Jun 11, 2012

தோழி சூழ் உலகு


 

அந்த பக்கம் தலை வைக்காத என்கிறார் அம்மா.பரவாயில்லையென தெற்கு பக்கம் தலை வைத்து படுக்கிறேன்.. சீக்கிரம் வாடி :)

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கங்காரு குட்டி போல எட்டி எட்டி பார்த்துக் கொண்டேயிருக்கிறது உன் நினைவு

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நீ திரும்ப வந்தபின் சொல்லப்போகும் கதைகளுக்கு எப்படியெல்லாம் விழிகள் விரிய ஆச்சரியப்படலாம் என பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

தோழி சூழ் உலகு

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

ஏதேனும் ஒரு இசை அலைவரிசையில் தொகுப்பாளினி ஆகிவிடு செல்லம். முழுநேர “இசை” நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்கும்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

கண்ணுக்கு எட்டாத தூரம் போனவள் கண் மூடிய உடன் தெரிகிறாள். #காதலன் ஐ கேர்

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

உன் இன்மையை உணர்வதை விட நீயில்லாமல் வாழ முடியாது என்ற உண்மையைத்தான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

விளையாட போகக்கூடாது என சொல்லும் அம்மாவிடம் கெஞ்சும் பிள்ளை போல, தோழியை பார்க்க கெஞ்ச வேண்டியிருக்கிறது காலத்திடம்.

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

சரசர சாரக்காத்து கேட்கும்போது சன் டிவில் போகும்போது சாரப்பாம்பு போல நெஞ்சு உன்னை தேடி ஓடுதே

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

நேற்றிரவு தேவதைகளுடன் கனவில் பிரச்சினை. அவர்களில் யார் தோழியின் சாயலில் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமாம் நான்

3 கருத்துக்குத்து:

சாகசன் on June 11, 2012 at 9:41 AM said...

முதல் ஆளெ நான் தான்.... பாத்தோன கமெண்ட் போட்டுட்டன் . அத மாதிரி நான் ப்ளாக் எழுதுறப்ப கமெண்ட் போட கூட வேணாம் வந்து எட்டி பாத்துட்டு போங்க போதும்....

இன்னும் எத்தனை பதிவு தான் போடுவீங்க குரு தோழிக்கு ? காதலிக்கு ஒன்னு போடுங்க :))

வரலாற்று சுவடுகள் on June 11, 2012 at 11:43 AM said...

அனைத்தும் ரசிக்க வைத்தது ..!

நிலவைத் தொலைத்த வானம் on September 3, 2012 at 9:52 PM said...

:)

 

all rights reserved to www.karkibava.com