Feb 20, 2012

எப்பொழுதும் என் மொக்கைக‌ள்


 

"ராமோட‌ நீ இருக்கிற‌து உங்க‌ம்மா க‌ருப்பைல‌ இருக்கிற‌துக்கு ச‌ம‌ம்"

ட்ரெயில‌ரில் இந்த‌ வ‌ன‌ச‌த்தை கேட்ட‌ போதே தெரியும், இவ‌னுங்க‌ ந‌ம்ம‌ உயிர்ல‌ கை வைக்காம‌ விட‌ மாட்டானுங்க‌. ஆனா ந‌ம்ம‌ பைய‌ன் ஒருவ‌ன் ந‌ல்லா இருக்குன்னு சொன்ன‌த‌ ந‌ம்பி த‌ன்ன‌ந்த‌னியா இந்த‌ பட‌த்துக்கு போயிட்டேன். உள்ள‌ வ‌ர்ற‌வ‌ன் எல்லாம் டிக்கெட்டோடு ஒரு ஜோடியும் கூட்டிட்டு வ‌ந்திருந்தான்‌. வேல‌ன்ட்டைன்ஸ் டேக்கு ரிலிஸான‌ ப‌ட‌த்துக்கு த‌னியா போன‌ என்னைத்தான் அவ‌னுங்க‌ முறைக்க‌ணும்.நாம‌ புல‌ம்புற‌து நியாய‌ம் இல்ல‌த்தான். ப‌ட‌த்த‌ ப‌த்தி பேசுவோம் வாங்க‌. ட்ரெயிலிரிலே 100 நாள் ஓடிய‌ ப‌ட‌ங்க‌ளின் வ‌ரிசையில் ச‌மீப‌த்தில் சேர்ந்த‌ “ஒரு க‌ல் ஒரு க‌ண்ணாடி “ முன்னோட்ட‌த்துட‌ன் ந‌ம‌து ராகு கால‌ம் தொட‌ங்கிய‌து.

அத‌ர்வா, அந்நிய‌ன் (a) க‌ந்த‌சாமிக்கிட்ட‌ வாங்கின‌ காஸ்ட்யூமோடு ரெண்டு பேர‌ போட்டுத் த‌ள்ள‌ தேவ‌த‌ன்* மாதிரி வான‌த்துல‌ இருந்து ப‌ற‌ந்து வ‌ர்றாரு. அவ‌னுங்க‌ (கொடுத்து வ‌ச்ச‌வ‌னுங்க‌) எஸ்கேப் ஆகிட‌றாங்க‌. அங்க‌ போடுறாரு ந‌ம்ம‌ டைர‌க்ட‌ரு டைட்டில‌. டைட்டில் முடிஞ்ச‌வுட‌னே பார்த்தா ந‌ல்ல‌ புள்ளையாட்டும் ஒரு ஐடி க‌ம்பெனி உள்ள‌ ந‌ட‌ந்து வ‌ர்றாரு அத‌ர்வா. எதுக்குன்னே தெரியாம‌ சிரிச்சிக்கிட்டே ந‌ட‌ந்து வ‌ர்ற‌வ‌ருக்கு எதிரில் நைட் ஸ்டே ப‌ண்ணிட்டு ஒரு ஜோடி கிள‌ம்ப‌றாங்க‌. ஆனா நைட்டு ஃபுல்லா ஒரு பாஸ்வேர்ட் தெரியாத‌தால் அவ‌ங்க‌ வேலை, ஐ மீன் ஆஃபீஸ் வேலை எதுவும் செய்ய‌லை என்ப‌தை இய‌க்குன‌ர் நிறுவுகிறார். அட‌! இது ப‌ட‌த்துல‌ எங்க‌ன‌யாச்சும் டிவிஸ்ட்டா இருக்கும்ன்னு நான் புதுசா வாங்கின‌ சேம்ச‌ங் எஸ்2ல‌ குறிச்சு வ‌ச்சுக்கிட்டேன். ஆனா ம‌ர‌ம் என்ப‌து ம‌ர‌மா ம‌ட்டுமே எவ‌ன் க‌ண்ணுக்கு தெரியுதோ அவ‌ன் தான் நிஜ‌மான‌ ஞானி என்ப‌தை இய‌க்குன‌ர் அழுத்த‌மாக‌ ப‌திகிறார். ஆம். அந்த‌ காட்சி அவ‌ர்க‌ள் ஏதோ ஜ‌ல்சா செஞ்சிட்டு போறாங்க‌ என்ற‌ கிள‌ர்ச்சிக்காக‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கிறார் ஞானி.  ஐ மீன் எல்ராட் குமார்.

ஐடி க‌ம்பெனி. ஸ்மார்ட்டான‌ ஹீரோ. ஆனா ஹீரோயின் அங்கில்ல‌. அப்ப‌டின்னா என்ன‌ இருக்கும்? அதே அதே. குட்டை பாவாடை பெண்ணொருத்தி டேக் மீ ராம் என‌ காஃபி ஷாப்பில் கேட்காம‌லே ந‌ம்ம‌ டேபிளுக்கு வரும் குக்கீஸ‌ போல‌ கேட்குது. க‌ர‌ண்ட் க‌ட்டினால‌ மேல் ப‌ட்ட‌ன‌ திற‌ந்து விட்ட‌ செக‌ன்ட் ஹீரோயின‌ பார்த்து ஹீரோ சொல்கிறார் "ந‌த்திங் இன்டெரெஸ்டிங். ஆஃப் ப‌ண்ணு". இந்த‌ இட‌த்தில்தான் என‌க்கு ஒளிப்ப‌திவாள‌ர் மீதான‌ முத‌ல் விம‌ர்ச‌ன‌ம் எழுகிற‌து. ச‌ப்ஜெக்ட்டை பார்வையாள‌ன் உண‌ர்வ‌த‌ற்கு இன்ச‌ர்ட் என்று அப்பொருளின் க்ளோஸ் அப் காட்சி ஒன்று வைக்க‌ வேண்டும் என்ப‌து விதியாச்சே!. ஏன் செய்ய‌வில்லை? பின், என்னை ஏன்டா உன‌க்கு பிடிக்க‌வில்லை என்ற‌ கேள்விக்கு ஹீரோ சொல்கிறார் "நீயும் ஒரு பொண்ணுன்ற‌த‌ ம‌ற‌ந்துட்டு அவ‌ கூட‌ 5 மினிட்ஸ் பேசி பாரு.U will jus fall in love with her ". ஜிவ்வென்று ஏறுகிற‌து ந‌ம‌க்கு. அந்த‌ பார்ட்டியை காண‌ சென்னையில் இருந்து ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று பாட்டுப் பாடிக் கொண்டே குறுக்கு வ‌ழியில் பெங்க‌ளூருக்கு செல்கிறார். ஆனா பாருங்க‌ பாட்டிலே அந்த‌ அழ‌கு பாட்டியான‌, ச்சே பார்ட்டியான‌ அம‌லா பால‌ காட்டிடுறாங்க‌. ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏதோ ஒரு தேவ‌தை ரேஞ்சுக்கு நினைச்சிட்டு இருந்த‌தால‌ பாட்டுல‌ வ‌ர்றது அம‌லா பால்ன்னு தெரியாம‌ வாங்கிட்டு வ‌ந்த‌ பாப்கார்ன‌ தூக்கிப் போடாம‌ வாயில‌ போட்டுக்குறாங்க‌.

பெங்க‌ளூரில் சாரு என்கிற‌ அம‌லா பால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு அத‌ர்வாவுக்காக‌ காத்திருக்கிறார். என்னை வீட்டு விட்டு வெளிய‌ கூட்டிட்டு போயேன்டா என்றால் முடியாதென்கிறார் ஹீரோ. வேணும்ன்னா என்னை க‌ட்டிப்பிடி.கூட்டிட்டு போறேன் என்றவுட‌ன் அம‌லா பால் விர‌லை நீட்டுகிறார். அதெல்லாம் இல்லை. ஆள்காட்டி விரல்தான். உட‌னே அத‌ர்வாவும் அழ‌காக‌ விர‌லால் விர‌லை தழுவுகிறார். க‌ட்டிக் கூட‌ பிடிக்காம‌ல் ஒரே ஃப்ளாட்டில் இருக்கிறார்க‌ளே!! இது ஏதோ ந‌ல்ல‌ ப‌ட‌ம் என்று எழுந்து உட்கார்ந்தால், அடுத்த‌ சீனிலே நெத்தில‌ கிஸ் அடிச்சு, அழுத்த‌மா க‌ட்டிப்பிடிக்கிறார். "ச‌ந்தைக்கு போனும். ஆத்தா வையும்" ரேஞ்சுக்கு வெளில‌ கூட்டிட்டு போடா என்ற‌ அம‌லா, க‌ஜினி ஹீரோ போல‌ த‌ன‌து டிமான்டை ம‌ற‌ந்து விடுகிறார். ல‌க்கி அத‌ர்வா. இதே நேர‌ம் இதே நாள் என்ற‌ ச‌ப்டைட்டிலோடு அமெரிக்காவை காட்டுகிறார்க‌ள். அங்கே அம‌லா பாலுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.அடுத்த‌ நாள் அவ‌ர் சென்னைக்கு வ‌ருகிறார்.அதுவும் அத‌ர்வா வேலை செய்யும் க‌ம்பெனியின் சி.ஈ.ஓ வாக‌. ட‌புள் ஆக்ஷ‌ன் க‌ரும‌ம் எல்லாம் இல்லை. இது இல்லுயுஷ‌ன் என்ப‌து குடைக்குள் ம‌ழை பார்க்காத‌ என‌க்கே தெரிந்து விட்ட‌து. இந்த‌ மேட்ட‌ரைத்தான் இடைவேளை வ‌ரை ச‌ஸ்பென்ஸ் என்று இழுத்திருக்கிறார் எல் போர்ட் குமார். சாரி, எல்ராட் குமார். ஒரே பேரை சாரு என்றும் ல‌தா என்றும் ரெண்டு வித‌மா கூப்பிறாங்க‌. இதுக்கு கூட‌ புதுசா ஒரு பேர‌ தேட‌ நேர‌மில்லை கொமாருக்கு.அதே சாருல‌தா தான்

செக‌ன்ட் ஆஃபில் இத‌ற்கெல்லாம் வ‌டை கிடைக்கும் என‌ சொன்ன‌தை ந‌ம்பி இன்னொரு 120 ரூபாய்க்கு சேன்ட்விச்சும், கோல்ட் காஃபியும் வாங்கிக் கொண்டு வ‌ந்து அம‌ர்ந்தேன். இவ‌ர் இப்ப‌டி ஆக‌ கார‌ண‌ம் அவ‌ர் அம்மாவென‌ ஒரு கிராம‌த்து ஃப்ளாஷ்பேக் போர்ஷ‌னை காட்டினார்க‌ள். சூடான‌ காஃபி வாங்கியிருக்க‌லாம் என்று ஆத்மார்த்த‌மாக‌‌ உணர்ந்த‌ த‌ருண‌ம‌து. இடையிடையே சீரிய‌ இடைவெளியில் மானே தேனே மாதிரி பாட்டுக்க‌ள் உண்டு என்ப‌தை நீங்க‌ளாக‌ உண‌ர்ந்துக் கொள்வ‌து உல‌க‌ வெப்ப‌மாத‌லில் இருந்து ந‌ம்மை காக்கும். அட‌ க‌தை என்ன‌ ஆச்சுப்பா என்று என்னை கேட்க‌ வேண்டும் என்ற‌ யாருக்கேனும் இப்போது தோன்றியிருந்தால், அது என்னோட‌ வெற்றி. க‌தையோட‌ வெற்றிய‌ல்ல‌ என்ப‌தை அட‌க்க‌த்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

இய‌க்குன‌ரின் அப்பா நீ டைர‌க்ட‌ர் ஆகியே தீர‌ணும் என்று அவ‌ரிட‌ம் முர‌ண்டு பிடிக்கும் போதே இவ‌ர் சொல்லியிருக்க‌ வேண்டும் "என‌க்கு சினிமா வ‌ர‌ல‌ப்பா. அப‌ப்டியே ஆனாலும் மோச‌மான‌ டைர‌க்ட‌ராதான் ஆகியிருப்பேன்" என்று. இப்போது த‌லைக்கு மேல‌ சென்றுவிட்ட‌து. ப‌ட‌ம் முழுக்க‌ ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வ‌ழியென‌ தேவையில்லாத‌ காட்சிக‌ளை கோர்த்து, பின் அத‌ற்கு தீர்வு என‌ ச‌‌வ‌ச‌வ‌ காட்சிக‌ளை சேர்த்து குழ‌ம்பி, குழ‌ப்பிவிட்டார். விஷுவ‌லாக‌ ப‌ல‌ காட்சிக‌ள் ந‌ன்றாக‌வே இருக்கின்ற‌ன‌. ஆனால் ந‌ல்ல‌ திரைக்க‌தை இல்லாம‌ல் அவை‌ எத‌ற்கு ப‌ய‌ன்ப‌டும்? பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம் சொல்ல‌க் கூட‌ அச்ச‌மாக‌ இருக்கிற‌து பாஸ்.

அம‌லா, ஜிவியின் பிண்ண‌னி இசை என‌ எல்லாமே ஃபெயில் தான். ப‌ட‌த்தின் மிக‌ முக்கிய‌மான‌ பாசிட்டிவ்க‌ளில் ஒன்று அத‌ர்வா. பாணா காத்தாடியிலே என‌க்கு அவ‌ரை பிடித்திருந்த‌து. இதில், இன்னும் சில‌ ப‌டிக‌ள் தாண்டியிருக்கிறார். இர‌ண்டாவ‌து ப‌ட‌த்திலே ஒரு பட‌த்தை த‌னியாளாக‌ சும‌க்க‌ முய‌ன்ற‌வ‌ரை பாலா நாய‌க‌னாக‌ தேர்ந்தெடுத்த‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை. இந்த‌ ப‌ட‌த்திலே அத‌ர்வா அம‌ர்க்க‌ள‌மா என்றால் 100% ஆம் என்று சொல்ல‌ முடியாது. ஆனால் நிச்ச‌ய‌ம் ந‌ம்பிக்கையை கொடுக்கிறார். வாரிசு வ‌ர‌வுக‌ளில் இன்னுமொரு முக்கிய‌மான‌ ந‌டிக‌ராக‌ இவ‌ர் ஆக‌ப் போகிறார் என்ப‌தை தைரிய‌மாக‌ பெட் க‌ட்டி சொல்கிறேன். வெல்ட‌ன் பாய்.

ஒரே நாளில் இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் வெளியான‌து. ஒன்று காத‌லில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி. இன்னொன்று ப‌ட‌மெடுப்ப‌தில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி.  ஆக்ச்சுவ‌லா நான் மு.ஒ.க‌ ச்சூஸ் ப‌ன்ணேன்.. ஆவ்வ்வ்வ்.ஆமாங்க‌ இய‌க்குன‌ர் விண்ணைத் தாண்டி வ‌ருவாயா த‌யாரிப்பாள‌ராம்.

____________________

* தேவ‌தன் - தேவ‌தையின் ஆண்பால்

12 கருத்துக்குத்து:

Vetri on February 20, 2012 at 5:18 PM said...

பாஸ்! உங்க ஆபீஸ்ல ஏதாவது வேலை காலி இருக்கா?

ILA(@)இளா on February 20, 2012 at 5:21 PM said...

ஹ்ம்ம் போச்சா?

மோகன் குமார் on February 20, 2012 at 6:43 PM said...

:))) Nice.

Director paavam. Ippadiyaa thitturathu :))

Nandhini JS on February 20, 2012 at 7:26 PM said...
This comment has been removed by the author.
S.Deluckshana on February 20, 2012 at 7:40 PM said...

அமலா பால் படம்னதுமே தெரிஞ்சிருக்கவேணாம் ???இப்பிடி படம் வாறதிலும் ஒரு நன்மை..இப்பிடி சூப்பர் விமர்சனம் படிக்கமுடியுதே....

amas on February 21, 2012 at 12:09 AM said...

I was waiting for your review :) One good thing from this bad movie, a hilarious review!
amas32

முரளிகண்ணன் on February 21, 2012 at 10:20 AM said...

கார்க்கி, இன்னும் தனியாவா படத்துக்கு போறீங்க?

பிழைத்திருத்தி on February 21, 2012 at 10:30 AM said...

அந்த gays ரெண்டு பேரொட போன் நம்பர் வாங்கி வெச்சுருக்கேன்.. இந்த கார்கி பயலை டேங்கர் லாரி விட்டு ஏத்தனும்...

Uma on February 21, 2012 at 4:52 PM said...

அப்படீன்னா,, டைட்டில் மட்டும்தான் அழகா இருக்கா? படம் அவ்வளவுதானா? ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்......

நடராஜன் on February 22, 2012 at 12:26 AM said...

இந்த மாதிரி பதிவுக்காகவது! மொக்கை படம் வெளியாகும் போதெல்லாம் உம்மை கடத்தி கட்டிப்போட்டு, இருங்க அவசரப்படாதிங்க படத்தை பார்க்கவைச்சு விமர்சனம் எழுத வைக்கனும்! செம!

jei on February 22, 2012 at 6:12 PM said...

ஹா ஹா rofl ..... சேம் கோல்ட் காபி சேம் பீலிங் .படத்துக்கு 250 ரூபா செலவழிச்சதுக்கு இந்த பதிவ படிக்க முடிஞ்சது தான் ஒரே ஆறுதல் .
அமலா பால பார்த்து ஒருத்தன் முப்பொழுதும் உன் கற்பனைகள் னு பீல் பண்றப்பயே தெரியாம போய்டுச்சு ,அது எவ்ளோ பெரிய மொக்கையா இருக்கும் னு ....

Dhileepan on February 25, 2012 at 4:31 PM said...

//ஒரே நாளில் இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் வெளியான‌து. ஒன்று காத‌லில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி. இன்னொன்று ப‌ட‌மெடுப்ப‌தில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி//
same feeling:)))

 

all rights reserved to www.karkibava.com