Jun 13, 2012

வேளச்சேரி டூ மயிலாப்பூர்


 

வெயில் கம்மியா இருந்தா பைக்ல தானே போவ? என்ன கார் இன்னைக்கு?

  அம்மா செய்ற உப்புமால உப்பு இருக்கோ இல்லையோ சொல்ற எல்லாத்திலும் ஒரு பாயின்ட் இருக்கும். நமக்குதான் அது லேட்டா புரியும். இன்னைக்கு காலைல ஆஃபீஸ் கிளம்பினப்ப அம்மா அப்படி கேட்டத நானும் பெருசாவோ, மீடியமாவோ எடுத்துக்கல. கருப்பு நிற யமஹாவை விட்டு கருப்பு நிற ஐ20ல கிளம்பினேன். வேளச்சேரி 100 அடி சாலையின் முடிவில் இடதுபுறம் திரும்ப முடியாமல் எல்லா வாகனங்களும் ஸ்தம்பித்து நின்றிருந்தன. ஹால்டா நிறுத்தத்தின் அருகில் சாதா சாலையை சிமென்ட் சாலையாக மாற்றும் பணி நடப்பதால் எல்லா வண்டியையும் ரேஸ் கோர்ஸ் வழியா திருப்பி விட்டிருக்கானுங்க. ஆனா அந்த ரோடுல அவ்ளோ வண்டி போனா தாங்காது. அதையும் தாண்டி போனா கிண்டி ஜி.எஸ்.டி ரோடுல மெட்ரோ ரயில் வேலை நடக்குது. இந்த எந்த எழவையும் கவனிக்காம ஒரே ஒரு கோடு மீசை வரைஞ்ச போலீஸ் நின்னுக்கிட்டு எல்லா வண்டியையும் திரும்பி போக சொல்லிட்டு இருந்தாரு. கபாலத்தில் மணியடிக்க வண்டில எவ்ளோ டீசல் இருக்குன்னு பார்த்தேன். தூசியை துச்சமென மதித்து ஏசியை ஆஃப் பண்ணிட்டு ரெண்டு பட்டனை கழட்டி விட்டு ஆட்டத்துக்கு தயாரானேன்.

போச்சா. இன்னைக்கு லன்சலதான் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்லணும்

எல்லா பஸ், கார், பைக்கும் தல போல மெல்ல நட‌ மெல்ல நட போட்டுக் கொண்டிருந்தன. அப்பாடா.. நகரவாச்சும் செய்யுதேன்னு, பிராயசித்தமாக மங்காத்தா சிடியை தட்டினேன். என்ன அஜித் குத்தம் ஆனதோ தெரியல. ஸ்லோ மூவிங் எல்லாம் காணாமல் போய் அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்தன எல்லா வண்டிகளும். பக்கத்து ஃப்ளாட் ஆளிடமே பேசியேயிராத மென்பொருள் வல்லுநர் ஒருவர் வெறுத்துப் போய் பக்கத்து காரில் இருந்தவரிடம் “What happened? Any idea?” என பேச தொடங்கமளவிற்கு ஆகிப் போனது. நாமளும் நம்ம நண்பர்களிடம் பேசலாம் என மொபைலை எடுத்து ட்வீட் செய்தேன்.

“வேளச்சேரி ட்ராஃபிம் ஜாம்ல மாட்டிக்கிட்டவங்க யாரா இருந்தா 7072 ப்ளாக் ஐ20கிட்ட வாங்க. பேசிட்டு இருக்கலாம். RT plz :))))))”

சென்னை சமீபகாலமாக உள்கட்டமைப்பில் படு மோசமாகி வருகிறது. திமுக கடைசி ஒரு வருடத்தில் சாலைகளை போடவேயில்லை. அம்மா வந்து ஒரு வருடத்தில் போடவேயில்லை. ஆனா மழை மட்டும் ஓவர் டைம் பார்த்து தன் கடமையை இன்னும் வீரியத்துடன் செய்துவிட்டு சென்றது. பார்க்கும் இடமெல்லாம் காதல் தண்டபாணி முகத்தை போலத்தான் இருக்கிறது. ரோடு சரியில்லை என புலம்புவனை "நீங்க பரவாயில்லை. எங்க ஏரியால ரோடே இல்லையென" இன்னொருவர் ஆஃப் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இவனுங்க மெட்ரொ கட்டி முடிக்கிறதுக்குள்ள நம்ம ஆளுங்க பவர்கட் மேல பழிய போட்டு மக்கள் தொகையை இன்னும் ஒரு கோடி ஏத்தி வச்சுடுவானுங்க. வேலையை விட்டுட்டு குத்தாலம், அம்பாசமுத்திரம்ன்னு போய் பிச்சையாச்சும் எடுக்கலாம்ன்ற அளவுக்கு கடுப்பா இருந்துச்சு.  என்ன செய்வது என தெரியாமல் சிடியில் இருந்து எஃப.எம்முக்கு மாத்தி வைச்சேன்.

ஹொய்யா.. புது ரூட்டுல தான்.. ஹொய்யா.. நல்ல ரோட்டுலதான் நின்றாடும் வெள்ளி நிலவு

இந்த ஆர்ஜேக்கள் ஹோம் ஒர்க் செய்துவிட்டு வந்துதான் பாட்டுகளை போடுறாங்கன்னு நம்ப வேண்டியதா இருக்கு. சரி. வெள்ளி நிலவ தேடலாம்ன்னு சுத்திமுத்தி பார்த்தேன். இடதுபுறம் இருந்த காருல ஒரு லவ் ஜோடி ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். அது என்ன சொல்வாங்க? ரோம் நகரம் எரிய எவனோ எதையோ வாசிச்சேனாமே.. சரி பேசிட்டு இருக்கிற காதலர எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு லைட்டா டைரக்ஷன மாத்தினேன். அந்த கிளி தாவி வந்து அவ ஆளுக்கு ஒரு கிஸ் அடிச்சுது. பதட்டப்படாம முயற்சி பண்ணுங்க செல்லங்களா. அடுத்த சிக்நல தாண்டுறதுக்குள்ள குழந்தை வண்டியிலே பொறந்துடும்ன்னு அவங்களையும் , சன் கன்ட்ரோல் ஃபிலிம எடுக்க உத்தரவிட்ட ஜெ.வின் வம்சம் தழைக்கட்டும்ன்னு அவங்களையும் மனசார வாழ்த்தினேன்.

இனி இடது பக்கம் திரும்ப வேண்டாமென வலது பக்கம் திரும்பினேன். கண்ணாடிய டக் டக்ன்னு தட்டினாரு ஒருத்தாரு. திறந்தா, அண்ணே லிஃப்ட் கொடுக்கிறீங்களா கிண்டி வரைக்கும்ன்னாரு அந்த‌ 40 வயது ஜென்டில்மேன். இப்ப கொடுத்தா அது லிஃப்ட் இல்லைங்க.  ரூம் போடுறது. நீங்க நடந்தே போயிடுங்கன்னு சொல்லிட்டேன். முறைச்சுக்கிட்டே போனத பக்கத்துல இருந்த‌ ஃபாஸ்ட் ட்ராக் டிரைவர் சிரிச்சிட்டே பார்த்தாரு. இவனையும் ஏன் விட்டு வைக்கணும்ன்னு "உங்க வண்டி பேர Slow Track மாத்திக்கங்கண்ணான்னு” ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தேன். சிரிப்பு முறைப்பா மாறும் தருணம் இருக்கிறதே.. அத அப்புறம் சிலாகிக்கலாம். முதல்ல கண்ணாடிய ஏத்திட்டு உட்காருடான்னு அடி வாங்க மனசில்லாத மனசாட்சி சொல்லுச்சு. Closed.

அப்ப‌வும் ட்ராஃபிக் நகர விடல. வண்டிய ஆஃப் பண்ணிட்டு பேப்பர், பேனா இருக்குதான்னு பார்த்தேன். விஷ்ணுபுரத்துக்கு போட்டியா எழுதணும்ன்னு நினைச்சத செயல்படுத்த நல்ல‌ வாய்ப்பு. ம்ஹூம். பேனா இல்லை. பேப்பரும் இல்லை. எல்லா வண்டியும் ஆஃப் பண்ண பிறகும் புகை வந்துச்சு. விக்குற பெட்ரோல் விலையில இப்படி ஆனா டிரைவர் சீட்டுல இருக்கிரவனுக்கு புகை வராமா என்ன வரும்? இது ஆகுறதில்லைன்னு ரிவர்ஸ் எடுக்க பார்த்தேன். பக்கத்தில் ஒரு டிராஃபிக் போலீஸ் நின்னுட்டு இருந்தாரு. அவர்கிட்ட வேற வழி இருக்கான்னு கேட்கலாம்ன்னு கூப்பிட்டா திரும்பவே இல்லை. இத்தனைக்கும் அங்க U Turn ந்னு போடு இருந்துச்சு.. சைகை காமிச்சேன். ம்ஹூம். திரும்பல. Traffic Police at manduvinkarai signal. Plz turn ந்னு ட்வீட் போட்டேன். திரும்பவே இல்லை. சரின்னு “Sir.police sir” கத்தி பார்த்தேன். திரும்பினாரு.

யு டர்ன் அடிச்சு போகவா சார்ன்னு கேட்டேன். You cant Turn ந்னு அவ‌ரும் இங்கிலீஷுலே பேசினாரு. உலகத்துல எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்குன்னு அசரீரியா அஜித் சொன்னதும் "ஓக்கே ஓக்கே"ன்னு சைகையால காமிச்சிட்டு கம்முன்னு இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா வண்டி நகர்ந்துச்சு. நடந்து போன ஒருத்தரு காரு வச்சிருக்கிரவன திட்டிட்டே போனாரு. அவருக்கு ப்ளாட்ஃபார்ம் இருக்கு. அதுவும் அங்க இருந்த ப்ளாட்ஃபார்ம் காலியாவே இருந்துச்சு. அத விட்டு ரோட்டுல போயிட்டு எல்லோரையும் திட்டினாரு. காரு வச்சிருருந்தா அவன் காரா இருக்கணும்ணு அவசியம் இல்லைங்க. அண்ணன், அக்கா காரா இருக்கலாம். அட. காரு ஓட்ட காரெல்லாம் வேணாம். குழந்தையா இருந்தா போதும்னு அவர்கிட்ட சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன். சிவப்பு சட்டைக்காரரு பார்க்க கொஸ்டின் மார்க் ஆளு மாதிரியே இருந்தாரு. ஏற்கனவே அவங்க‌ளுக்கும் எனக்கும் பிளாக், பின்னூட்ட சண்டை இருக்கு. இப்ப இது வேறயா? .  புதிய கீதையாட்டம் அப்பதான் எனக்கு தோணுச்சு "எல்லா பிரச்சினைக்கும் ஒரே ஒரு தீர்வு இருக்கு. அதான் கண்ணாடிய ஏத்திட்டு பாட்டு கேட்கிறது" . Again closed

கண்ணாடி நீ. கண்றாவி நான்.
என் வீடு நீ. ஸ்டோர் ரூம் நான்.
என் தேடல் நீ உன் தொல்லை நான்.

எஸ்.பிபி சரண் பாடிகொண்டேயிருக்க 8.20க்கு கிளம்பினவன் 11 மணி அளவில் ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன். வந்தவுடன் பாஸ் கேட்டாரு "We have an immediate client meet. Shall we start “

Where?

XYZ developers. Velachery

 

 

.

16 கருத்துக்குத்து:

மோகன் குமார் on June 13, 2012 at 12:02 PM said...

//Where?

XYZ developers. Velachery//

Good short story :)

Ajithai niraya vambukku izhukkureenga. Paaththu !!

யுவகிருஷ்ணா on June 13, 2012 at 12:03 PM said...

மேட்டர் சப்பைதான்.

ஆனா பிரசண்டேஷன் சூப்பர் :-)

புதுகை.அப்துல்லா on June 13, 2012 at 12:26 PM said...

// மேட்டர் சப்பைதான்.

ஆனா பிரசண்டேஷன் சூப்பர் :-)

//

+1

Kapalee on June 13, 2012 at 12:37 PM said...

I was also a part of this Veachery messup. Very nicely written, with good humor

Rajan on June 13, 2012 at 12:44 PM said...

//Where: XYZ developers. Velachery

அது சரி, திரும்பவும் முதல்ல இருந்தா?

KSGOA on June 13, 2012 at 12:55 PM said...

நல்லா இருக்குங்க!

சுசி on June 13, 2012 at 1:03 PM said...

கலக்ஸ் :))

வள்ளி on June 13, 2012 at 2:10 PM said...

சூப்பர் பயணக்கட்டுரை! :)

Raghav on June 13, 2012 at 2:32 PM said...

"சூப்பர் பயணக்கட்டுரை! :)" -
Like! & +1

sathish on June 13, 2012 at 2:56 PM said...

"காரு ஓட்ட காரெல்லாம் வேணாம். குழந்தையா இருந்தா போதும்" இது மாதிரி நெறைய இடத்துல ரசிக்க முடிந்தது.................super

Uma on June 13, 2012 at 3:31 PM said...

கலக்கல் கார் பயணம்.படிக்க நல்லாயிருக்குது. ஆனா பயணத்தின்போது....பாவம்ங்க சென்னைவாசிங்க.

நடராஜன் on June 13, 2012 at 4:45 PM said...

எல்லாம் சொன்னிங்க கார்ல உங்க கூட வந்தவங்களை பத்தி சொல்லவே இல்லையே! #டிவிஸ்டு :)

அமுதா கிருஷ்ணா on June 13, 2012 at 5:55 PM said...

பேசாமா எல்லோரும் சைக்கிளுக்கு மாறிடலாம் கார்க்கி..

துளசி கோபால் on June 14, 2012 at 10:01 AM said...

ஆஹா............:-)))))))))))))))))

குழந்தபையன் on June 14, 2012 at 10:32 PM said...

super super

Sujatha on June 23, 2012 at 3:31 PM said...

Nalla mozhi nadai.

 

all rights reserved to www.karkibava.com