Mar 26, 2012

பிரிய‌த்திற்குரிய‌ அர்ஜுன்..


 

image 

சில‌ரை சில‌ கார‌ணங்க‌ளால் பிடிக்கும். இன்னும் சில‌ரை அதே சில‌ கார‌ண‌ங்க‌ளால் பிடிக்காது. அர்ஜுனை என‌க்கு பிடிக்க‌ எந்த‌ கார‌ண‌மும் தேவைப்ப‌ட‌வில்லை. போல‌வே பிடிக்காம‌ல் போக‌வும் எந்த‌ கார‌ண‌மும் (இதுவ‌ரை) கிடைக்க‌வில்லை.

அர்ஜுன். ட்விட்ட‌ரில் @vedhalam. இதுதான் ட்விட்ட‌ரின் விதி. அவ‌ர் எவ்வ‌ள‌வுதான் சூப்ப‌ர் ஆளாக‌ இருந்தாலும் பேருக்கு முன்பு அட்டு போட்டுதான் சொல்ல‌‌ வேண்டியிருக்கும். அது கிட‌க்க‌ட்டும். அட்டு இல்லாத‌ அர்ஜுனைப் ப‌ற்றி சில‌ வார்த்தைக‌ள் சொல்லிவிடுகிறேன்.

ப‌திவுல‌க‌மும், ட்விட்ட‌ருல‌கமும் ச‌ற்று போர‌டிப்ப‌து போல் தோன்றிய‌ ஒரு ந‌ன்னாளில் குறும்ப‌ட‌ ப‌ணிக‌ளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தேன். ஆதியும் இன்னும் சில‌ரும் உன் புட்டிக்க‌தைக‌ளையே எடுக்க‌லாமே என்ற‌ போது க‌தையில் ஏழுவுக்கு நான் தந்திருந்த‌ உருவ‌த்தை போல‌ ஏற‌த்தாழ‌(ம்ஹூம் ஏற‌ ம‌ட்டும் தான்) 3 ம‌ட‌ங்கு அதிக‌மாக‌ இருந்தேன் நான். அத‌னால் ஹீரோவை தேட‌னுமே என்றெண்ணிய‌ போதே அர்ஜுன் மின்னெல‌ன‌ க‌ண் முன் வ‌ந்தான். அந்த‌ வார‌ம்தான் ட்விட்ட‌ர்க‌ள் எல்லோரும் கிரிக்கெட் ஆட‌ ஆர‌ம்பித்திருந்தோம். அப்போது முத‌ன் முத‌லில் அர்ஜுனை பார்த்தேன். ச‌ட்டென‌ முடிவு செய்து ந‌டிக்கிறியா என்ற‌ போதே 440 வோல்ட் 3 ஃபேஸ் க‌ர‌ண்ட்டை போல‌ ஆமென்றான்.

அர்ஜுனோடு ப‌ட‌மெடுக்கிறோம் என்று சுற்றிய‌ நாட்க‌ள் அற்புத‌மான‌வை. என்ன‌ சொன்னாலும் முடியாது என்று ப‌தில் வ‌ராது அவ‌னிட‌ம். தாம்ப‌ர‌த்தில் இருப்ப‌வ‌னை காலை 7 ம‌ணிக்கு அண்ணா யுனிவ‌ர்சிட்டி வாடா என்றால் ஓக்கே குரு என்ப‌துதான் ப‌திலாக‌ இருக்கும். சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேன். இவ‌னிட‌ம் இருக்கும் சிற்சில‌ குறைபாடுக‌ளில் அவ‌ன் குருவும் ஒருவ‌ன்.

ஏழுவின் காத‌ல் ப‌ட‌த்தின் ஒரு ப‌குதி டாஸ்மாக்கில் எடுக்க‌ வேண்டியிருந்த‌து. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் போலீஸ் தொல்லைதான். டாஸ்மாக்கிலோ குடிம‌க‌ன்க‌ளின் அன்பு தொல்லை. என்னையும் எடுங்க‌ண்ணா என்று ஆர‌ம்பிப்ப‌வ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ சுருதியேற்றி "எடுடா வெண்ணை" என்று முடிப்பார்க‌ள்.அத‌னால் கிட்ட‌த்த‌ட்ட‌ கேன்டிட் கேம‌ரா போல‌தான் எடுத்துக் கொண்டிருந்தோம்.அங்காடித் தெரு ப‌ட‌த்திற்கு வ‌ச‌ந்தபால‌னும் இதே போல் ஒரு ஸ்டேட்மென்ட் விட்ட‌தை எல்லாம் ம‌ற‌‌ந்திருப்பீர்க‌ள்.போக‌ட்டும். அர்ஜுனின் அறிமுக‌ காட்சி அது. ஏழுவின் க‌தைக‌ள் சீரிஸாக‌ எடுக்க‌ப்ப‌ட‌லாம். அத‌னால‌ இந்த‌ இன்ட்ரோ முக்கிய‌ம் என‌ ஆதி ஏற்றிவிட்ட‌தில் அர்ஜுன் ஒரு மாதிரிதான் ஆயிருந்தான். எங்க‌ள் குறும்ப‌ட‌ வ‌ர‌லாற்றில் 10க்கும் மேற்ப‌ட்ட‌ டேக் போன‌து அந்த‌ ஷாட் தான். போதும்டா ந‌ல்லா இருக்கு என்று மூட்டைக் க‌ட்டினால் "இல்ல‌ குரு. இன்னும் ஒரே ஒரு தட‌வ‌ ட்ரை ப‌ண்றேன்" என்றான். அப்ப‌டி அக்க‌றையோட‌ அவ‌ன் பேசிய‌ வ‌ச‌ன‌த்தை நினைத்தால்தால் விழுந்து புர‌ண்டு சிரிக்க‌ வைக்கிற‌து. என‌க்கு ஒரு பீரு வாட்ட‌ர் பாக்கெட் என்ற‌ குர‌ல் ஒலிக்க‌, கேம‌ரா அந்த‌ திசை நோக்கி திரும்பும். அப்போது சொல்வான் "ராவா அடிச்சா என் உட‌ம்பு தாங்காது ம‌ச்சி"

அர்ஜுனை அவ்வ‌ள‌வு எளிதில் எடை போட்டுவிட முடியாது. அவ‌ன் ட்வீட்டுக‌ளை ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு இது புரிய‌லாம். ப‌டிக்காத‌வ‌ர்க‌ள்? இந்த‌ ப‌திவே அத‌ற்காக‌த்தான். தன‌து ட்விட்டுக‌ளை தொகுத்து "இனிய‌வை நூற்றிநாற்ப‌து" என மின்புத்த‌காம‌க்கியிருக்கிறான். நோக்க‌ம் எதுவாயினும் ஒரு சுவார‌ஸ்ய‌ ப‌டைப்பாக‌ அது இருக்குமென்ப‌தில் அவ‌ன‌து வாச‌க‌னாக‌ என‌க்கு ந‌ன்கு தெரியும். உதார‌ண‌த்திற்கு ஒன்று பாருங்க‌ள்.

ஒவ்வொரு உரையாட‌லின் முடிவிலும் சொல்ல‌ப்ப‌டும் "அவ்வ‌ள‌வுதானா..னா..னா? என்ற்‌ வார்த்தையில் காத‌ல் காம‌மாக‌ ஆர‌ம்பிக்கிற‌து.

சாதார‌ண‌ விஷ‌ய‌ம் தான். ஆனால் அடுத்த‌வ‌னின் அனுப‌வ‌த்தில் இவ‌ன் பாட‌ம் க‌ற்கிறான். இவ‌ன் தேற‌ மாட்டானா என்ன‌?

அர்ஜுனுக்கு என் அன்பும் வாழ்த்துக‌ளும்.

To download this E –book : Click here

______________________

a5ebcbd55add9bd75b7bab47335973fc_view Parisal, vedhalam(front), Kullabuji & me

Arjun links:

Blog : www.sriarjunan.blogspot.in

Twitter id : @vedhalam

21 கருத்துக்குத்து:

நடராஜன் on March 26, 2012 at 7:57 PM said...

அழகு! :)

இளஞ்சிங்கம் நவீன் on March 26, 2012 at 8:00 PM said...

நல்ல பையன்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது....ரொம்ப நல்லா பழகுனவங்க சும்மா தெரிஞ்சவங்கன்னு பிரிச்சி பார்க்க மாட்டான் எல்லோரையும் சமாமா பார்ப்பான்....மிக துன்பமான ஒரு நேரத்தில் எனக்கு அவன் அறையில் ஆதரவளித்தான் அப்போது அவனுடன் நெருங்கி பழகாத சமயம் என்றாலும் நெடு நாள் பழகிய நண்பனாய் அவன் காட்டிய பரிவு...என்றும் என் நெஞ்சில்....

ILA(@)இளா on March 26, 2012 at 8:02 PM said...

உண்மையைச் சொல்லப் போனால் பதிவுலகில் ஒரு நல்ல அறிமுகம்னு சொல்லிக்கிற வகையிலும் அர்ஜூனும் வருவாரு(நட்டுவும்).

அவருடைய பதிவுக்கும் ஒரு அறிமுகம் குடுத்துடலாமே

pskumar on March 26, 2012 at 8:06 PM said...

master class karki!!

pskumar on March 26, 2012 at 8:07 PM said...

master class karki!!

pskumar on March 26, 2012 at 8:07 PM said...

master class karki!!

pskumar on March 26, 2012 at 8:07 PM said...

master class karki!!

ராம்குமார் - அமுதன் on March 26, 2012 at 8:09 PM said...

அர்ஜுனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்...

சத்யா on March 26, 2012 at 8:36 PM said...

இதை ஒரு குரு சிஷ்யனுக்கு செய்தார் என்பதை விட, ட்விட்டருக்கு இது ஒரு புதிய முயற்சி. கார்க்கிக்கும், அர்ஜுனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Prabu Krishna on March 26, 2012 at 8:37 PM said...

அர்ஜுனுக்கு வாழ்த்துகள்.

சுசி on March 26, 2012 at 8:54 PM said...

வாழ்த்துகள் அர்ஜூன் :)

amas on March 26, 2012 at 8:55 PM said...

Congratulations to Karki and Arjun and to all your close friends for this nice effort. My husband has downloaded the e book, will read it soon :)
amas32

Anonymous said...

கு௫ கார்க்கியை வணங்கி நண்பன் அர்ஜுனை வாழ்த்துக்கிறேன்.ரொம்ப சந்தோஷமாயி௫க்கு.. எழுத்தில் ஆர்முள்ளவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இது ஆரம்பம். கு௫வினால் சிஷ்யனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்ந்து மேலும் நிறைய எழுதடா அர்ஜுன் .வாழ்த்துக்கள்!


ஃபோட்டோல எழுத்துக்கு சம்பந்தமே இல்லாம நானும் இ௫க்கேன் (அவங்க மனசுலயும்..அவ்வ்வ்வ்).இதுக்கு காரணம் கூட அர்ஜுன் தான்.

I feel proud of u arjun...Go ahead!

Kathir Rath on March 26, 2012 at 9:09 PM said...

பதிவுலகில் எனக்கு முதலில் அறிமுகம் அர்ஜுன் தான், சொல்ல போனா 2 மாசமாதான் வலைத்தளத்தை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருக்கிறேன்,உங்களை போன்றவர்களை பார்க்கும்போது பொறாமையா இருக்கு பாஸு, நிறைய சொல்லனும் போல இருக்கு, இப்போதைக்கு வாழ்த்துக்கள் மட்டும் சொல்லி முடிச்சுக்கறேன், வாழ்த்துக்கள்

விஜய் on March 27, 2012 at 1:26 AM said...

எனக்கு பிடிச்சது சாளரம் என்ற வார்த்தை தான் அழகான பழம் தமிழ் சொல்

பரிசல்காரன் on March 27, 2012 at 11:02 AM said...

வாழ்த்துகள் அர்ஜூன்! தேங்க்ஸ் சகா!!!

பரிசல்காரன் on March 27, 2012 at 11:02 AM said...

//முத‌ன் முத‌லில் அர்ஜுனை பார்த்தேன். ச‌ட்டென‌ முடிவு செய்து ந‌டிக்கிறியா என்ற‌ போதே 440 வோல்ட் 3 ஃபேஸ் க‌ர‌ண்ட்டை போல‌ ஆமென்றான்.//

என்னமோ பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் ஆள் தேடினாப்ல என்னா பில்டப்பு!!

ப.செல்வக்குமார் on March 27, 2012 at 12:31 PM said...

அட்டகாசம் அண்ணா :)) அர்ஜூனுக்கும் வாழ்த்துகள். பதிவிறக்கி படிச்சுட்டு வரேன் :))))

அன்புடன் அருணா on March 27, 2012 at 6:06 PM said...

அட!பூங்கொத்து!

குழந்தபையன் on March 27, 2012 at 7:21 PM said...

சிலர் சொன்னால் தான் சில வார்த்தைகள் பெரிய அர்த்தம் தரும்.அது போல தான் கார்க்கியும்.. புதியவர்களை தூக்கி விட ஒரு மனசு வேண்டும் அது ரெண்டு மூனு மடங்கு அதிகமா இருக்கு..எதோ புகழ்ந்து தள்ரன்னு நினைக்க வேண்டாம்.


கார்க்கியின் எழுத்து தான் நான்,அர்ஜுன் எல்லாம் எழ்தவே காரணம்..


அர்ஜுன் நீ இன்னும் உயரம் வர உண்மையாக வாழ்த்தும் நண்பன்

KSGOA on March 29, 2012 at 6:16 AM said...

வாழ்த்துகள் அர்ஜீன்!!!GOவா 2 பார்ட்டுக்கு அப்புறம் காணோமே?

 

all rights reserved to www.karkibava.com