May 28, 2012

நீலிமா


 

   பெண்களுக்கான ஒரு அரிமா சங்க‌ நிகழ்ச்சியில் பேசுவதற்காக  சில தலைப்புகள் கேட்டிருந்தார்கள். வழக்கமான சாலமன் பாப்பையா ரக தலைப்புகளாக இல்லாமல் சில தலைப்புகளை சொல்லியிருந்தேன். யுத்தம் செய் புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் சிறப்பு விருந்தினர் என்றதால் அந்த நிகழ்ச்சிக்கு போகும் எண்ணம் அதுவரை இல்லை. கடைசி நேர மாறுதலால் நீலிமாராணி வருவதாக ஆனதும் “அட!! நம்மாள பார்க்கலாம்” என நானும் சென்றேன்.

Neelima Rani photos Neelima Rani gallery

நீலிமாவை தெரியும்தானே? அசர வைக்கும் அழகெல்லாம் இல்லை.ஆனால் அழகுதான். எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நடிகைகளில் முக்கியமானவர். அநேக தொடர்களில் வழக்கம் போல் அழுது கொண்டிருந்தாலும் நீலிமா பெரிய திரையில் அவ்வபோது நாயகியின் தோழியாக அம்சமாக வந்து போவார். நிகழ்ச்சி நடந்த அரங்கை நான் அடைந்தபோது அவசர அவசரமாக அவர் புகைப்படம் தாங்கிய பேனர் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு லுக் + கன்னத்தை லேசாக தட்டிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.  செம ஃபிகர் பாஸ்

பெண்களுக்கான‌ நிகழ்ச்சி. வந்திருப்பவர் சீரியல் நடிகை. பேசியே கொல்லப் போகிறார்கள் என்பதை அறியாமல் இல்லை நான். சரியாக 7.45க்கு நீலிமா பிங்க் நிற சேலையில் உள்ளே வந்தார். நான் எதிர்பார்த்தது போலவே நேரில் கூடுதல் அழகோடுதான் இருந்தார். தென்றல், செல்லமேவின் வாசக நெஞ்சங்கள் அவரை சூழ்ந்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். கூடி நின்ற‌ பெண்களில் யாரேனும் ஒருவரின் பெயரை சொல்லி இவ‌ரைப் போன்ற‌ ஒரு விசிறியை நான் கண்டதில்லை என்று எப்போது பேசத் தொடங்குவார்! பார்த்துட்டு கிளம்ப வேண்டியதுதான் என்றெண்ணத்தோடு காத்திருந்தேன்.

ஆன்ட்ராய்ட் மொபைலில் Temple Run விளையாடிக் கொண்டிருந்த போது மைக்கில் "தேவிகா அம்மா" என்றார் நீலிமா. “ஓ இவர்தான் இன்றைய மின்னல் விரலுக்கு சொந்தக்காரரா” என நிமிர்ந்தேன். இவங்கள நான் லைஃப் டைல மறக்க மாட்டேன் என தொடர்ந்தார். மன ரிமோட்டில் ம்யூட் பொத்தானை மட்டும் அமுக்கிவிடலாமா என யோசித்து நிராகரித்தேன். நல்ல வேளை. நீலிமா சொன்ன தேவிகா அம்மா அவரிடம் கேட்ட முதல் கேள்வி "நீ எந்த நாடகத்துலம்மா நடிக்கிற?". நீலிமா தென்றல், செல்லமே என்றாவுடன் அடுத்த கூக்ளியை வீசியிருக்கிறார். "ஓ. இது எந்த டிவிலம்மா வருது?"

கேட்ட நமக்கே கிள்ளிப் பார்க்க தோன்றும் போது நீலிமா என்ன நிலைக்கு ஆளாகியிருப்பார் என புரிந்துக் கொள்ள முடிகிறது. சுற்றி நின்று "கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க" என ஆஸ்கார் விருதுகளாக கொடுத்த நடுவர்கள் மத்தியில் நீலிமா ஏன் தேவிகாவை பற்றி பேச வேண்டும்? உள்ளுக்குள் அலாரம் அடிக்க மன ரிமோட்டில் சத்தத்தை கூட்டினேன்.

 

"நான் சீரியல் நடிகைதாங்க. ஆனா அதனால உங்களுக்கு என்ன நல்லது இருக்கு? ஒரு நிகழ்ச்சி பார்க்கறிங்கன்னா அதனால உங்களுக்கு ஏதாச்சும் கிடைக்கணும் இல்லை? மெகா சீரியலில் என்னங்க இருக்கு? நான் நடிக்கிற ஒரு சீரியல். 3 வருஷமா அதே இடத்துலதான் இருக்காங்க. கொஞ்சம் கூட கதை நகரல. நானும் நடிச்சிட்டுதான் இருக்கேன். அது எனக்கு ப்ரெட் & பட்டர். ஆனா உங்களுக்கு என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறத‌ லேட்டாக்குறத தான் இந்த சீரியல் செஞ்சிருக்கு. வேற ஒண்ணும் செய்யல"

நீலிமா பேசிக் கொண்டேயிருந்தார். ஒருவர் தான் இயங்கும் தளத்தை விமர்சிப்பது புதிததல்ல. பெரிய விஷயமுமில்லை. ஆனால் அதை பொது தளத்தில், ஒரு ஃபோரமில் முன்வைக்க தைரியம் வேண்டும். அதை விட முக்கியமாக அதன் விளைவுகள் குறித்த புரிதல் வேண்டும். நீலிமாவின் பேச்சில் ஒரு நிதர்சனமான உண்மையும், தீர்க்கமான புரிதலும் இருந்தது. எதிர்மறையாக பேசி கைத்தட்டல் வாங்க வேண்டுமென்ற அலட்டல் இல்லை. மேலோட்டமாக பேசி கூடியிருந்த பெண்களின் சல்சலப்புக்கு ஆளாகும் முட்டாள்த்தனமும் இல்லை. அனைவரையும் கூர்ந்து கவனிக்க வைக்கும் பேச்சு அது. அதற்காக கேட்கும் அனைவரும் டிவியை உடைத்துவிடுவார்கள் என்ற அவநம்பிக்கையும் அவரிடத்தில் இல்லை. "யாராச்சும் ஒருத்தர் இத பத்தி நாளைக்கு. இன்னைக்கு இல்லை. நாளைக்கு யோசிச்சி பார்த்தீங்கன்னா போதும் எனக்கு." என்றார் நீலிமா.

 

    நீலிமா குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரம் உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். தமிழில் தேவர் மகன் படத்தில் நாசருக்கு மகளாக அறிமுகமாகி நான் மகான் அல்ல,சந்தோஷ் சுப்ரமணியம் மொழி என 25க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். போதுமான வருமானம் இருக்கிறது. என்ன செய்கிறார் அதை வைத்து? தம்பியை அவர் விருப்பபப்டி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.  அது வீடு. இன்னும் என்ன செய்கிறார்? ஒரு கேன்சர் விழிப்புணர்வு தன்னார்வ நிறுவனத்தில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். இன்னும் பல என்.ஜி.ஓக்களில் பொருளுதவியும், சேவையும் செய்து வருகிறார்.மீடியா பிரபலங்கள் பொதுவாக செய்யும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் இல்லையது என நிச்சயமாய் என்னால் கூற முடியும்.

நீலிமாவின் பேச்சில் இதை தாண்டியும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் பல உண்டு. தான் பேச வந்திருப்பது ஒரு லயன்ஸ் கிளப் நிகழ்ச்சி என்றவுடன் அவர்களை பற்றிய தரவுகளை சேகரித்திருக்கிறார். அந்தக் குறிப்பிட்ட சங்கம் இதுவரை செய்திருக்கும் கண்தான முகாம்கள், ரத்தத்தான முகாம்கள் உள்ளிட்ட பொதுச்சேவைகளை லேடி ரமணாவாக அவர் குறிப்பிட்டபோது "நாமளா இவ்வளவு செய்தோம்" என்ற ஆச்சரியத்தோடு அரங்கம் கைத்தட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் குறித்தும், அவர்கள் போராட்டம் குறித்தும் நீலிமா பேசிக் கொண்டிருந்த போது சில சீரியல் சின்னாத்தாக்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை காண முடிந்தது, இந்த முறை அவர் அழுவது நல்லது எனபது மட்டும் எனக்கு புரிந்தது. நமக்கு நேரத்துக்கு தோசை கிடைக்குமென்ற நம்பிக்கை கிட்டத்தட்ட எல்லா ஆண்களின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. நம்பி ஏமாறுவது இப்போதெல்லாம் ஆண்கள்தானே?

  கையிலிருந்த கேலக்ஸீ டேபில் எடுத்து வந்த எல்லா குறிப்புகள் பற்றியும் பேசி முடித்த திருப்தியில் அதே சிரிப்போடு நீலிமா இருக்கைக்கு திரும்பினார்.அவர் சீரியலுக்கு கிடைத்திராத பலத்த உற்சாகம் அவர் பேச்சுக்கு கிடைத்தது. முன்னர் அவரை கண்டுக்கொள்ளாத பல தாய்மார்களும் இம்முறை அவரை நோக்கி நக‌ர்ந்ததை பார்த்துக் கொண்டே நான் வெளியேறினேன். வெளியே, அதே பேனர். அதே நீலிமா. ஆனால் இப்போது  இன்னும் அழகாக தெரிந்தார். Good Job lady என தட்டிக் கொடுத்துவிட்டு இரவு நேர சென்னை சாலையில் இறங்கி நடந்த போது மனதுக்குள் இப்பதிவை எழுத ஆரம்பித்திருந்தேன். அழகுக்குத்தான் எத்தனை டைமென்ஷன்கள்?

16 கருத்துக்குத்து:

Exim Ads David on May 28, 2012 at 10:32 AM said...

//நமக்கு நேரத்துக்கு தோசை கிடைக்குமென்ற நம்பிக்கை கிட்டத்தட்ட எல்லா ஆண்களின் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.// ஹ ஹா...ரசித்தேன். டின்னர் தான

mantra on May 28, 2012 at 10:41 AM said...

ஒரு விஷயம் மட்டும் உங்களுக்கும் எனக்கும் ஒத்துப்போச்சி பாருங்க...நானும் நீங்களும் நீலிமாக்காக தான் இங்க இருக்கோம்..சூப்பர் பிகரு..

பட் கூட்டத்துல ஒரே பெண்களா இருந்தாங்கன்னு சொல்றிங்களே அந்த எடத்துல உங்களுக்கு என்ன வேலை ??

மோகன் குமார் on May 28, 2012 at 11:56 AM said...

I also like Neelima. Simple beauty. Special nose.

Ramani on May 28, 2012 at 12:11 PM said...

நான் இதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டதில்லை
கேட்க வேண்டும் என்கிற ஆவல் தங்கள் பதிவைப் படித்ததும்
கூடிப்போனது நிஜம்.வாழ்த்துக்கள்

Ramani on May 28, 2012 at 12:12 PM said...

Tha.ma 2

காவேரிகணேஷ் on May 28, 2012 at 1:19 PM said...

நல்லா இருடே..

சுசி on May 28, 2012 at 2:37 PM said...

கலக்ஸ் கார்க்கி..

KSGOA on May 28, 2012 at 3:13 PM said...

நீலிமா ஸ்டில் சூப்பர்!!பதிவு நல்லா இருக்கு.

குழந்தபையன் on May 28, 2012 at 5:46 PM said...

நான் காலியான கதையின் அடுத்த பகுதின்னு ஆர்வமா வந்தேன்!!

அழகு இருக்கும் இடத்தில் இப்படி பட்ட குணம் இருப்பதை கண்டு வியக்கேன்!!

A Simple Man on June 3, 2012 at 9:19 PM said...

Nanbaa nee en inamadaa.. me too Neelima fan.really good to know her helping mind..

கயல் on June 8, 2012 at 2:50 AM said...

நல்ல ரசனை தான் கார்க்கி!

நல்ல பதிவு.

நீலிமாவின் தந்தை ஒரு எழுத்தாளர். பெயர் நீலமதுமயன் என்பது சரியா?

Hemanth on July 8, 2012 at 4:37 PM said...

அதானே பார்த்தேன் ஏன்டா பாப்பாவ தென்றல்ல காணோமே .... இப்ப புரியுது.

Sudhar on July 25, 2012 at 1:16 PM said...

இது போல கேரளாவில் சிறிய நடிகர்கள் நன்றாக பேசுவார்கள்

vanila on July 25, 2012 at 6:16 PM said...

நிலிமா ராணி, நீலிமா ராணி . நீலிமா நீ ராணி, நீ மாலினி ரா , நீ ரமா லி நி , நிலி நீ ரமணி, ,மணி ரா நீலி. மலி நீ ரமா லினி, மலினி, மணி நீ, ரமணி, கம ரமணி, லிமா ரமா க, நிலி ரமா க, மலி நிரி க, நிலிமா நீ, நீலிமா நீ... ராணி.

lakshmi on July 26, 2012 at 3:13 AM said...

Very nice

chinnapiyan on July 26, 2012 at 1:12 PM said...

நீலிமா உண்மையிலே ஒரு தைரியமான பொண்ணுதான். அழகுக்கு அழகு. அறிவுக்கு அறிவு. தங்கள் மூலமா அறிந்தமைக்கு நன்றி. காட் பிளஸ்

 

all rights reserved to www.karkibava.com