Feb 15, 2012

உன் இன்மையை உண‌ர்கின்றேன்


 

அவள் விசித்திரமானவள்.
விட்டு விலகி தூரம் செல்ல செல்ல
பெரிதாகிக் கொண்டேயிருக்கிறாளென் கண்களுக்கு

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

அடர் வன நெரிசலில்
காய்ந்த சருகின் சலசலப்பினூடே
ஊர்ந்து செல்லும் பாம்பை போன்றது
அவள் நினைவுகள்.
அடர்வனம் போன்றது என் காதல்

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

என்னை இழுத்து மடக்கி
கல்லறையினுள்ளே அடங்கிவிட்டேன்.
இருக்குமொரு துளையும் காற்று வேண்டியல்ல
என்றேனும் பூக்களோடு பூவாய்
நீ வருவதை பார்க்க

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

ஆதி மனிதனுக்கு
குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
தந்த அதே இன்புணர்வை
எனக்கு தந்தவை அவளது கண்கள்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

சாம பேத தான தண்ட வைத்தியத்திற்கு பதில்
ஒரு முறை
என்னை காதலித்திருக்கலாம் நீ

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

நீ காதலிப்பதாக சொன்னால்
ரஜினி சாரை கூட்டி வந்து
விழா எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன்

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

மீசைதான் உன்னை குத்தும்.
தாடி என்னைத்தான்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

வாழ்க்கை குறித்த பிரக்ஞை
உணர்ந்த தருணம் தெளிவாய் நினைவிலிருக்கிறது.
இன்னொருமுறை
தலைசாய்த்து போடா என்று சொல்லேன்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

மூடிய உன் கோவிலின்
கோபுர புறா நான்

11 கருத்துக்குத்து:

Azhagesan Jayaseelan on February 15, 2012 at 10:28 AM said...

//மீசைதான் உன்னை குத்தும்.
தாடி என்னைத்தான்.//


Super

குசும்பன் on February 15, 2012 at 11:33 AM said...

டிவைடர் செம!

Kumaran on February 15, 2012 at 12:13 PM said...

நல்ல உணர்வுமிக்க கவிதை,,சிறப்பாக உள்ளது.நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்

வள்ளி on February 15, 2012 at 12:17 PM said...

"மூடிய உன் கோவிலின்
கோபுர புறா நான்"

Like this

பிரதீபா on February 15, 2012 at 2:37 PM said...

இந்த பதிவுல எல்லாமே சூப்பர்.. கல்லறை ரொம்ப ரொம்ப சூப்பர். நடுவுல aska luska செம க்ரியேடிவ் .. உங்கள் பெயரோடு முகநூலில் பகிரப் போகிறேன்.

சுசி on February 15, 2012 at 4:03 PM said...

கலக்ஸ் கார்க்கி :)

நேத்து வெளியிட்டிருக்கலாமோ??

நடராஜன் on February 15, 2012 at 6:53 PM said...

கிர்ர்ர்!! எங்க பின்னிருக்கை கவிதை காணவில்லை! :(

சத்யா on February 15, 2012 at 7:15 PM said...

நம்ம அம்மாகிட்ட சொல்லி உனக்கு முதல்ல கல்யாணம் பண்ணணும்

Balu Sv on February 15, 2012 at 7:17 PM said...

//ரஜினி சாரை கூட்டிவந்து விழா// கார்க்கியின் நக்கல் பளிச்சிடுகிறது... எங்களை இப்படி கவிதை கடலில் மூழ்கடிப்பதானால், எத்தனை குஜ்ஜு பிரிந்தாலும் தப்பே இல்ல :-))

கார்க்கி on February 17, 2012 at 11:38 AM said...

thanks allllllllllll

கயல் on February 18, 2012 at 2:57 AM said...

எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு கார்க்கி.
//
மீசைதான் உன்னை குத்தும்.
தாடி என்னைத்தான்
//
அழகான கவிதை.

 

all rights reserved to www.karkibava.com