்கு அவர்கள் கல்லூரி நாட்களையே ஒரு பீரியட் படமாக பார்க்க நேர்ந்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் அது சற்று நேரத்திலே காணாமல் போய் பழைய கல்லூரி & காதல் நினைவுகளுக்கு போய்விடுவது ஆனந்தமாய்தான் இருக்கும். நத்தை கூட ஓவர்டேக் செய்யும் திரைக்கதை கொண்ட ஆட்டோகிராஃப் என்ற காவியம் தாத்தா வேட்டியில் கூட 100 நாள் ஓட இதுவே காரணம் என கருதுகிறேன். அட்டைக்கத்தியும் அப்படியொரு முயற்சி, கொஞ்சம் கலகலப்பான முயற்சி.

+2 ஆங்கிலத்தில் மட்டும் கோட்டடித்து டுட்டூரியல் காலேஜ் சென்று கொண்டிருக்கும் நாயகனை பற்றிய அறிமுகம்+ வாய்ஸ் ஓவருடன் ஆரம்பிக்கிறது படம். எப்படியாவது லவ் பண்ணிதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவனுக்கு லவ் செட்டானதா என்பதே அட்டைக்கத்தி. மிச்ச சொச்ச கதை & கதாபாத்திரங்களை வழக்கமாய் நீங்கள் விமர்சனம் படிப்பவர்களின் பிளாகில் படித்து தெரிந்துக் கொள்வது நம் இருவருக்கும் நல்லது.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், ஹீரோ தினேஷ். பருத்தி வீரனுக்கு பிறகு ஒரு அறிமுக நாயகன் படத்தை தாங்கு தாங்குவென்று தாங்கியிருப்பது இப்படத்தில்தான். முதல் ஃப்ரேமில் இருந்தே என்னை படத்திற்குள் காந்தம் போன்று இழுத்து சென்றுவிட்டார். ஒவ்வொருவரின் வாழ்விலும் 18-22 வயதில் தான் மாற்றம் தினம் தினம் நடக்கும். அந்த வயதில் நடக்கும் சம்பவங்களே படம் என்னும்போது இன்னும் சிரமம். ஜஸ்ட் லைக் தட் செய்திருக்கிறார் தினேஷ். கலா மாஸ்டர் சைசுக்கு ஒரு பெரிய ரவுண்ட் வர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

இவரை தவிர படத்தில் பெரிதாய் என்னை ஈர்க்க ஏதுமில்லை. ஆடி போனா ஆவணி பாடல் கூட பல்லவி முடிந்தவுடன் டெஸ்ட் மேட்ச் போல் ஆகிவிட்டது. ஆசை ஒரு புல்வெளி வருவதற்குள் எனக்கு படம் முடிந்துவிட்டது. படம் 2000ல் நடப்பதாக கேபிள் சங்கர் சொன்னார். படத்தின் முதல் காட்சியிலும் வாலி பட போஸ்டர் காட்டினார்கள். ஹீரோவில் புத்தகத்திலும் காதலுக்கு மரியாதை ஷாலினி சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் படத்தில் பல இடங்களில் காலம் ஜம்ப் அடிக்கிறது. திடிரென காதலி காக்க காக்க சூர்யா என்கிறார். மெல்லினமே மெல்லினமே என்ற ஷாஜஹன் பாடலை ஒலிக்கவிட்டு காதலுக்கு மரியாதை பாட்டு புத்தகத்தை காப்பியடிக்கிறார். ஒரு தலை ராகம் படத்துக்கு போகிறார். இன்னும் பல விஷயங்கள் உறுத்தியன. லிஸ்ட் எழுதிக் கொண்டு வரவில்லை நான். ஆனால் பீரியட் படத்துக்கான உழைப்பு பல இடங்களில் மிஸ்ஸிங்.

படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் பல உண்டு. ஆனால் அவை குறும்படத்திற்கு போதுமானதாய் இருக்கலாம். ஃபீச்சர் ஃபில்முக்கு ம்ஹூம். மேக்கிங்கில் நன்றாகவே செய்தவர்கள் எடுத்துக் கொண்ட களத்தில்(கதையல்ல, ஏனெனில் படத்தில் கதையே இல்லை) கோட்டை விட்டதாக கருதுகிறேன். படம் எனக்கு பிடிக்காமல் போனதற்கான காரணங்களை மட்டும் சொல்லிவிட்டு முடித்து விடலாம்.

ஒரு பையனை பெண்கள் காதல் விஷயத்தில் எப்படியெல்லாம் பல்பு தருவார்?

1) நன்றாக பேசிவிட்டு கடைசியில் ப்ரபோஸ் செய்யும்போது அண்ணா என்பார்கள்

2) அல்லது நம்மிடம் லெட்டர் தந்துவிட்டு இதை உன் ஃப்ரெண்ட் குமார் அல்லது உன் அண்ணன்கிட்ட கொடுத்துடு என்பார்கள்

3) ஏரியா பசங்கக்கிட்ட மாட்டிவிட்டு அடி வாங்க வைப்பார்கள்

4) உன்னை ஃப்ரெண்டாதான் பார்த்தேன் என்பார்கள்

5) லவ் பண்ணிவிட்டு டாட்டா காட்டிவிடுவார்கள்.

இதைத் தாண்டி எதுவும் யோசிக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் இதையே முழுப்படமாய் எடுத்தால் என்ன ஆவது? முதல் பல்பை ஹீரோ வாங்கியவுடன் படம் நமக்கு புரிந்து விடுகிறது. அதனாலே முடிந்தும் விடுகிறது. இதை ஏதோ ட்விஸ்ட்டென நினைத்து ஒவ்வொரு காதல் எபிசோடையும் 15 நிமிடம் இழுக்கிறார்கள். நாம் நினைத்தபடியே ஹீரோ அதே கா.பி.கோ சட்டத்தில் மாட்டும்போது கழுத்தை அறுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஹீரோ போண்டா சாப்பிடும் காட்சி ஒன்று. அவர் லவ் ஃபெய்லரில் இருப்பதால் நண்பன் கொடுக்கும் போண்டாவை மறுக்கிறார். லவ் ஃபெயிலியர் சாப்பிடக் கூடாதாம். நண்பரும் 2 நிமிடம் பேசிவிட்டு அவரே சாப்பிட்டு விடுகிறார். இந்த காட்சியும் எப்படி முடியுமென தெரியாதா? இதுதான் என் பிரச்சினை. இதற்கு நடுவில் ஆங்காங்கே சுவார்ஸ்யம் இருந்தாலும் எல்லா காட்சிகளின் முடிவையும் நம்மால் யூகிக்க முடியும்போது சுவாரஸ்யமின்றி புஸ்ஸென்று ஆகிறது.அதுவும் க்ளைமேக்ஸ் நோக்கி நகரும்போது பஸ் ஆண்ட்டி, ஹீரோயினோட நிஜ டாவு பேரும் ஹீரோ பேரே என்பதெல்லாம் ரண கொடூரம்.

ஒரேயடியாக குப்பையென்றில்லாமல் போனதாலும், ஹீரோவின் பிரமாதமான செஞ்சுரியாலும் படம் தேறலாம். என்னளவில் படம் வேலைக்காவது.

அட்டை கத்தி – மாவீரன் கையில்

9 கருத்துக்குத்து:

Krishna... on August 16, 2012 at 10:21 AM said...

ஆஹா நன்றி தப்பிச்சேன்

திண்டுக்கல் தனபாலன் on August 16, 2012 at 12:56 PM said...

விளக்கமான விமர்சனத்திற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்... (TM 3)

s suresh on August 16, 2012 at 4:09 PM said...

வித்தியாசமான பார்வையில் விமர்சனம்! சிறப்பு!

இன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html

குழந்தபையன் on August 16, 2012 at 7:29 PM said...

உங்க கிட்ட இருந்து வேற மாதிரி விமர்சனம் எதிர்ப்பார்த்தேன்...

தோழி திட்டுவாங்கன்னு எழுதல்லையா.. ( எட்டு வகை காதலி)

இரசிகை on August 17, 2012 at 5:39 PM said...

mm...

vaasichaachu!

சுசி on August 18, 2012 at 1:29 AM said...

கலக்ஸ் கார்க்கி :)

Sathish on August 19, 2012 at 6:37 AM said...

அப்படா, நீங்களாவது என் கருத்தோட ஒத்து போனீங்களே, எல்லாரும் படம் நல்ல இருக்குன்னு எழுதவும், நம்ம ரசனை தான் போயடுச்சோன்னு எனக்கே டவுட்டு வந்துடுச்சு !!

இரசிகை on August 29, 2012 at 6:17 PM said...

ஆன்ம வெளியெங்கும் /வியாபித்திருக்கும் அவள் காலடித்தடங்களை /எப்ப்டி சேகரிப்பது/என்ற யோசனையுடனே விடிகிறதென் காலை


ithu nallaayirunthuchu kaarkki.

nd raja on August 30, 2012 at 4:42 PM said...

correct karki. nanum adhan feel panren. but sila per nalla iruku nranga. its ok. namma rasanai eppovumea same...

 

all rights reserved to www.karkibava.com