Jul 13, 2012

பில்லா - நல்லா


 

நீண்ட முடியுடன் மார்க்கெட்டில் தகறாரு செய்யும் ”ஏய்ய்ய்ய்ய்ய்” வில்லனை துவம்சம் செய்யும் ஹீரோவின் அடிபொடிகள் ஓரமாக நிற்கவும். விளிம்பு நிலை மாந்தர்களின் விட்டேத்தியான வாழ்க்கையை பதிவு செய்வது ஒவ்வொரு கலைஞனின் கடமை என்பவர்கள் அவர்களுக்கு பின்னால் நிற்கவும். படம்ன்னா நம்மள போட்டுத் தாக்கணும். ரெண்டு நாள் நம்மள ஆக்ரமிக்கணும் என்னும் வேலையில்லா பட்டதாரிகள் நிற்காமல் ஓடி விடவும். இது தல சாம்ராஜ்யம். இங்கு நல்லவனுக்கு வேலையில்லை. நாம வாழணும்ன்னா எத்தனை பேரை வேணும்னாலும் கொல்லலாம் என்னும் அதிரடி தலபாட்டை இது. பில்லா, அசல்,மங்காத்தா, ட்ரெண்டில் இன்னொரு அதகளம் தான் பில்லா2.

ஒரு படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ. தல இருந்தால் போதும் என்ற தமிழ் சினிமா இலக்கணத்தை மீண்டுமொருமுறை அழுத்தமாக நிரூபிக்கிறது இப்படம். இலங்கை அகதியாக இந்திய எல்லைக்குள் வருகிறார் டேவிட் பில்லா. இதற்கு முன் இலங்கை தமிழை எத்தனை பேர் பேசி நடித்திருக்கிறார்கள்? ஆனால் அஜித்தின் மாடுலேஷனுக்கு முன்னால் தெனாலி கமலே டக் அவுட் தான்.மாஸ் மட்டுமல்ல நடிப்புக்கும் நான் தான் அத்தாரிட்டி என்று தல சொல்லி அடிக்கும் அந்த அகதிகள் முகாம் எபிசோட் பட்டாசு. “நாங்க அகதிங்க தான். அநாதை இல்லை” என்ற வசனத்தை தனக்கேயுரிய பிரத்யேக உச்சரிப்பில் தல சொல்லும் போது ஒட்டு மொத்த அரங்கமும் அதன் வலி உணர்ந்து அமைதி காக்கிறது. தல மட்டுமல்ல, தல ரசிகனும் அடிப்படையில் மனிதாபிமானம் உள்ளவன் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்த தருணமது.

முகாமிலிருந்து இருந்து சென்னைக்கு வைரங்களை கடத்தும் வேலையை செய்கிறார் அஜித்.சென்னையில் இளவரசுவின் அதை ஒப்படைக்கும்போது தாம் ஏமாற்றப்பட்டோம் என்று தெரியும்போது “இதெல்லாம் எனக்கு தூசு” என்பதை தனது அசால்ட்டான பாடி லேங்குவேஜ் மூலம் மட்டும் வெளிப்படுத்துகிறார். அங்கே தொடங்குகிறது பில்லாவின் தாதாபயணம். கதை மட்டும் கேட்காதீர்கள். கதை சொல்லும் சினிமா இல்லை பில்லா. இது வரலாறு. ஒரு மாபெரும் கேங்ஸ்டரின் வாழ்க்கை வரலாறு. அது ஒரு நேர்க்கோட்டில் பயணிக்குமா? திரைக்கதை ஆங்காங்கே ஜம்ப் அடிப்பது போல் எழுதிய இயக்குனரை எப்படி பாராட்டுவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றிர்க்கு மேற்பட்டவர்கள் இருந்தாலே கேங் தான் என எத்தனை பேருக்கு தெரியும்? அஜித்தின் கேங்கில் அவர், ரஞ்சித். இருவர் மட்டுமே. படத்தில் அஜித்தின் தலையீடே இல்லை என்று சொன்னார். ஆனால் அஜித் வாழ்க்கை பற்றிய குறியீடுகள் படம் நெடுக விரவிக் கிடக்கின்றன.

கோவாவுக்கு அஜித் செல்லும் போதே அரங்கில் அதிரடி ஆரம்பமாகிவிட்டன. இந்தியாவின் மிகப்பெரிய டானுக்கு ஒரு அசைன்மெண்ட் வருகிறது. ரிஸ்க் என கைக்கழுவ பார்க்கிறார். அஜித் முடிச்சு தறேன் என களத்தில் இறங்குகிறார். ஏதோ ஒரு ஸ்பெஷல் டீம் இன்வால்வ் ஆகியிருப்பதால் பெரிய ரிஸ்க் என்கிறார் இந்திய டான். இண்ட்டெர்னேஷன்ல் டான் சிரித்துக் கொண்டே செல்கிறார். தன்னை பெரிய திறமைசாலியாக நிரூபிக்கும் முக்கிய காட்சி. எப்படிடா காப்பாத்துவாரு என சீட்டின் நுனிக்கு வரவைத்த இயக்குனர், நம்மை மூக்கின் மீது விரல் வைக்க சொல்கிறார். இந்த காட்சியை விளக்கவெல்லாம் முடியாது. திரையில் பார்த்து அதிசயித்து போவதுதான் நியாயம். அஜித் இந்தக் காட்சியில் க்ளாஸ்.

அங்கே இருந்து ஜார்ஜியாக்கு செல்கிறது திரைக்கதை. பெரிய ஆயுத வியாபாரியுடனான வர்த்தகம் பேசி முடிக்கிறார். அஜித்தின் ஸ்டைலிஷான உடைகளும், அட்டகாசமான நடையும் நம்மை முழுமையாக ஆக்ர்மித்துக் கொள்ளும் வேளையில் இடைவேளை. கிட்டத்தட்ட துள்ளிக் குதிக்காத குறை. இப்படி ஒரு ஆக்‌ஷன் படம் பார்த்து எத்தனை நாட்களாயிற்று?

”போட்டுக் கெடுத்து கெட்டு போனவன் இருக்கான். ஆனா கோட்டு போட்டு கெட்டுப் போனவனே இல்லை” – இடைவேளை கமெண்ட்

”சார். தலையை இறக்குங்க” என்றார் பின் சீட்டுக்காரர். “டேய். தலையவா இறக்க சொல்ற” என சண்டைக்கு போனேன். “உங்க தலைய சொன்னேன் சார்” என ஜகா வாங்கினார். அவர் எனக்கு மட்டும் இல்லைடா. உனக்கும் தலதான் என்று வீம்பாக சண்டை போட்டுவிட்டி இரண்டாம் பாதிக்கு தயாரானேன்.

இரண்டாம் பாதிதான் படத்துக்கு உயிர். அடுத்து என்ன நடக்கும் என இருக்கும் நகத்தையெல்லாம் கடிக்க வைக்கும் திரைக்கதை. ஆக்ரோஷமான அஜித்தின் நடிப்பு.தாறுமாறான யுவனின் பின்னணி இசை என ஒரு உலகப்பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறார்கள். டானுக்கு ஏது எமோஷன்ஸ்? தனது ஜோடியை வில்லன் க்ரூப் கழுத்தை அறுத்துக் கொண்ண அடுத்த நிமிடம் தல சொல்கிறார் “என் வாழ்க்கைல ஒவ்வொரு…..” . அதாவது எனக்கு காதலியும் வேண்டாம் என்பதை தலையே முடிவு செய்து அவன் மூலமாக கொல்ல வைக்கிறார். இப்படி சொல்ல்க் கொண்டே போகலாம். புத்திசாலித்தனமான காட்சிகள் பல புரியாமல் விட்டுவிடுவது நல்லதுதான். இன்னொருமுறை பார்க்க அதுவே காரணமாக இருக்கும்.

நான் சொல்லும் எதையுமே உங்களால் படம் பார்க்காமல் உணர முடியாது. இணையம் முழுக்க இருக்கும் தல எதிர்ப்பாளர்களின் வதந்திகளை நம்பாமல் படத்துக்கு போங்க. பில்லாக்கு நான் கியாரண்ட்டி.

எக்ஸடசியில் இருக்கிறேன். பில்லா ஹேங் ஓவர் அடங்க எனக்கு சில நாட்கள் ஆகும். அதனால் பதிவை முழுதாக முடிக்க முடியவில்லை.

38 கருத்துக்குத்து:

வித்யா on July 13, 2012 at 12:55 PM said...

உள்குத்து தியேட்டர்ல வாங்கிட்டு இங்க திருப்பி தர்ரீங்களா. எனக்கு தெரியும் பணம் வேஸ்ட் ஆனாலும் உங்களுக்கு சந்தோசமா தான் இருக்கும்

bakkirmohd on July 13, 2012 at 12:55 PM said...

விமர்சனம் இப்டி தான் ஆர்வத்தை தூண்டனும். பார்த்ததை ஒப்பிக்க கூடாது. தேங்க்ஸ் தல. இங்க சொன்ன தல நீங்க தான். @tamilvaalu

SELVA . on July 13, 2012 at 12:59 PM said...

பாஸ் நீங்க சொல்லறது புரியவே இல்ல..உண்மைய சொல்லறீங்களா இல்ல காமெடி யா ?

tamilshiva on July 13, 2012 at 1:00 PM said...

thala thala pathi neenga blogla kandiapa poi sola mateenganu namburen
Urs sincerly lovely faithfully
Shiva #thala da

N. Shekar on July 13, 2012 at 1:01 PM said...

ஒரு தீவிர விஜய் ரசிகர் இந்த மாதிரி அஜித் பட விமர்சனம் போடுவதை மனதுவந்து பாராட்டாமல் இருக்க முடியலை - இரவு பார்த்து விட்டு மேலும் சொல்கிறேன்

வித்யா on July 13, 2012 at 1:03 PM said...

//ஒரு தீவிர விஜய் ரசிகர் இந்த மாதிரி அஜித் பட விமர்சனம் போடுவதை மனதுவந்து பாராட்டாமல் இருக்க முடியலை - இரவு பார்த்து விட்டு மேலும் சொல்கிறேன்

பயங்கர innocent நீங்க

Azhagesan Jayaseelan on July 13, 2012 at 1:09 PM said...

2012 new yearku மறக்க நினைப்பது மங்காத்தா post

2013 new yearku மறக்க நினைப்பது billa-2 post ah?????

காட்டுவாசி on July 13, 2012 at 1:09 PM said...

மங்களம் உண்டாகட்டும்...

! சிவகுமார் ! on July 13, 2012 at 1:14 PM said...

மங்களம் பில்லா-2 ல நடிச்சி இருக்காங்களா?

பாலா on July 13, 2012 at 1:36 PM said...

பரவாயில்லை கமெண்ட் பாக்ஸ்ஐ மூடி வைத்திருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் படத்தை ஏன் மெனக்கெட்டு பார்க்கிறீர்கள் என்று சொல்லிக்கொண்டே, பொதுமக்களை காக்கும் அரிய நோக்கத்துக்காக, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முதல் ஷோ பார்த்த கையோடு பதிவெழுதிய உங்கள் கடமை உணர்ச்சி என்னை நெகிழ செய்கிறது. இந்த படத்தை பார்த்ததால் உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை துப்பாக்கி தீர்த்து வைக்கும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

கார்க்கி on July 13, 2012 at 1:41 PM said...

//உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் படத்தை ஏன் மெனக்கெட்டு பார்க்கிறீர்கள் //

தோழர், உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் பதிவை ஏன் மெனக்கெட்டு பார்க்கிறீர்கள்

Azhagesan Jayaseelan on July 13, 2012 at 2:05 PM said...

????/உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் படத்தை ஏன் மெனக்கெட்டு பார்க்கிறீர்கள் //

தோழர், உங்களுக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் பதிவை ஏன் மெனக்கெட்டு பார்க்கிறீர்கள்?????

Cool down.. cool down.......

raamaarun (இராம அருண் ) on July 13, 2012 at 3:06 PM said...

கார்க்கியை நம்பி 7.45க்கு டிக்கெட் எடுத்தாச்சு - நம்பினோர் கைவிடப்படார்

raamaarun (இராம அருண் ) on July 13, 2012 at 3:06 PM said...

கார்க்கியை நம்பி 7.45க்கு டிக்கெட் எடுத்தாச்சு - நம்பினோர் கைவிடப்படார்

jei on July 13, 2012 at 3:09 PM said...

என்ன டா பிகைண்ட்வுட்ஸ்ல ரெண்டு பாயின்ட் போட்ருகாணுகளேனு பாத்தேன்,இந்த பதிவ படிச்சதுகப்பறம் யோசிச்சு பாத்தேன்,ஆக்சுவலா மொத்தம் ஏழு பாயிண்டாம் அடியில அஞ்சும்,மேல ரண்டும் இருக்காம் # தல டா,பில்லா டா !!!!!

s suresh on July 13, 2012 at 4:04 PM said...

அப்ப படம் பார்கலாம்னு கியாரண்டி கொடுக்கறீங்க! சரி பார்த்துடுவோம்!

வீடு சுரேஸ்குமார் on July 13, 2012 at 4:22 PM said...

சூப்பர் விமர்சனம்...!பட்டைய கிளப்புது! அய்யோ...!அம்மா..!முடியலையே!

sundar esan on July 13, 2012 at 4:45 PM said...

thambi nee innum valaranum, athuuuuu

sundar esan on July 13, 2012 at 4:45 PM said...

thambi nee innum valaranum,

கோபிநாத்.. on July 13, 2012 at 4:48 PM said...

இந்த படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் யோவ் கைல கிடைச்சிங்க சுட்டேடேடேடே புடுவேன்..

காவேரிகணேஷ் on July 13, 2012 at 4:51 PM said...

டமில் நாட்டு மக்கள் மேல் உனக்கு என்ன கோபம் கார்க்கி?

valampuri on July 13, 2012 at 9:00 PM said...

படத்த டவுன்லோட் பண்ணி VLC பிளேயர்ல போட்டு ரெண்டு Fast Forward பண்ணாக்கூட படம் slowவாதான் இருக்கும்...

Doha Talkies on July 13, 2012 at 11:15 PM said...

விமர்சனம் அருமை.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html

arul Senthil on July 14, 2012 at 12:34 AM said...

// தலையில் முக்காடு போட்டுக்கொண்டு முதல் ஷோ பார்த்த கையோடு பதிவெழுதிய //

ithukku pathil illaye thalavithi

அசோகபுத்திரன் on July 14, 2012 at 10:25 AM said...

அது எப்படி கார்க்கி, உங்களுக்குள்ள தூங்கிகிட்டிருக்கிற மிருகம் கரெக்டா அஜீத் படம் ரிலீஸப்போ டக்குனு எந்திருச்சு உக்காருது... மொதல்ல நீங்க இப்படியெல்லாம் எழுதும்போது உங்க தரத்த நீங்களே தாழ்த்திக்கிறீங்களேன்னு கோவம் வரும்... இப்போ பழகிடுச்சு... அக்மார்க் வெறிபிடிச்ச விஜய் ரசிகனோட சந்தோஷத்த கண்ணு முன்னாடி நிப்பாட்டிட்டீங்க... அஞ்சாப்பு பாட புத்தகத்தில வர வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு உதாரணமா இந்த பதிவ இஸ்ட்ராங்கா ரெக்கமெண்ட் பண்றேன்..

கலக்குறே கார்க்கி....

"ராஜா" on July 14, 2012 at 7:10 PM said...

boss vazhakkam pola unga moolai ponki mookku vazhiye vazhinthathai rombave rasithen.

naanellam vijay padathai muthal naal poi paarththathe kidaiyathu. thala pesura oru vasanamthan gnabakam varuthu.

unga payamthan boss enga balam.

neenga keezha ninnukittu koochchal pottukitte irunga naanga mela mela poikitte iruppom. opening eppadi summa athiruchcha? kadaisiya kavalan velayuyham pondra padangalai rasitha neengale rasikkumpadi billa soththaiyaka irunthuvidumo endru payanthen. nallavelai en vayiththula beerai vaarththu vitteerkal.

கார்க்கி on July 15, 2012 at 3:53 PM said...

அசோகபுத்திரன்,
இதையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க

http://www.karkibava.com/2009/12/blog-post_19.html

________________

ராஜா,

பாஸ். எங்க ரசனை கிடக்கட்டும். உங்களுக்கு படம் புடிச்சுதா??

"ராஜா" on July 16, 2012 at 8:59 AM said...

ஒரு அஜித் ரசிகனை பார்த்து இந்த கேள்வியை வீசியதில் இருக்கும் நுண்ணரசியல் எனக்கு புரிகிறது பாஸ்... நான் மட்டும் இல்லை எல்லா அஜித் ரசிகனும் இந்த படத்தை கொண்டாடுவான் ... உங்களை பேசவே விடாமல் மொத்தமாக அடைக்கும் அளவுக்கு இது மங்காத்தா அளவுக்கு பட்டையை கிளப்பவில்லை என்றாலும் எங்களை மொத்தமாக க்ச்வுக்கும் அளவுக்கு அசலை போலவோ , ஆழ்வார் போலவோ படு மொக்கையாகவோ இல்லை திருப்பதியை போல சுமாரான மொக்கையாகவோ படம் இல்லை பாஸ்...

படத்தை ஒருமுறை பார்த்த எந்த தல ரசிகனும் கண்டிப்பாக இரண்டாம் முறை பார்ப்பான் , படத்தை விமர்ச்சிக்கும் நடுநிலைவாதிகள் கூட முக்காடு போட்டுகொண்டு (உங்களை போல என்று சொல்ல மாட்டேன் )இரண்டாம் முறை கண்டிப்பாக படம் பார்க்க செல்வார்கள்...

கார்க்கி on July 16, 2012 at 12:29 PM said...

ராஜா,

முக்காடு போட்டுக்கிட்டு போனவன் பதிவு எழுத மாட்டான் :))

டாக்டர்கிட்ட நோயாளி மட்டும்தான் போவானா??? சேல்ஸ் ரெப், அட்டெஸ்டேஷன் வாங்குறவன்னு எல்லோரும் போவான் :))

முதல் நாளான்னு தெரில.. ஆனா நண்பன், வேலாயுதம், காவலன்னு எல்லா படத்தையும் பார்த்த ஆளுதானே நீங்களும் :))

உங்க பிளாகுல அதிக ஹிட் வாங்கின போஸ்ட் எதுன்னு பாருங்க :)))

அப்புறம், நல்லா இருக்கிங்களா?

மனசாட்சி™ on July 16, 2012 at 1:11 PM said...

பில்லா நல்லா சொல்லி இருக்கீங்க

இரசிகை on July 16, 2012 at 6:21 PM said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி on July 16, 2012 at 6:52 PM said...

பட்டைய கெளப்பிட்டீங்க தல..... (நான் உங்களைச் சொன்னேன்....)

பன்னிக்குட்டி ராம்சாமி on July 16, 2012 at 6:59 PM said...

/////போட்டுக் கெடுத்து கெட்டு போனவன் இருக்கான். ஆனா கோட்டு போட்டு கெட்டுப் போனவனே இல்லை” – இடைவேளை கமெண்ட்/////

இது மட்டும் தலைக்கு தெரிஞ்சது.... அவ்ளோதான்..... தமிழ்சினிமாவுக்கு இனி நோபல்தான்......!

ரமேஷ் வைத்யா on July 16, 2012 at 7:33 PM said...

என்ன பண்ண உங்களுக்குன்னே படம் எடுத்து வச்சிருக்கானுக... நடக்கட்டும். இப்படிக்கு அஜித் நலம் விரும்பி.

"ராஜா" on July 17, 2012 at 12:12 PM said...

//டாக்டர்கிட்ட நோயாளி மட்டும்தான் போவானா??? சேல்ஸ் ரெப், அட்டெஸ்டேஷன் வாங்குறவன்னு எல்லோரும் போவான் :))

பக்கத்து தெரு டாக்குடரும் போவான் ...


//முக்காடு போட்டுக்கிட்டு போனவன் பதிவு எழுத மாட்டான் :))

உங்களை நான் அப்படி சொல்லவே இல்லையே

// முதல் நாளான்னு தெரில.. ஆனா நண்பன், வேலாயுதம், காவலன்னு எல்லா படத்தையும் பார்த்த ஆளுதானே நீங்களும் :))

இங்கே முக்கிய விசயமே முதல் நாள் என்பதுதான் , அவ்வளவு அவசரப்பட்டு ,படம் நன்றாக இருந்து விட கூடாது என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு,
விஜய் படம் பார்க்கும் அவசியம் எனக்கு இதுவரைக்கும் வந்ததில்லை ...என் போலீஸ் நண்பன் ஒவ்வொரு விஜய் படத்துக்கும் முதல் காட்சிக்கு ஓசி டிக்கெட் தருவான் ஆனால் எனக்கு இதுவரைக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை ,

//உங்க பிளாகுல அதிக ஹிட் வாங்கின போஸ்ட் எதுன்னு பாருங்க :)))

அதுக்கு காரணம் என்னுடைய எழுத்து நடையும் (???!!!$$$) , அந்த பதிவில் இருந்த நேர்மையுமாக கூட இருக்கலாமே , பெரும்பான்மை மக்களின் என்னத்தை வெளிபடுத்தும் , இன்றைய நிலைமையில் தேவையான பதிவு என்றுகூட வாசித்த நண்பர்கள் நினைத்திருக்கலாம்... விஜயால் மட்டுமே என்றால் அந்த லிஸ்டில் எல்லா பதிவுகளுமே விசையை பற்றிய பதிவுகளாகவே இருக்க வேண்டுமே , திரை படம் சம்பந்தமான விசயங்களில் மங்காத்தா பதிவுதானே அதிக ஹிட் ...

நீங்கள் அதிக ஹிட் வாங்க வேண்டும் என்று படத்துக்கு முதல் நாளே சென்று விமர்சனம் எழுதியுள்ளீர்கள் என்று சொல்லவரவில்லை , படம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வமும் ஆவலும் அஜித் ரசிகனல்லாத உங்களுக்கு இருந்திருக்கிறதே அதைதான் சொன்னோம் ,

"ராஜா" on July 17, 2012 at 12:13 PM said...

moderation??

safi on July 19, 2012 at 2:43 PM said...

ஹஹஹாஆஆஆஅ வழக்கம்போல சூப்பரான பதிவு ம்ம்ம்ம்ம்ம் ஆஹஆஹ

Nataraj (ரசனைக்காரன்) on August 1, 2012 at 7:39 PM said...

பகடி போஸ்ட்டுக்கு முதல் பத்தி உண்மைலயே நல்ல பில்ட்-அப். அதை வேஸ்ட் பண்ணிட்டீங்களே பாசு..:))

 

all rights reserved to www.karkibava.com