Jul 8, 2012

ஈடா ஈடா ஈடா..எந்த படமுமில்லை இதற்கு ஈடா


 

ஒரு அக்மார்க் ஈரோயிச படம்.

பாட்டி வடை சுட்ட கதையை சுவாரஸ்யமாய் சொல்லும் கதை சொல்லிகள் உண்டு. புளியமரத்தில் இருக்கும் ஜடாமுனியை லாலிபாப் ரேஞ்சுக்கு சொல்பவர்களும் உண்டு. ராஜ்மெளலி(இயக்குனர்) முதல் வகை. எந்த ஒரு சாதாரன ஒன்லைனரையும் தனது அழுத்தமான திரைக்கதையாலும், அனாயசமான மேக்கிங்காலும் அக்மார்க் எண்டெர்டெயினராக மாற்றுவதில் கில்லாடி. மகதீரா பார்த்த மயக்கத்தில் இவரின் அனைத்து தெலுங்கு படங்களையும் தேடித்தேடி பார்த்த காலமுண்டு. தமிழகத்தில் இவரின் எல்லா படங்களையும் பார்த்த ஒரு சிலரில் நானும் ஒருவன். கொடுமை என்னவென்றால் கஜேந்திரா, ஸ்டூடண்ட் நம்பர் 1 எல்லாம் இவரின் படங்கள்தான். தோசை மாவில் மட்டுமல்ல சுவை என்பதற்கு அந்த ரீமேக்குகள் சாட்சி.

நான் ஈக்கு வருவோம். ட்ரெயிலரிலே கதை சொல்லிவிட்டார்கள் சமந்தாவும் நானியும் காதலர்கள். சுதீப்(வில்லன்) ஒரு காமந்திரன். சமந்தாவை அடைய எண்ணி நானியை போட்டுத் தள்ளுகிறான். நானி, ஈயாக வந்து சுதீப்பை போட்டுத் தள்ளுகிறான். தட்ஸ் ஆல். இதையெல்லாம் கண்டுபிடிப்பது ஒரு விஷயமே இல்லை.ஆனால் அடுத்து எப்படி இவை நடக்கின்றன என்பதில் இருக்கிறது திரைக்கதை சுவாரஸ்யம். என்னைப் போன்ற வெறித்தனமான ராஜ்மெளலி ரசிகர்களுக்கு இது கைகூடியிருக்க கூடும். படம் நெடுக அவரின் க்ளிஷே திரைக்கதை என்றாலும் களம் புதிது என்பதால் ஈர்க்கிறது.

முதல் முக்கால் மணி நேரம் சமந்தா நானி காதல் போர்ஷன். அதில் கூட சின்ன சின்ன சுவாரஸ்யங்களும், காதலை ரசிக்கும்படியும் இருப்பது ராஜ்மெளலி ஸ்பெஷல். நானியை நவீன கார்த்திக் என்று கூட சொல்லலாம். மெளன ராகம் ரேஞ்சுக்கும் அவருக்கு அழுத்தமான பாத்திரம் இல்லை. அவரும் அந்த கார்த்திக் அளவிற்கு துறுதுறு இல்லை. ஆனால் சொல்லலாம். கெளதமின் நீதான் என் பொன் வசந்தம் தெலுங்கு பதிப்பில் நானிதான் நாயகன். அட, சமந்தாதான் நாயகி.

நானி ஈயாக பிறப்பதில் ஆரம்பிக்கிறது நான் ஈ. வசனமே இல்லாமல், கிராஃபிக்ஸையும், பின்னணி இசையையும் நம்பி 10 நிமிடங்களுக்கு மேல் ஓட்டுகிறார் இயக்குனர். அரங்கம் ஆரப்பரிக்க தொடங்குகிறது. நானி, நான் ஈ டா என அட்டகாசமாய் கிளம்புகிறார். உடனே ”இனி..இடி” என இடைவேளை போடாமல் இரண்டு சேம்பிள் அதகளங்களை எடுத்து விடுகிறார் ராஜ்மெளலி. அதிலே மிரண்டு போய்விடுகிறார்கள் ரசிகர்கள்.  முதல்முறையாக தமிழக அரங்கில் இடைவேளைக்கு கைத்தட்டல் சத்தம் சீலிங்கை முட்டியதை கேட்க முடிந்தது.

ராஜ்மெளலியிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், எந்த ஒரு விஷயத்தை கையிலெடுத்தாலும் அதில் சாத்தியப்படும் எல்லா க்ரியேட்டிவிட்டியையும் எடுத்து விடுவார். எல்லாமே கனக்கச்சிதமாக ஸ்க்ரிப்ட்டிலே பொருந்துவது கூடுதல் சிறப்பு. ஒரு ஈயை வைத்து என்னவெல்லாம் யோசிக்க முடியும்? அதுவும் அநத ஈக்கு சிறப்பு பேய்த்தனங்கள் எதுவும் கிடையாது. படம் பார்க்கும் முன் முடிந்தால் இந்த ஹோம் ஒர்க்கை செய்து பாருங்கள். எத்தனை காட்சிகள் உங்களால் யோசிக்க முடிகிறது என்பது சுவாரஸ்யமான ஒன்றாய்தானே இருக்கும்?

ஒவ்வொரு கேரக்ட்ரைசேஷனும் அழகு. சமந்தா ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட். ஈ போன்ற ஒரு சின்ன பறவைக்கு உதவப் போகும் பெண் இப்படி ஒரு திறமை கொண்டவராக அமைத்தது திரைக்கதையில் எப்படியெல்லாம் உதவும்? அதே போல் நானி பட்டாசு தொடர்புடைய வேலை செய்கிறார். வில்லன் துப்பாக்கி ஸ்பெஷலிஸ்ட். எல்லாமே திரைக்கதைக்கு தேவைப்படுகிறது. பார்த்து பார்த்து பாத்திரங்கள் பிடிக்கிறார் ராஜ்மெளலி. ஒரு காட்சியில் கூட இருக்கட்டும் எடுத்து வைங்க என்ற பாலாத்தனம் கிடையாது. தீர்க்கமான ஸ்க்ரிப்ட், அதற்கு அர்ப்பணிப்பான மேக்கிங். இதுதான் சார் என் சீக்ரெட் என திரைமொழியில் சொல்கிறார்.

காதலர்களின் தேசியப் பறவையாக இனியும் பட்டாம்பூச்சியை சொல்ல முடியாது. ஈயாக மாறிவிடக்கூடும்.இந்த ஈதய காதல் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் நல்லதொரு இடம் பிடிக்கும்.ஸ்க்ரிப்ட் பக்கா என்றால் யார் வேண்டுமென்றாலும் ஹீரோவாகலாம். ஒரு ஈயை ஹீரோவாக்கி, ஹீரோவை சூப்பர் ஹீரோவாக்கியதெல்லாம் உச்சக்கட்ட அதகளம்.

கன்னடத்திற்கு சுதீப், தெலுங்கிற்கு நானி.. தமிழ் போஸ்டருக்கு ஆளில்லையென சந்தானத்தை சேர்த்திருக்கிறார்கள் ஒரே ஒரு காட்சியில் போனவர் க்ளைமேக்ஸ் முடிந்து பேர் போடும்போது வருகிறார். ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியில் வீட்டுக்கு செல்ல நினைத்தவர்களை நிறுத்தி ஒரு அட்டகாசமான ஸ்வீட்பீடா தருகிறார், படம் பாருங்க. புரியும்.

எழுதிக் கொண்டே போகலாம். நான் ஈ பற்றியும், ராஜ்மெளலி பற்றியும், ஒரு தடவ பார்த்துட்டு வந்துடுங்களேன்

நான் ஈ – Flies well

26 கருத்துக்குத்து:

ராம்குமார் - அமுதன் on July 8, 2012 at 1:59 AM said...

அருமையான படம்.. கூடவே அருமையான பார்வை... This Fly flied really really high.. superr

நடராஜன் on July 8, 2012 at 1:59 AM said...

A review after long time in Salaram! :) welcome back sir! :)

நாடோடி இலக்கியன் on July 8, 2012 at 2:14 AM said...

பார்த்தே ஆகணும்னு தோண வச்சிட்டீங்க கார்க்கி.

செம்ம ரைட் அப்.

KARTHIKEYAN R on July 8, 2012 at 2:24 AM said...

இப்ப தான் படம் பாத்துட்டு வந்தேன்... சேம் ஃபீலிங்க்ஸ்... ராஜ்மௌலி படங்களை பரிந்துரையுங்களேன்... பிளீளீளீஸ்ஸ்ஸ்...

Bhuvanesh on July 8, 2012 at 2:28 AM said...

//இந்த ஈதய காதல் நிச்சயம் //


Karki touch :)

Nataraj (ரசனைக்காரன்) on July 8, 2012 at 2:38 AM said...

//இருக்கட்டும் எடுத்து வைங்க என்ற பாலாத்தனம் ரசித்தேன்// நச் :) ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல..

Sathish on July 8, 2012 at 8:20 AM said...

பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!

http://sathivenkat.blogspot.in/2012/07/blog-post.html

நான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ்

Vidhoosh on July 8, 2012 at 8:34 AM said...

E is not a bird, but an insect.. But the director has made you beleive so , hats off to him ;)

krishna... on July 8, 2012 at 8:38 AM said...

பில்லா2 பார்க்க ஒரு பெரிய குரூப் இருக்கும் பட் நான் ஈ பத்தி கமண்ட் நிறைய இருக்கறதால தள்ளி போடற்து பெட்டர், கார்க்கி நீங்க ஆனந்த விகடன்கு விமர்சனம் எழுதலாம், நானும் போய் கண்டிப்பா பார்க்கறேன்

"என் ராஜபாட்டை"- ராஜா on July 8, 2012 at 9:58 AM said...

உங்கள் பதிவு படித்ததும் படம் பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது

Prabhu on July 8, 2012 at 11:35 AM said...

Antha alavuku onnum illanu ninaikiaren…

ஹாலிவுட்ரசிகன் on July 8, 2012 at 12:14 PM said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல ஒரு சினிமா விமர்சனம். படத்தை watchlistல சேர்த்தாச்சு. பார்த்துருவோம்.

KSGOA on July 8, 2012 at 2:37 PM said...

நல்ல விமர்சனம்.கண்டிப்பா பார்த்தே ஆகணும்னு தோணுது.

s suresh on July 8, 2012 at 4:51 PM said...

ஆகா! எல்லோரும் இப்படி புகழ்ந்து தள்ளறீங்களே! என் சினிமா வனவாசத்தை முடிச்சிக்க வேண்டியதுதான்!

Sudhar on July 8, 2012 at 5:48 PM said...

Showing the creativity in one song http://www.youtube.com/watch?v=Ud6I3rbR-Ak

Krishnan Rengarajan on July 8, 2012 at 6:47 PM said...

Nice review aftr lng tym..

"ராஜா" on July 9, 2012 at 9:27 AM said...

பாஸ் எங்கமேல உங்களுக்கு அம்புட்டு பயமா , உங்க ஸ்டேடஸ் என்னும் இன்ப நதியில் நீந்த பேஸ்புக் வந்தா டப்புன்னு கதவை கிளோஸ் பண்றீங்க...

மல்லிகார்ஜுனன் on July 9, 2012 at 10:20 AM said...

கலக்கல்

மல்லிகார்ஜுனன் on July 9, 2012 at 10:21 AM said...

ஈ நடிச்ச படமெல்லாம் ஓடுது... அடுத்தவாரம் தல படம்வேற வருது... ஹம்ம்ம் எல்லாம் விதிப்படி நடக்கும்.

மல்லிகார்ஜுனன் on July 9, 2012 at 10:25 AM said...

கலக்கல்

குழந்தபையன் on July 9, 2012 at 11:40 AM said...

சூப்பர் ஸ்டாராக ஒரே படத்தில் ஈ யை மாற்றி விட்டார் ராஜமௌலிஈ.. படத்தின் வேகமே வெற்றிக்கான முதல் காரணம்.

கார்க்கி on July 9, 2012 at 2:52 PM said...

அனைவருக்கும் நன்றி!

@விதூஷ்,
பட்டாம்பூச்சியும் பூச்சிதான். பறவை இல்லை :)

இரசிகை on July 9, 2012 at 6:10 PM said...

nallaa yezhuthiyirukkeenga..kaarkki!

அசோகபுத்திரன் on July 10, 2012 at 11:49 AM said...

மங்காத்தாவிற்கு பிறகு பல காட்சிகளில் கை தட்டி ஆர்ப்பாட்டத்தோடு ரசித்த படம்... நைட் என்ன கடிச்ச கொசுவை பத்தி யோசிக்க வச்சிருச்சு இந்த படம்... சூப்பர்...

திண்டுக்கல் தனபாலன் on July 11, 2012 at 1:02 PM said...

நல்லதொரு விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...! (த.ம. 2)

Shanmuganathan on July 21, 2012 at 7:20 AM said...

Realy great one Saga...

 

all rights reserved to www.karkibava.com