Feb 24, 2012

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ள் - encounter


 

இன்னொரு என்க‌வுண்ட்ட‌ர் ந‌ட‌ந்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌ம் போல் ம‌க்க‌ள் 2 நாட்க‌ள் நேர‌ம் ஒதுக்கியிருக்கிறார்க‌ள் இது குறித்து பேசுவ‌த‌ற்கு. அலுவ‌ல‌க‌ம்,இணைய‌ம்,வீடு என‌ எங்கும் இதேதான். அதுவும் வேள‌ச்சேரியில்(நான் வ‌சிக்குமிட‌ம்) ந‌ட‌ந்திருப்ப‌தால் இன்னும் அதிக‌ ச‌த்த‌ம் காதில் விழுகிற‌து. என்ன‌ள‌வில் ச‌ந்தேக‌த்திற்மிட‌மில்லாம‌ல் இது ஒரு Fabricated encounter  தான். ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு அருகில் க‌டை வைத்திருக்கும் ந‌ப‌ர் சொன்ன‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் அதிர்ச்சியைத்தான் த‌ருகின்ற‌ன‌, அதன் ந‌ம்ப‌த்த‌ன்மை குறித்த‌ ச‌ந்தேக‌ம் இருந்த‌ போதிலும்.

அன்று காலையே போலீஸ் சாதார‌ண‌ விசார‌னைக்காக‌ ம‌ஃப்ட்டியில் வ‌ந்திருக்கிறார்க‌ள். ம‌றைத்து வைத்திருந்த‌ மைக்ரோ கேம‌ராக்க‌ள் மூல‌ம் அந்த‌ வீட்டில் இருந்த‌வ‌ர்க‌ளை ப‌ட‌ம் பிடித்திருக்கிறார்க‌ள். பின் அதை வ‌ங்கியில் ப‌திவான‌ ஒளித்துண்டுக‌ளோடு ஒப்பிட்டு பார்த்து ஊர்ஜித‌ம் செய்திருக்கிறார்க‌ள். பின், இர‌வு 10 ம‌ணி வாக்கில் 200 பூட்டுக்க‌ளோடு வ‌ந்த‌ போலீசார் அக்க‌ம்ப்ப‌க்க‌த்தில் இருந்த‌ எல்லா வீடுக‌ளையும் பூட்டியிருக்கிறார்க‌ள். அத‌ன் பின்ன‌ரே "ச‌ம்ப‌வ‌ம்" ந‌டைபெற்றிருக்கிற‌து. இந்த‌ ம‌கா கொள்ளைய‌ர்க‌ளிட‌ம் துப்பாக்கி இருந்த‌தும், அவ‌ர்க‌ள் சுடுவார்க‌ள் என்ப‌தையும் முன்ன‌ரே க‌ணித்து பொதும‌க்க‌ளுக்கு இடையூறு ஆகாம‌ல் பார்த்துக் கொண்ட‌ காவ‌ல்துறையை பாராட்டாம‌ல் எப்ப‌டி இருக்க‌ முடியும்?

அந்த‌ இட‌த்தை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இன்னொரு ச‌ந்தேக‌ம் எழ‌க்கூடும். அந்த‌ சின்ன‌ வீட்டில் இருக்கும் 5 ம‌கா மெகா தீவிர‌வாதிகளில் ஒருவ‌ரை கூட‌ உயிரோடு பிடிக்க‌முடிய‌வில்லையாம் ந‌ம் காவ‌ல்துறையால்.பொதும‌க்க‌ளுக்கு ஆப‌த்து என்ற‌வுட‌ன் உள்ளிருக்கும் 5 பேரையும் சுட்டுக் கொண்றுவிட்டார்களாம். அவ‌ர்க‌ள் குறித்து த‌க‌வ‌ல் கிடைத்த‌வுட‌ன் விரைந்த‌ போலீசார் 1.30க்கு ச‌ம்ப‌வ‌ இட‌த்தை அடைந்தார்க‌ளாம். த‌க‌வ‌ல் சொன்ன‌வ‌ர் 12 ம‌ணிக்கு சொன்னாரா அல்ல‌து த‌னிப்ப‌டை தில்லியில் இருந்து விரைந்து வ‌ந்த‌தா என்ப‌து தெரிய‌வில்லை. அதே போல், 1.30க்கு கூட‌ காலில் ஷூவுட‌ன் ஒட‌ த‌யாராக‌ இருந்திருக்கிறான் "தீவிர‌வாதி". ஒரு வேளை கேப்ட‌ன் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் காவ‌ல்துறையிலே ஒரு க‌ருப்பு ஆடு அவ‌ர்க‌ளுக்கு த‌க‌வ‌ல் சொல்லியிருக்கக்கூடும்.

pic.twitter.com/4rVaqD9X

இது ஜோடிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ம் என்றாலும் ம‌க்க‌ள் க‌வ‌லைப்ப‌ட‌ த‌யாரில்லை. அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை சாதார‌ண‌ பெரிய‌வ‌ர் ஒருவ‌ரை ஈவு இர‌க்க‌மின்றி அடிக்கும் ர‌வுடிக‌ள் ஒடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ட்டுமே. அத‌ற்கு இவ‌ர்க‌ளை ஏன் கொல்ல‌ வேண்டும் என்றால் ப‌ய‌ம் வரும் என்கிறார்க‌ள். இதை எதிர்பார்த்துதானே அர‌சு இய‌ந்திர‌ம் எப்போதும் இது போன்ற‌ என்க‌வுன்ட்ட‌ரை கையிலெடுக்கிற‌து? இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறுவும் ய‌தார்த்த‌ம் அதி ப‌ய‌ங்க‌ர‌மான‌து. குற்ற‌வாளிக‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்கிற‌ நிலைமாறி த‌ண்டிக்க‌ப்ப‌டும் எல்லோருமே குற்ற‌வாளிக‌ள் என்ற‌ ம‌ன‌நிலைக்கு ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். எத்த‌னை குரூர‌மான‌து இது? உன் வீட்டுக்காசு போயிருந்தா தெரியும் என்ப‌வ‌ர்க‌ள் "இது போன்ற‌ போலி என்க்க‌வுண்ட்ட‌ரில் ந‌ம்ம‌ தெரிஞ்ச‌வ‌ங்க‌ போனா" என்ற‌ கேள்வியை எதிர்க்கொள்ள‌ முற்றிலும் த‌யாராக‌ இல்லை.

அதே நேர‌ம், இப்போது அதிக‌ம் பேச‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்க‌வுன்ட்ட‌ர் ம‌ட்டும‌ல்ல‌. எங்கேயும், எப்போதும் இந்த‌ Migrantsக‌ளால் பிர‌ச்சினைக‌ள் வெடித்திருக்கின்ற‌ன‌. அதுவும் இந்தியா போன்ற‌ ஒரு Unorganized நாட்டில் இத‌ன் விளைவுக‌ள் மோச‌மாக‌ இருக்கும். வேள‌ச்சேரியில் ம‌ட்டும் 40000 பேர் இருப்ப‌தாக‌ சொல்கிறார்க‌ள். சின்ன‌ சின்ன‌ குற்ற‌ங்க‌ள் பெருகிய‌தை நானே உண‌ர்ந்திருக்கிறேன். (உ‍_‍ம்) Sump cover காணாம‌ல் போன‌து, வ‌ண்டியில் ஹெல்மெட்க‌ள், ஷூக்க‌ள் திருட‌ப்ப‌ட்ட‌து போன்ற‌‌வ‌ற்றை சொல்ல‌லாம். இதை பீகார் ந‌ப‌ர்க‌ள் திருடுவ‌தை க‌ண்க‌ண்ட‌ சாட்சிக‌ளே உண்டு. இந்த‌ சின்ன‌ குற்ற‌ங்க‌ள் பெரிய‌ அள‌வில் நிச்ச‌ய‌ம் வ‌லுப்பெறும். சென்னையில் துப்பாக்கிக‌ள் அவ்வ‌ள‌வு எளிதில் கிடைப்ப‌தில்லை. இவ‌ர்க‌ளிட‌ம் 5 துப்பாக்கிக‌ள் இருந்த‌து நிஜ‌மென்றால், நினைக்க‌வே ப‌ய‌மாயிருக்கிற‌து. எத்த‌னை பேரிட‌ம் இது மாதிரி இருக்குமோ?? வேலை செய்ய‌ யாரும் வ‌ர‌க்கூடாது என்று சொல்வ‌து ச‌ரியாகாது. ஆனால் organize செய்ய‌ வேண்டும். இல்லை, வ‌ர‌லாறு மீண்டும் ரிப்பீட் ஆகி ரிவிட் அடிக்கும்.

கோவை என்க‌வுன்ட்டர் ந‌ட‌ந்த‌ போது ம‌க்க‌ள் ஆத‌ரித்‌து ம‌கிழ்ந்த‌தை த‌வ‌றென்று நினைக்காம‌ல் இந்த‌ப் ப‌திவை எழுதினேன். இப்போது நினைத்தால் எழுதியிருக்க‌க்கூடாது என்று தோன்றுகிற‌து. எப்பொருட்டும் இப்பூமியில் ஒருவ‌ர் வாழ்வ‌த‌ற்கான‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்ற‌ எண்ண‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரிக்கிற‌து. ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையும், என்க‌வுன்ட்ட‌ரும் சில‌ருக்கு க‌ட்டாய‌ம் தேவை என்ற என் எண்ண‌ம், அது எத்த‌னை பேருக்கும் த‌வ‌றாக‌ கொடுக்க‌ப்ப‌டுகிற‌து என்று நினைக்கும் புள்ளியில் த‌க‌ர்ந்து போகிற‌து.

19 கருத்துக்குத்து:

ராம்குமார் - அமுதன் on February 24, 2012 at 11:01 AM said...

// எப்பொருட்டும் இப்பூமியில் ஒருவ‌ர் வாழ்வ‌த‌ற்கான‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்ற‌ எண்ண‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரிக்கிற‌து. //
மிகவும் சரியான வார்த்தைகள் கார்க்கி. எப்படிப்பார்த்தாலும் கொள்ளைக்கு கொலை தண்டணையாகுமா?

எனது பார்வையயை நேற்றே இங்கு பதிவு செய்திருந்தேன்.

http://nellainanban.blogspot.in/2012/02/blog-post.html

moe on February 24, 2012 at 11:05 AM said...

Forgot, if read it or saw it in a movie...when a big shot loses valuables, police guys pool money to replace it. To avoid the escalation.

It seems totally made up. For 13 lakhs, we want to kill 5 people? Why would some one shoot for 13 lakhs? This should be stopped.

மணிஜி...... on February 24, 2012 at 11:22 AM said...

//. இவ‌ர்க‌ளிட‌ம் 5 துப்பாக்கிக‌ள் இருந்த‌து நிஜ‌மென்றால், நினைக்க‌வே ப‌ய‌மாயிருக்கிற‌து. எத்த‌னை பேரிட‌ம் இது மாதிரி இருக்குமோ?//

கார்க்கி...நேர்மையான கொலைகள்தான்..நியாயப்படுத்திக்கொண்டு போக வேண்டியதுதான்..

பாண்டியன் on February 24, 2012 at 11:23 AM said...

கொள்ளைக்கு கொலை சரி இல்லை என்றால் எது சரியான தண்டனையாக இருக்கும் ?

சாகசன் on February 24, 2012 at 11:49 AM said...

ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையும், என்க‌வுன்ட்ட‌ரும் சில‌ருக்கு க‌ட்டாய‌ம் தேவை என்ற என் எண்ண‌ம், அது எத்த‌னை பேருக்கும் த‌வ‌றாக‌ கொடுக்க‌ப்ப‌டுகிற‌து //

இவை சரியான வார்த்தைகள் தான் , ஆனால் யாரும் இதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை . இன்னும் 2 நாளில் மக்களே இந்த விஷயத்தை ஒதுக்கிவிட்டு போய் விடுவார்கள் . இப்படி மக்கள் இருப்பதும் காவல்துறைக்கு சாதகமாக இருப்பதால் தான் இதை போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன . வருத்தபட வேண்டியது நாம் அல்ல , மக்களே குரு .

யுவகிருஷ்ணா on February 24, 2012 at 12:07 PM said...

Good post Karki

Anonymous said...

instant death sentence for bank robbers...
What else for corrupted politicians....

kailash on February 24, 2012 at 1:03 PM said...
This comment has been removed by the author.
kailash on February 24, 2012 at 1:06 PM said...

Its not about 13 or 30 lakhs , Two banks were robbed in the city during day time , 10 crores were looted from a jewellery shop and an attempt to rob a bank in madurai , Police were clueless for a long time and pressured from all the corners ( Rulers , Opposition , Media and public ) also they dont want similar incidents to happen and involve most of their workforce .Suddenly they get info. about the robbers and solution for all the above said issues , encounter them .
If they weren't encountered it would have given confidence to many youths that if they plan well and rob no one can catch them .
Also many are thinking that these problems are committed only by migrants and not by locals . Our locals are not holy cows .

தராசு on February 24, 2012 at 1:12 PM said...

மணி அண்ணே,

எதை நியாயப்படுத்துவது,

காக்கி சட்டை போட்டுட்டா எவனை வேண்ணாலும் போட்டுத் தள்ளலாமுங்கரதையா???

இப்ப விசாரணை நடத்த உத்தர விட்டிருக்காங்களே, இந்த விசாரணை முடிவுல, போலீசார் தங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்கள் என அரசாங்கத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அறிக்கை சமர்பிக்க போறாங்களே அதை நியாயப் படுத்தறதா???

அட... வாங்கண்ணே... போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கலாம்.

RAVI on February 24, 2012 at 1:19 PM said...

நடந்தது அராஜகம் மட்டுமே. ஒரு மாபெரும் சக்திவாய்ந்த கூட்டம் கூண்டிற்குள் சிக்கிய எலிகளை வேட்டையாடி இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் ஒரு தலைவரைக் கைது செய்யும் போது கொண்டுபோன கேமெராவை இப்ப ஏன் கொண்டு போகல..?

அதிலை on February 24, 2012 at 3:39 PM said...

இதுவே ஐந்து தமிழர்களை பீகாரில் சுட்டிருந்தால் இந்நேரம் இங்கே கொடி பிடித்து போராடியிருப்பார்கள்...கண்டிப்பாக இதற்கு பின்னால் கொடிய உண்மைகள் மறைந்திருக்கின்றன..... நம் மக்களுக்கு ஏன் இந்த கொலைவெறி பிடிக்கிறது ???

கார்க்கி on February 24, 2012 at 4:42 PM said...

கைலாஷ்,

திடீர்ன்னு ஏதோ த‌க‌வ‌ல் கிடைச்ச‌துன்னு சொன்னீங்க‌ளே!! என்ன‌ த‌க‌வ‌ல்? 5 பேரும் குற்ற‌வாளிக‌ள் என்ற‌ ஆத‌ர‌மா??? ஏன் அதை வெளியிட‌ல‌. அப்புற‌ம், ஒரு விஷ‌ய‌த்த‌ நீங்க‌ ஒத்துக்கிட்டீங்க‌. அதாவ‌து இது நிஜ‌மான‌ என்க‌வுன்ட்ட‌ர் இல்லை. ஒரு தீர்வு வேண்டி ஜோடிக்க‌ப்ப‌ட்ட‌ நாட‌க‌ம் என்ப‌தை. அதுவ‌ரைக்கும் ச‌ந்தோஷ‌ம். ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி, அவ‌னுங்க‌ சுட்டானுங்க‌. வேற‌ வ‌ழியில்லாம‌ போலீஸ் சுட்டுச்சுன்னு ந‌ம்ப‌ல‌.


இனி, இந்தியா ஜ‌ன‌நாய‌க‌ நாடு என்று சொல்ல வேண்டாம்.

இந்திய‌ன் பீன‌ல் கோடை எரித்து விட‌லாம். என்ன‌ த‌ப்பு செய்தாலும் த‌க்காளி சுட்டேபுட‌லாம்.

ஒவ்வொரு குற்ற‌ம்முமாக‌ எடுத்துக் கொண்டு அதில் ஒருவ‌ரை மட்டும் போட்டுத் த‌ள்ள‌லாம். குற்றங்க‌ள் காணாம‌ல் போய்விடும்.

Shanmuganathan on February 24, 2012 at 10:03 PM said...

Well done saga, payangara matured eluthereenga...

கும்க்கி கும்க்கி on February 25, 2012 at 9:06 AM said...

பொதுப்பார்வையில் தவறாக பார்க்கப்படும் சில நிகழ்வுகள் எப்போதும் கிரிமினல்களுடன் இருக்க நேரும் போலீஸாரின் கோணம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும்...

இந்த குற்றத்தினை பொறுத்த வரை என்கவுண்ட்டர் சரியே என தோன்றுகிறது ப்ரதர்..

மாநிலமெங்கும் அல்லது சென்னை முழுக்கவுமே உள்ள வங்கி கிளைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களை 24மணி நேரமும் பாதுகாப்பதென்பது போலீஸால் இயலாத காரியம் என்பது நமக்கே தெரியும்..

குற்றங்கள் நிகழு முன்பாகவே இப்படி ஒரு கடும் தண்டனை உண்டென உணர்த்தினால், அந்த எண்ணமே எழாமல், துணியாமல் இருப்பார்கள் என்கிற யோசனை கூட இதில் கலந்திருக்கலாம்..

மேலும் வேறு மாநிலத்தவரை கைது செய்து, இங்கிருந்து ஒரு படை அங்கு போய், அவர்களின் ஆதி அந்தமெல்லாம் துப்பறிந்து, கோர்ட்டில் அவர்களை பாதுகாப்பாக நிறுத்தி, அந்த மாநில அரசும் முதல்வரும் இதில் தலையிட்டு, வாத பிரதிவாதங்கள், சாட்சிகள் விசாரணை, மேல் முறையீடு, இத்யாதி ..இத்யாதி என அதற்குள் ஏழெட்டு வங்கி கொள்ளைகள் நடந்து முடிந்திருக்கும்....

ஒரு குற்றத்தின் முக்கியத்துவத்தினையும், மேலும் அது தொடராவண்ணம் ஒரு அழுத்தத்தினை உருவாக்கவும் இப்படியான தண்டனைகள் தேவைதான் என்பது என் நிலைப்பாடு.

Rajesh V Ravanappan on February 26, 2012 at 1:51 PM said...

ENCOUNTER - ஒரு சமுக அவலம் !!

காவல்துறைக்கு சமுகத்தின் மேல் உள்ள அலட்ச்சிய போக்கே இந்த ENCOUNTER . ENCOUNTER மேல் தேவை இல்லாத SENTIMENT சாயம் பூசப்படுகிறது. கோவையில் நடந்த ENCOUNTER குழந்தைகள் SENTIMENT ஆல் கேள்வி கேட்காமலேயே விடப்பட்டது, இப்போது வீரம் என்கிறார்கள். உருவாக்கப்பட்ட சூழ்நிலையை, தற்செயலாக நடந்தாக காரணம் காட்டுகிறார்கள்.


ENCOUNTER ருக்கு என்ன அவசியம்??? 2 ஜி ஸ்டைலில் கேட்க வேண்டுமானால், இந்த ENCOUNTER நடந்திராவிட்டால் நாட்டுக்கு, சமுகத்திற்கு ஏற்ப்படக்கூடிய இழப்பு என்ன ?? அல்லது இழப்பு எவ்வளவு ?? வெறும் 30 லட்சம் ..


ENCOUNTER - ஒரு சமுக அவலம் !!


கடமையை மட்டுமே செய்வதே சாதனையாக பார்க்கும் சமுக ஊடகங்கள்,,, அதனால் தான் முறையாக TAX கட்டுபவர்களுக்கு கூட REWARD குடுக்கிறார்கள்.

கண்ணியமாக நடந்துகொள்ள சட்டமன்றத்தை மட்டும் தேர்ந்தெடுத்துள்ள அரசியல்வாதிகள் உள்ள நாடு.

கொள்ளை அடிப்பதையும் அரசியல்வாதி உரிமை ஆக்கிவிட்டார்கள்.


அரசியல்வாதி மட்டுமே தவறாக நடக்க வேண்டும், நீதிமன்றங்கள் எல்லாம் அவர்கள் குறைகளை தீர்க்கவே!!! - சாமானியன் தவறு செய்தால் மரண தண்டனை ... - இப்படி தான் எண்ண தோன்றுகிறது

அலாய்ஸ் on February 26, 2012 at 4:37 PM said...

குற்றம் எதுவானாலும் அதற்கு சரியான தீர்வு மரணம் என்று சட்டம் நினைக்குமானால்
இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகை கணிசமாக குறைந்துவிடும்
களவாடப்பட்ட பணம் மிகப்பெரிய தொகைதான் என்றாலும் சட்டம் குற்றத்திற்கு கொடுக்கும்
தண்டனை மரணம் என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. இதைவிட அதிக அளவில் நாள்தோறும் கொள்ளை அடித்துகொண்டிருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிக்கு மட்டும் விசாரணை கமிஷன் வைத்துக்கொண்டிருக்கிறோம் அவர்களை இன்னும் வேறுமாதிரியான கொள்ளைகளுக்கு உக்கப்படுதிக் கொண்டிருக்கிறோம். தண்டனை என்று வரும்போது இட மாற்றம் / ஆட்சிமாற்றம் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கிறது.

இது என்ன நியாயம்

குற்றம் தவிர்க்க முடியும். அதற்காக மட்டுமே இன்னும் நாம் நீதிமன்றங்களின் படிஎறிக்கொன்டிருக்கிறோம்.

தீவிரவாதி என்று தெரிந்தும் நிறைய பணம் செலவழித்து இன்னும் ஏன் பலபேரை உயிரோடு வைத்திருக்கிறோம் சுட்டுக் கொன்றுபோட வேண்டியதுதானே.

ஏனோ இந்த என்கவுண்டர் மனதுக்குள் உறுத்துகிறது.


--
A.S.J.Aloysius M.A., (Eco) M.A.,(Journalism)

தனா on February 27, 2012 at 3:24 AM said...

யாழ்பாணத்தில் புலிகள் என்கவுண்டர் செய்து, பாதிக்க பட்ட குடும்பங்கள் தேசிய உணர்வை மறந்து புலிகள் ஒழிய விரும்பியதை சிறு வயதில் கண்டுள்ளேன்..அந்த வெறுப்பு அவர்களின் அடுத்த தலைமுறை வரை தொடர்வதையும் காண்கிறேன்.
மரணம் தண்டனை ஆக முடியாது என்ற எண்ணம் என் உள்ளும் வளர்கிறது, நல்ல பதிவு கார்க்கி.

Kalai on March 5, 2012 at 10:00 AM said...

Problems due to immigration (within in or out of the country) are universal. Cities or towns in the US bordering Mexico, it is a common problem (although without them US cities will stink as Mexicans handle the cleaning jobs). On the other hand, I know some honest and self respecting Mexicans too. Therefore we cannot say a particular ethnic immigrant group in general is problematic.

 

all rights reserved to www.karkibava.com