Feb 24, 2012

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ள் - encounter

19 கருத்துக்குத்து

 

இன்னொரு என்க‌வுண்ட்ட‌ர் ந‌ட‌ந்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌ம் போல் ம‌க்க‌ள் 2 நாட்க‌ள் நேர‌ம் ஒதுக்கியிருக்கிறார்க‌ள் இது குறித்து பேசுவ‌த‌ற்கு. அலுவ‌ல‌க‌ம்,இணைய‌ம்,வீடு என‌ எங்கும் இதேதான். அதுவும் வேள‌ச்சேரியில்(நான் வ‌சிக்குமிட‌ம்) ந‌ட‌ந்திருப்ப‌தால் இன்னும் அதிக‌ ச‌த்த‌ம் காதில் விழுகிற‌து. என்ன‌ள‌வில் ச‌ந்தேக‌த்திற்மிட‌மில்லாம‌ல் இது ஒரு Fabricated encounter  தான். ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு அருகில் க‌டை வைத்திருக்கும் ந‌ப‌ர் சொன்ன‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் அதிர்ச்சியைத்தான் த‌ருகின்ற‌ன‌, அதன் ந‌ம்ப‌த்த‌ன்மை குறித்த‌ ச‌ந்தேக‌ம் இருந்த‌ போதிலும்.

அன்று காலையே போலீஸ் சாதார‌ண‌ விசார‌னைக்காக‌ ம‌ஃப்ட்டியில் வ‌ந்திருக்கிறார்க‌ள். ம‌றைத்து வைத்திருந்த‌ மைக்ரோ கேம‌ராக்க‌ள் மூல‌ம் அந்த‌ வீட்டில் இருந்த‌வ‌ர்க‌ளை ப‌ட‌ம் பிடித்திருக்கிறார்க‌ள். பின் அதை வ‌ங்கியில் ப‌திவான‌ ஒளித்துண்டுக‌ளோடு ஒப்பிட்டு பார்த்து ஊர்ஜித‌ம் செய்திருக்கிறார்க‌ள். பின், இர‌வு 10 ம‌ணி வாக்கில் 200 பூட்டுக்க‌ளோடு வ‌ந்த‌ போலீசார் அக்க‌ம்ப்ப‌க்க‌த்தில் இருந்த‌ எல்லா வீடுக‌ளையும் பூட்டியிருக்கிறார்க‌ள். அத‌ன் பின்ன‌ரே "ச‌ம்ப‌வ‌ம்" ந‌டைபெற்றிருக்கிற‌து. இந்த‌ ம‌கா கொள்ளைய‌ர்க‌ளிட‌ம் துப்பாக்கி இருந்த‌தும், அவ‌ர்க‌ள் சுடுவார்க‌ள் என்ப‌தையும் முன்ன‌ரே க‌ணித்து பொதும‌க்க‌ளுக்கு இடையூறு ஆகாம‌ல் பார்த்துக் கொண்ட‌ காவ‌ல்துறையை பாராட்டாம‌ல் எப்ப‌டி இருக்க‌ முடியும்?

அந்த‌ இட‌த்தை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இன்னொரு ச‌ந்தேக‌ம் எழ‌க்கூடும். அந்த‌ சின்ன‌ வீட்டில் இருக்கும் 5 ம‌கா மெகா தீவிர‌வாதிகளில் ஒருவ‌ரை கூட‌ உயிரோடு பிடிக்க‌முடிய‌வில்லையாம் ந‌ம் காவ‌ல்துறையால்.பொதும‌க்க‌ளுக்கு ஆப‌த்து என்ற‌வுட‌ன் உள்ளிருக்கும் 5 பேரையும் சுட்டுக் கொண்றுவிட்டார்களாம். அவ‌ர்க‌ள் குறித்து த‌க‌வ‌ல் கிடைத்த‌வுட‌ன் விரைந்த‌ போலீசார் 1.30க்கு ச‌ம்ப‌வ‌ இட‌த்தை அடைந்தார்க‌ளாம். த‌க‌வ‌ல் சொன்ன‌வ‌ர் 12 ம‌ணிக்கு சொன்னாரா அல்ல‌து த‌னிப்ப‌டை தில்லியில் இருந்து விரைந்து வ‌ந்த‌தா என்ப‌து தெரிய‌வில்லை. அதே போல், 1.30க்கு கூட‌ காலில் ஷூவுட‌ன் ஒட‌ த‌யாராக‌ இருந்திருக்கிறான் "தீவிர‌வாதி". ஒரு வேளை கேப்ட‌ன் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போல் காவ‌ல்துறையிலே ஒரு க‌ருப்பு ஆடு அவ‌ர்க‌ளுக்கு த‌க‌வ‌ல் சொல்லியிருக்கக்கூடும்.

pic.twitter.com/4rVaqD9X

இது ஜோடிக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ம் என்றாலும் ம‌க்க‌ள் க‌வ‌லைப்ப‌ட‌ த‌யாரில்லை. அவ‌ர்க‌ளை பொறுத்த‌வ‌ரை சாதார‌ண‌ பெரிய‌வ‌ர் ஒருவ‌ரை ஈவு இர‌க்க‌மின்றி அடிக்கும் ர‌வுடிக‌ள் ஒடுக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஆத‌ங்க‌ம் ம‌ட்டுமே. அத‌ற்கு இவ‌ர்க‌ளை ஏன் கொல்ல‌ வேண்டும் என்றால் ப‌ய‌ம் வரும் என்கிறார்க‌ள். இதை எதிர்பார்த்துதானே அர‌சு இய‌ந்திர‌ம் எப்போதும் இது போன்ற‌ என்க‌வுன்ட்ட‌ரை கையிலெடுக்கிற‌து? இச்ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நிறுவும் ய‌தார்த்த‌ம் அதி ப‌ய‌ங்க‌ர‌மான‌து. குற்ற‌வாளிக‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்கிற‌ நிலைமாறி த‌ண்டிக்க‌ப்ப‌டும் எல்லோருமே குற்ற‌வாளிக‌ள் என்ற‌ ம‌ன‌நிலைக்கு ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். எத்த‌னை குரூர‌மான‌து இது? உன் வீட்டுக்காசு போயிருந்தா தெரியும் என்ப‌வ‌ர்க‌ள் "இது போன்ற‌ போலி என்க்க‌வுண்ட்ட‌ரில் ந‌ம்ம‌ தெரிஞ்ச‌வ‌ங்க‌ போனா" என்ற‌ கேள்வியை எதிர்க்கொள்ள‌ முற்றிலும் த‌யாராக‌ இல்லை.

அதே நேர‌ம், இப்போது அதிக‌ம் பேச‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் என்க‌வுன்ட்ட‌ர் ம‌ட்டும‌ல்ல‌. எங்கேயும், எப்போதும் இந்த‌ Migrantsக‌ளால் பிர‌ச்சினைக‌ள் வெடித்திருக்கின்ற‌ன‌. அதுவும் இந்தியா போன்ற‌ ஒரு Unorganized நாட்டில் இத‌ன் விளைவுக‌ள் மோச‌மாக‌ இருக்கும். வேள‌ச்சேரியில் ம‌ட்டும் 40000 பேர் இருப்ப‌தாக‌ சொல்கிறார்க‌ள். சின்ன‌ சின்ன‌ குற்ற‌ங்க‌ள் பெருகிய‌தை நானே உண‌ர்ந்திருக்கிறேன். (உ‍_‍ம்) Sump cover காணாம‌ல் போன‌து, வ‌ண்டியில் ஹெல்மெட்க‌ள், ஷூக்க‌ள் திருட‌ப்ப‌ட்ட‌து போன்ற‌‌வ‌ற்றை சொல்ல‌லாம். இதை பீகார் ந‌ப‌ர்க‌ள் திருடுவ‌தை க‌ண்க‌ண்ட‌ சாட்சிக‌ளே உண்டு. இந்த‌ சின்ன‌ குற்ற‌ங்க‌ள் பெரிய‌ அள‌வில் நிச்ச‌ய‌ம் வ‌லுப்பெறும். சென்னையில் துப்பாக்கிக‌ள் அவ்வ‌ள‌வு எளிதில் கிடைப்ப‌தில்லை. இவ‌ர்க‌ளிட‌ம் 5 துப்பாக்கிக‌ள் இருந்த‌து நிஜ‌மென்றால், நினைக்க‌வே ப‌ய‌மாயிருக்கிற‌து. எத்த‌னை பேரிட‌ம் இது மாதிரி இருக்குமோ?? வேலை செய்ய‌ யாரும் வ‌ர‌க்கூடாது என்று சொல்வ‌து ச‌ரியாகாது. ஆனால் organize செய்ய‌ வேண்டும். இல்லை, வ‌ர‌லாறு மீண்டும் ரிப்பீட் ஆகி ரிவிட் அடிக்கும்.

கோவை என்க‌வுன்ட்டர் ந‌ட‌ந்த‌ போது ம‌க்க‌ள் ஆத‌ரித்‌து ம‌கிழ்ந்த‌தை த‌வ‌றென்று நினைக்காம‌ல் இந்த‌ப் ப‌திவை எழுதினேன். இப்போது நினைத்தால் எழுதியிருக்க‌க்கூடாது என்று தோன்றுகிற‌து. எப்பொருட்டும் இப்பூமியில் ஒருவ‌ர் வாழ்வ‌த‌ற்கான‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்ற‌ எண்ண‌ம் நாளுக்கு நாள் அதிக‌ரிக்கிற‌து. ம‌ர‌ண‌ த‌ண்ட‌னையும், என்க‌வுன்ட்ட‌ரும் சில‌ருக்கு க‌ட்டாய‌ம் தேவை என்ற என் எண்ண‌ம், அது எத்த‌னை பேருக்கும் த‌வ‌றாக‌ கொடுக்க‌ப்ப‌டுகிற‌து என்று நினைக்கும் புள்ளியில் த‌க‌ர்ந்து போகிற‌து.

Feb 22, 2012

சொதப்புவதற்கேனும் காதலிங்க பாஸ்

12 கருத்துக்குத்து

 

அலுவலக நண்பர் ஜவ்வாது ஜானி என்பவருடன் காதலில் சொதப்புவது எப்படி போக வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு இன்று தள்ளப்பட்டேன். அவருடன் ரொமாண்டிக் படத்துக்கு போவதும் ஒரு சொதப்பல்தானே என்று செல்ஃப் கண்டோலன்ஸ் செய்துகொண்டு  என் பைக்கில் நானும் அவர் பைக்கில் அவரும் சத்யம் நோக்கி பறந்தோம். வண்டியை பார்க் செய்துவிட்டு டிக்கெட் கவுண்ட்டர் அருகில் அவருக்காக காத்திருந்தேன்.  சத்யம் பக்கம் அவர் வந்ததே இல்லை என்பது பைக்கிலே தியேட்டருக்கு முன்பக்கம் வந்ததில் இருந்து தெரிந்தது. அது ஒன்வே. மீண்டும் 2 கிமீ சுத்தி பின்பக்கம் போனால்தான் வண்டியை பார்க் செய்ய முடியும். ஆனால் சரியாக 2 நிமிடத்தில் படம் ஆரம்பித்துவிடும். அடுத்த சொதப்பல். நல்ல வேளை. 70களில் நான்  பிறக்காததால் இவருடன் ரோசாப்பு ரவிக்கைக்காரி பார்க்கும் வாய்ப்பு கிட்டாமல் போனதை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

திரைப்படங்கள் பற்றி நான் எழுதும் எதையும் நான் விமர்சனமாக முன்வைப்பதில்லை. ஒரே ஒரு முறை , அதுவும் நம்ம ஊர் தியேட்டரில் , ஜவ்வாது ஜானி போன்றவர்களோடு பார்த்துவிட்டு, ஒரு படத்தை முழுமையாக உள்வாங்கி விமர்சிக்க முடியாதென்பது என் கருத்து.அதனால்தான் இதற்கு லேபிள் கூட ”திரைப்படங்கள் சார்ந்தவை” என்றே வைத்திருக்கிறேன், முடிந்தவரை எல்லா பதிவுகளிலும் படம் பற்றி மட்டுமில்லாமல் அந்தப் படம் பார்க்கப் போன என் அனுபவங்களையும் சேர்த்து எழுதுகிறேன்.

ஒரு சினிமாவில், முன்பின் தெரியாத ஒருவருக்கு நேரும் துக்கமோ, சந்தோஷமோ நம்மையும் பாதித்தால் அந்தப் படம் நல்ல படம். இவ்வளவுதான் நல்ல சினிமாவுக்கான என் அளவுகோல். எந்திரனில் ரோபோ உருவாகும் போது எனக்கு எந்த உணர்வும் வரவில்லை. ஆனால் அந்த உயிரில்லாத ரோபோ கடைசிக் காட்சியில் தனது ஒவ்வொரு பாகத்தையும் கழட்டும்போது ஏதோ செய்தது, அதற்கு உயிரில்லை என்று தெரிந்தும் கூட. ஆக, எனக்கு எந்திரன் நல்ல படம். கில்லியில் விஜய் கடைசிக் காட்சியில் அடிப்பட்டு கீழே விழுந்த போது எழுந்து முத்துப்பாண்டிய அடிடா என்று கத்த தோன்றியது. ஆக, எனக்கு கில்லி நல்ல படம். சுறாவில் கடைசிக் காட்சியில் வில்லன் விஜயை கட்டிப் போட்ட போது நைட் அம்மா சாப்பிட என்ன செஞ்சிருப்பாங்க என்று தோன்றியது. ஆக, சுறா எனக்கு மொக்கைப் படம். காதலில் சொதப்புவது எப்படி ஒரு வித்தியாசமான மனநிலையை தந்தது.

பாருவும், அருணும் கல்லூரி காதலர்கள். இருவருக்கிடையேயும் ஒரு கண்ணாடி டம்ளர் ஃபைட் என்பதாக படம் தொடங்குகிறது. அவர்கள் யார், என்ன சண்டை,அவர்களின் குடும்ப நிலவரம் என்ன, கண்ணாடி கிளாஸ் உடைந்ததா என்பதை எல்லாம் சித்தார்த் நமக்கு ராஜா சின்ன ரோஜா ரஜினி குழந்தைகளுக்கு கதை சொல்வதைப் போல சொல்கிறார். குறும்படமாய் வெளியான அதே மேட்டரை முழு நீளப்படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. கதை என்ற வஸ்துவை ஊறுகாய் போல ஓரமாக வைத்துவிட்டு இரண்டு டீன் ஏஜ் காதலர்களுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்ய சண்டைகளை அன்லிமிட்டெட் மீல்ஸாக பரிமாறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும், சித்தார்த்தும்  “எக்ஸ்ட்ரா” கேர் எடுத்துக் கொண்டதில் இவர் வேலை சுலபமாகிவிட்டது

“கேமரா என்று ஒன்று இருப்பது பாத்திரங்களுக்கு தெரியாது என்பதுதானே சினிமாவின் முக்கிய விதி” என்று சமீபத்தில்தான் ட்விட்டரில் TPKD_ கேட்டார். அதை முதல் காட்சியில் வந்த கண்னாடி கிளாஸை போல சுக்கு நூறாக உடைத்துவிட்டார் இயக்குனர். சித்தார்த் ஒவ்வ்வொரு காட்சியிலும் நம்மைப் பார்த்து, அதாவது கேமரா பார்த்து கதை சொல்கிறார். சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்று கதறும் அகிரா குரேசேவா விசிறிகளுக்கு இந்தப் படம் என்ன மாதிரியான அதிர்ச்சியை தரப்போகிறது என்று தெரியவில்லை. ஒரு விஷயம் சொல்கிறேன். சுவாரஸ்யமா சொல்றேனான்னு பாரு என்று சொல்லி அதில் அசத்தியும் இருக்கிறார் பாலாஜி. ஆங்காங்கே இந்த கதை சொல்லும் டெக்னிக் பேக் ஃபையர் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் குறைந்த பட்ஜெட்டில், செமத்தியான ஒளிப்பதிவில், நிறைவான நடிப்பில் ஒரு சுவையான படம் தந்ததற்கும், திறமைக்கு இந்தக் காலத்தில் முன்பை விட அதிகமான கதவுகள் உண்டு என்ற நம்பிக்கை விதைத்ததற்கும் மிகப் பெரிய பூங்கொத்து ஒன்றை தரலாம்.

அதே ஆவின் பால் தான் என்றாலும் அம்மா போடும் காஃபிக்கும், அக்கா போடும் காஃபிக்கும் வித்தியாசம் இருக்குமில்லையா? அதே போல் தான் அமலா பாலும். முப்பொழுதும் உன் கற்பனைகளில் வேலைக்காரி போல் இருந்தவர் இதில் நிஜமாகவே கல்லூரி பெண்ணாக தெரிகிறார். அதில் அவர் பெயர் சாரு. இதில் பாரு. அடுத்த படத்தில் என்ன பெயர் இருக்கும் என்றெண்ணும் போதே சிலிர்க்கிறது. எனக்கு சித்தார்த்தை விட அவரது குண்டு நண்பரை விட விக்னேஷ் என்ற கேரக்டரில் வந்தவரை பிடித்தது. கருப்புதான் ஆனா களையான முகம். பக்காவான எக்ஸ்பிரஷன்ஸ் என கவர்கிறார்.

ஆண் பெண் உறவில், அதுவும் கல்லூரி காதலர்களுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளை இவ்வளவு டீட்டெயிலாக, அதுவும் காமெடியாக யாரும் சொன்னதில்லை. நிச்சயம் இயக்குனர் சரக்கு உள்ள பார்ட்டிதான் என்பதை வசனங்களும், டீட்டெயிலிங்கும் சொல்கின்றன. வாழ்த்துகள் பாலாஜி.தமனின் இசையில் பார்வதி பாடல் மட்டுமே ஓக்கே. இப்படி வர்ற நல்ல பால் எல்லாம் டிஃபென்ஸ் வச்சா எப்படி பாஸ்? ஆனால் பின்னணி இசையில் எந்த குறையும் வைக்கவில்லை தமன்.

மற்றபடி, தனித்தனியே சொல்ல ஏதுமில்லை. ஒரு வித்தியாசமான நிறைவான அனுபவம்.

Feb 20, 2012

எப்பொழுதும் என் மொக்கைக‌ள்

12 கருத்துக்குத்து

 

"ராமோட‌ நீ இருக்கிற‌து உங்க‌ம்மா க‌ருப்பைல‌ இருக்கிற‌துக்கு ச‌ம‌ம்"

ட்ரெயில‌ரில் இந்த‌ வ‌ன‌ச‌த்தை கேட்ட‌ போதே தெரியும், இவ‌னுங்க‌ ந‌ம்ம‌ உயிர்ல‌ கை வைக்காம‌ விட‌ மாட்டானுங்க‌. ஆனா ந‌ம்ம‌ பைய‌ன் ஒருவ‌ன் ந‌ல்லா இருக்குன்னு சொன்ன‌த‌ ந‌ம்பி த‌ன்ன‌ந்த‌னியா இந்த‌ பட‌த்துக்கு போயிட்டேன். உள்ள‌ வ‌ர்ற‌வ‌ன் எல்லாம் டிக்கெட்டோடு ஒரு ஜோடியும் கூட்டிட்டு வ‌ந்திருந்தான்‌. வேல‌ன்ட்டைன்ஸ் டேக்கு ரிலிஸான‌ ப‌ட‌த்துக்கு த‌னியா போன‌ என்னைத்தான் அவ‌னுங்க‌ முறைக்க‌ணும்.நாம‌ புல‌ம்புற‌து நியாய‌ம் இல்ல‌த்தான். ப‌ட‌த்த‌ ப‌த்தி பேசுவோம் வாங்க‌. ட்ரெயிலிரிலே 100 நாள் ஓடிய‌ ப‌ட‌ங்க‌ளின் வ‌ரிசையில் ச‌மீப‌த்தில் சேர்ந்த‌ “ஒரு க‌ல் ஒரு க‌ண்ணாடி “ முன்னோட்ட‌த்துட‌ன் ந‌ம‌து ராகு கால‌ம் தொட‌ங்கிய‌து.

அத‌ர்வா, அந்நிய‌ன் (a) க‌ந்த‌சாமிக்கிட்ட‌ வாங்கின‌ காஸ்ட்யூமோடு ரெண்டு பேர‌ போட்டுத் த‌ள்ள‌ தேவ‌த‌ன்* மாதிரி வான‌த்துல‌ இருந்து ப‌ற‌ந்து வ‌ர்றாரு. அவ‌னுங்க‌ (கொடுத்து வ‌ச்ச‌வ‌னுங்க‌) எஸ்கேப் ஆகிட‌றாங்க‌. அங்க‌ போடுறாரு ந‌ம்ம‌ டைர‌க்ட‌ரு டைட்டில‌. டைட்டில் முடிஞ்ச‌வுட‌னே பார்த்தா ந‌ல்ல‌ புள்ளையாட்டும் ஒரு ஐடி க‌ம்பெனி உள்ள‌ ந‌ட‌ந்து வ‌ர்றாரு அத‌ர்வா. எதுக்குன்னே தெரியாம‌ சிரிச்சிக்கிட்டே ந‌ட‌ந்து வ‌ர்ற‌வ‌ருக்கு எதிரில் நைட் ஸ்டே ப‌ண்ணிட்டு ஒரு ஜோடி கிள‌ம்ப‌றாங்க‌. ஆனா நைட்டு ஃபுல்லா ஒரு பாஸ்வேர்ட் தெரியாத‌தால் அவ‌ங்க‌ வேலை, ஐ மீன் ஆஃபீஸ் வேலை எதுவும் செய்ய‌லை என்ப‌தை இய‌க்குன‌ர் நிறுவுகிறார். அட‌! இது ப‌ட‌த்துல‌ எங்க‌ன‌யாச்சும் டிவிஸ்ட்டா இருக்கும்ன்னு நான் புதுசா வாங்கின‌ சேம்ச‌ங் எஸ்2ல‌ குறிச்சு வ‌ச்சுக்கிட்டேன். ஆனா ம‌ர‌ம் என்ப‌து ம‌ர‌மா ம‌ட்டுமே எவ‌ன் க‌ண்ணுக்கு தெரியுதோ அவ‌ன் தான் நிஜ‌மான‌ ஞானி என்ப‌தை இய‌க்குன‌ர் அழுத்த‌மாக‌ ப‌திகிறார். ஆம். அந்த‌ காட்சி அவ‌ர்க‌ள் ஏதோ ஜ‌ல்சா செஞ்சிட்டு போறாங்க‌ என்ற‌ கிள‌ர்ச்சிக்காக‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்தி இருக்கிறார் ஞானி.  ஐ மீன் எல்ராட் குமார்.

ஐடி க‌ம்பெனி. ஸ்மார்ட்டான‌ ஹீரோ. ஆனா ஹீரோயின் அங்கில்ல‌. அப்ப‌டின்னா என்ன‌ இருக்கும்? அதே அதே. குட்டை பாவாடை பெண்ணொருத்தி டேக் மீ ராம் என‌ காஃபி ஷாப்பில் கேட்காம‌லே ந‌ம்ம‌ டேபிளுக்கு வரும் குக்கீஸ‌ போல‌ கேட்குது. க‌ர‌ண்ட் க‌ட்டினால‌ மேல் ப‌ட்ட‌ன‌ திற‌ந்து விட்ட‌ செக‌ன்ட் ஹீரோயின‌ பார்த்து ஹீரோ சொல்கிறார் "ந‌த்திங் இன்டெரெஸ்டிங். ஆஃப் ப‌ண்ணு". இந்த‌ இட‌த்தில்தான் என‌க்கு ஒளிப்ப‌திவாள‌ர் மீதான‌ முத‌ல் விம‌ர்ச‌ன‌ம் எழுகிற‌து. ச‌ப்ஜெக்ட்டை பார்வையாள‌ன் உண‌ர்வ‌த‌ற்கு இன்ச‌ர்ட் என்று அப்பொருளின் க்ளோஸ் அப் காட்சி ஒன்று வைக்க‌ வேண்டும் என்ப‌து விதியாச்சே!. ஏன் செய்ய‌வில்லை? பின், என்னை ஏன்டா உன‌க்கு பிடிக்க‌வில்லை என்ற‌ கேள்விக்கு ஹீரோ சொல்கிறார் "நீயும் ஒரு பொண்ணுன்ற‌த‌ ம‌ற‌ந்துட்டு அவ‌ கூட‌ 5 மினிட்ஸ் பேசி பாரு.U will jus fall in love with her ". ஜிவ்வென்று ஏறுகிற‌து ந‌ம‌க்கு. அந்த‌ பார்ட்டியை காண‌ சென்னையில் இருந்து ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்று பாட்டுப் பாடிக் கொண்டே குறுக்கு வ‌ழியில் பெங்க‌ளூருக்கு செல்கிறார். ஆனா பாருங்க‌ பாட்டிலே அந்த‌ அழ‌கு பாட்டியான‌, ச்சே பார்ட்டியான‌ அம‌லா பால‌ காட்டிடுறாங்க‌. ந‌ம்ம‌ ஆளுங்க‌ ஏதோ ஒரு தேவ‌தை ரேஞ்சுக்கு நினைச்சிட்டு இருந்த‌தால‌ பாட்டுல‌ வ‌ர்றது அம‌லா பால்ன்னு தெரியாம‌ வாங்கிட்டு வ‌ந்த‌ பாப்கார்ன‌ தூக்கிப் போடாம‌ வாயில‌ போட்டுக்குறாங்க‌.

பெங்க‌ளூரில் சாரு என்கிற‌ அம‌லா பால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு அத‌ர்வாவுக்காக‌ காத்திருக்கிறார். என்னை வீட்டு விட்டு வெளிய‌ கூட்டிட்டு போயேன்டா என்றால் முடியாதென்கிறார் ஹீரோ. வேணும்ன்னா என்னை க‌ட்டிப்பிடி.கூட்டிட்டு போறேன் என்றவுட‌ன் அம‌லா பால் விர‌லை நீட்டுகிறார். அதெல்லாம் இல்லை. ஆள்காட்டி விரல்தான். உட‌னே அத‌ர்வாவும் அழ‌காக‌ விர‌லால் விர‌லை தழுவுகிறார். க‌ட்டிக் கூட‌ பிடிக்காம‌ல் ஒரே ஃப்ளாட்டில் இருக்கிறார்க‌ளே!! இது ஏதோ ந‌ல்ல‌ ப‌ட‌ம் என்று எழுந்து உட்கார்ந்தால், அடுத்த‌ சீனிலே நெத்தில‌ கிஸ் அடிச்சு, அழுத்த‌மா க‌ட்டிப்பிடிக்கிறார். "ச‌ந்தைக்கு போனும். ஆத்தா வையும்" ரேஞ்சுக்கு வெளில‌ கூட்டிட்டு போடா என்ற‌ அம‌லா, க‌ஜினி ஹீரோ போல‌ த‌ன‌து டிமான்டை ம‌ற‌ந்து விடுகிறார். ல‌க்கி அத‌ர்வா. இதே நேர‌ம் இதே நாள் என்ற‌ ச‌ப்டைட்டிலோடு அமெரிக்காவை காட்டுகிறார்க‌ள். அங்கே அம‌லா பாலுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம் ந‌ட‌க்கிற‌து.அடுத்த‌ நாள் அவ‌ர் சென்னைக்கு வ‌ருகிறார்.அதுவும் அத‌ர்வா வேலை செய்யும் க‌ம்பெனியின் சி.ஈ.ஓ வாக‌. ட‌புள் ஆக்ஷ‌ன் க‌ரும‌ம் எல்லாம் இல்லை. இது இல்லுயுஷ‌ன் என்ப‌து குடைக்குள் ம‌ழை பார்க்காத‌ என‌க்கே தெரிந்து விட்ட‌து. இந்த‌ மேட்ட‌ரைத்தான் இடைவேளை வ‌ரை ச‌ஸ்பென்ஸ் என்று இழுத்திருக்கிறார் எல் போர்ட் குமார். சாரி, எல்ராட் குமார். ஒரே பேரை சாரு என்றும் ல‌தா என்றும் ரெண்டு வித‌மா கூப்பிறாங்க‌. இதுக்கு கூட‌ புதுசா ஒரு பேர‌ தேட‌ நேர‌மில்லை கொமாருக்கு.அதே சாருல‌தா தான்

செக‌ன்ட் ஆஃபில் இத‌ற்கெல்லாம் வ‌டை கிடைக்கும் என‌ சொன்ன‌தை ந‌ம்பி இன்னொரு 120 ரூபாய்க்கு சேன்ட்விச்சும், கோல்ட் காஃபியும் வாங்கிக் கொண்டு வ‌ந்து அம‌ர்ந்தேன். இவ‌ர் இப்ப‌டி ஆக‌ கார‌ண‌ம் அவ‌ர் அம்மாவென‌ ஒரு கிராம‌த்து ஃப்ளாஷ்பேக் போர்ஷ‌னை காட்டினார்க‌ள். சூடான‌ காஃபி வாங்கியிருக்க‌லாம் என்று ஆத்மார்த்த‌மாக‌‌ உணர்ந்த‌ த‌ருண‌ம‌து. இடையிடையே சீரிய‌ இடைவெளியில் மானே தேனே மாதிரி பாட்டுக்க‌ள் உண்டு என்ப‌தை நீங்க‌ளாக‌ உண‌ர்ந்துக் கொள்வ‌து உல‌க‌ வெப்ப‌மாத‌லில் இருந்து ந‌ம்மை காக்கும். அட‌ க‌தை என்ன‌ ஆச்சுப்பா என்று என்னை கேட்க‌ வேண்டும் என்ற‌ யாருக்கேனும் இப்போது தோன்றியிருந்தால், அது என்னோட‌ வெற்றி. க‌தையோட‌ வெற்றிய‌ல்ல‌ என்ப‌தை அட‌க்க‌த்தோடு சொல்லிக் கொள்கிறேன்.

இய‌க்குன‌ரின் அப்பா நீ டைர‌க்ட‌ர் ஆகியே தீர‌ணும் என்று அவ‌ரிட‌ம் முர‌ண்டு பிடிக்கும் போதே இவ‌ர் சொல்லியிருக்க‌ வேண்டும் "என‌க்கு சினிமா வ‌ர‌ல‌ப்பா. அப‌ப்டியே ஆனாலும் மோச‌மான‌ டைர‌க்ட‌ராதான் ஆகியிருப்பேன்" என்று. இப்போது த‌லைக்கு மேல‌ சென்றுவிட்ட‌து. ப‌ட‌ம் முழுக்க‌ ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வ‌ழியென‌ தேவையில்லாத‌ காட்சிக‌ளை கோர்த்து, பின் அத‌ற்கு தீர்வு என‌ ச‌‌வ‌ச‌வ‌ காட்சிக‌ளை சேர்த்து குழ‌ம்பி, குழ‌ப்பிவிட்டார். விஷுவ‌லாக‌ ப‌ல‌ காட்சிக‌ள் ந‌ன்றாக‌வே இருக்கின்ற‌ன‌. ஆனால் ந‌ல்ல‌ திரைக்க‌தை இல்லாம‌ல் அவை‌ எத‌ற்கு ப‌ய‌ன்ப‌டும்? பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம் சொல்ல‌க் கூட‌ அச்ச‌மாக‌ இருக்கிற‌து பாஸ்.

அம‌லா, ஜிவியின் பிண்ண‌னி இசை என‌ எல்லாமே ஃபெயில் தான். ப‌ட‌த்தின் மிக‌ முக்கிய‌மான‌ பாசிட்டிவ்க‌ளில் ஒன்று அத‌ர்வா. பாணா காத்தாடியிலே என‌க்கு அவ‌ரை பிடித்திருந்த‌து. இதில், இன்னும் சில‌ ப‌டிக‌ள் தாண்டியிருக்கிறார். இர‌ண்டாவ‌து ப‌ட‌த்திலே ஒரு பட‌த்தை த‌னியாளாக‌ சும‌க்க‌ முய‌ன்ற‌வ‌ரை பாலா நாய‌க‌னாக‌ தேர்ந்தெடுத்த‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை. இந்த‌ ப‌ட‌த்திலே அத‌ர்வா அம‌ர்க்க‌ள‌மா என்றால் 100% ஆம் என்று சொல்ல‌ முடியாது. ஆனால் நிச்ச‌ய‌ம் ந‌ம்பிக்கையை கொடுக்கிறார். வாரிசு வ‌ர‌வுக‌ளில் இன்னுமொரு முக்கிய‌மான‌ ந‌டிக‌ராக‌ இவ‌ர் ஆக‌ப் போகிறார் என்ப‌தை தைரிய‌மாக‌ பெட் க‌ட்டி சொல்கிறேன். வெல்ட‌ன் பாய்.

ஒரே நாளில் இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் வெளியான‌து. ஒன்று காத‌லில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி. இன்னொன்று ப‌ட‌மெடுப்ப‌தில் சொத‌ப்புவ‌து எப்ப‌டி.  ஆக்ச்சுவ‌லா நான் மு.ஒ.க‌ ச்சூஸ் ப‌ன்ணேன்.. ஆவ்வ்வ்வ்.ஆமாங்க‌ இய‌க்குன‌ர் விண்ணைத் தாண்டி வ‌ருவாயா த‌யாரிப்பாள‌ராம்.

____________________

* தேவ‌தன் - தேவ‌தையின் ஆண்பால்

Feb 15, 2012

உன் இன்மையை உண‌ர்கின்றேன்

11 கருத்துக்குத்து

 

அவள் விசித்திரமானவள்.
விட்டு விலகி தூரம் செல்ல செல்ல
பெரிதாகிக் கொண்டேயிருக்கிறாளென் கண்களுக்கு

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

அடர் வன நெரிசலில்
காய்ந்த சருகின் சலசலப்பினூடே
ஊர்ந்து செல்லும் பாம்பை போன்றது
அவள் நினைவுகள்.
அடர்வனம் போன்றது என் காதல்

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

என்னை இழுத்து மடக்கி
கல்லறையினுள்ளே அடங்கிவிட்டேன்.
இருக்குமொரு துளையும் காற்று வேண்டியல்ல
என்றேனும் பூக்களோடு பூவாய்
நீ வருவதை பார்க்க

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

ஆதி மனிதனுக்கு
குகையில் ஒளித்த சிக்கி முக்கி கல்
தந்த அதே இன்புணர்வை
எனக்கு தந்தவை அவளது கண்கள்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

சாம பேத தான தண்ட வைத்தியத்திற்கு பதில்
ஒரு முறை
என்னை காதலித்திருக்கலாம் நீ

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

நீ காதலிப்பதாக சொன்னால்
ரஜினி சாரை கூட்டி வந்து
விழா எடுத்துக் கொள்ளலாமென்றிருக்கிறேன்

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

மீசைதான் உன்னை குத்தும்.
தாடி என்னைத்தான்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

வாழ்க்கை குறித்த பிரக்ஞை
உணர்ந்த தருணம் தெளிவாய் நினைவிலிருக்கிறது.
இன்னொருமுறை
தலைசாய்த்து போடா என்று சொல்லேன்.

aska luska Amour AiAst Liebe Ahavo Bolingo CInta Ishq Meile Love Ishtam Premam Pyar kaadhal

மூடிய உன் கோவிலின்
கோபுர புறா நான்

Feb 14, 2012

காத‌ல‌ர் தின‌ சிற‌ப்பு ப‌ட்டிம‌ன்ற‌ம்.

7 கருத்துக்குத்து

 

காத‌ல‌ர் தின‌ சிற‌ப்பு ப‌ட்டிம‌ன்ற‌ம்.

சோலைமான் ஆப்பையா: பெரியோர்க‌ளே.. தாய்மார்க‌ளே ம‌ற்றும் சாள‌ர‌ நேய‌ர்க‌ளே எல்லோருக்கும் வ‌ண‌க்க‌ம். உங்க‌ள‌ இப்ப‌டி இன்டெர்நெட் மூல‌மா ச‌ந்திக்கிற‌துல‌ ரொம்ப‌ ம‌கிழ்ச்சி. இன்னைக்கு நாம‌ பேச‌ப் போற‌ த‌லைப்பு என்ன‌ன்னா "காத‌ல‌ர் தின‌ம் தேவையா! தேவையில்லையா".  முத‌ல்ல‌.. தேவையேன்னு பேச‌ புதிய‌வ‌ர்.. இனிய‌வ‌ர். த‌ம்பி க‌ல‌ர்ம‌ண்ண‌னை அழைக்கிறேன்.

க‌ல‌ர்ம‌ண்ண‌ன்: ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளுக்கும் ச‌பையின‌ருக்கும் வண‌க்க‌ங்க‌ள். இது என்ன‌ சார் கேணைத்த‌ன‌மா ஒரு கேள்வி! ச‌னிப்பெய‌ர்ச்சிக்கு ஒரு நாள் வ‌ச்சிருக்காங்க‌. முட்டாளுங்க‌ளுக்கு கூட‌ ஒரு நாள் இருக்கு சார். ஆனா உல‌கை வாழ‌ வைக்கிற‌ காத‌லுக்கு ஒரு நாள் இருந்தா இவ‌ங்க‌ளுக்கு எரியுது? ஏன் சார் இந்த‌ பொறாமை? காத‌ல‌ர் தின‌ம் பாட்டு கேட்டிருக்கீங்க‌ளா ந‌டுவ‌ர். அந்த‌ பாட்டெல்லாம் எவ்ளோ பெரிய‌ ஹிட்? இதுல‌ இருந்தே தெரிய‌லையா? நான் என்ன‌ சொல்றேன்னா காத‌லுக்கு ப‌ண‌ம் முக்கிய‌மில்லை. ஆனா தின‌ம் முக்கிய‌ம் சார்.

சோலைமான் ஆப்பையா:: த‌ம்பி வ‌ய‌சுக்கேத்த‌ மாதிரி சின்ன‌தா பேசிட்டு போயிட்டாரு. அடுத்து வாம்மா. திரும‌தி. ச‌சோதா.

ச‌சோதா: ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே!வ‌ண‌க்க‌ம். த‌ம்பி சொன்னாரு. முட்டாளுங்க‌ளுக்கு கூட‌ த‌னியா நாள் இருக்குன்னு. நான் கேட்கிறேன். அதான் உங்க‌ளுக்கு ஒரு நாள் ஏற்க‌ன‌வே இருக்கே. பிற‌கேன் இன்னொரு நாள்? அப்புற‌ம் என்ன‌வோ சொன்னாரு. உல‌கை வாழ‌ வைக்கும் காத‌லாம். முத‌ல்ல‌ காத‌லிக்கிற‌வ‌ங்க‌ பெத்த‌வ‌ங்க‌ள‌ வாழ‌ வைக்க‌ட்டும். சாவுற‌ வ‌ரைக்கும் அவ‌ங்க‌ ஒண்ணா வாழ‌ட்டும். அப்புற‌ம் உல‌க‌ வாழ‌ வைக்க‌லாம்.அட‌ இவ‌ங்க‌ முத‌ல்ல‌ ஒரு வாழை ம‌ர‌மாச்சும் ந‌ட்டு வ‌ச்சிருப்பாங்க‌ளா???இவ‌ங்க‌ வாழ‌ வைக்கிறாங்க‌ளாம். க‌டைசியா இன்னொண்ணு சொன்னாரு. ப‌ண‌ம் முக்கிய‌மில்லை. தின‌ம் தான் முக்கிய‌ம்ன்னு. குண‌ம் தானே ந‌டுவ‌ரே காத‌லுக்கு முக்கிய‌ம்?இவ‌ர் ஏன் லூசு மாதிரி பேசுறாரு? த‌ம்பிக்கு பாட்டு ம‌ட்டும் தான் தெரியுது. அந்த‌ பட‌ம் பெரிய‌ ஃப்ளாப். வாழ்க்கைன்ற‌து ப‌ட‌ம் மாதிரி. பாட்டு ம‌ட்டும் கிடையாதுன்னு தெரிஞ்சா தெளிஞ்சிடுவாரு. போக‌ட்டும். முடிவா ஒண்ணு சொல்றேன். காத‌லிக்க‌ வேண்டும். எப்ப‌டி? திரும‌ண‌ம் செய்த‌ பின் ம‌னைவியை காத‌லிக்க‌ வேண்டும்.தின‌ம் தின‌ம் காத‌லித்தால் காத‌ல‌ர் தின‌மென‌ ஒண்ணு தேவையா? யோசிங்க‌ ந‌டுவ‌ரே! வாய்ப்ப‌ளித்த‌மைக்கு ந‌ன்றி பாராட்டி அம‌ர்கிறேன்

சோலைமான் ஆப்பையா:: ச‌சோதா ரொம்ப‌ காட்ட‌மா இருக்காங்க‌ போல‌. அடுத்து தேவையே அணியின் த‌லைவ‌ர். வாப்பா.. கூஜா.

கூஜா: எல்லோருக்கும் வ‌ண‌க்க‌ம். அந்த‌ம்மா என்ன‌வோ சொன்னாங்க‌ளே. தின‌ம் தின‌ம் காத‌லித்தால் காத‌ல‌ர் தின‌ம் தேவையாவாம். அப்ப‌ ஆக‌ஸ்ட் 15 த‌விர‌ ம‌த்த‌ நாளெல்லாம் இவ‌ங்க‌ அடிமை போலிருக்கு. பொற‌ந்த‌ நாள் த‌விர‌ ம‌த்த‌ நாளெல்லாம் பேயா சுத்துவாங்க‌ போல‌. எல்லா நாளும் காத‌ல் இருக்கும் ந‌டுவ‌ரே.. ஆனா அதை வெளிப்ப‌டு‌த்த‌ ந‌ம‌க்கே ந‌ம‌க்குன்னு ஒரு நாளை க‌ழிக்கும் வாய்ப்பை வ‌ழ‌ங்குவ‌துதானே காத‌ல‌ர் தின‌ம்? க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டு காத‌லிக்க‌ணுமாம். த‌மிழ் வ‌ர‌லாறு தெரியாம‌ல் பேச‌ வ‌ந்தால் இப்ப‌டித்தான். ஒரு த‌மிழ்க்க‌விஞ‌ன் அன்றே சொன்னான். "போத்திக்க‌ட்டும் ப‌டுத்துக்க‌லாம். ப‌டுத்துக்க‌ட்டும் போத்திக்க‌லாம்". காத‌லித்து திரும‌ண‌ம் செய்தாலென்ன‌? திரும‌ண‌ம் செய்த‌ பின் காத‌லித்தால் என்ன‌? காத‌ல் வேண்டும். அதுதானே விஷ‌ய‌ம்? சும்மா பேச‌ணும்ன்னு பேச‌ வ‌ர‌க்கூடாது. இவ‌ங்க‌ இந்த‌ ஒரு நாளைக்கு இப்ப‌டி அல‌‌ப்பறை ப‌ண்றாங்க‌ளே.. இன்னும் மேலை நாடுக‌ள் மாதிரி ஒரு வார‌த்துக்கு முன்னாடியே க‌ட்டிப்புடி தின‌ம், கிஸ்ஸ‌டி தின‌ம், க‌ரெக்ட் ப‌ண்ணு தின‌மெல்லாம் கொண்டாடினால் என்ன‌ செய்வாங்க‌?

சோலைமான் ஆப்பையா: அட‌ நீ வேற‌ப்பா. ப‌ஸ் டே கொண்டாட‌வே வ‌ழிய‌ காணோம். கிஸ் டே வாம்.

கூஜா: இவ்ளோ வ‌யாச‌ன‌ உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌து கூட‌ இந்த‌ இள‌சுங்க‌ளுக்கு புரிய‌ல‌ பாருங்க‌ ந‌டுவ‌ரே! எல்லாத்தையும் மிஸ் ப‌ண்ற‌தால‌ நாம‌ மிஸ் டேதான் கொண்டாட‌ணும் போலிருக்கு. ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே!! காத‌ல‌ர்க‌ள் குடிகார‌ர்க‌ள் போல‌ ப‌ப்ளிக்க‌ தொல்லை ப‌ண்றாங்க‌ளா? ப‌ப்ளிக் தான் அவ‌ங்‌களையே வெறிச்சு பார்த்து தொல்லை ப‌ண்றாங்க‌. வேக‌மா ஓடிட்டே இருக்கிற‌ வாழ்க்கைல‌ நின்னு, நிதான‌மா, கைய‌ புடிச்சு நான் விரும்புறேன்டா செல்ல‌ம்ன்னு சொல்ற‌ நாள‌ வேணாம்ன்னு சொன்னா 2 கார‌ண‌ம்தான் இருக்கும் ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே.. ஒண்ணு அந்த‌ அன்பு இல்லாம‌ல் இருக்க‌ணும். இல்லைன்னா சொல்ற‌துக்கு அந்த‌ செல்ல‌ம் இல்லாம‌ இருக்க‌ணும். வாய்ப்ப‌ளித்த‌மைக்கு ந‌ன்றி.

சோலைமான் ஆப்பையா:: ந‌ல்லா சொன்னாரு. அடிச்சு சொன்னாரு. இப்ப‌ இந்த‌ம்மா என்ன‌ சொல்ல‌ போகுது? வாம்மா.. சார‌தி ராஸ்க‌ர்.

சார‌தி ராஸ்க‌ர்:  அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம். ஒரு ந‌ல்ல‌ நாள்ன்னா பேச்சு ஆர‌ம்பிக்கிற‌துக்கு முன்னாடி பொங்க‌ல் வாழ்த்து, தீபாவ‌ளி வாழ்த்துன்னு சொல்வோம். இவ‌ங்க‌ளால‌ இன்னைக்கு அந்த‌ வாழ்த்த‌ சொல்ல‌ முடிஞ்சுதா? அதுல‌ இருந்தே தெரிய‌லையா இது ஒரு சுய‌ந‌ல‌ கொண்டாட்ட‌ம்ன்னு. எல்லோருக்கும் சொன்னா அது காத‌ல‌ர் தின‌ம் ஆகாது. அன்பு வேற‌ காத‌ல் வேற‌. கூஜா பேசும்போது சொன்னாரு போத்திக்கிட்டும் ப‌டுக்க‌லாம்ன்னு. அதே த‌மிழ்க்க‌விஞ‌ன் தான் சொன்னான் "க‌ல்யாண‌ம் தான் க‌ட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. இல்லை ஓடிப்போய் க‌ல்யாண‌ம்தான் க‌ட்டிக்க‌லாமா". இதுங்க‌ எக்கேடோ கெட்டு ஓடுற‌துக்கு முகூர்த்த‌ம் குறிக்கிற‌ நாள் தான் இந்த‌ காத‌ல‌ர் தின‌ம். ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே.. சுத‌ந்திர‌ நாள் ப‌த்தி சொன்னாரு. ஆகஸ்ட் மாச‌ம் 31 நாள். குடிய‌ர‌சு தின‌ம் வ‌ர்ற‌ ஜ‌ன‌வ‌ரிலும் 31 நாள். ஆனா காதலர் தின‌ம் வ‌ர்ற‌ ஃபிப்ர‌வ‌ரில‌? யோசிக்க‌ணும் ந‌டுவ‌ர் அவ‌ர்க‌ளே.. வருஷ‌ம் ஒரு நாள் த‌னியா க‌ழிக்க‌ணுமாம். அட‌ நாங்க‌ வாரா வார‌ம் ஒரு நாள் அ‌ப்படித்தாங்க‌. அத‌னால‌தான் வ‌ருஷ‌த்துக்கு ஒரு நாள் எதுக்குன்னு கேட்கிறோம். எங்க‌ளுக்கு செல்ல‌ம் இல்லையாம். அத‌னால‌ வேண்டாம்ன்னு சொல்றோமாம். க‌ரெக்ட் ப‌ண்ற‌துக்கு தின‌ம் நாங்க‌ளாங்க‌ கேட்டோம்? ஆளே இல்லாம‌ அலையுற‌‌வ‌ருக்குத்தான் அது வேண்டும். அட‌ அ‌ப்படி ஒரு நாள் வ‌ச்சா கூட‌ இவ‌ருக்கு யாரும் கிடைக்க‌ மாட்டாங்க‌. இந்த‌ ந‌க்க‌ல் பேச்சுக்கு யாரும் ம‌ய‌ங்க‌ மாட்டாங்க‌. ந‌டுவ‌ர் உட்ப‌ட‌ என‌க்கூறி ந‌ல்ல‌தொரு தீர்ப்பு த‌ரும்ப‌டி ந‌டுவ‌ரை கேட்டுக்கொன்டு விடை பெறுகிறேன்.

சோலைமான் ஆப்பையா:: இப்ப‌டி மாட்டிவிட்டாங்க‌ளே.. இப்ப‌ என்ன‌ செய்ற‌து?கூஜாவை த‌லை நிமிர்ந்து பார்க்க‌வே இப்ப‌ ஒரு மாதிரி இருக்கு. ஆனா அந்த‌ம்மா சொல்லுச்சு. ஃபிப்ர‌வ‌ரி மாச‌த்துல‌ 28 நாள்தான்னு. ஏம்மா எல்லாத்தையும் இப்ப‌டி எதிர்ம‌றையா பார்க்க‌றீங்க‌? இப்ப‌டி ஒரு குறையை கொடுத்துட்டமேன்னு நினைச்சு அதை ச‌ரிக்க‌ட்ட‌தான் காத‌ல‌ர் தின‌த்த‌ அந்த‌ மாச‌த்துல‌ வ‌ச்சாங்க‌ன்னு கூட‌ பார்க்க‌லாமே?காத‌ல் த‌ப்பில்லை. காத‌ல‌ர் தின‌ம் தான் த‌ப்புன்னா எப்ப‌டி? மாவு புளிச்சாதானே தோசை புளிக்கும்? அப்ப‌ தீர்ப்பு சொல்ற‌ நேர‌ம் வ‌ந்துடுச்சு. என‌க்கு என்ன‌ தோணுதுன்னா.. காத‌ல‌ர் தின‌ம் தேவையில்லாத‌வ‌ங்க‌ளுக்கு தேவையில்லை. தேவையான‌‌வ‌ங்ளுக்கு தேவை. அதாவ‌து அவ‌ங்க‌ளுக்கு வேலன்ட்டைன்ஸ் டே. உங்க‌ளுக்கு வெறும் ட்யூஸ் டே. வாய்ப்ப‌ளித்த‌ சாள‌ர‌ம் வ‌லைப்பூவுக்கும், நேய‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி ந‌ன்றி ந‌ன்றி

Feb 3, 2012

தி ராணி

8 கருத்துக்குத்து

 

தோழி த‌ந்த‌ முத்த‌ங்க‌ளை வாங்கிக்கொண்டு "ஆல் இச் வெல்" என்றேன். திரும்ப‌ கொடுடா என‌ வாங்கிக் கொண்டு என் "ஆள் இச்சும் வெல்" என்கிறாள்.  "என் ஆள் இச் வெறும் வெல் அல்ல‌. ஹ‌னிவெல்" என்று சொல்லிவிட்டேன். (நீங்க‌ உட‌னே ஆல் இஸ் ஜொள்ன்னு க‌மென்ட் போடாதீங்க‌)

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

கோவத்துல “இனிமேல உன்கிட்ட பேசினா உதட்டாலே அடி என்றேன் தோழியிடம். அதத்தான்டா செய்வேன் என அவளும் கோவமாக சொல்கிறாள். #விளங்கிடும்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

அம்மா கேப்ட‌னைப் பார்த்து கேட்ட‌தை போல‌ தோழி என்னைப் பாத்து "திராணி" இருக்கா என்றாள். "தி ராணி" நீ இருக்கியே த‌ங்க‌ம் என்று சொல்லி த‌ப்பித்தேன். #THE RANI

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

செத்து செத்து விளையாடலாம் வா என்கிறாள் தோழி #முத்த‌ப் ப‌ரிமாறுத‌ல்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

வேலண்ட்டைன்ஸ் டேவுக்கு treat for 4 ஆஃபராம். டொமினாஸ் பிஸ்ஸா காரனுங்க என்னை மாட்டிவிடாம‌ இருக்க‌ மாட்டாங்க‌ போலிருக்கே

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

மழைத்தூறலுக்கு பின் எழும் மண்வாசணைக்கு சற்றும் குறைந்ததல்ல உன் முத்த வாசனை

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

என் இன்மையை நிலா இல்லாத இரவென்கிறாய். எனக்கு நீ இல்லாமல் போனால் சூரியன் இல்லாத பகலடி

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

குளத்தில் விழுந்த கல்லாய் என்னுள் இறங்கிவிட்டாய். நான்தான் கல் விழுந்த குளமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

குறைமாச‌மான‌ ஃபிப்ர‌வ‌ரியை நிறைமாச‌மாக்க‌வே காத‌ல‌ர் தின‌த்தை இந்த‌ மாச‌த்துல‌ வ‌ச்சாங்க‌ளாம் என்றேன் தோழியிட‌ம். கேப்ட‌னை போல‌ நாக்கை ம‌டித்து, 10 நாள் முத்த‌ ச‌ஸ்பென்ட் செய்து விட்டாள்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

You are A gift என‌ தோழியிட‌ம் சொல்லும்போது Aவை கேப்பிட்ட‌ல் லெட்ட‌ரில் போட்டுவிட்டேன். புது அர்த்த‌ம் சொல்லி அடிக்கிறாள்

:-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

எல்லா அத்தையும் அத்தையல்ல அழகான /
பொண்ண பெத்தாதான் அத்தை

Feb 2, 2012

CAPTAIN

8 கருத்துக்குத்து

 

க‌டைசி ப‌திவு எழுதிய‌ ஒரே நாளில் கேப்ட‌ன் அதிர‌டி ஆக்ஷ‌னை தொட‌ங்கிவிட்டார். ச‌ட்ட‌ம‌ன்ற‌ தொட‌ருக்கு முன்பாக‌ எழுத‌ வேண்டும் என‌ என்ணினாலும் இப்ப‌டியெல்லாம் செய்வார் என‌ எதிர்பார்க்க‌வேயில்லை. ட்விட்ட‌ர், ஆஃபீஸ் , ந‌ண்ப‌ர்க‌ள் என‌ பலரிட‌த்திலும் இந்த‌ குறிப்பிட்ட‌ பிர‌ச்சினையை பொறுத்த‌வ‌ரை கேப்ட‌னுக்கு ஆத‌ர‌வான‌ குர‌லே கேட்கிற‌து.

பிர‌ச்சினை என்னவென்று இன்னும் பார்க்காத‌வ‌ர்க‌ள் இந்த‌ வீடியோவில் பாருங்க‌.

 

 இப்போதைக்கு கேப்ட‌ன் ப‌ற்றிய‌ ட்வீட்ஸை ம‌ட்டும் ப‌திவு செய்து கொள்கிறேன்

ஹீரோவின் பார்வை அதிகம் யார்ப்பக்கம் இருக்கோ அவர்தான் மெயின் வில்லன்.திமுக சுதாரித்துக் கொள்ளாவிட்டால், அகில இந்திய நாடாளும் திமுக ஆகலாம்

நில அபகரிப்பு வழக்க கூட கேப்டன் மேல போட முடியாது. மண்டபத்த தானமா கொடுத்த தலைவண்டா அவரு

ஜெ.வின் முகத்தில் தெரிந்த கோவம், வெறுப்பு.. இவையெல்லாம் என்னவென்று ஆன்றோர்கள் அறிவார்கள் :)

அய்யோ..கேப்ட‌ன் நாக்க‌ ம‌டிச்சா என்ன‌ அர்த்த‌ம் சின்ன‌ க‌வுண்ட‌ர்ல‌ சொல்ல‌லையே!!! துண்டோட‌ நிறுத்துட்டியே உத‌ய‌கொமாரு

விலையேத்தினாலும் ஜெயிப்போம்டான்னு ஆத்தா சொல்லும்போது சங்கரன்கோவில் ஊர்க்காரன நினைச்சு பார்த்தேன்.. விடுரா முத்து... தாலிய மீட்டுடலாம்

இதே நாக்கை திமுக ஆட்சியல மடிச்சிருந்தா வரலாற்றுல எவன் எவன் எல்லாம் நாக்கை மடிச்சான்னு வெவரமாச்சும் தாத்தா மூலமா கிடைச்சிருக்கும்,

எம்புட்டு அழகா மூக்குத்தி முத்தழகுன்னு பொம்பளைங்கல பார்த்து பாடுவரு? இப்படி கோவபப்டுத்தி பார்க்கறீங்களே ஆத்தா!! #கேப்டன்

எம்புட்டு அழகா மூக்குத்தி முத்தழகுன்னு பொம்பளைங்கல பார்த்து பாடுவரு? இப்படி கோவபப்டுத்தி பார்க்கறீங்களே ஆத்தா!! #கேப்டன்

லியாகத் அலிகான் மட்டும் இருந்திருக்கணும்..

ஜெயிச்ச பிறகு ஆடுறதெல்லாம் இருக்கட்டும். பிரச்சாரத்தின் போதே அதிமுக கொடியை இறக்க சொன்ன கேப்டன் பெரியாளு தானே?

கேப்ட‌னின் அதிர‌டியை முறிய‌டிக்கும் நோக்கில் திமுக‌ பொதுக்குழுவில் வாழக்காய்க்கு ப‌தில் மிள‌காய் ப‌ஜ்ஜி த‌ர‌ப்ப‌ட‌லாம்.

ஏ.சி ப‌ன்னீர்செல்வ‌ம் ச‌ஸ்பென்ட் ஆகி திரும்ப‌ சேர்ந்த‌ப்ப‌ ந‌ட‌ந்த‌ க‌தையெல்லாம் அம்மாவுக்கு தெரிய‌ல‌. #captain

விஜயகாந்த் நீக்கம் சர்வாதிகாரத்தின் உச்சம்- ஸ்டாலின் // #அண்ணே காபி சாப்ட்டிங‌க்ளாண்ணே? அண்ணே டிஃப‌ன் சாப்ட்டிங்க‌ளாண்ணே

க‌ர‌ண்ட் இருந்தாலே கேப்ட‌ன‌ ஒன்ணும் ப‌ண்ண‌ முடியாது.இதுல‌ அதுவும் இல்லாம‌ அம்மா என்ன‌ ப‌ண்ணும்? #ந‌ர‌சிம்மா

வெள்ளைச்சாமின்னா முக்கா பேண்ட்ட‌ போட்டுட்டு ராப்பாட்டு பாடுற‌வ‌ன் நினைச்சிங்க‌ளா? இப்ப‌ எங்காளு ர‌ம‌ணாடா !! #கேப்ட‌ன்

ச‌ஸ்பென்ட் எல்லாம் எங்க‌ கேப்ட‌னுக்கு ச‌க்க‌ரை பொங்க‌ல். ட்யூட்டி செய்ய‌ போலீஸ் உடுப்பு எதுக்குடா????

 

all rights reserved to www.karkibava.com