Mar 8, 2012

GOவா - 2


 

Part - 1

  கோவாவில் இற‌ங்கி வெளிய‌ வந்‌த‌ 10 நிமிட‌த்தில் புரிந்துவிட்ட‌து என‌க்கு "பொட்டி தட்றவனுக்கு ஜாவா. ஃபிகர கட்றவனுக்குத்தான் கோவா" என்ப‌து. பாஸ்போர்ட் இல்லாம‌ல் கூட‌ சில‌ர் அங்கே சுற்றிக் கொண்டிருந்தார்க‌ள். ஆனால் ஜோடி இல்லாம‌ல் யாருமே இல்லை, எங்க‌ள் 17 பேர் கொண்ட‌ க‌ட்டிள‌ம் காளைய‌ர்க‌ள் க்ரூப்பை த‌விர‌. வெட்கி, நாணி, குறுகி போவ‌தெல்லாம் பிடிக்காது என்ப‌தால் நிமிர்ந்த‌ ந‌ன்ன‌டை, நேர்கொண்ட‌ பார்வையும்..அட‌டே!! அது ந‌மக்கில்லை..ஸ்ட்ரெயிட்டா பார்த்துக்கிட்டு ரிசார்ட்டுக்கு கிள‌‌ம்பினேன்.

கோவாவில் முத‌லில் நான் க‌வ‌னித்த‌ விஷ‌ய‌ம் சாலைக‌ள். எந்த‌வித‌ பேட்ச் போன்ற‌ ஒட்டு வேலைக‌ள் இல்லாம‌ல் ந‌ன்றாக‌வே இருக்கின்ற‌ன‌. ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறுக‌லான‌ சாலைக‌ள் என்றாலும் த‌ர‌த்தில் "ந‌ம்பிக் க‌ட்டும் டி.எம்.டி பார்" போல‌ சிற‌ந்து விள‌ங்குகின்ற‌ன‌. நாங்க‌ள் போன‌து தெற்கு கோவ‌வில் இருக்கும் உத்தோர்டா பீச். தெற்கு கோவாவில் இருக்கும் க‌ட‌ற்க‌ரைக‌ள் எல்லாமே White sand beach என்கிறார்க‌ள். பொண்ணு , ம‌ண்ணு எல்லாமே சும்மா வெள்ளை வெளேர் என்று இருப்ப‌தை சொல்லியே ஆக‌ வேண்டும். ஆனால் ம‌ண்ணை ம‌ட்டுமே ந‌ம்மால் தொட‌ முடிகிற‌து என்ப‌து அழ‌கிய‌, அறிவான‌, அம்ச‌மான‌ ஒரு வாலிப‌னின் தேவைய‌ற்ற‌ புல‌ம்ப‌ல் என்ப‌தை ம‌ட்டும் அறிவீராக‌.

 20120304_072856

இங்கே இன்னொரு பிர‌ச்சினை. நாங்க‌ள் சென்ற‌ போது கோவாவில் தேர்த‌ல் கால‌ம். கோவாவில் காங்கிர‌ஸ்தான் எப்போதும் ஜெயிக்குமென‌ எல்லாம் தெரிந்த‌ ஏகாம்ப‌ர‌ம் வ‌ழ‌க்க‌ம் போல் வாய் திற‌ந்தார். ஆனால் பாஜாக‌வின் தேர்த‌ல் விள‌ம்ப‌ர‌த்தில் ஒரு க‌லைஞ‌ர்த்த‌ன‌த்தை பார்த்தேன். அதாவ‌து ஹ‌வுஸ் ஒய்ஃப்க‌ளுக்கு மாத‌ம் 1000ரூ உத‌விப்ப‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுமென‌ சொல்லியிருந்தார்க‌ள். அப்போதே பாஜ‌க‌ ஜெயிச்சிடுமென‌ நான் நினைத்த‌ற்கு ஆதார‌ம் ஏதுமில்லை. ஆனால் கிறுஸ்துவ‌ர்க‌ள் அதிக‌ம் வாழும் கோவாவில் பாஜக‌ எப்ப‌டி என்ற‌ அர‌சிய‌ல் டைன‌மிக்ஸ் ப‌ற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.

வ‌ழ‌க்க‌மாக‌ கோவாவில் இர‌வு 3 ம‌ணி வ‌ரையும், ம‌றுநாள் அதிகாலை 3.01 முத‌லும் ச‌ர‌க்கு ச‌ல்லிசாக‌ கிடைக்குமாம். தேர்த‌ல் பிர‌ச்சார‌ நாட்க‌ளில் இர‌வு 11 ம‌ணிக்கு மூட‌ச் சொல்லியிருந்தார்க‌ளாம். நாங்க‌ள் சென்ற‌ அன்று 24 ம‌ணி நேர‌மும் இழுத்து மூட‌ சொல்லிவிட்டார்க‌ள். "அதெல்லாம் கிடைக்கும்.ச‌ர‌க்கில்லாத‌ கோவா, நெருப்பில்லாத‌ லாவா" என்று‌ அலுவ‌ல‌க டீ.ஆர் சொன்ன‌தை ந‌ம்பாம‌ல் ந‌ம்ம‌ ஊரில் இருந்து 5,6 முழுமைக‌ள் (அதாங்க‌ FULL) எடுத்து சென்றிருந்தேன். ஆனால் பிய‌ர் கிடைக்க‌வில்லை. நாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ரிசார்ட்டில் "ரூமுக்கு கொடுத்த‌ணுப்புறோம் சார். ஆனால் 225 ரூபாய்"‌ என்றார்க‌ள். எல்லோரையும் ரெடியாக‌ சொல்லிவிட்டு ல‌க்கேஜை வைத்த‌‌ கையோட‌ அருகிலிருந்த‌ பீச்சுக்கு வைகோ அ‌ல்லது அஜித்தை மேற்கொண்டேன்.

(SHACKS)

கோவா பீச்சில் SHACKS மிக‌வும் பிர‌சித்த‌ம். பெருசா ஒண்ணுமில்ல‌ங்க‌. பீச்சுல‌ குடிசை போட்டு அங்கேயே குடிக்க‌லாம்..குளிக்க‌லாம்..குளிக்க‌லாம்..குடிக்க‌லாம். க‌டைசியா சாப்பிட‌லாம். விலையும் ம‌லிவுதான். இதைத்தான் கோவாவின் குடிசைத்தொழில் என்கிறார்க‌ள். அது போல‌ ஒரு Shack பார்த்த‌வுட‌ன் ந‌ம‌க்கு தெரிந்த‌ ஏக் கோவா மேன் ஏக் கார்க்கி ச்ச‌ல்த்தா ஹை ஹிந்தியை எடுத்து விட்டேன்.கோவாவில் ப‌ல‌ மொழிக‌ள் பேசுகிறார்க‌ள். கொங்க‌னியும், தேவ‌ங்கிரியும் அதிகார‌ப்பூர்வ‌ மொழிக‌ள். ம‌ராத்தியையும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கிற‌து கோவாவின் ச‌ட்ட‌ம். போர்த்துகீசிய‌ மொழிதான் சுத‌ந்திர‌த்திற்கு முன்பு அர‌சு மொழியாக‌ இருந்திருக்கிற‌து. இப்போது அம்மொழியை பேசுப‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌ எண்ணிக்கையிலே இருக்கிறார்க‌ள். இதையெல்லாம் விட‌ எங்கு போனாலும் இந்தி பேச‌ தெரிந்தால் போதும். என் இந்தி க‌தைக்கு வ‌ருவோம். அந்த‌ குடிசைக்கார‌ரிட‌ம் "நாங்க‌ மொத்த‌‌ம் 17 பேரு. நாங்க‌ எங்க‌ போனாலும் ச‌ர‌க்கோட‌த்தான் போவோம். ஆனா பீரு ம‌ட்டும் இப்ப‌ இல்லை. உங்க‌க்கிட்ட‌ கிடைக்குமா" என்றேன் விறைப்பாக‌. ப‌டைய‌ப்பா சிவாஜி க‌ண‌க்காக‌ ஒரு மாதிரியான‌ எக்ஸ்பிர‌ஷ‌னோடு சுத்தி முத்தி பார்த்த‌வ‌ர் ர‌ஜினி இங்கிலிஷை எடுத்துவிட்டார் “I give you beer. One bottle 100Rs. But no talk to hotel about beer. OK?”. “I talk. you talk. why hotel middle middle talk” என்றேன். ஏதோ புரிந்த‌து போல‌ ஆயிர‌ம் ரூபாய்க்கு 8 பிய‌ர் பாட்டில் த‌ந்தார். 200 ருபாய் காலி பாட்டில் த‌ந்தால் திருப்பி த‌ருவாராம். அவருக்கு காலி பாட்டில் தேவையில்லை. அவை ஹோட்ட‌லுக்குள் த‌ங்கி விட‌க்கூடாது என்ப‌தே சூட்ச‌ம‌ம்.

  இன்னொரு விஷ‌ய‌த்தையும் சொல்லிவிடுகிறேன். நான் தான் ஆர்க‌னைச‌ர். அத‌னால் இந்த‌ ஆல்க‌ஹால் ச‌மாச்சார‌ம் எல்லாமே எங்க‌ டீமுக்கு. நான் ஒரு டீட்டோட்ட‌ல‌ர் என்ப‌தை......

(Royal Orchid Spa resort, Where we stayed)

கோவாவில் இருக்கும் போது முட்டிக்கு கீழே உடைய‌ணிவ‌து அப‌த்த‌ம். முக்கால்வாசி இருக்கும் ஒரு முக்கா பேண்ட்டையும், ஒரு வெள்ளை டீ ச‌ட்டையும் அணிந்துக் கொண்டு ம‌ற்ற‌ 16 பேரை ஒரு வ‌ழியாக‌ ஒன்றிணைத்து பீச் ஸ்போர்ட்ஸ் விளையாட‌ கிளம்‌பினோம். (16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்திருக்கியாடா கார்க்கி என்று பின்னூட்ட‌ம் இடுவ‌து த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து). Parasailing, Jetski, Banana ride, Dolphin ride போன்ற‌ அதிர‌டி ஆட்ட‌ங்க‌ளை ப‌ற்றி பார்க்குமுன் ஒரு விஷ‌ய‌ம். கோவாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 30 பீச் இருக்கின்ற‌ன‌வாம். நீங்க‌ள் நினைப்ப‌து போல் கோவா துள்ளாத‌ ம‌ன‌மும் துள்ளும் சிம்ர‌ன் மாதிரி அழ‌கான‌துதான். ஆனால் அது ஜாக்பாட் சிம்ர‌ன் போல‌வும் என்ப‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வும். அதாவ‌து ஒரு முறை கோவாவை சுற்றி பார்க்க‌வே 7,8 நாட்க‌ள் ஆகும்.

- (கோவோம்)

14 கருத்துக்குத்து:

Vetri on March 8, 2012 at 12:03 PM said...

இது புத்தகமாக வர எல்லா தகுதிகளும் இருக்கு!

Sangeetha TV on March 8, 2012 at 12:04 PM said...

:)) அய்யா பீர்டோட்டலர்....சே. காபிடோட்டலர்... அடச்சே.... வரல விடுங்க பாஸ்!

amas on March 8, 2012 at 12:30 PM said...

//அருகிலிருந்த‌ பீச்சுக்கு வைகோ அ‌ல்லது அஜித்தை மேற்கொண்டேன்.// LOL
Second part more humorous than the first and more informative!
amas32

சிநேகிதன் அக்பர் on March 8, 2012 at 1:39 PM said...

முதல் பகுதியில் ஒரு இலக்கியவாதி தெரிஞ்சார்,

இதில் நீங்க தெரியுரீங்க :))). வழக்கமான சுவாரஸ்யமான வைகோ அல்லது அஜீத். :)))

Azhagesan Jayaseelan on March 8, 2012 at 2:42 PM said...

இவரு அடங்க மாட்டார். காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டாதான் சரி வரும்.

மோகன் குமார் on March 8, 2012 at 4:03 PM said...

//கோவா துள்ளாத‌ ம‌ன‌மும் துள்ளும் சிம்ர‌ன் மாதிரி அழ‌கான‌துதான். ஆனால் அது ஜாக்பாட் சிம்ர‌ன் போல‌வும் என்ப‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வும். அதாவ‌து ஒரு முறை கோவாவை சுற்றி பார்க்க‌வே 7,8 நாட்க‌ள் ஆகும்.//

:))))

தட்சிணாமூர்த்தி on March 8, 2012 at 5:46 PM said...

கார்க்கி க்கு கால் கட்டு போடுங்கப்பா "பொட்டி தட்றவனுக்கு ஜாவா. ஃபிகர கட்றவனுக்குத்தான் கோவா"

சுசி on March 8, 2012 at 10:58 PM said...

கலக்ஸ் கார்க்கி :)

இரசிகை on March 9, 2012 at 10:11 AM said...

:)

"ராஜா" on March 9, 2012 at 11:41 AM said...

ஆக மொத்தம் இந்த கோவா ட்ரிப் உங்களுக்கு விஜய்யாக இல்லாமல் ரொம்ப நல்லாவே இருந்துச்சுன்னு சொல்லுங்க ...

கார்க்கி on March 9, 2012 at 11:49 AM said...

thanks all..

raja,

good one :)

நடராஜன் on March 9, 2012 at 3:39 PM said...

பீர் வாங்கினா காசுக்கு பீர்டோட்டல் பண்ணாம அது என்ன டீடோட்டல்?

Uma on March 12, 2012 at 10:35 AM said...

வரலாற்று சிறப்பு மிக்க கொங்கணி கடற்கரை -- இப்போது பொண்ணும் போதையும் என்றாகிவிட்டது.

ரசிக்கும்படி எழுதுறீங்க வாழ்த்துக்கள் கார்க்கி.

Anonymous said...

Karki... Unga uvamaigal super... (I mean comparing Goa about Simran)& "Muzhumaigal" is new word to be added to our vocabulary...I have been reading your blog since I read about it on Vikadan. Find all of them interesting.. Tamizh-la vera oru naal karuthu kutharen..

 

all rights reserved to www.karkibava.com