Feb 22, 2012

சொதப்புவதற்கேனும் காதலிங்க பாஸ்


 

அலுவலக நண்பர் ஜவ்வாது ஜானி என்பவருடன் காதலில் சொதப்புவது எப்படி போக வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு இன்று தள்ளப்பட்டேன். அவருடன் ரொமாண்டிக் படத்துக்கு போவதும் ஒரு சொதப்பல்தானே என்று செல்ஃப் கண்டோலன்ஸ் செய்துகொண்டு  என் பைக்கில் நானும் அவர் பைக்கில் அவரும் சத்யம் நோக்கி பறந்தோம். வண்டியை பார்க் செய்துவிட்டு டிக்கெட் கவுண்ட்டர் அருகில் அவருக்காக காத்திருந்தேன்.  சத்யம் பக்கம் அவர் வந்ததே இல்லை என்பது பைக்கிலே தியேட்டருக்கு முன்பக்கம் வந்ததில் இருந்து தெரிந்தது. அது ஒன்வே. மீண்டும் 2 கிமீ சுத்தி பின்பக்கம் போனால்தான் வண்டியை பார்க் செய்ய முடியும். ஆனால் சரியாக 2 நிமிடத்தில் படம் ஆரம்பித்துவிடும். அடுத்த சொதப்பல். நல்ல வேளை. 70களில் நான்  பிறக்காததால் இவருடன் ரோசாப்பு ரவிக்கைக்காரி பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போனதை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

திரைப்படங்கள் பற்றி நான் எழுதும் எதையும் நான் விமர்சனமாக முன்வைப்பதில்லை. ஒரே ஒரு முறை , அதுவும் நம்ம ஊர் தியேட்டரில் , ஜவ்வாது ஜானி போன்றவர்களோடு பார்த்துவிட்டு, ஒரு படத்தை முழுமையாக உள்வாங்கி விமர்சிக்க முடியாதென்பது என் கருத்து.அதனால்தான் இதற்கு லேபிள் கூட ”திரைப்படங்கள் சார்ந்தவை” என்றே வைத்திருக்கிறேன், முடிந்தவரை எல்லா பதிவுகளிலும் படம் பற்றி மட்டுமில்லாமல் அந்தப் படம் பார்க்கப் போன என் அனுபவங்களையும் சேர்த்து எழுதுகிறேன்.

ஒரு சினிமாவில், முன்பின் தெரியாத ஒருவருக்கு நேரும் துக்கமோ, சந்தோஷமோ நம்மையும் பாதித்தால் அந்தப் படம் நல்ல படம். இவ்வளவுதான் நல்ல சினிமாவுக்கான என் அளவுகோல். எந்திரனில் ரோபோ உருவாகும் போது எனக்கு எந்த உணர்வும் வரவில்லை. ஆனால் அந்த உயிரில்லாத ரோபோ கடைசிக் காட்சியில் தனது ஒவ்வொரு பாகத்தையும் கழட்டும்போது ஏதோ செய்தது, அதற்கு உயிரில்லை என்று தெரிந்தும் கூட. ஆக, எனக்கு எந்திரன் நல்ல படம். கில்லியில் விஜய் கடைசிக் காட்சியில் அடிப்பட்டு கீழே விழுந்த போது எழுந்து முத்துப்பாண்டிய அடிடா என்று கத்த தோன்றியது. ஆக, எனக்கு கில்லி நல்ல படம். சுறாவில் கடைசிக் காட்சியில் வில்லன் விஜயை கட்டிப் போட்ட போது நைட் அம்மா சாப்பிட என்ன செஞ்சிருப்பாங்க என்று தோன்றியது. ஆக, சுறா எனக்கு மொக்கைப் படம். காதலில் சொதப்புவது எப்படி ஒரு வித்தியாசமான மனநிலையை தந்தது.

பாருவும், அருணும் கல்லூரி காதலர்கள். இருவருக்கிடையேயும் ஒரு கண்ணாடி டம்ளர் ஃபைட் என்பதாக படம் தொடங்குகிறது. அவர்கள் யார், என்ன சண்டை,அவர்களின் குடும்ப நிலவரம் என்ன, கண்ணாடி கிளாஸ் உடைந்ததா என்பதை எல்லாம் சித்தார்த் நமக்கு ராஜா சின்ன ரோஜா ரஜினி குழந்தைகளுக்கு கதை சொல்வதைப் போல சொல்கிறார். குறும்படமாய் வெளியான அதே மேட்டரை முழு நீளப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. கதை என்ற வஸ்துவை ஊறுகாய் போல ஓரமாக வைத்துவிட்டு இரண்டு டீன் ஏஜ் காதலர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்ய சண்டைகளை அன்லிமிட்டெட் மீல்ஸாக பரிமாறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், சித்தார்த்தும்  “எக்ஸ்ட்ரா” கேர் எடுத்துக் கொண்டதில் இவர் வேலை சுலபமாகிவிட்டது

“கேமரா என்று ஒன்று இருப்பது பாத்திரங்களுக்கு தெரியாது என்பதுதானே சினிமாவின் முக்கிய விதி” என்று சமீபத்தில்தான் ட்விட்டரில் TPKD_ கேட்டார். அதை முதல் காட்சியில் வந்த கண்னாடி கிளாஸை போல சுக்கு நூறாக உடைத்துவிட்டார் இயக்குனர். சித்தார்த் ஒவ்வ்வொரு காட்சியிலும் நம்மைப் பார்த்து, அதாவது கேமரா பார்த்து கதை சொல்கிறார். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்று கதறும் அகிரா குரேசேவா விசிறிகளுக்கு இந்தப் படம் என்ன மாதிரியான அதிர்ச்சியை தரப்போகிறது என்று தெரியவில்லை. ஒரு விஷயம் சொல்கிறேன். சுவாரஸ்யமா சொல்றேனான்னு பாரு என்று சொல்லி அதில் அசத்தியும் இருக்கிறார் பாலாஜி. ஆங்காங்கே இந்த கதை சொல்லும் டெக்னிக் பேக் ஃபையர் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் குறைந்த பட்ஜெட்டில், செமத்தியான ஒளிப்பதிவில், நிறைவான நடிப்பில் ஒரு சுவையான படம் தந்ததற்கும், திறமைக்கு இந்தக் காலத்தில் முன்பை விட அதிகமான கதவுகள் உண்டு என்ற நம்பிக்கை விதைத்ததற்கும் மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றை தரலாம்.

அதே ஆவின் பால் தான் என்றாலும் அம்மா போடும் காஃபிக்கும், அக்கா போடும் காஃபிக்கும் வித்தியாசம் இருக்குமில்லையா? அதே போல் தான் அமலா பாலும். முப்பொழுதும் உன் கற்பனைகளில் வேலைக்காரி போல் இருந்தவர் இதில் நிஜமாகவே கல்லூரி பெண்ணாக தெரிகிறார். அதில் அவர் பெயர் சாரு. இதில் பாரு. அடுத்த படத்தில் என்ன பெயர் இருக்கும் என்றெண்ணும் போதே சிலிர்க்கிறது. எனக்கு சித்தார்த்தை விட அவரது குண்டு நண்பரை விட விக்னேஷ் என்ற கேரக்டரில் வந்தவரை பிடித்தது. கருப்புதான் ஆனா களையான முகம். பக்காவான எக்ஸ்பிரஷன்ஸ் என கவர்கிறார்.

ஆண் பெண் உறவில், அதுவும் கல்லூரி காதலர்களுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளை இவ்வளவு டீட்டெயிலாக, அதுவும் காமெடியாக யாரும் சொன்னதில்லை. நிச்சயம் இயக்குனர் சரக்கு உள்ள பார்ட்டிதான் என்பதை வசனங்களும், டீட்டெயிலிங்கும் சொல்கின்றன. வாழ்த்துகள் பாலாஜி.தமனின் இசையில் பார்வதி பாடல் மட்டுமே ஓக்கே. இப்படி வர்ற நல்ல பால் எல்லாம் டிஃபென்ஸ் வச்சா எப்படி பாஸ்? ஆனால் பின்னணி இசையில் எந்த குறையும் வைக்கவில்லை தமன்.

மற்றபடி, தனித்தனியே சொல்ல ஏதுமில்லை. ஒரு வித்தியாசமான நிறைவான அனுபவம்.

12 கருத்துக்குத்து:

Shanmugan Murugavel on February 22, 2012 at 12:14 AM said...

அருமையான உணர்வு :) அடுத்த படத்தில் அமலாபால் பெயர் மோரு or பீரு இல்ல நம்ம பீனு/ரேணு?

நடராஜன் on February 22, 2012 at 12:23 AM said...

அதையேத் தான் நாங்களும் சொல்றோம்! மொக்கை போட்டு சொதப்பவாது தொடர்ந்து எழுதுங்க! :)

amas on February 22, 2012 at 12:33 AM said...

I have known Arjun, who is a part of this movie since he was a child. (my nneighbour). Hope the movie brings him acclaim:) "அம்மா போடற காபிக்கும், அக்கா போடற காபிக்கும்" அட அட என்ன அருமையான விளக்கம்! இருங்க பெண்டாட்டி வரட்டம், அப்புறம் மூணு காபியை compare பண்னனம் :)
amas32

சுசி on February 22, 2012 at 1:11 AM said...

கலக்ஸ் கார்க்கி :)

ravishankar on February 22, 2012 at 1:21 AM said...

The way you narrated is excellent. It was interesting rather than watching the movie. Karki is karki

சாகசன் on February 22, 2012 at 6:11 AM said...

குரு , நீங்க வச்சுருக்குற தலைப்ப பாத்தாக்கா கண்டிப்பா காதல் பண்ணி சொதப்புன்னு சொல்லுற மாதிரியே இருக்குது குரு , நம்ம பசங்க எல்லாம் பாவம் குரு .........

இப்படிக்கு , சிஷ்யன்

siva sankar on February 22, 2012 at 7:34 AM said...

:)

தட்சிணாமூர்த்தி on February 22, 2012 at 11:40 AM said...

அதிக நண்பர்கள் , அடிக்கடி கேட்கும் கேள்வி:

இந்த கார்க்கி ஏன்பா இப்பலாம் போஸ்ட் போடுறதே இல்லை..

மொக்கை விஷயத்தையாவது எழுதுங்கன்னு சொல்லமாட்டேன் கார்க்கி, ஏன்னா நாம போடுறது எல்லாமே மொக்கைதான்.….ஹி ஹி.…

வி மிஸ் யூ இணைய தளபதி கார்க்கி.….

தட்சிணாமூர்த்தி on February 22, 2012 at 11:43 AM said...

எப்பவுமே கார்க்கி பதிவில் ஏதாச்சும் சம்திங் ஸ்பெஷல் இருக்கும்.….

இதில்

ஆவின் பால், அம்மா போடுற காபி, அக்கா போடுற காபி.…ஸோ க்யூட் கார்க்கி.….

Sen22 on February 22, 2012 at 11:56 AM said...

Kalakkal Karki...

அமலா பாலுக்கு அடுத்த பிலிம்-ல என்ன பேரு வைப்பாங்கன்னு நானும் யோசனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் .... :)))

Thirunaresh on February 22, 2012 at 7:40 PM said...

"சாருவும்", அருணும் கல்லூரி காதலர்கள் apadinu start panni erukinga. but entha padathulaa heroin peru "paru" thane...
ethooo enala mudinjathu....

Anonymous said...

Gud review....

 

all rights reserved to www.karkibava.com