Mar 29, 2012

சிவ‌ன் செய்த‌ ச‌த்திய‌ம்

9 கருத்துக்குத்து

 

த‌ரை மோதி சாக‌ விரையும் ம‌ழைத்துளியாய்தான் வ‌ந்தேன். உன் மேல‌ விழுந்து உயிர்ப்பேன் என்று நினைக்க‌வேயில்லை

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

க‌ட‌க்கும் போது ட‌ப் என‌ வெடிக்கும் டிரான்ஸ்ஃபார்ம‌க‌ளை பார்க்கும் போது அவ‌ள் க‌ண்க‌ளை முத‌லில் ச‌ந்தித்த‌ த‌ருண‌ம் நிழ‌லாடி செல்கிற‌‌து

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

செவ்வாய் கிர‌க‌த்தில் ஏதோ வேலைக்கு விண்ண‌ப்பித்திருக்கும் பிர‌ம்ம‌ன் ரெஸ்யுமேவில் இவ‌ளை Achievement என்ற‌ ப‌குதியில் சேர்த்திருக்கிறானாம்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

உன் மீது ச‌த்திய‌ம் செய்து சிவ‌ன் ‌ பொய் சொல்ல‌வில்லை என‌ பார்வ‌தியிட‌ம் போராடிக் கொண்டிருக்கிறானாம்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

பேர‌ழ‌கிக‌ளை எல்லோரும் நிழ‌ற்ப‌ட‌ம் எடுக்க‌ நினைப்ப‌து சாதார‌ண‌ விஷ‌யம்தான்.உன் நிழ‌லை ப‌ட‌ம்பிடிக்க‌வே ச‌ண்டை போடுவதை என்ன‌வென்ப‌து!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

என் கூட கோவிலிலே தங்கிக்கிறியா என்று கேட்பதே வழக்கமாகிவிட்டது இந்த அம்மனுக்கு.அவள் கோவிலுக்கு வருவது என்னைப் பார்க்கவென்று சொல்ல வேண்டும்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

நீயென‌க்கு குட் நைட் சொல்லி செல்லும் நொடியில்தான் கோழி கூவித் தொலைக்கிற‌து

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்போதெல்லாம் பைக்கின் பின்னிருக்கையைத்தான் முத‌லில் க‌வ‌ன‌மாக‌ துடைத்து வைக்கிறேன்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அவ‌ள் பொலிவை உள்வாங்கி நான் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறேன். சிநேகிதியிட‌ம் அவ‌ள் என்ன‌ மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறாளோ???

Mar 26, 2012

பிரிய‌த்திற்குரிய‌ அர்ஜுன்..

21 கருத்துக்குத்து

 

image 

சில‌ரை சில‌ கார‌ணங்க‌ளால் பிடிக்கும். இன்னும் சில‌ரை அதே சில‌ கார‌ண‌ங்க‌ளால் பிடிக்காது. அர்ஜுனை என‌க்கு பிடிக்க‌ எந்த‌ கார‌ண‌மும் தேவைப்ப‌ட‌வில்லை. போல‌வே பிடிக்காம‌ல் போக‌வும் எந்த‌ கார‌ண‌மும் (இதுவ‌ரை) கிடைக்க‌வில்லை.

அர்ஜுன். ட்விட்ட‌ரில் @vedhalam. இதுதான் ட்விட்ட‌ரின் விதி. அவ‌ர் எவ்வ‌ள‌வுதான் சூப்ப‌ர் ஆளாக‌ இருந்தாலும் பேருக்கு முன்பு அட்டு போட்டுதான் சொல்ல‌‌ வேண்டியிருக்கும். அது கிட‌க்க‌ட்டும். அட்டு இல்லாத‌ அர்ஜுனைப் ப‌ற்றி சில‌ வார்த்தைக‌ள் சொல்லிவிடுகிறேன்.

ப‌திவுல‌க‌மும், ட்விட்ட‌ருல‌கமும் ச‌ற்று போர‌டிப்ப‌து போல் தோன்றிய‌ ஒரு ந‌ன்னாளில் குறும்ப‌ட‌ ப‌ணிக‌ளை முடுக்கி விட்டுக் கொண்டிருந்தேன். ஆதியும் இன்னும் சில‌ரும் உன் புட்டிக்க‌தைக‌ளையே எடுக்க‌லாமே என்ற‌ போது க‌தையில் ஏழுவுக்கு நான் தந்திருந்த‌ உருவ‌த்தை போல‌ ஏற‌த்தாழ‌(ம்ஹூம் ஏற‌ ம‌ட்டும் தான்) 3 ம‌ட‌ங்கு அதிக‌மாக‌ இருந்தேன் நான். அத‌னால் ஹீரோவை தேட‌னுமே என்றெண்ணிய‌ போதே அர்ஜுன் மின்னெல‌ன‌ க‌ண் முன் வ‌ந்தான். அந்த‌ வார‌ம்தான் ட்விட்ட‌ர்க‌ள் எல்லோரும் கிரிக்கெட் ஆட‌ ஆர‌ம்பித்திருந்தோம். அப்போது முத‌ன் முத‌லில் அர்ஜுனை பார்த்தேன். ச‌ட்டென‌ முடிவு செய்து ந‌டிக்கிறியா என்ற‌ போதே 440 வோல்ட் 3 ஃபேஸ் க‌ர‌ண்ட்டை போல‌ ஆமென்றான்.

அர்ஜுனோடு ப‌ட‌மெடுக்கிறோம் என்று சுற்றிய‌ நாட்க‌ள் அற்புத‌மான‌வை. என்ன‌ சொன்னாலும் முடியாது என்று ப‌தில் வ‌ராது அவ‌னிட‌ம். தாம்ப‌ர‌த்தில் இருப்ப‌வ‌னை காலை 7 ம‌ணிக்கு அண்ணா யுனிவ‌ர்சிட்டி வாடா என்றால் ஓக்கே குரு என்ப‌துதான் ப‌திலாக‌ இருக்கும். சொல்ல‌ ம‌ற‌ந்துவிட்டேன். இவ‌னிட‌ம் இருக்கும் சிற்சில‌ குறைபாடுக‌ளில் அவ‌ன் குருவும் ஒருவ‌ன்.

ஏழுவின் காத‌ல் ப‌ட‌த்தின் ஒரு ப‌குதி டாஸ்மாக்கில் எடுக்க‌ வேண்டியிருந்த‌து. ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் போலீஸ் தொல்லைதான். டாஸ்மாக்கிலோ குடிம‌க‌ன்க‌ளின் அன்பு தொல்லை. என்னையும் எடுங்க‌ண்ணா என்று ஆர‌ம்பிப்ப‌வ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ சுருதியேற்றி "எடுடா வெண்ணை" என்று முடிப்பார்க‌ள்.அத‌னால் கிட்ட‌த்த‌ட்ட‌ கேன்டிட் கேம‌ரா போல‌தான் எடுத்துக் கொண்டிருந்தோம்.அங்காடித் தெரு ப‌ட‌த்திற்கு வ‌ச‌ந்தபால‌னும் இதே போல் ஒரு ஸ்டேட்மென்ட் விட்ட‌தை எல்லாம் ம‌ற‌‌ந்திருப்பீர்க‌ள்.போக‌ட்டும். அர்ஜுனின் அறிமுக‌ காட்சி அது. ஏழுவின் க‌தைக‌ள் சீரிஸாக‌ எடுக்க‌ப்ப‌ட‌லாம். அத‌னால‌ இந்த‌ இன்ட்ரோ முக்கிய‌ம் என‌ ஆதி ஏற்றிவிட்ட‌தில் அர்ஜுன் ஒரு மாதிரிதான் ஆயிருந்தான். எங்க‌ள் குறும்ப‌ட‌ வ‌ர‌லாற்றில் 10க்கும் மேற்ப‌ட்ட‌ டேக் போன‌து அந்த‌ ஷாட் தான். போதும்டா ந‌ல்லா இருக்கு என்று மூட்டைக் க‌ட்டினால் "இல்ல‌ குரு. இன்னும் ஒரே ஒரு தட‌வ‌ ட்ரை ப‌ண்றேன்" என்றான். அப்ப‌டி அக்க‌றையோட‌ அவ‌ன் பேசிய‌ வ‌ச‌ன‌த்தை நினைத்தால்தால் விழுந்து புர‌ண்டு சிரிக்க‌ வைக்கிற‌து. என‌க்கு ஒரு பீரு வாட்ட‌ர் பாக்கெட் என்ற‌ குர‌ல் ஒலிக்க‌, கேம‌ரா அந்த‌ திசை நோக்கி திரும்பும். அப்போது சொல்வான் "ராவா அடிச்சா என் உட‌ம்பு தாங்காது ம‌ச்சி"

அர்ஜுனை அவ்வ‌ள‌வு எளிதில் எடை போட்டுவிட முடியாது. அவ‌ன் ட்வீட்டுக‌ளை ப‌டித்த‌வ‌ர்க‌ளுக்கு இது புரிய‌லாம். ப‌டிக்காத‌வ‌ர்க‌ள்? இந்த‌ ப‌திவே அத‌ற்காக‌த்தான். தன‌து ட்விட்டுக‌ளை தொகுத்து "இனிய‌வை நூற்றிநாற்ப‌து" என மின்புத்த‌காம‌க்கியிருக்கிறான். நோக்க‌ம் எதுவாயினும் ஒரு சுவார‌ஸ்ய‌ ப‌டைப்பாக‌ அது இருக்குமென்ப‌தில் அவ‌ன‌து வாச‌க‌னாக‌ என‌க்கு ந‌ன்கு தெரியும். உதார‌ண‌த்திற்கு ஒன்று பாருங்க‌ள்.

ஒவ்வொரு உரையாட‌லின் முடிவிலும் சொல்ல‌ப்ப‌டும் "அவ்வ‌ள‌வுதானா..னா..னா? என்ற்‌ வார்த்தையில் காத‌ல் காம‌மாக‌ ஆர‌ம்பிக்கிற‌து.

சாதார‌ண‌ விஷ‌ய‌ம் தான். ஆனால் அடுத்த‌வ‌னின் அனுப‌வ‌த்தில் இவ‌ன் பாட‌ம் க‌ற்கிறான். இவ‌ன் தேற‌ மாட்டானா என்ன‌?

அர்ஜுனுக்கு என் அன்பும் வாழ்த்துக‌ளும்.

To download this E –book : Click here

______________________

a5ebcbd55add9bd75b7bab47335973fc_view Parisal, vedhalam(front), Kullabuji & me

Arjun links:

Blog : www.sriarjunan.blogspot.in

Twitter id : @vedhalam

Mar 16, 2012

ஜாப்பாட்

6 கருத்துக்குத்து

20120316_123832 20120316_123841 20120316_123859  20120316_123853

ந‌ன்றி :புதிய‌ த‌லைமுறை

Mar 12, 2012

WATER - shortfilm

6 கருத்துக்குத்து

 

Mar 9, 2012

Jammy

8 கருத்துக்குத்து

 

   1996ல் லார்ட்ஸ் மைதான‌த்தில் ந‌டைபெற்ற‌ இந்திய‌ இங்கிலாந்து இடையேயான‌ டெஸ்ட் போட்டியில் ஒரு இளைஞ‌ன் ச‌த‌ம‌டித்தார். வ‌ழ‌க்க‌ம் போல் ந‌ம்ப‌ரில் அதிக‌ ந‌ம்பிக்கையுடைய‌ என்னைப் போன்ற‌ அன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் (அப்போது நான் மாண‌வ‌னாக்கும்) க‌ங்குலி ப‌ற்றியே அதிக‌ம் பேசினார்க‌ள். Mark My word. This boy will go places என்று சொல்லும் மொழி எம்.எஸ்.பாஸ்க‌ர் போன்ற‌ சில‌ரும், கிரிக்கெட்டை சுவாசிக்கும் இன்னும் ப‌ல‌ரும் யார் இந்த‌ பைய‌ன் என‌ அதே மேட்ச்சில் 95 ர‌ன் அடித்த‌வ‌ரை பற்றி பேச‌த் தொட‌ங்கினார்க‌ள். ராகுல் திராவிட் குறித்து இன்றும் ப‌ர‌வ‌லாக‌ பேச‌ப்ப‌டும் பேச்சு அன்றுதான் தொட‌ங்கிய‌து. முத‌ல் மேட்ச்சில் ந‌ட‌ந்த‌ அந்த‌ துர‌ததிர்ஷ்ட‌ ச‌ம்ப‌வ‌ம் பின்னாளில் திராவிட்டை விடாம‌ல் துர‌த்திய‌து. அதாவ‌து அவ‌ர் ந‌ன்றாக‌ ஆடும் போட்டியில் இன்னொருவ‌ர் அதிர‌டியாக‌ ஆடி நம் நினைவில் நின்றுவிடுவார்(Laxman 281 at kolkatta). ப‌ந்து வீச்சாள‌ரை க‌டுப்பேற்றி க‌டுப்பேற்றி தான் நினைத்த‌தை சாதிக்கும் திராவிட், ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிற்க‌வும் அதே பாணியைத்தான் க‌டைப்பிடித்தார். பொறுமையாக‌ நின்று ஆடி ஆடி THE WALL ஆனார்.

திராவிட்டுக்கும், விக்ர‌ம் ர‌த்தோருக்கும் இடையேதான் ஒரு பெரிய‌ போட்டி நில‌விய‌து. இருவ‌ரில் ஒருவ‌ர்தான் நிர‌ந்த‌ர‌ இட‌த்தை பிடிக்க‌ முடியெம்ன்ற‌ சூழ‌லில் திராவிட்டின் பொறுமையும், க‌வ‌ன‌மும் கைக்கொடுத்த‌து. ர‌த்தோர் ஆஃப் சைடு ப‌ந்தில் பாதிக்கும் மேற்ப‌ட்ட‌வ‌ற்றை அடித்துவிடுவார். ஏதேனும் ஒன்றில் அவுட்டாகியும் விடுவார். திராவிட் ஆடும்போது அதிக‌முறை வ‌ர்ண‌னையாள‌ர்க‌ளால் உச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ WELL LEFTதான் திராவிட்டை காப்பாற்றிய‌து. ஒரு ப‌ந்தை அடித்தால் அதை பாராட்டுவார்க‌ள். ஆனால் அடிக்காம‌ல் விட்ட‌தை பார்ட்டினார்க‌ள் என்றால் அது இவ‌ர‌து ஆட்ட‌ம்தான்.

valuable runs என்பார்க‌ள். அதாவ‌து எந்த‌ மாதிரியான‌ சூழ‌லில், யாருக்கு எதிராக‌ எந்த‌ பிட்ச்சில் அடிக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை வைத்து அந்த‌ ஓட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்ப‌ளிப்பார்க‌ள். அந்த‌ வ‌கையில் பார்த்தால் திராவிட் ச‌ச்சினை விட‌ அதிக‌ ர‌ன்க‌ள் அடித்தார் என்று சொல்ல‌லாம். இன்னும் எளிமையாக‌ சொன்னால் ச‌ச்சின் எப்போதாவ‌து அடிக்காம‌ல் போனால் இவ‌ர் அடித்துவிடுவார்.

முர‌ளித‌ர‌ன் போன்ற‌ அச‌காய‌ சுழ‌ற்சியாள‌ர்க‌ள் அவ்வ‌போது ஒரு மாதிரியான‌ ப‌ந்தை வீசுவார்க‌ள். முத‌ல் தெருவில் குத்தும் ப‌ந்து சுழ‌ன்று, மூணாவ‌து தெருவுக்கு போவ‌தை போல‌ வ‌ரும். கிட்ட‌த்த‌ட்ட‌ ஸ்ட‌ம்ப் வ‌ரைக்கும் அதை வ‌ர‌விட்டு, ப‌ந்தை க‌டைசி நேர‌த்தில் திருப்புவ‌து திராவிட்டின் மாஸ்ட‌ர்பீஸ். சில‌ அவ‌ச‌ர‌க்குடுக்கை ப‌வுல‌ர்க‌ள் திராவிட் போல்டே ஆன‌து போல் குதித்த‌ பின்னால் ப‌ந்து ப‌வுன்ட‌ரிக்கு பொட்ட‌லம் க‌ட்டி அனுப்ப‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌ந்திருக்கின்ற‌ன‌.

அவ‌ர் பேட்டிங்கில் அதிக‌ம் அடிக்கும் அதே ஸ்லிப் ஏரியாவில்தான் ஃபீல்டிங்கிலும் க‌ல‌க்கினார். விக்கெட் கீப்ப‌ர் அல்லாத‌ வீர‌ர்க‌ளில் அதிக‌ கேட்ச் பிடித்த‌து (டெஸ்ட்) திராவிட் தான்.

க‌ங்குலி, சேப்ப‌ல் அர‌சிய‌லில் தான் முத‌ன் முத‌லில் என‌க்கு திராவிட் மீது வ‌ருத்த‌ம் வ‌ந்த‌து. அது ஆதார‌ப்பூர்வ‌மான‌ செய்தி  இல்லையென்ற‌ போதும் க‌ங்குலி மீதான‌ க‌ண்மூடித்த‌ன‌மான‌ அபிமான‌த்தால் திராவிட் என‌க்கு பிடிக்காம‌ல் போன‌து. 2007 உல‌க‌ கோப்பை போட்டிக்கு பிற‌கு அது வ‌லுவான‌து. போதாக்குறைக்கு ச‌ச்சினை திராவிட் விசிறிக‌ள் ச‌ர‌மாரியாக‌ போட்டுத் தாக்க‌, கூட‌வே ஐ.பி.எல்லும் சேர்ந்துக் கொள்ள‌ கிரிக்கெட் என்ப‌தை தாண்டி சில‌ கார‌ணிக‌ளால் திராவிட்டுக்கு எதிர‌ணியில் செல்ல‌ வேண்டிய‌தான‌து. என்ன‌ ந‌ட‌ந்தாலும் இந்திய‌ அணி என்று வ‌ந்துவிட்டால் திராவிட் ஒரு த‌விர்க்க‌ முடியாத‌ வீர‌ர் என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. ஆனால் க‌ட‌ந்த‌ ஒன்றிர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ரின் ஆட்ட‌ம் சுமார்தான். இங்கிலாந்தில் ச‌த‌ம‌டித்தார் என்றாலும் எந்த‌ டெஸ்ட் போட்டியையும் ஜெயிக்க‌ வைக்க‌வோ அல்ல‌து ட்ரா செய்ய‌வோ இல்லை. அப்ப‌டி ஆகியிருந்தாலும் அது அவ‌ரின் ப‌ழைய‌ ஆட்ட‌ங்க‌ளை போல‌ ம‌ன‌தில் நிற்க‌வில்லை.

திராவிட், ச‌ச்சின், ல‌க்ஷ்ம‌ண் எல்லோரும் ஓய்வு பெற‌ வேண்டிய‌ நேர‌ம்தான். ஆனால் க‌ங்குலி இட‌த்திற்கே இப்போதுதான் கோலியை க‌ண்டுபிடித்திருக்கிறோம். அத‌ற்குள் திராவிட். இந்நிலையில் ச‌ச்சினும், ல‌க்ஷ்ம‌ணும் போய்விட்டால் அதோக‌திதான். அத‌ற்காக‌வாது ச‌ச்சினும், ல‌க்ஷ‌மணும் இன்னும் சில‌ நாட்க‌ள் விளையாட‌ வேண்டும்.

திராவிட் இந்த‌ தலைமுறை கிரிக்கெட்டின் த‌விர்க்க‌ முடியாத‌ பெய‌ர். நிச்ச‌ய‌ம் அவ‌ர‌து இழ‌ப்பு பெரிய‌து. 2011லும் லார்ட்ஸில் விளையாடினோம். எந்த‌ இள‌ம் வீர‌ரும் 95ம் அடிக்க‌வில்லை. லேட் க‌ட்டும் அடிக்க‌வில்லை.

Mar 8, 2012

GOவா - 2

14 கருத்துக்குத்து

 

Part - 1

  கோவாவில் இற‌ங்கி வெளிய‌ வந்‌த‌ 10 நிமிட‌த்தில் புரிந்துவிட்ட‌து என‌க்கு "பொட்டி தட்றவனுக்கு ஜாவா. ஃபிகர கட்றவனுக்குத்தான் கோவா" என்ப‌து. பாஸ்போர்ட் இல்லாம‌ல் கூட‌ சில‌ர் அங்கே சுற்றிக் கொண்டிருந்தார்க‌ள். ஆனால் ஜோடி இல்லாம‌ல் யாருமே இல்லை, எங்க‌ள் 17 பேர் கொண்ட‌ க‌ட்டிள‌ம் காளைய‌ர்க‌ள் க்ரூப்பை த‌விர‌. வெட்கி, நாணி, குறுகி போவ‌தெல்லாம் பிடிக்காது என்ப‌தால் நிமிர்ந்த‌ ந‌ன்ன‌டை, நேர்கொண்ட‌ பார்வையும்..அட‌டே!! அது ந‌மக்கில்லை..ஸ்ட்ரெயிட்டா பார்த்துக்கிட்டு ரிசார்ட்டுக்கு கிள‌‌ம்பினேன்.

கோவாவில் முத‌லில் நான் க‌வ‌னித்த‌ விஷ‌ய‌ம் சாலைக‌ள். எந்த‌வித‌ பேட்ச் போன்ற‌ ஒட்டு வேலைக‌ள் இல்லாம‌ல் ந‌ன்றாக‌வே இருக்கின்ற‌ன‌. ப‌ல‌ இட‌ங்க‌ளில் குறுக‌லான‌ சாலைக‌ள் என்றாலும் த‌ர‌த்தில் "ந‌ம்பிக் க‌ட்டும் டி.எம்.டி பார்" போல‌ சிற‌ந்து விள‌ங்குகின்ற‌ன‌. நாங்க‌ள் போன‌து தெற்கு கோவ‌வில் இருக்கும் உத்தோர்டா பீச். தெற்கு கோவாவில் இருக்கும் க‌ட‌ற்க‌ரைக‌ள் எல்லாமே White sand beach என்கிறார்க‌ள். பொண்ணு , ம‌ண்ணு எல்லாமே சும்மா வெள்ளை வெளேர் என்று இருப்ப‌தை சொல்லியே ஆக‌ வேண்டும். ஆனால் ம‌ண்ணை ம‌ட்டுமே ந‌ம்மால் தொட‌ முடிகிற‌து என்ப‌து அழ‌கிய‌, அறிவான‌, அம்ச‌மான‌ ஒரு வாலிப‌னின் தேவைய‌ற்ற‌ புல‌ம்ப‌ல் என்ப‌தை ம‌ட்டும் அறிவீராக‌.

 20120304_072856

இங்கே இன்னொரு பிர‌ச்சினை. நாங்க‌ள் சென்ற‌ போது கோவாவில் தேர்த‌ல் கால‌ம். கோவாவில் காங்கிர‌ஸ்தான் எப்போதும் ஜெயிக்குமென‌ எல்லாம் தெரிந்த‌ ஏகாம்ப‌ர‌ம் வ‌ழ‌க்க‌ம் போல் வாய் திற‌ந்தார். ஆனால் பாஜாக‌வின் தேர்த‌ல் விள‌ம்ப‌ர‌த்தில் ஒரு க‌லைஞ‌ர்த்த‌ன‌த்தை பார்த்தேன். அதாவ‌து ஹ‌வுஸ் ஒய்ஃப்க‌ளுக்கு மாத‌ம் 1000ரூ உத‌விப்ப‌ண‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுமென‌ சொல்லியிருந்தார்க‌ள். அப்போதே பாஜ‌க‌ ஜெயிச்சிடுமென‌ நான் நினைத்த‌ற்கு ஆதார‌ம் ஏதுமில்லை. ஆனால் கிறுஸ்துவ‌ர்க‌ள் அதிக‌ம் வாழும் கோவாவில் பாஜக‌ எப்ப‌டி என்ற‌ அர‌சிய‌ல் டைன‌மிக்ஸ் ப‌ற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.

வ‌ழ‌க்க‌மாக‌ கோவாவில் இர‌வு 3 ம‌ணி வ‌ரையும், ம‌றுநாள் அதிகாலை 3.01 முத‌லும் ச‌ர‌க்கு ச‌ல்லிசாக‌ கிடைக்குமாம். தேர்த‌ல் பிர‌ச்சார‌ நாட்க‌ளில் இர‌வு 11 ம‌ணிக்கு மூட‌ச் சொல்லியிருந்தார்க‌ளாம். நாங்க‌ள் சென்ற‌ அன்று 24 ம‌ணி நேர‌மும் இழுத்து மூட‌ சொல்லிவிட்டார்க‌ள். "அதெல்லாம் கிடைக்கும்.ச‌ர‌க்கில்லாத‌ கோவா, நெருப்பில்லாத‌ லாவா" என்று‌ அலுவ‌ல‌க டீ.ஆர் சொன்ன‌தை ந‌ம்பாம‌ல் ந‌ம்ம‌ ஊரில் இருந்து 5,6 முழுமைக‌ள் (அதாங்க‌ FULL) எடுத்து சென்றிருந்தேன். ஆனால் பிய‌ர் கிடைக்க‌வில்லை. நாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ரிசார்ட்டில் "ரூமுக்கு கொடுத்த‌ணுப்புறோம் சார். ஆனால் 225 ரூபாய்"‌ என்றார்க‌ள். எல்லோரையும் ரெடியாக‌ சொல்லிவிட்டு ல‌க்கேஜை வைத்த‌‌ கையோட‌ அருகிலிருந்த‌ பீச்சுக்கு வைகோ அ‌ல்லது அஜித்தை மேற்கொண்டேன்.

(SHACKS)

கோவா பீச்சில் SHACKS மிக‌வும் பிர‌சித்த‌ம். பெருசா ஒண்ணுமில்ல‌ங்க‌. பீச்சுல‌ குடிசை போட்டு அங்கேயே குடிக்க‌லாம்..குளிக்க‌லாம்..குளிக்க‌லாம்..குடிக்க‌லாம். க‌டைசியா சாப்பிட‌லாம். விலையும் ம‌லிவுதான். இதைத்தான் கோவாவின் குடிசைத்தொழில் என்கிறார்க‌ள். அது போல‌ ஒரு Shack பார்த்த‌வுட‌ன் ந‌ம‌க்கு தெரிந்த‌ ஏக் கோவா மேன் ஏக் கார்க்கி ச்ச‌ல்த்தா ஹை ஹிந்தியை எடுத்து விட்டேன்.கோவாவில் ப‌ல‌ மொழிக‌ள் பேசுகிறார்க‌ள். கொங்க‌னியும், தேவ‌ங்கிரியும் அதிகார‌ப்பூர்வ‌ மொழிக‌ள். ம‌ராத்தியையும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்கிற‌து கோவாவின் ச‌ட்ட‌ம். போர்த்துகீசிய‌ மொழிதான் சுத‌ந்திர‌த்திற்கு முன்பு அர‌சு மொழியாக‌ இருந்திருக்கிற‌து. இப்போது அம்மொழியை பேசுப‌வ‌ர்க‌ள் சொற்ப‌மான‌ எண்ணிக்கையிலே இருக்கிறார்க‌ள். இதையெல்லாம் விட‌ எங்கு போனாலும் இந்தி பேச‌ தெரிந்தால் போதும். என் இந்தி க‌தைக்கு வ‌ருவோம். அந்த‌ குடிசைக்கார‌ரிட‌ம் "நாங்க‌ மொத்த‌‌ம் 17 பேரு. நாங்க‌ எங்க‌ போனாலும் ச‌ர‌க்கோட‌த்தான் போவோம். ஆனா பீரு ம‌ட்டும் இப்ப‌ இல்லை. உங்க‌க்கிட்ட‌ கிடைக்குமா" என்றேன் விறைப்பாக‌. ப‌டைய‌ப்பா சிவாஜி க‌ண‌க்காக‌ ஒரு மாதிரியான‌ எக்ஸ்பிர‌ஷ‌னோடு சுத்தி முத்தி பார்த்த‌வ‌ர் ர‌ஜினி இங்கிலிஷை எடுத்துவிட்டார் “I give you beer. One bottle 100Rs. But no talk to hotel about beer. OK?”. “I talk. you talk. why hotel middle middle talk” என்றேன். ஏதோ புரிந்த‌து போல‌ ஆயிர‌ம் ரூபாய்க்கு 8 பிய‌ர் பாட்டில் த‌ந்தார். 200 ருபாய் காலி பாட்டில் த‌ந்தால் திருப்பி த‌ருவாராம். அவருக்கு காலி பாட்டில் தேவையில்லை. அவை ஹோட்ட‌லுக்குள் த‌ங்கி விட‌க்கூடாது என்ப‌தே சூட்ச‌ம‌ம்.

  இன்னொரு விஷ‌ய‌த்தையும் சொல்லிவிடுகிறேன். நான் தான் ஆர்க‌னைச‌ர். அத‌னால் இந்த‌ ஆல்க‌ஹால் ச‌மாச்சார‌ம் எல்லாமே எங்க‌ டீமுக்கு. நான் ஒரு டீட்டோட்ட‌ல‌ர் என்ப‌தை......

(Royal Orchid Spa resort, Where we stayed)

கோவாவில் இருக்கும் போது முட்டிக்கு கீழே உடைய‌ணிவ‌து அப‌த்த‌ம். முக்கால்வாசி இருக்கும் ஒரு முக்கா பேண்ட்டையும், ஒரு வெள்ளை டீ ச‌ட்டையும் அணிந்துக் கொண்டு ம‌ற்ற‌ 16 பேரை ஒரு வ‌ழியாக‌ ஒன்றிணைத்து பீச் ஸ்போர்ட்ஸ் விளையாட‌ கிளம்‌பினோம். (16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்திருக்கியாடா கார்க்கி என்று பின்னூட்ட‌ம் இடுவ‌து த‌டை செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து). Parasailing, Jetski, Banana ride, Dolphin ride போன்ற‌ அதிர‌டி ஆட்ட‌ங்க‌ளை ப‌ற்றி பார்க்குமுன் ஒரு விஷ‌ய‌ம். கோவாவில் கிட்ட‌த்த‌ட்ட‌ 30 பீச் இருக்கின்ற‌ன‌வாம். நீங்க‌ள் நினைப்ப‌து போல் கோவா துள்ளாத‌ ம‌ன‌மும் துள்ளும் சிம்ர‌ன் மாதிரி அழ‌கான‌துதான். ஆனால் அது ஜாக்பாட் சிம்ர‌ன் போல‌வும் என்ப‌தை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வும். அதாவ‌து ஒரு முறை கோவாவை சுற்றி பார்க்க‌வே 7,8 நாட்க‌ள் ஆகும்.

- (கோவோம்)

Mar 5, 2012

GOவா - 1

18 கருத்துக்குத்து

 

நீலநிற ஹவாய் செருப்பு | முட்டிக்கு சற்று கீழே வரை நீளும்  கட்டம் போட்ட கால்சட்டை| கையில்லாத தொளதொள பனியன்| புஜத்தில் டிராகுலா அல்லது சிக்கலான  ஓவியத்தின் டாட்டூ |  தலையில் ஒரு அதி பயங்கர நிறத்தில் தொப்பி போன்ற வஸ்து | முடிந்தால் காதில் ஒரு ஹெட்ஃபோன் |புருவத்தில் ஒரு சின்ன வளையம் | இத்தனை இத்யாதிகளுடன் உங்கள் ஊர்த் தெருவில் எந்த உறுத்தலும் இல்லாமல் நடந்து செல்ல உங்களால் முடியுமா? அதுவும் ஒரு துள்ளிசை கேட்கும்போது சில வினாடிகள் நின்று ஒரு குட்டி ஆட்டம் போட்டுவிட்டு நடையை தொடர முடியுமா?? நிச்சயம் முடியும் என்றால் நீங்கள் கோவாவை சேர்ந்தவர் என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும்.

சென்ற வாரம் வெள்ளி – ஞாயிறு கோவாவில் கழிக்க தீர்மானமானது. அலுவலக மக்கள் 17 பேரோடு கோவாவை நோக்கிய விமானப் பயணம் வெள்ளி காலை 12 மணிக்கு தொடங்கியது. சென்னை விமான நிலையத்தை நான் அடைந்த போது 11 மணி இருக்கும். தற்போது சென்னை ஏர்ப்போர்ட்டில் விரிவாக்கப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பெங்களூரு, ஹைதை, தில்லி என எல்லா ஊர் விமான நிலையங்களும் புதிப்பிக்கப் பட்டுவிட்டன. சென்னை மட்டும்தான் பாக்கி. ஸ்ரீபெரும்புதூர் பக்கம் என முடிவான திட்டம் வழக்கம் போல அதிரடி அரசியல் ஆட்டங்களுக்கு பின் மீனம்பாக்கத்திலே விரிவாக்கப்பட்டு வருகிறது. சற்று தாமதமானாலும் ஊரின் எல்லைக்குள்ளே விமான நிலையம் இருப்பது சென்னையில் மட்டுமே என பெருமைப் பட்டுக்கொள்ளலாம். சென்னை – பெங்களூரு 30 நிமிடத்தில் செல்வோம் என பைலட் சொன்னார். ஆனால் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும் என்பது வேறு கதை. நாம் 11 மணி கதைக்கு வருவோம்.

பகல் ஒருபோதும் அழகானதில்லை. குறைந்தபட்சம் சென்னையில் அது அழகானதில்லை.  சில்லென்ற மூடுபனி, நிலாமழை, பிறப்பிடத்தை ஊடுருவ முடியாத ஒரு வித வாசனை என சென்னையின் இரவு சிருங்காரமானது. இரவு, அமைதியினூடே அழகாய்தான் எப்போதும் இருக்கிறது. பகல் அவ்வளவு அழகில்லை. எங்கும் மனித குரல்கள், வாகன இரைச்சல், செல்போன் அழைப்பு ஒலிகள் என அது சத்தங்களால் மட்டுமே ஆனது. நான் விமான நிலையத்தை அந்த சத்தங்களுக்கிடையேதான் சென்றடைந்தேன்.

விமான பயணமும் என் மனதுக்கு அவ்வளவு நெருக்கமானதில்லை. காற்றில் பயணம் என்று சொல்லிக் கொண்டாலும் நமக்கும் காற்றிற்கும் காசு வெட்டி முறித்துப் போட்ட உறவுதான். தவழும் மேகங்களை கண்டு பரவசமடைய ஏதுமிருப்பதாக எனக்கு தெரியவில்லை. கடலுக்கு மேல் பறந்தாலாவது சிலிர்க்கலாம்.சென்னை கோவா மார்க்கத்தில் ஏரிகளே வறண்டு போய்த்தான் கிடக்கின்றன.

  ரயில் பயணம் எனக்கு விருப்பமானது. அதுவும் இரவு நேர ரயில் பயணம் ரம்மியமானது. தாண்டி செல்லும் காற்றில் முகம் புதைக்கலாம். காதில் அது சொல்லும் ரகசியம் கேட்கலாம். கைகளை நீட்டி மயிர்க்கூச்செரியலாம். தலை முடியை கோதி செல்லும் காற்றோடு சிநேகம் வளர்க்கலாம். காதல் கொள்ளலாம். கை குலுக்கலாம். இரவின் அமைதியை கிழித்து செல்லும் தடக் தடக் சத்தம் எந்த வகையிலும் இடைஞ்சலை ஏற்படுத்துவதில்லை. மனித நடமாட்டமற்ற பாதை பயத்தை தருவதில்லை. எல்லா மலையடிவாரத்திலும் என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதற்கென்றே அழகிய குடிசை ஒன்று நிச்சயம் இருந்துவிடுகிறது. யார் இப்படி தனியே ஒதுங்கி வாழ்வது என்பது மட்டும் சிதம்பர ரகசியம். எதிர்பாரா தருணங்களில் கூடிக் குறையும் ரயிலின் வேகம் சொல்லிச் செல்லும் பாடங்கள் ஏராளம். எதிர்புறத்தில் வரும் இன்னொரு ரயில் ஆனந்தத்தை கூட்டிவிடுகிறது. என்னைப் போலவே உறக்கமில்லா இன்னொருவன் படிக்கட்டுகளில் அமர்ந்தபடி சென்று கொண்டிருப்பான். என்னை நானே தரிசிக்கும் ஜென் நிலை என அதை சொல்வேன்.  ஊர் எல்லையை தொட்டவுடன் எந்த வீட்டில் சீரியல் பல்பு எரிகிறது என்று பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இழுத்து மூடப்பட்டிருக்கும் கடைகளில் கிடைக்க ஏதுமில்லை என்பதே ஒரு திருப்தியை தந்துவிடுகிறது. மீண்டும் ஊர் எல்லை.. ஆளில்லா ஒரு ரயில்வே கேட். மீண்டும் மலை.காடுகள். ரயில் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசியில் மிஞ்சும் அதே அளவு இடம்தான் ரயிலிலும் கிடைக்கிறது. எல்லையற்ற நிசப்தத்தை ஒரு சத்தத்தினூடே கொடுக்க கடலுக்குப் பின் ரயிலால் மட்டுமே முடியும்.  இரவில் ரயில் பயணம் கிட்டத்தட்ட ஒரு போதைதான்.

பள்ளிக்காலத்தில் பசுமாடு தன் வரலாறு கூறுதல் படித்து சென்றால், ஆலமரம் தன் வரலாறு கூறுதல் எழுத சொல்வார்கள். படித்ததை எழுதிவிட்டு இப்படிப்பட்ட பசுமாடானாது ஆலமரத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று முடிப்பதுண்டு. அது போல, இப்படிப்பட்ட ரயில் பயணத்தை விட்டுவிட்டு ஆகாய மார்க்கமாகவே கோவாவை சென்றடைந்தோம் என்று அறிவீராக. பிற்பகல் 2.30க்கு எங்கள் விமானம் கோவாவை அடைந்த போது . கோவா ஒரு exaggerated place என்ற என் எண்ணம் சுக்கு நூறாக போகிறது என்ற பிரக்ஞையில்லாமல் நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

(தொடரும்)

Mar 1, 2012

இந்த‌ வார‌ம் "என்" விக‌ட‌ன்

34 கருத்துக்குத்து

 

blogger _karki lay.indd blogger _karki lay.indd

விக‌ட‌ன் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவருக்கும் ந‌ன்றி!!!

 

all rights reserved to www.karkibava.com