Jul 4, 2012

jail bharo


இன்று திமுக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகிறார்கள். அம்மா பெரியதாய் ஏதும் அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை. அவர் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என வழக்கம் போல் இணைய புரட்சியாளனாய் யோசித்த விஷயங்களை பார்க்கலாம்

 

1)  உள்ள போறவங்க எல்லோரும் ராசா மாதிரி நெஞ்சுக்கு நீதி புக்க‌ படிச்சே தீரணும்ன்னு ஆத்தா ஆர்டர் போட்டிருந்தா ஒரு பய வந்திருக்க மாட்டான்

2) ஒவ்வொரு செல்லையும் கொரில்லா செல்லாக மாத்தி வடிவேலுவை பத‌றி ஓடச் செய்தவரை போன்ற ஆட்களை சேர்த்து அடைத்து விடலாம்.

3) சடார்ன்னு ஜாமீன் கட்டணத்தை 100 மடங்கு ஏத்தி ஆர்டர் போட்டுடலாம். பெட்ரோல் மாதிரி அடுத்த வாரம் இறக்கிடலாம். கல்லா நிரம்பி வழியும்

4) போன போராட்டத்துல செய்த மாதிரி எவன்லாம் குஷ்பூ இடுப்ப கிள்றதுக்காக வந்திருக்கான்னு கேமரா வச்சு புடிப்போம்ன்னு அறிவிச்சுடலாம். பாதி கூட்டம் கம்மி ஆயிடும்

5) திமுக உறுப்பினர் அட்டை காமிச்சாதான் உள்ள விடுவோம்னு சொல்லிடலாம். கள்ள திமுககாரன் மாட்டிப்பான். அதிமுக அட்டையை காமிச்சாதான் வெளிய விடுவோம்னு சொல்லிடலாம். அம்மாவுக்கு ஆளு சேரும்

6) இன்று ஒரு நாள் ஜெயில் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்குன்னு சொல்லிட்டு அனுமதிக் கட்டணமா தலைக்கு 1000 ரூபாய் வாங்கிடலாம்.

7)புதன்கிழமை ஆனா புழல்ல சிக்கன் போடுறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டுதான் இன்னைக்கு தேதிய குறிச்சிருக்காரு அரசியல் சாணக்யாரு. அதனால இன்னைக்கு மட்டும் காக்கா பிரியாணி போட்டுடலாம். கோஷம் போடுறவங்க எல்லாம் "திமுக திமுக"ன்னு கத்துறதுக்கு பதிலா "காகாகாகா"ன்னு கத்துவாங்க.

 

அம்மாவின் ராசி எண் 7 ஆக மாடிவிட்டப்படியால் இதோடு முடித்துக் கொள்கிறேன்.

11 கருத்துக்குத்து:

s suresh on July 4, 2012 at 12:54 PM said...

சூப்பர் யோசனைகள்!

அமுதா கிருஷ்ணா on July 4, 2012 at 12:56 PM said...

நச் யோசனைகள்.

Uma on July 4, 2012 at 1:26 PM said...

அருமையான ஐடியாக்கள். கடைசியில் அம்மாவுக்கும் ஒரு பஞ்ச்.. அதுதான் கார்க்கி!

"என் ராஜபாட்டை"- ராஜா on July 4, 2012 at 2:50 PM said...

இந்த ஐடியாவ அப்படியே அம்மாகிட்ட சொன்ன உங்களுக்கு எதாவது பதவி கிடைக்கும்

"என் ராஜபாட்டை"- ராஜா on July 4, 2012 at 2:50 PM said...

இன்று
தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?

இரசிகை on July 4, 2012 at 5:47 PM said...

sirikka vaiththa yosanaikal...

muthu on July 4, 2012 at 6:10 PM said...

சூப்பர் யோசனை சூப்பர் தமாசு

கார்க்கி on July 5, 2012 at 9:33 AM said...

thanks all :)

திண்டுக்கல் தனபாலன் on July 5, 2012 at 4:58 PM said...

நலல் ஐடியா சார் !

KSGOA on July 7, 2012 at 1:03 PM said...

:)))


























0)

sasi rajendran on July 8, 2012 at 9:06 PM said...

i like your 'nakkal'suggestions to amma

 

all rights reserved to www.karkibava.com