May 11, 2012

நான் காலியான‌ க‌தை


 

அப்ப எனக்கு ரெண்டரை வயசாம். அப்பன்னா எப்பன்னு கேட்கறீங்களா?? எதிர் வீட்டு பொண்ணு பர்த்டேக்கு சாக்லெட் கொடுக்க வந்தப்ப நீயே சாக்லெட்ன்னு அவள இழுத்துட்டு போனேனாமே..அப்ப எனக்கு ரெண்டரை வயசாம். ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணே மறந்து போச்சு. இதுல 20 ஆம் நூற்றாண்டுல நடந்த சம்பவத்த ரீ சைக்கிள் பின்ல இருந்தா எடுக்க முடியும்? அத‌னால அத‌ ஃப்ரியா விடுங்க‌. நீங்க இதுல கககபோ பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா, எனக்கு சைட்டடிப்பதில் 26 .5* வருட அனுபவம் உண்டு.

(*  – இப்ப எனக்கு வயசு 29 என்பதை அறிவீராக)

வேடிக்கை பார்க்கிறதுல அதாங்க சைட்டடிக்கிறதுல பல வருட அனுபவம் என்றாலும் அடுத்த K க்கு போறதுல எனக்கு நிறைய முட்டுக்கட்டைங்க..முதல்ல நீங்க 4K பத்தி தெரிஞ்சிக்கணும். கண்ணால சைட் அடிப்பது – கடலை போடுவது – காதலிப்பது – கல்யாண செய்து கொள்வது. இப்படி படிப்படியாக முன்னேறுவதே சாலச்சிறந்தது என்கிறார் ஸ்ரீலஸ்ரீ மன்மதலோச்சின வியாச அடிகள். அவ்வகையில் பார்த்தோமேயானால் பாதி கிணறு மட்டுமே தாண்டியவன் ஆகிறேன் அடியேன். (அவரேதான் மனதை ஒருநிலைப்படுத்தி புற உலகை மறந்து கவனத்தை குவிப்பதால் சைட்டடிப்பதும் ஒரு வகை தியானமே என்றார்)

கடலை போடுவது என்பது ஒரு கலை. ஒரு பொண்ணுக்கிட்ட பேசுறப்ப அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது, அவ சூர்யா ஃபேனா இல்லையா,, கிரிக்கெட்டுல எத்தனை கோல்ன்னு அவளுக்கு தெரியுமா, மொக்கை ஜோக்குக்கே சிரிப்பாளா மாட்டாளா, I hate this stupid politics என்பவளா,க்ரேசி மோகன தெரியுமா, இந்திய அணி ஜெர்சிய கூட பிங்க் கலர்ல தேடுற ஆளா, கடைசியா அவ பார்த்தது avengers இல்லை நண்பனா, இப்படி பல ஆங்கிள்ல முதல்லயே நல்லா யோசிச்சு ஸ்க்ரிப்ட் எழுதி ஆனா எல்லாமே ஸ்பாண்ட்டேனியஸா பேசுற மாதிரி பேசி, அவளையும் சிரிக்க வச்சு நமக்கும் போரடிக்காம அடுத்த நாள் காஃபிக்கோ லன்ச்சுக்கோ ரெடி பண்ணி அதே சமயம் மொபைல்ல இருக்கிற பேலன்ஸ் தீராம‌ பேசி முடிக்கிறதுக்குள்ள நாங்க படுற அவஸ்தை இருக்கே. இதுக்கு பதிலா சுனாமி வர்றப்ப கடலுக்குள்ள போய் கால நீட்டி படுத்திடலாம்..ஆனா ஒண்ணுங்க.. கடலை போடுறப்ப பார்டர தாண்டி என்னைக்கும் போக மாட்டான் கார்க்கி. எனக்கு “கடலை.. கண்ணியம்.. கட்டுப்பாடு” என்பதுதான் தாரக மந்திரம்

இப்ப அடுத்த K.. காதல். வருங்காலத்த முன்கூட்டியே தெரிஞ்சி வச்சுப்பாங்க இல்ல சில பேரு.. அது மாதிரி நானும் எப்படியும் ஒரு தேவதை நமக்காக வருவான்னு அடிஷ்னல் பேப்பரா வாங்கி தோழி அப்டேட்ஸா எழுதி தள்ளிட்டேங்க. அதுதான் நான் செய்த பெரிய தப்பு. ரெண்டு Kவ தாண்டி எந்த பொண்ணும் வராம போனதுக்கு இதுதான் காரணம்ன்னு எனக்கு லேட்டாதான் தெரிஞ்சுது. என்னை புடிச்ச பொண்ணுங்க கூட தோழி அப்டேட்ஸுக்கு பின்னால இன்னொரு பொண்ணு இருக்கிறதா நினைச்சு என்கிட்ட சொல்லாமலே விட்டாங்க. சரி பைக் வாங்கி நூல் விடுவோம்ன்னு Yamaha Fz16 வாங்கினேன்.ஆனா ஒவ்வொரு வாரமும் பதிவர் சந்திப்பு, Tweetupன்னு போறதுக்கு பேசாம Super splendorஏ வாங்கியிருக்கலாம். இதுல வேற நையாண்டி நாகராஜ், டீக்கடை கோபாலு, நரிமுக நாதாறி, நசுங்கிய சிம்பு.. ச்சே சொம்பு. இதெல்லாம் என்னன்னு யோசிக்கிறீங்களா? நம்ம பிளாகர்ஸோட புனைபெயரு.. எவனும் சொந்த பேர சொல்ல மாட்டானுங்க.. எனக்கு கூட இதையே தைரியமா சொல்றாங்களே.. அப்ப நிஜப்பேரு எவ்ளோ மோசமா இருக்கும்ன்னு தோணும். சரி அத விடுங்க. அவங்க என்ன கேட்பாங்கன்னா, அங்க விட்டுடுறீங்களா சகான்னு லிஃப்ட் கேட்பானுங்க.. வண்டிக்கு பின்னாடி சில பேரு Brother giftன்னு எழுதியிருப்பானுங்க இல்லை. அது மாதிரி இவனுங்க சட்டைல Borther Liftன்னு எழுதி வச்சிக்கலாம். சரி பாவம்ன்னு வண்டில ஏத்தினா ஆரம்பிப்பானுங்க பாருங்க

நீங்க ரொம்ப லக்கி சகா

ஏன் பாஸ்?

இல்லை. இந்த பைக்ல பையன் என்னாலயே உங்கள பிடிக்காம உட்கார முடியலையே.. உங்க தோழி எப்படி உட்காருவாங்க?

இந்த Fz பைக் இருக்கு பாருங்க. இந்திய பாகிஸ்தான் எல்லை மாதிரி எது பார்டரு, எது டிரைவர் சீட், எது பில்லியன் இடம்னே தெரியாது. நிச்சயம் யாராச்சும் ஒருத்தர் எல்லை மீறிய பயங்கரவாததுல ஈடுபட்டே ஆகணும்ன்ற மாதிரி டிசைன் பண்ணியிருப்பானுங்க. அதத்தான் நம்ம பசங்க லக்கின்னு சொல்வாங்க. நம்ம லட்சணம்தான் நமக்கு தெரியுமேன்னு ரியர்வியூ மிரர்ல என் மூஞ்சி அவனுக்கு தெரியுற மாதிரி நாசூக்கா திருப்பி விட்டுட்டு நானும் ஒரு ஸ்மைல் விடுவேன். பெரிய சிபிஐ கணக்கா ஏதோ கண்டுபிடிச்ச மாதிரி “அட சகாவுக்கு வெட்கத்த பாருங்க. நான் கண்ணாடில பார்த்துட்டேன்னு” ஃபீலிங்க்ஸ் விடுவானுங்க.. தோழியிருந்தா ஞாயித்துகிழமை சாயங்கலாம் இந்த வண்டில இவன ஏத்திக்கிட்டு சுத்த எனக்கு பைத்தியமான்னு கூடவா யோசிக்க மாட்டானுங்க? கெரகம் நம்மள ரோமியோன்னு நினைக்கிற வரைக்கும் போதும்ன்னு நானும் கண்டுக்க மாட்டேன்.

இப்படி போயிட்டிருந்த வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேணும்ன்னுதான் பிளாக விட்டுடுட்டு ட்விட்டர்ல தஞ்சம் புகுந்தேன். வாழ்க்கையை புரட்டி போடுற அச்சம்பவம் நடக்கும்ன்னு நான் கனா எல்லாம் காணவில்லை. ஆனால் நடந்தது. ஆக்ச்சுவ‌லி அவ‌ள‌ நான்,.. கிர்ர்.. சிம்பு மாதிரி ஆயிட்டேனோ???? :(((

(தொடரலாம்.. தொடராமலும் போகலாம்)

33 கருத்துக்குத்து:

நான் மதன் on May 11, 2012 at 2:46 PM said...

சூப்பா் சகா ;-)

அனுஜன்யா on May 11, 2012 at 2:56 PM said...

தொடரு மச்சி. ரொம்ப நாள் ஆச்சு உன்கிட்ட கதை கேட்டு.

BalaramanL on May 11, 2012 at 2:58 PM said...

இதுவரைக்கு ஒங்களுக்கு 'தொந்தரவு' கொடுத்த 'எறுழ்வலி'ய நீங்க எத்தன தடவ திட்டிருப்பீங்களோ?! ;>

அண்ணிக்கு என் வாழ்த்துகள்! :)))

KSB on May 11, 2012 at 3:40 PM said...

kalakittinga boss.

ஜோசப் பால்ராஜ் on May 11, 2012 at 4:39 PM said...

My hearty wishes to you Nanbaa

அக்கப்போரு on May 11, 2012 at 8:35 PM said...

எனக்கு சைட்டடிப்பதில் 26 .5* வருட அனுபவம் உண்டு//
இருந்தும் என்ன பிரயோஜனம் ?

அக்கப்போரு on May 11, 2012 at 8:38 PM said...
This comment has been removed by the author.
அக்கப்போரு on May 11, 2012 at 8:39 PM said...

அவ சூர்யா ஃபேனா இல்லையா//
விஜய் பேனா இருந்தா? அது மனிதப்பிறவியே இல்ல .. சரியா

அக்கப்போரு on May 11, 2012 at 8:41 PM said...

கடலை போடுறப்ப பார்டர தாண்டி என்னைக்கும் போக மாட்டான் கார்க்கி. //

ஏன் ஒரு தடவ போயி தான் பாக்குறது ?

அக்கப்போரு on May 11, 2012 at 8:42 PM said...

கடலை.. கண்ணியம்///
அடிங்ங் கண்ணியம் இருக்கவன் கடல போட மாட்டான்.

அக்கப்போரு on May 11, 2012 at 8:44 PM said...

தோழி அப்டேட்ஸா எழுதி தள்ளிட்டேங்க.அதுதான் நான் செய்த பெரிய தப்பு///

இப்பவாவது புரிஞ்ச்சுச்சே.
It's better late then never karki

அக்கப்போரு on May 11, 2012 at 8:46 PM said...

ஆனா ஒவ்வொரு வாரமும் பதிவர் சந்திப்பு, Tweetupன்னு போறதுக்கு பேசாம Super splendorஏ வாங்கியிருக்கலாம்//


இனிமே பதிவர் சந்திப்புக்கு யாரவது super splendor ல வந்தா அவன வச்சு ஒரு புனைவு எழுதலாம்னு இருக்கேன்

அக்கப்போரு on May 11, 2012 at 8:52 PM said...

கெரகம் நம்மள ரோமியோன்னு நினைக்கிற வரைக்கும் போதும்ன்னு நானும் கண்டுக்க மாட்டேன்//

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

Armstrong Vijay on May 12, 2012 at 1:48 AM said...

நல்ல இருக்கு கார்க்கி.. :) ..தொடராதிங்க..ரகசியம்..எல்லாருக்கும் தெரியகூடாது..

சுசி on May 12, 2012 at 3:31 AM said...

கலக்ஸ் கார்க்கி.. வாழ்த்துகள் :))

rAguC on May 12, 2012 at 5:28 AM said...
This comment has been removed by the author.
rAguC on May 12, 2012 at 5:28 AM said...
This comment has been removed by the author.
rAguC on May 12, 2012 at 5:30 AM said...

இவ்ளோ மொக்கை போடா தெரிஞ்ச ஒருவர் இன்னும் இரண்டாவது "K" தாண்டலன்னு நெனைக்கும் போது, கஷ்ட்டமா இருக்கு !

Siva sankar on May 12, 2012 at 6:52 AM said...

:)

வள்ளி on May 12, 2012 at 8:23 AM said...

தொடரனும்...

KSGOA on May 12, 2012 at 8:56 AM said...

ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே!கண்டிப்பா
தொடருங்க....................

KSGOA on May 12, 2012 at 8:57 AM said...

ரொம்ப சஸ்பென்ஸா இருக்கே!கண்டிப்பா
தொடருங்க....................

குழந்தபையன் on May 12, 2012 at 10:15 AM said...

"காதல் கீச்சுகளை பார்த்து காதலிக்கிறான் போல என நம்பி ஒரு பெண்ணும் பேசாது " இந்த உண்மை எனக்கும் லேட்டா தான் தெரிஞ்சுது ..நானும் யமஹா தான் வச்சி இருக்கேன்.. பல சொதப்பல்களை தாண்டி குரு உங்களை போல சிஷ்யனுக்கும் நல்லது நடக்குதான்னு பார்ப்போம்..

இந்த மாதிரி intresting அ எழுதனும்

பிரதீபா on May 13, 2012 at 11:04 PM said...

முடியல..எப்படியோ மக்கள் நல்லா இருந்தா சரி !!

கார்க்கி on May 16, 2012 at 10:45 AM said...

ந‌ன்றி ம‌த‌ன்

அனுஜி, ந‌ல‌மா?

ப‌ல‌ராம‌ன், ஹிஹிஹிஹி

ந‌ன்றி கே.எஸ்பி

ந‌ன்றி ஜோச‌ப்

அக்க‌ப்போரு, நீ ந‌ட‌த்து மாமு

விஜ‌ய், ர‌க‌சிய‌ம்ன்னுதான் சொல்றோம்.ர‌க‌ச்ய‌த்த‌ சொல்ல‌ மாடொடொம் :))

ந‌ன்றி சுசி

ர‌கு, க‌லிகால‌ம்.. :))

ந‌ன்றி சிவா

வ‌ள்ளி, தொட‌ரும் :)

கோவா‌, ந‌ன்றி


குழ‌ந்தை, மேட்ட‌ர் ய‌ம‌ஹால‌ ம‌ட்டும் இல்லை :)

பிர‌தீபா, ஆமாம் முடிய‌ல‌..இன்னும் வ‌ரும்

deepak on May 20, 2012 at 11:32 PM said...

அப்போ சிக்கிரமே டும் டும் மா ,,...: வாழ்த்துக்கள்

ராஜ சேகர் on May 21, 2012 at 3:00 PM said...

Karki.. Lift plzzz..!! Eppadiyum ungalukku thozi illanu declare panniteenga.. pillion freeya irukkathu engala mathiri nanbarkalukku lift koduthalaavathu ungalukku punniyam serum.. :D :D

நடராஜன் on May 22, 2012 at 3:16 AM said...

வாழ்த்துகள் குருவே! ஆட்டோ பிக்‌ஷன் பைக்கில் ஏறி செல்கிறது! :)

மதன்ராஜ் மெய்ஞானம் on May 22, 2012 at 3:41 AM said...

ஆகட்டும் ஆகட்டும்! :)

மங்களூர் சிவா on May 25, 2012 at 4:38 PM said...

நீ லிஃப்ட் குடுத்தப்ப மழை வந்து தொப்பலா மழைல நனைஞ்சிட்டோம் ஞாபகம் இருக்கா??

அடப்பாவி இனிமேத்து லிஃப்ட் கிடையாதா??????????

பிழைத்திருத்தி on October 16, 2012 at 12:05 AM said...

டேய்.. கார்க்கி பயலே! ..ச்சும்மா சொல்லிப்பாத்தேன்..

இரசிகை on November 23, 2012 at 5:08 PM said...

ippothaan vaasiththen.

இரசிகை on November 23, 2012 at 5:08 PM said...

solla maranthuten black bike azhaka irukku.

 

all rights reserved to www.karkibava.com