Feb 2, 2012

CAPTAIN


 

க‌டைசி ப‌திவு எழுதிய‌ ஒரே நாளில் கேப்ட‌ன் அதிர‌டி ஆக்ஷ‌னை தொட‌ங்கிவிட்டார். ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொட‌ருக்கு முன்பாக‌ எழுத‌ வேண்டும் என‌ என்ணினாலும் இப்ப‌டியெல்லாம் செய்வார் என‌ எதிர்பார்க்க‌வேயில்லை. ட்விட்ட‌ர், ஆஃபீஸ் , ந‌ண்ப‌ர்க‌ள் என‌ பலரிட‌த்திலும் இந்த‌ குறிப்பிட்ட‌ பிர‌ச்சினையை பொறுத்த‌வ‌ரை கேப்ட‌னுக்கு ஆத‌ர‌வான‌ குர‌லே கேட்கிற‌து.

பிர‌ச்சினை என்னவென்று இன்னும் பார்க்காத‌வ‌ர்க‌ள் இந்த‌ வீடியோவில் பாருங்க‌.

 

 இப்போதைக்கு கேப்ட‌ன் ப‌ற்றிய‌ ட்வீட்ஸை ம‌ட்டும் ப‌திவு செய்து கொள்கிறேன்

ஹீரோவின் பார்வை அதிகம் யார்ப்பக்கம் இருக்கோ அவர்தான் மெயின் வில்லன்.திமுக சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அகில இந்திய நாடாளும் திமுக ஆகலாம்

நில அபகரிப்பு வழக்க கூட கேப்டன் மேல போட முடியாது. மண்டபத்த தானமா கொடுத்த தலைவண்டா அவரு

ஜெ.வின் முகத்தில் தெரிந்த கோவம், வெறுப்பு.. இவையெல்லாம் என்னவென்று ஆன்றோர்கள் அறிவார்கள் :)

அய்யோ..கேப்ட‌ன் நாக்க‌ ம‌டிச்சா என்ன‌ அர்த்த‌ம் சின்ன‌ க‌வுண்ட‌ர்ல‌ சொல்ல‌லையே!!! துண்டோட‌ நிறுத்துட்டியே உத‌ய‌கொமாரு

விலையேத்தினாலும் ஜெயிப்போம்டான்னு ஆத்தா சொல்லும்போது சங்கரன்கோவில் ஊர்க்காரன நினைச்சு பார்த்தேன்.. விடுரா முத்து... தாலிய மீட்டுடலாம்

இதே நாக்கை திமுக ஆட்சியல மடிச்சிருந்தா வரலாற்றுல எவன் எவன் எல்லாம் நாக்கை மடிச்சான்னு வெவரமாச்சும் தாத்தா மூலமா கிடைச்சிருக்கும்,

எம்புட்டு அழகா மூக்குத்தி முத்தழகுன்னு பொம்பளைங்கல பார்த்து பாடுவரு? இப்படி கோவபப்டுத்தி பார்க்கறீங்களே ஆத்தா!! #கேப்டன்

எம்புட்டு அழகா மூக்குத்தி முத்தழகுன்னு பொம்பளைங்கல பார்த்து பாடுவரு? இப்படி கோவபப்டுத்தி பார்க்கறீங்களே ஆத்தா!! #கேப்டன்

லியாகத் அலிகான் மட்டும் இருந்திருக்கணும்..

ஜெயிச்ச பிறகு ஆடுறதெல்லாம் இருக்கட்டும். பிரச்சாரத்தின் போதே அதிமுக கொடியை இறக்க சொன்ன கேப்டன் பெரியாளு தானே?

கேப்ட‌னின் அதிர‌டியை முறிய‌டிக்கும் நோக்கில் திமுக‌ பொதுக்குழுவில் வாழக்காய்க்கு ப‌தில் மிள‌காய் ப‌ஜ்ஜி த‌ர‌ப்ப‌ட‌லாம்.

ஏ.சி ப‌ன்னீர்செல்வ‌ம் ச‌ஸ்பென்ட் ஆகி திரும்ப‌ சேர்ந்த‌ப்ப‌ ந‌ட‌ந்த‌ க‌தையெல்லாம் அம்மாவுக்கு தெரிய‌ல‌. #captain

விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரத்தின் உச்சம்- ஸ்டாலின் // #அண்ணே காபி சாப்ட்டிங‌க்ளாண்ணே? அண்ணே டிஃப‌ன் சாப்ட்டிங்க‌ளாண்ணே

க‌ர‌ண்ட் இருந்தாலே கேப்ட‌ன‌ ஒன்ணும் ப‌ண்ண‌ முடியாது.இதுல‌ அதுவும் இல்லாம‌ அம்மா என்ன‌ ப‌ண்ணும்? #ந‌ர‌சிம்மா

வெள்ளைச்சாமின்னா முக்கா பேண்ட்ட‌ போட்டுட்டு ராப்பாட்டு பாடுற‌வ‌ன் நினைச்சிங்க‌ளா? இப்ப‌ எங்காளு ர‌ம‌ணாடா !! #கேப்ட‌ன்

ச‌ஸ்பென்ட் எல்லாம் எங்க‌ கேப்ட‌னுக்கு ச‌க்க‌ரை பொங்க‌ல். ட்யூட்டி செய்ய‌ போலீஸ் உடுப்பு எதுக்குடா????

8 கருத்துக்குத்து:

Anonymous said...

கேப்டன் கிட்டே டெர்ரர் ஃபேஸ் இருக்கோ இல்லையோ...அட்லீஸ்ட் இருக்கிறமாதிரியாவுது காட்டிட்டார்.ரெண்டு பக்கமும் இது இடைத்தேர்தலுக்கான திட்டமிடா ஸ்டன்ட்தான் என்றாலும்.திமுக ஹீரோவும் இல்லை வில்லனும் இல்லை என்றால் என்னதான் இடம் என்பதை வடிவேலுவிடம்தான் கேக்கணும் போல.

எப்படி இருந்த அரவிந்தசாமி...

தியானம் - தியான் - ச்சான் - ஸென் - போதிதர்மா

"ராஜா" on February 2, 2012 at 1:14 PM said...

எனக்கென்னவோ கேப்டனையும் , அம்மாவையும் பாக்கும்போது மங்காத்தா
படம்தான் ஞாபகம் வருது.. நீங்கவேணா பாருங்க அம்மா கிளைமாக்ஸ்ல மை டியர் கேப்டன்னு சொல்லி முடிக்குதா இல்லையான்னு....

கார்க்கி on February 2, 2012 at 1:56 PM said...

ராஜா.. உங்க‌ளுக்கு எத‌ பார்த்தாலும் ம‌ங்காத்தா ஞாப‌க‌ம்தானே வ‌ரும்?? :)))

இருக்க‌லாம்.. அர‌சிய‌லில் எல்லாம் ஜ‌க‌ஜ‌ம்

"ராஜா" on February 2, 2012 at 2:13 PM said...

// இருக்க‌லாம்.. அர‌சிய‌லில் எல்லாம் ஜ‌க‌ஜ‌ம்

இதற்காகத்தான் எனக்கு இதை படித்தவுடன் மங்காத்தா ஞாபகம் வந்தது.... அழகிரி , ஸ்டாலின் , தயாநிதி , கனிமொழி இந்த நாலு பேரும் அந்த படத்துல வர்ற நாலு மொக்கை பசங்க கேரக்டரோட சரியா ஸிங் ஆவுறதும் ஒரு காரணம்...

குடந்தை அன்புமணி on February 2, 2012 at 2:52 PM said...

//விலையேத்தினாலும் ஜெயிப்போம்டான்னு ஆத்தா சொல்லும்போது சங்கரன்கோவில் ஊர்க்காரன நினைச்சு பார்த்தேன்.. விடுரா முத்து... தாலிய மீட்டுடலாம்//

தமிழ்நாட்டு மக்களை நல்லாத்தான் புரிஞ்சிவச்சிருக்காங்க...

தர்ஷன் on February 3, 2012 at 12:21 AM said...

தீர்க்கதரிசி சகா நீங்க

நடராஜன் on February 3, 2012 at 3:28 AM said...

ஹி ஹி! அண்ணே டிபன் சாப்பிட்டிங்களா! காபி சாப்பிட்டிங்களா! செம!

இரசிகை on February 11, 2012 at 3:38 PM said...

ஜெயிச்ச பிறகு ஆடுறதெல்லாம் இருக்கட்டும். பிரச்சாரத்தின் போதே அதிமுக கொடியை இறக்க சொன்ன கேப்டன் பெரியாளு தானே?

first time ithai tv la paakum pothey thonuchu..

 

all rights reserved to www.karkibava.com