May 31, 2012

டல்லரசு


 

உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கிறேன்.

சாந்தோமில் ஒரு பாய் கடையில் பிரியாணி Awesomatic க்கா இருக்குமென அலுவலக நண்பர் ஒருவர் சொன்னதையடுத்து ஆர்வம் தாங்காமல் யமஹாவை கிளப்பினேன். அடிக்கிற‌ வெயிலிலும், பெட்ரோல் விற்கும் விலையிலும் 2 கி.மீ என்பதே தூரம்தான் என்றாலும் பிரியாணிக்கு முன் ஒரு டேஷுமில்லை என்பது என் எண்ணம். பிரியாணி குறித்த சிலாகிப்பை பிறொதொரு நல்ல நாளிற்கு ஒத்தி வைத்துவிட்டு இந்த வழக்கு குறித்து அலசுவோம்.

மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை அடைந்து, பட்டினப்பாக்கம் சிக்நலில் வலதுப்பக்கம் திரும்பி சன் டிவி அலுவலகம் நோக்கி 55 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது 150 சிசி FZ16. ஷார்ட் ஃபிலிம் எடுக்கிறார்களோ என்ற சந்தேகத்தோடு பார்த்தால் ஒரு மரநிழலில் இருந்து வந்த காக்கி ஒருவர் ஓரங்கட்ட சொன்னார். எல்லா டாகுமென்ட்ஸும் பக்கா என்பதாலும், என் ஒருவனையே ட்ரிபிள்ஸ் என எண்ணும் அளவிற்கு நான் இன்னும் குண்டாகததாலும் ஓரமாய் போய் அவருக்கு கட்ட தேவையில்லை என்ற எண்ணத்தில் ஓரங்கட்டினேன். ஷாட் ஓக்கேவான்னு பாருங்க சார் என ஒளிப்பதிவாளர் இயக்குனரை அழைப்பது போல் என்னை அழைத்து அந்த வேகமானியின் திரையை காட்டினார்

55லதான் சார் வந்தேன்.

நானும் அதான் சார் சொல்றேன். 55 ல வந்திருக்கீங்க. ஓவர் ஸ்பீடு.

சார். 55 ஸ்பீடுன்றதுதான் ஓவர்.

40லதான் சார் வரணும்.

ஒழுங்கா போறவனையே புடிங்க.நிஜமா ரேஸ் போறவன விட்டுடுங்க சார். அவ்ளோ ஸ்பீடாவா சார் வந்தேன்??திடீர்ன்னு இப்படி நல்ல போலிஸா மாறினா எப்படி சார்? (சிரிச்சமேனிக்குத்தான் சொன்னேன்)

இல்ல சார். இப்பலாம் ஸ்ட்ரிக்ட்டா புடிக்கிறோம்.

நான் பொறந்ததுல இருந்தே 50க்கு எல்லாம் புடிக்க மாட்டாங்களே சார்

50ன்னா விட்டுடுவோம். நீங்க 55

இப்ப என்ன பண்ணனும் சார்?

இன்னும் கொஞ்சம் ஓரமாய் கட்டினார். ஏதேதோ சொன்னார். கேமரா பக்கம் இரண்டு காக்கிகள். 20 மீட்டர் தள்ளி நிழலில் ஒரு சார்ஜன்ட். "சாருக்கு கம்மியா போடுப்பா" என ஒருவர் சிபாரிசு வேறு செய்தார். சுற்றி வளைத்து அவர்கள் எனக்கு சொல்ல வந்தது "20 மீட்டர் தள்ளிப் போனா ஃபைன். இங்கேயே தந்தா கம்மி லஞ்சம்".

உள்ளுக்குள்ள இருந்த அண்ணா ஹசாரே தொபுக்கடீர் என குதித்தார்.

"உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா சார்? 5 கீமீ அதிகமா வந்தா 1000ரூ கேட்பீங்க. ஆனா நீங்க லஞ்சம் வாங்கினா மட்டும் யாரும் கேட்கக்கூடாது. கத்திபாரா பாலத்துல அதிகப்பட்ச வேகமே 10கிமீ சார். நீங்க போவீங்களா? 1950ல போட்டத இன்னும் மாத்தாம வச்சிருக்கான் கவர்மென்ட். நீங்களாச்சும் கொஞ்சம் யோசிச்சு புடிக்க மாட்டீங்களா சார்?வண்டி ஓட பெட்ரோல் தர மாட்டீங்க. ஆஃபீஸ்க்கு லேட்டாகும். அதுக்காக கொஞ்சம் வேகமா போனா புடிப்பீங்க. போகலைன்னா அவன் லாஸ் ஆஃப் பேன்னு புடிப்பான். கேன்சர்ன்னு ஃபோட்டோ போட்டு சிகரெட்ட விப்பீங்க. குடிக்காதன்னு சொல்லி சாரயாத்த விப்பீங்க. ஆனா நாங்க சொந்த பாதுகாப்புக்கு ஹெல்மெட்ல போடலைன்னா அதுக்கும் காசு வாங்குவீங்க.  $%^&*()_____________________________”

இந்த போலீஸ் காலைல இருந்தே நிழலில்தான் நிற்கிறார் போல. கொஞ்சம் கூட கோவப்படமால் அதே ஆஃபரை இன்னும் பாலீஷாக சொன்னார். நீங்க போடுற ஃபைன போடுங்க சார். கட்டுறேன்னு கத்தினேன். என்னிடம் இருக்கும் எல்லா நம்பரையும் வாங்கிக்கொண்டு 300ரூ அச்சடித்து காறித்துப்பியது அந்த புதிய எலக்ட்ரானிக் மிஷின். இப்போது அவர் பேச ஆரம்பித்தார்

"இந்த காசு ஒரு நல்லதுக்கு கொடுத்தேன்னு நினைச்சிக்கோங்க சார். அடுத்த தடவ வண்டிய ஸ்பீடா ஓட்டினா இது ஞாபகத்துக்கு வருமில்ல.நீங்களும் பத்திரமா வீடு போய் சேருவீங்க. 300ரூபாயால என்ன சார் ஆயிட போது"

பர்சிலிருந்து 3 நூறு ரூபாய் தாள்களை கொடுத்தேன். வாங்கிக் கொண்டார்.  "ஒண்ணு சொன்னா கோச்சிக்க மாட்டீங்க இல்ல சார்".  இல்லையென்பதாக தலையாட்டினார்.

"நைட்டு ட்யூட்டி முடிஞ்சு வீட்டுக்கு உங்க பைக்ல போவீங்க இல்ல. அப்ப ஸ்பீடோமீட்டர் ஒவ்வொரு தடவ 40க்கு மேல போறப்ப என் ஞாபகம் வரும் சார். நைட்டு சாப்பாடு இறங்கினா நீங்க நோட் பண்ண என் நம்பருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் தட்டி விடுங்க சார்"

வண்டியை விருட்டென கிளப்பி பாய் கடைக்கு விட்டேன். லன்ச் டைம் முடிந்து மணி 2.45 ஆகியிருந்தது. பிரியாணி இருக்காண்ணே என்றேன். “சாப்பிடுறவங்க எல்லாம் டேஸ்ட்டா இருக்குன்னு சொல்றாங்க. ஆனா கூட்டம்தான் வரல. லெக் பீசே இருக்குங்க" என்றார் பாய். டோக்கன் வாங்க பர்ஸை எடுத்தால் ஒரே ஒரு 10ரூ தாள் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்தது. இருந்த முன்னூறு ரூபாயும் ஃபைன் கட்டியாகிவிட்டது. கார்டை எல்லாம் வாங்குற அளவுக்கு பாய்கடை பிசினஸ் வளரவில்லை. எரிச்சலுடன் வண்டியை கிளப்பினேன்.

இந்த நியாயம், தர்மம் எல்லாம் மறந்து அந்த காக்கி கேட்ட 100ரூபாயை தந்திருந்தால் நான் பிரியாணி சாப்பிட்டிருப்பேன். காக்கியும் சாப்பிட்டிருப்பார். பாய் கடை பிசினஸ் வளர்ந்திருக்கும். க்ரெடிர் கார்டு வாங்குமளவிற்கு வந்திருப்பார். என்னைப் போல காசில்லாமல் வரும் ஒருவன் கார்டின் உதவியுடன் சாப்பிட்டிருப்பான். அந்த பேன்க் வளர்ந்திருக்கும். கிரெடிட் கார்ட் விற்க ஒரு பெண்ணுக்கு வேலை கிடைத்திருக்கும். அதற்காக அவர் சென்னை வந்து ஹாஸ்டலில் தங்கியிருப்பார். நிச்சயம் ஒரு பாய் ஃப்ரென்ட் கிடைத்திருப்பான். இருவரும் பேச தினம் 10 ரூ ரீசார்ஜ் செய்திருப்பான். அந்த மொபைல் ஷாப் ஓனர் பிழைத்திருப்பான். ச்சை

எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோமென்று உரைத்தது. அடுத்த முறை வண்டியை 55ல் ஓட்டினால் 100ருபாய்க்கு மேல் சல்லிக்காசு கொடுப்பதாக இல்லை நான்.

20120531_150319

21 கருத்துக்குத்து:

மோகன் குமார் on May 31, 2012 at 3:30 PM said...

Kathai nallaa irukku :))

சாகசன் on May 31, 2012 at 3:46 PM said...

ஏழு போய் கார்க்கி வந்தாச்சு டும் டும் டும் டும்

குழந்தபையன் on May 31, 2012 at 4:29 PM said...

கலக்கல் கார்க்கி கலகல காக்கி...

Balaji Jayaraman on May 31, 2012 at 4:35 PM said...

Good imagination in last paragraph karki... Funny to read :)

வள்ளி on May 31, 2012 at 4:46 PM said...

ஹா ஹா...

நீங்க 100௦௦ ரூபா குடுத்திருந்தா எங்களுக்கு இந்த பதிவு வந்திருக்குமா?

நடராஜன் on May 31, 2012 at 9:36 PM said...

டிவிட்டரில் லஞ்சம் பற்றிய ஒரு உரையாடலின் போது லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயலுவது பொதுமக்களே என்னும் தொனியில் சிலர் கூறினர். ஆனால் ராஜராஜ சோழன் இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டர் பில்லிங் இடும் காவல் துறை என்றுமே பட்டுக் குஞ்சம் கட்டி வைத்த துடைப்பங்கள் தான்! ஆனால் முதலில் இங்கு குப்பையில் தள்ள வேண்டியது இந்த துடைப்பத்தைதான்!

மல்லிகார்ஜுனன் on May 31, 2012 at 9:45 PM said...

உண்மையில் இந்த லஞ்சத்திற்கு மாற்று கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பேசாம pepar.li ல ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சு "press" ன்னு வண்டில ஒட்டிக்கலாமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on May 31, 2012 at 9:49 PM said...

நீங்கள் ஓப்பனாக சொல்லியிருக்கும் பல விபரங்களின் அடிப்படையில் காவல் துறை மேலதிரிகாரிகள் லஞ்சத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். எடுத்திருப்பதாக இங்கே பதிலும் போட்டால் மிக நன்றாக இருக்கும். செய்வார்களா?!

விஜிலென்ஸ் ஆபீசுக்கு இதை ஃபார்வர்ட் செய்யவும்.

மல்லிகார்ஜுனன் on May 31, 2012 at 9:50 PM said...

இப்ப நீங்க ஃபைன் கட்டினதால நாட்டுக்கு வரி அதிகமாகி இருக்கு, அதனால பண வீக்கம் குறையும், ரூபாயோட மதிப்பு ஏறும், 55 கே பைன் கட்ட சொன்னா கட்டுறாங்க ன்னு இனி 40 கே பைன் வாங்குவாங்க. இன்னும் வரி கூடும். அதனால வண்டி ஓட்டுரவங்க எண்ணிக்கை குறையும், பெட்ரோல் தட்டுப்பாடு வராது, ஸ்டாக் அதிகமாகும், வெளிநாடுகள் கிட்ட கச்சா எண்ணைக்காக கைகட்டி நிற்க வேண்டாம், நம்ம யாரும் கண்ட்ரோல் பண்ண முடியாது...


... வல்லரசு ஆயிடலாம் ...

Nataraj on May 31, 2012 at 9:57 PM said...

அந்த பட்டர்ஃபிளை தியரி டைப் பத்தி ரசித்தேன்..:)

amas on May 31, 2012 at 10:19 PM said...

Sad, looking at the state of our traffic governance. But what you did was right, though you say you regret it.
amas32

பரிசல்காரன் on May 31, 2012 at 11:54 PM said...

கேயாஸ் தியரி பாரா கலக்கல்! இரண்டு வாட்டி ரசிச்சுப் படிச்சேன்!

வெல் ரிட்டர்ன்!

கார்க்கி on June 1, 2012 at 9:35 AM said...

அனைவருக்கும் ந‌ன்றி

ராம், இதெல்லாம் ஆகாதுங்க.. :))

அர்ஜூன், அபப்டி ஆனா பரவாயில்லையே.. நாம தர்ற காசு சோழா ஹோட்டலுக்கு இடதுபுறம் போகும். இல்லைன்னா வலதுபுறம் போகும். அஷ்டே

கார்க்கி on June 1, 2012 at 9:38 AM said...

இன்று காலை 50 கி.மீ. வேகத்திலே ஆஃபீஸ் வரலாம்னு பார்த்தேன். 3 பேரு அசிங்கமா திட்டுட்டு போனாங்க‌

உண்மைத்தமிழன் on June 1, 2012 at 12:20 PM said...

நல்லா எழுதியிருக்க..! ஆனால் இனிமேலும் ஸ்பீடா போகாத..! 50-க்குள்ளதான் நார்மல்.. எல்லா நேரமும் ஒரே மாதிரியிருக்காது..!

அதிலை on June 1, 2012 at 1:02 PM said...

எங்க ஊர்ல 60 க்கு கீழே போனா அபராதம்
http://gulfnews.com/news/gulf/uae/traffic-transport/128-abu-dhabi-motorists-fined-for-driving-below-speed-limit-1.1028121

A Simple Man on June 3, 2012 at 9:13 PM said...

you should have swiped the CC to pay the fine.yes, they have the swiping machine.

mantra on June 5, 2012 at 2:52 PM said...

முன்னூறு ஓவாய்க்காக உங்க நல்ல எண்ணத்த மாத்திறாதிங்க..எத்தன தடவ மாட்டுனாலும் அத்தன தடவையும் ஃபைன் கட்டுங்க...பிகரா பீசானா நமக்கு பீஸ் தான் முக்கியம் ஆனா நேர்மையா ப்ரியானியான்ன்னா நமக்கு நேர்மை தான்னே முக்கியம்...!!! கார்க்கி வாழ்க

T.N.MURALIDHARAN on June 9, 2012 at 7:16 AM said...

தங்கள் பதிவுகள் பற்றி இன்றைய வலைசர்த்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் கிடக்கும்போது வருகை தரவும்.
http://blogintamil.blogspot.in/2012/06/6.html

nd raja on July 24, 2012 at 4:09 PM said...

Unmai than karki... indha kakinga thollai thangamudila... pesama neenga padichu IPS agirunga.

nd raja on July 24, 2012 at 4:12 PM said...

yes karki... indha kakinga thollai thanga mudila... pesama neenga IPS padichu periya police agirunga...

 

all rights reserved to www.karkibava.com