Mar 9, 2012

Jammy


 

   1996ல் லார்ட்ஸ் மைதான‌த்தில் ந‌டைபெற்ற‌ இந்திய‌ இங்கிலாந்து இடையேயான‌ டெஸ்ட் போட்டியில் ஒரு இளைஞ‌ன் ச‌த‌ம‌டித்தார். வ‌ழ‌க்க‌ம் போல் ந‌ம்ப‌ரில் அதிக‌ ந‌ம்பிக்கையுடைய‌ என்னைப் போன்ற‌ அன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் (அப்போது நான் மாண‌வ‌னாக்கும்) க‌ங்குலி ப‌ற்றியே அதிக‌ம் பேசினார்க‌ள். Mark My word. This boy will go places என்று சொல்லும் மொழி எம்.எஸ்.பாஸ்க‌ர் போன்ற‌ சில‌ரும், கிரிக்கெட்டை சுவாசிக்கும் இன்னும் ப‌ல‌ரும் யார் இந்த‌ பைய‌ன் என‌ அதே மேட்ச்சில் 95 ர‌ன் அடித்த‌வ‌ரை பற்றி பேச‌த் தொட‌ங்கினார்க‌ள். ராகுல் திராவிட் குறித்து இன்றும் ப‌ர‌வ‌லாக‌ பேச‌ப்ப‌டும் பேச்சு அன்றுதான் தொட‌ங்கிய‌து. முத‌ல் மேட்ச்சில் ந‌ட‌ந்த‌ அந்த‌ துர‌ததிர்ஷ்ட‌ ச‌ம்ப‌வ‌ம் பின்னாளில் திராவிட்டை விடாம‌ல் துர‌த்திய‌து. அதாவ‌து அவ‌ர் ந‌ன்றாக‌ ஆடும் போட்டியில் இன்னொருவ‌ர் அதிர‌டியாக‌ ஆடி நம் நினைவில் நின்றுவிடுவார்(Laxman 281 at kolkatta). ப‌ந்து வீச்சாள‌ரை க‌டுப்பேற்றி க‌டுப்பேற்றி தான் நினைத்த‌தை சாதிக்கும் திராவிட், ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிற்க‌வும் அதே பாணியைத்தான் க‌டைப்பிடித்தார். பொறுமையாக‌ நின்று ஆடி ஆடி THE WALL ஆனார்.

திராவிட்டுக்கும், விக்ர‌ம் ர‌த்தோருக்கும் இடையேதான் ஒரு பெரிய‌ போட்டி நில‌விய‌து. இருவ‌ரில் ஒருவ‌ர்தான் நிர‌ந்த‌ர‌ இட‌த்தை பிடிக்க‌ முடியெம்ன்ற‌ சூழ‌லில் திராவிட்டின் பொறுமையும், க‌வ‌ன‌மும் கைக்கொடுத்த‌து. ர‌த்தோர் ஆஃப் சைடு ப‌ந்தில் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌வ‌ற்றை அடித்துவிடுவார். ஏதேனும் ஒன்றில் அவுட்டாகியும் விடுவார். திராவிட் ஆடும்போது அதிக‌முறை வ‌ர்ண‌னையாள‌ர்க‌ளால் உச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ WELL LEFTதான் திராவிட்டை காப்பாற்றிய‌து. ஒரு ப‌ந்தை அடித்தால் அதை பாராட்டுவார்க‌ள். ஆனால் அடிக்காம‌ல் விட்ட‌தை பார்ட்டினார்க‌ள் என்றால் அது இவ‌ர‌து ஆட்ட‌ம்தான்.

valuable runs என்பார்க‌ள். அதாவ‌து எந்த‌ மாதிரியான‌ சூழ‌லில், யாருக்கு எதிராக‌ எந்த‌ பிட்ச்சில் அடிக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை வைத்து அந்த‌ ஓட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்ப‌ளிப்பார்க‌ள். அந்த‌ வ‌கையில் பார்த்தால் திராவிட் ச‌ச்சினை விட‌ அதிக‌ ர‌ன்க‌ள் அடித்தார் என்று சொல்ல‌லாம். இன்னும் எளிமையாக‌ சொன்னால் ச‌ச்சின் எப்போதாவ‌து அடிக்காம‌ல் போனால் இவ‌ர் அடித்துவிடுவார்.

முர‌ளித‌ர‌ன் போன்ற‌ அச‌காய‌ சுழ‌ற்சியாள‌ர்க‌ள் அவ்வ‌போது ஒரு மாதிரியான‌ ப‌ந்தை வீசுவார்க‌ள். முத‌ல் தெருவில் குத்தும் ப‌ந்து சுழ‌ன்று, மூணாவ‌து தெருவுக்கு போவ‌தை போல‌ வ‌ரும். கிட்ட‌த்த‌ட்ட‌ ஸ்ட‌ம்ப் வ‌ரைக்கும் அதை வ‌ர‌விட்டு, ப‌ந்தை க‌டைசி நேர‌த்தில் திருப்புவ‌து திராவிட்டின் மாஸ்ட‌ர்பீஸ். சில‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை ப‌வுல‌ர்க‌ள் திராவிட் போல்டே ஆன‌து போல் குதித்த‌ பின்னால் ப‌ந்து ப‌வுன்ட‌ரிக்கு பொட்ட‌லம் க‌ட்டி அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌ந்திருக்கின்ற‌ன‌.

அவ‌ர் பேட்டிங்கில் அதிக‌ம் அடிக்கும் அதே ஸ்லிப் ஏரியாவில்தான் ஃபீல்டிங்கிலும் க‌ல‌க்கினார். விக்கெட் கீப்ப‌ர் அல்லாத‌ வீர‌ர்க‌ளில் அதிக‌ கேட்ச் பிடித்த‌து (டெஸ்ட்) திராவிட் தான்.

க‌ங்குலி, சேப்ப‌ல் அர‌சிய‌லில் தான் முத‌ன் முத‌லில் என‌க்கு திராவிட் மீது வ‌ருத்த‌ம் வ‌ந்த‌து. அது ஆதார‌ப்பூர்வ‌மான‌ செய்தி  இல்லையென்ற‌ போதும் க‌ங்குலி மீதான‌ க‌ண்மூடித்த‌ன‌மான‌ அபிமான‌த்தால் திராவிட் என‌க்கு பிடிக்காம‌ல் போன‌து. 2007 உல‌க‌ கோப்பை போட்டிக்கு பிற‌கு அது வ‌லுவான‌து. போதாக்குறைக்கு ச‌ச்சினை திராவிட் விசிறிக‌ள் ச‌ர‌மாரியாக‌ போட்டுத் தாக்க‌, கூட‌வே ஐ.பி.எல்லும் சேர்ந்துக் கொள்ள‌ கிரிக்கெட் என்ப‌தை தாண்டி சில‌ கார‌ணிக‌ளால் திராவிட்டுக்கு எதிர‌ணியில் செல்ல‌ வேண்டிய‌தான‌து. என்ன‌ ந‌ட‌ந்தாலும் இந்திய‌ அணி என்று வ‌ந்துவிட்டால் திராவிட் ஒரு த‌விர்க்க‌ முடியாத‌ வீர‌ர் என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. ஆனால் க‌ட‌ந்த‌ ஒன்றிர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ரின் ஆட்ட‌ம் சுமார்தான். இங்கிலாந்தில் ச‌த‌ம‌டித்தார் என்றாலும் எந்த‌ டெஸ்ட் போட்டியையும் ஜெயிக்க‌ வைக்க‌வோ அல்ல‌து ட்ரா செய்ய‌வோ இல்லை. அப்ப‌டி ஆகியிருந்தாலும் அது அவ‌ரின் ப‌ழைய‌ ஆட்ட‌ங்க‌ளை போல‌ ம‌ன‌தில் நிற்க‌வில்லை.

திராவிட், ச‌ச்சின், ல‌க்ஷ்ம‌ண் எல்லோரும் ஓய்வு பெற‌ வேண்டிய‌ நேர‌ம்தான். ஆனால் க‌ங்குலி இட‌த்திற்கே இப்போதுதான் கோலியை க‌ண்டுபிடித்திருக்கிறோம். அத‌ற்குள் திராவிட். இந்நிலையில் ச‌ச்சினும், ல‌க்ஷ்ம‌ணும் போய்விட்டால் அதோக‌திதான். அத‌ற்காக‌வாது ச‌ச்சினும், ல‌க்ஷ‌மணும் இன்னும் சில‌ நாட்க‌ள் விளையாட‌ வேண்டும்.

திராவிட் இந்த‌ தலைமுறை கிரிக்கெட்டின் த‌விர்க்க‌ முடியாத‌ பெய‌ர். நிச்ச‌ய‌ம் அவ‌ர‌து இழ‌ப்பு பெரிய‌து. 2011லும் லார்ட்ஸில் விளையாடினோம். எந்த‌ இள‌ம் வீர‌ரும் 95ம் அடிக்க‌வில்லை. லேட் க‌ட்டும் அடிக்க‌வில்லை.

8 கருத்துக்குத்து:

நடராஜன் on March 9, 2012 at 4:37 PM said...

”சச்சின் எப்போதாவது அடிக்காத போது டிராவிட் அடித்துவிடுவார்” கிர்ர்! கங்குலி, சாப்பல் அரசியலில் டிராவிட் ஒரு பொம்மை மட்டுமே! உண்மையான கங்குலி எதிரி திரைமறைவில்தான் இருந்தார். இதனால் தான் இங்கிலாந்து தொடரில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். டிராவிட், சச்சின் இருவருமே நல்ல cricketers ஆனால் உறுதியான கேப்டனாக இருக்க முடியாது.

ILA(@)இளா on March 9, 2012 at 8:55 PM said...

சரியான நேரத்தில் பதியப்பட்ட நிகழ்வு.

Salute Dravid! We gonna Miss U!

PREM.S on March 10, 2012 at 3:45 PM said...

உண்மை பெரிய இழப்பு இந்திய அணிக்கு

எல் கே on March 11, 2012 at 7:02 AM said...

karki, england series ivar mattum aadi enna use mams... vera oru payanum adala....

இரசிகை on March 11, 2012 at 2:58 PM said...

athellaam sari...

yennathu JAMMY???
puriyala.

Sathish on March 12, 2012 at 8:21 AM said...

சரி சரி, டிராவிட் மேல உள்ள கோவத்த விட்டுட்டு, இனிமே friendsஆ இருங்க !!

Rathnavel Natarajan on March 22, 2012 at 7:59 PM said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

Anonymous said...

dravid always great

 

all rights reserved to www.karkibava.com