Mar 29, 2012

சிவ‌ன் செய்த‌ ச‌த்திய‌ம்


 

த‌ரை மோதி சாக‌ விரையும் ம‌ழைத்துளியாய்தான் வ‌ந்தேன். உன் மேல‌ விழுந்து உயிர்ப்பேன் என்று நினைக்க‌வேயில்லை

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

க‌ட‌க்கும் போது ட‌ப் என‌ வெடிக்கும் டிரான்ஸ்ஃபார்ம‌க‌ளை பார்க்கும் போது அவ‌ள் க‌ண்க‌ளை முத‌லில் ச‌ந்தித்த‌ த‌ருண‌ம் நிழ‌லாடி செல்கிற‌‌து

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

செவ்வாய் கிர‌க‌த்தில் ஏதோ வேலைக்கு விண்ண‌ப்பித்திருக்கும் பிர‌ம்ம‌ன் ரெஸ்யுமேவில் இவ‌ளை Achievement என்ற‌ ப‌குதியில் சேர்த்திருக்கிறானாம்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

உன் மீது ச‌த்திய‌ம் செய்து சிவ‌ன் ‌ பொய் சொல்ல‌வில்லை என‌ பார்வ‌தியிட‌ம் போராடிக் கொண்டிருக்கிறானாம்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

பேர‌ழ‌கிக‌ளை எல்லோரும் நிழ‌ற்ப‌ட‌ம் எடுக்க‌ நினைப்ப‌து சாதார‌ண‌ விஷ‌யம்தான்.உன் நிழ‌லை ப‌ட‌ம்பிடிக்க‌வே ச‌ண்டை போடுவதை என்ன‌வென்ப‌து!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

என் கூட கோவிலிலே தங்கிக்கிறியா என்று கேட்பதே வழக்கமாகிவிட்டது இந்த அம்மனுக்கு.அவள் கோவிலுக்கு வருவது என்னைப் பார்க்கவென்று சொல்ல வேண்டும்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

நீயென‌க்கு குட் நைட் சொல்லி செல்லும் நொடியில்தான் கோழி கூவித் தொலைக்கிற‌து

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்போதெல்லாம் பைக்கின் பின்னிருக்கையைத்தான் முத‌லில் க‌வ‌ன‌மாக‌ துடைத்து வைக்கிறேன்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அவ‌ள் பொலிவை உள்வாங்கி நான் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறேன். சிநேகிதியிட‌ம் அவ‌ள் என்ன‌ மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறாளோ???

9 கருத்துக்குத்து:

நான் மதன் on March 29, 2012 at 5:55 PM said...

NICE

Sen22 on March 29, 2012 at 6:47 PM said...

தோழி அப்டேட்ஸ் இப்பொழுது காதல் label-ல வருது... so sad... :(

சுசி on March 29, 2012 at 7:26 PM said...

கலக்ஸ் கார்க்கி :)

sathish on March 30, 2012 at 11:30 AM said...

அனைத்தும் அருமை.... "செவ்வாய் கிர‌க‌த்தில் ஏதோ வேலைக்கு விண்ண‌ப்பித்திருக்கும் பிர‌ம்ம‌ன் ரெஸ்யுமேவில் இவ‌ளை Achievement என்ற‌ ப‌குதியில் சேர்த்திருக்கிறானாம்"
this one is extremely good.....

tsjpraveen on March 30, 2012 at 11:44 AM said...

Super.. Miga arpudama varigal... :)

Uma on March 31, 2012 at 11:03 AM said...

திருக்குறள்ன் முப்பால் படித்திருக்கிறேன். இது என்ன நான்காம் காதற்பா (ல்) ?
குட்டி குட்டி வரிகளில் அழகான உணர்வுகளை வரைந்திருக்கிறீர்கள்.

பிரதீபா on April 1, 2012 at 7:47 AM said...

மெருகேற மெருகேற, மிளிர்கிறது; அத்தனையும் பிரமாதம். கலக்கறீங்க போங்க !!

Sendhilkumar AV on April 1, 2012 at 1:36 PM said...

If all are your own words,
Karki, unakkulla oru kalaizan half addichittu mallanthitu irukkaan, Avana seekiram thatti ezuppu!

Sendhilkumar AV on April 1, 2012 at 1:41 PM said...

If all are your own words,
Karki, unakkulla oru kalaizan half addichittu mallanthitu irukkaan, Avana seekiram thatti ezuppu!

 

all rights reserved to www.karkibava.com