Jan 12, 2012

ந‌ண்ப‌ன் -‍ எல்லோருக்கும்(karki)


 

அலுவ‌‌ல‌க‌த்திலே அவ‌ன் தான் சுமாரான‌வ‌ன். க‌ட்ட‌ம் போட்ட‌ ச‌ட்டை, ப‌ச்சை க‌லர் பேன்ட் எல்லாம் போடுவான். ஒரு நாள் டீம் அவுட் சென்றிருந்த‌ போது பாம்பு ஒன்று வ‌ந்துவிட்ட‌து. ரோமியோக்க‌ள் எல்லாம் குருவி விஜ‌ய் போல‌ ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்துவிட்டார்க‌ள். ப‌ச்சை பேன்ட்தான் குச்சியால் அதை ஓர‌ங்க‌ட்டி சில‌ பெண் க‌லீக்ஸை காப்பாற்றினான். அன்று முத‌ம் அவ‌ன் தான் ஹீரோ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில். ஹீரோயிச‌ம் என்ப‌து ஒற்றை ப‌ரிணாம‌ம் கொண்ட‌த‌ல்ல‌.அதை இன்னொரு கோண‌த்தில் காட்டிய‌ ப‌ட‌ம்தான் 3 இடிய‌ட்ஸ். இதை த‌மிழில் விஜ‌ய் செய்கிறார்‌ என்ற‌ போதே நான் சொன்ன‌து,இது ஒண்ணும் ஆஃப் பீட் ப‌ட‌ம‌ல்ல‌. இன்னொரு ஹீரோயிச‌ ப‌ட‌ம் தான், மாறுப்ப‌ட்ட‌ கோண‌த்தில்.

ஃப்ளைட் கிள‌ம்புகிற‌து. உள்ளே இருக்கும் ஸ்ரீகாந்திற்கு பாரி கிடைத்துவிட்டான் என‌ ஃபோன் வருகிற‌து. மார‌டைப்பு போல் நாட‌கமாடி இற‌ங்குகிறார். பேன்ட் போடாத‌து கூட‌ தெரியாம‌ல் ஜீவாவும் இணைகிறார். "இவ‌ன் தூர‌த்தில் பூத்திட்ட‌ அன்னை ம‌டி" என்ற‌ பிண்ண‌னி பாட‌லோடு பாரியை தேடி கிள‌ம்புகிறார்க‌ள்.பாரிதான் விஜ‌ய். இதை விடவா ஒரு மாஸ் ஓப்ப‌னிங் விஜ‌ய்க்கு அமைந்திருக்கிற‌து?

ப‌ட‌ம் முழுக்க‌வே எல்லோருக்கும் காட்ஃபாத‌ர் போல‌ இருக்கிறான் நாய‌க‌ன். "டேய் அவ‌ர் யாரு தெரியுமாடா" என்ற‌ கூச்ச‌ல் எதை செய்ய‌ வேண்டுமோ, அதை ச‌த்த‌மில்லாம‌ல் இன்னும் வீரிய‌த்தோடு செய்திருக்கிறார்க‌ள். கூட‌வே விஜ‌யின் ப்ள‌ஸ் ஆன‌ காமெடி, குறும்புக‌ள் க‌தையோடே அமைந்த‌து கொடுப்பினைதான்.

க‌தை ம‌ண்ணாங்க‌ட்டி எல்லாம் தெரிந்திருக்கும். நாம் த‌மிழில் எப்ப‌டி செய்திருக்கிறார்க‌ள் என்று ம‌ட்டும் பார்ப்போம். ஏனெனில் ந‌ண்ப‌ன் 3 இடிய‌ட்ஸின் க்ரிஸ்ட‌ல் க்ளிய‌ர் ஃபோட்டோக்காப்பி. ஆங்காங்கே லேசான‌ க‌ரும்புள்ளிக‌ள். ஆனால் அவை க‌ண்க‌ளுக்கு தெரியாம‌ல் பார்த்துக் கொண்ட‌து ஷ‌ங்க‌ரின் சாமர்த்திய‌ம். இது போன்ற‌ ஒரு ப‌ட‌த்திற்கு ஷ‌ங்க‌ர் தேவையா என்று யோசித்தேன். ஆனால் 3 இடிய‌ட்ஸ் ஷ‌ங‌க்ருக்கு ஏற்ப‌டுத்திய‌ பாதிப்பு அவ‌ரை ச‌ரியான‌ தேர்வாக‌ ஆக்கியிருக்கிற‌து. த‌மிழுக்கு ஏற்ற‌து போல் மாற்றியிருக்கிறேன் என்ற‌ ஜ‌ல்லிய‌டித்து திரைக்க‌தையில் த‌ங்க‌ள் பெய‌ர் போட்டுக் கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் வெறும் இய‌க்க‌ம் ம‌ட்டுமே என‌ சொல்லியிருப்ப‌து பார‌ட்ட‌த்த‌க்க‌து.

அடுத்து ச‌த்ய‌ராஜ். வேறு யாரையும் யோசிக்க‌ முடியாத‌ தோற்ற‌ம். எல்லோரும் எதிர்பார்த்த‌ தேர்வுதான். குழைத்து குழைத்து பேசி அம‌ர்க்க‌ள‌ப்ப‌டுத்தியிருக்கிறார். ப‌ட‌த்தின் ப‌ல‌ம‌ல்ல‌, ப‌ல‌வீன‌முமல்ல‌. கொடுத்து வேலையை ச‌ரியாக‌ செய்திருக்கிறார்.

ஜீவா. இந்த‌ த‌லைமுறை ந‌டிக‌ர்க‌ளில் த‌னுஷிற்கு அடுத்து என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ந‌டிக‌ர். விஜ‌யோடு ஒன்றாக‌ பார்த்த‌போது துள்ளினேன் நான். குறைந்த‌ ப‌ந்துக‌ளே எதிர்கொண்ட‌தால் ச‌த‌ம் ந‌ழுவிய‌ வீர‌ர் என‌லாம். என்னைப் பொறுத்த‌வ‌ரை பெர்ஃபெக்ட் காஸ்டிங் என்றால் அது இவ‌ர‌து கேர‌க்ட‌ர்தான். ஹேட்ஸ் ஆஃப் ஜீவா.

ஸ்ரீகாந்த் சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார். மாண‌வ‌ன் ரோலுக்கு மீசையெடுத்து, உட‌ம்பை குறைந்துக் கொண்டு ஓர‌ள‌வு  வெற்றியும் பெற்றிருக்கிறார். என்னைக் கேட்டால் ஜெய‌ம் ர‌வி போன்ற‌ யாரையாவ‌து போட்டிருக்க‌லாம்.

இலியானா. முனிம்மா க‌ல‌க்கியிருக்கிறார். இவ‌ர‌து எந்த‌ ப‌ட‌த்தையும் நான் பார்த்த‌து இல்லை. பொண்ணு சும்மா சுர்ருன்னு ந‌டிச்சிருக்கு. பாட‌ல்க‌ளில் ம‌ட்டும் ந‌ம்முட‌ன் சேர்ந்து விஜ‌யை ர‌சிக்குது.

ஹாரீஸ். பாட‌ல்க‌ள் ஹிட் என்ப‌தை தாண்டி ப‌ட‌த்தில் இருக்கிறார் ஹாரீஸ். என் க‌ண் முன்னே & ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் பாட‌ல்க‌ள் காட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் தான். எங்கேயும்  உன்னாலே உன்னாலே மெட்டுக‌ளை கேட்க‌ முடியாம‌ல் இருந்த‌தே பெரிய‌ விஷ‌ய‌ம்.

கார்க்கி. பாட‌ல்க‌ளோடு வ‌ச‌ன‌மும் எழுதியிருக்கிறார். இந்தியில் ச‌க்கை போடு போட்ட‌ ச‌மாத்கார் / ப‌லாத்கார் காட்சியை அழ‌காக‌ த‌மிழ்ப்ப‌டுத்தியிருக்கிறார். என்ன‌ன்னு கேட்காம‌ நீங்க‌ளே பாருங்க‌. 2 வ‌ரியில் ஒரு சிறுவ‌ன் ஃப்ளாஷ்பேக்கை சொன்ன‌வுட‌ன் "என்ன‌டா திருக்கிற‌ள் சைசுல‌ ஃப்ளாஷ்பேக்கை முடிச்சிட்ட" என்று ர‌சிக்க‌ வைக்கிறார். “ரெண்டு காலு உடைஞ்ச‌பிற‌குதான் சார் நான் சொந்த‌க்காலிலே நிற்கிறேன்"” இன்னும் ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள். இன்று மாலை பார்க்கும்போது நோட் ப‌ண்ணிட்டு வ‌றேன். ஆமாங்க‌. மாலை காட்சியும் போறேன்.

விஜ‌ய். வெல். ஹ‌வ் டூ சே????? என‌க்கு விஜ‌யை பிடிக்கும்தான். ஆனால் எப்போதும் அவ‌ரை சிற‌ந்த‌ ந‌டிக‌ர் என‌ வாதிட்ட‌தில்லை. அதே ச‌ம‌ய‌ம் வ‌யித்தெரிச்ச‌ல் எஸ்.எம்.எஸ் ஆசாமிக‌ள் சொல்வ‌து போல‌ ஒரேய‌டியாக‌ நிராக‌ரிக்க‌வும் முடியாது. வேலாயுதித்தில்‌ வ‌ந்த‌ அதே விஜ‌ய். ச‌ட்டையை ம‌ட்டுமே மாற்றியிருக்கிறார். த‌லைமுடி கூட‌ மாற‌வில்லை. ஆனால் ப‌ட‌த்தில் விஜ‌ய் எவ்வ‌ள‌வு க‌ச்சித‌மாக‌ ரோலை ந‌டித்திருக்கிறார் என்று பாருங்க‌ள். அதுதான் விஜ‌ய். அவ‌ருக்கே உரிய‌ குறும்பும், காமெடியும் குஷி, ச‌ச்சினுக்கு பிற‌கு ச‌ரியாக‌ அமைந்திருக்கிற‌து. ஒரு சில‌ காட்சிக‌ளில் ம‌ட்டும் அமிர்கான் த‌ந்த‌ ரியாக்ஷ‌ன்க‌ளை த‌ர‌ முய‌ற்சி செய்திருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி, த‌ன‌க்கு என்ன‌ வ‌ருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நேற்று ட்விட்ட‌ரில் "சத்யன்,ஜுவா, விஜய்,சத்யராஜ், ஸ்ரீகாந்த். இந்த வரிசையில் நடிப்பு இருக்குமென யூகிக்கிறேன்" என்று சொல்லியிருந்தேன். அதை பொய்யாக்கி விஜ‌ய் வென்றுவிட்டார். கில்லி ஒரு ஆக்ஷ‌ன் ப‌ட‌ம். அதோடு இதை ஒப்பிட‌ முடியாது. ஆனால் கில்லிதான் என‌க்கு விஜ‌யின் சிற‌ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. ஆம், இருந்த‌து.

ப‌ட‌த்தில் விஜ‌ய் யாரையும் அடிக்க‌வில்லை. ஆனால் ச‌த்ய‌ராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட‌ அவங்க‌ அக்கா கூட‌ விஜ‌யை அடிக்கிறார்.அர‌ங்கில், இருக்கும் எல்லா கெட்ட‌ வார்த்தைக‌ளும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு வெற்றிக்காக‌ இத்த‌னை பேரிட‌மா அடி வாங்குவ‌து என‌ வ‌ழ‌க்க‌ம் போல் வ‌க்க‌னையா குறுஞ்செய்தி அனுப்ப‌லாம். ஆனால் த‌ன‌க்கென‌ இமேஜ் எதுவும் எல்லாம் இல்லையென்ப‌தை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ நிரூபிக்கிறார் விஜ‌ய்.

ப‌ட‌த்தின் குறைக‌ளாக‌ பார்த்தால் நீள‌த்தை சொல்ல‌லாம். அது எல்லா ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்திலும் இருக்கும் ஒரு குறை. ஆனால் எல்லா காட்சிக‌ளையும் க‌தையோடு பிண்ணிய‌து திரைக்க‌தை ஆசிரிய‌ரின் சாம‌ர்த்திய‌ம். ப‌ட‌ம் முடிந்த‌ பின் வரும் 5,10 நிமிட‌ காட்சிக‌ள் சில‌ருக்கு பிடிக்காம‌ல் போக‌லாம்.

ந‌ண்ப‌ன் – Honest remake. And a best feel good movie in tamil.

21 கருத்துக்குத்து:

! சிவகுமார் ! on January 12, 2012 at 10:49 AM said...

விஜய்யின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம் போல.

amas on January 12, 2012 at 10:51 AM said...

நேர்மையான விமர்சனம், பாராட்டுக்கள்!
Long awaited successful feature film for Vijay. ஒரு நல்ல பொழுது போக்குச் சித்திரத்தை ஷங்கர் கொடுத்ததற்கு அவருக்கும் நன்றி சொல்லணம். அவருடைய ரீசென்ட் படங்கள் என் மதிப்பை பெறவில்லை. இந்த படம் நன்றாக அமைந்தது எல்லோருக்குமே நல்லது தான் :-) All izz well!
amas32

Sarav on January 12, 2012 at 10:51 AM said...

அழகா சொல்லி இருக்கீங்க.... மாலை பாத்துட்டு இன்னும் நிறைய எழுதுங்க...

குழந்தபையன் on January 12, 2012 at 11:15 AM said...

தலைவர் நடிக்க ஆரம்பிச்சதே வெற்றி தான்.. விரட்டி பிடித்து கொண்ட ஹாட்ரிக் வெற்றி..கார்கியின் முகத்திலிருந்த சந்தோஷத்தை பக்கத்துக்கு சீட்டில் இருந்து பார்த்தேன்..

மதன் கார்க்கிக்கு பூங்கொத்து தரலாம்..வசனங்கள் எல்லாம் அருமை..பாடல் காட்சிகள் ஏமாற்றம்.. 5 மணிக்கு ஆரம்பித்து படம் முடிந்து வெளியே வரும் போது சூரியன் உதித்தது ரசிகர்கள் முகங்களில்,,, :))))

உண்மைத்தமிழன் on January 12, 2012 at 11:33 AM said...

போச்சுடா.. இந்தப் படம் ஜெயிச்சுட்டா அணில்குட்டிகளின் ஆட்டம் தாங்க முடியாதே..

"ராஜா" on January 12, 2012 at 11:41 AM said...

நண்பன் வெற்றி பெற வாழ்துக்கள் ....

திருவாருரிலிருந்து சுதர்சன் on January 12, 2012 at 11:44 AM said...

பப்ளி ரோல்களில் விஜய்யை யாராலும் அடிச்சிக்க முடியாது.. சச்சின்..காவலனைத் தொடர்ந்து..நண்பனிலும் அப்படி ஒரு கலர்புல் விஜய்யை பார்ப்பதற்கு மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்... சனிக்கிழமை தான் டிக்கெட் கிடைத்தது.. :( படம் பற்றி நீங்கள் சொன்னது மனதுக்கு மிகுந்த நிறைவு ( நான் விஜய் ரசிகன் அல்லாத போதும்).. தளபதிக்கும், தளபதியின் தளபதிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...!! :)

மோகன் குமார் on January 12, 2012 at 11:45 AM said...

நாங்களே குடும்பத்தோட இன்னிக்கு போறோம்னா பாத்துக்குங்க !! ( None of us are Vijay fan)

படம் ஹிட் என்பது வரும் முன்னே தெரிந்த ஒன்று தான்

அமுதா கிருஷ்ணா on January 12, 2012 at 2:30 PM said...

என் பசங்க இரண்டும் காலை 7.45 ஷோவிற்கு என்னை விட்டுட்டு போயிடுச்சுங்க.இன்னொரு முறை பார்க்கும் போது என்னை கூப்பிட்டு போவதாய் சொல்லி இருக்காங்க..

அசோகபுத்திரன் on January 12, 2012 at 3:42 PM said...

அது எப்படி கார்க்கி.. விஜயோட மொக்க படங்களை எல்லாம் வயலண்டா பாரட்டிட்டு சூப்பர் படத்தை சைலண்டா பாராட்டுறீங்க... இதுவரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஜய் படம் சச்சின்.. இனி நண்பன்...

ஸ்வீட் எடு.. கொண்டாடு..

ப.செல்வக்குமார் on January 12, 2012 at 6:13 PM said...

விஜய் படங்களிலேயே நான் அதிகம் ரசித்தது சச்சின் விஜயைத்தான். அதில் அவர் செய்திருக்கும் குறும்பும், கலகலப்பும் வேறு எந்த நடிகராலும் முடியாதுனுதான் நினைக்கிறேன்.

நண்பன் பார்த்துட்டு சொல்லுறேன் :))

தர்ஷன் on January 12, 2012 at 8:09 PM said...

வாழ்த்துக்கள் சகா, பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன். 3 இடியட்ஸ் 3 முறை பார்த்து விட்டேன். சோ சுவாரஸியம் குறையுமோ எனத்தான் யோசனையாய் இருக்கிறது.

Gopi on January 12, 2012 at 10:30 PM said...

//ஒரு சில‌ காட்சிக‌ளில் ம‌ட்டும் அமிர்கான் த‌ந்த‌ ரியாக்ஷ‌ன்க‌ளை த‌ர‌ முய‌ற்சி செய்திருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி, த‌ன‌க்கு என்ன‌ வ‌ருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்//

அங்கதான் ஒன்னும் வரலையே.

Gopi on January 12, 2012 at 10:35 PM said...

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=OrmENWn4FT8

தயவு பண்ணி இத பாத்துட்டு படத்துக்கு போங்க. அதான் கதை கிளைமாக்ஸ் எல்லாம் ஊரறிஞ்ச பரம ரகசியம் ஆச்சே!!!! அப்புறம் என்ன? தைரியமா பாருங்க

ILA(@)இளா on January 12, 2012 at 11:17 PM said...

//ஆனால் ச‌த்ய‌ராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட‌ அவங்க‌ அக்கா கூட‌ விஜ‌யை அடிக்கிறார்//
Same pinch. நானும் இப்படி ஒரு வரி எழுதியிருக்கேன். ஆனா வேற மாதிரி :)

tsjpraveen on January 14, 2012 at 9:29 AM said...

All is wellllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll.. Very happy entertaining film with a indepth message.. It is more gooooood than the Original version.. Vijay's Action is crystal perfect... Every one contributed perfectly which made such a film.. Great to see such a film in Tamil.. I never thought abt Hindi version when i was seeing the film Even though I saw Hindi version 10 times. Direction is as its best :)

அக்கப்போரு on January 22, 2012 at 4:09 PM said...

பஞ்ச் லயலாக் இல்லாத விஜய் படம்... திருந்துறதுக்கு வாய்ப்பிருக்கு....

R.Ramanan on January 24, 2012 at 11:33 PM said...

அசித் இனி தவளை என்று அழைக்கப்படுவார். ஏன் என்றால் இரண்டுமே தொப்பை உள்ள 5 அறிவு ஜந்துக்கள்...........

தவளை:- இனி வரும் படங்களில் நடிக்க முயற்ச்சி பண்ணுவேன்.
நிருபர் :- நடக்க முயற்ச்சி பண்ணுவேன் என்று சொல்லி இருக்கலாம்.

தளபதி :- எல்லாம் நன்மைக்கே ( நண்பன்)
தவளை :- யாரோ படம் எடுக்கிறார்கள் எனக்கு பெயர் வந்திடுது( வாலி, வரலாறு, பில்லா)

தளபதி சொன்னது : - நடப்பது உடல் ஆரோகியத்துக்கு நல்லது
தவளை சொன்னது :- நடப்பது ஏன் படத்துக்கு நல்லது!!!!!!!!!!!

நடிக்க சொல்லி வற்புறுத்திய சக்ரி, மூட் அவுட் ஆனா அசித்!! இயல்பாக இருக்கனும் நடிக்க கூடாதேன்கிறது அவர் கொள்கை போல!

அஜித் :- இனி கவுதம் படங்களில் நடிக்க மாட்டேன்.
நிருபர் :- சார், சும்மா காமடி பண்ணாதிங்க. வேற எந்த படத்திலை நடித்து இருக்கிறிங்க???

சக்ரி :- நீ தளபதி மாதிரி நடனம் ஆடவும் இல்லை சூர்யா அளவுக்கு நடிக்கவும் இல்லை.
தவளை :- அப்போ நான் ஓரளவாவது செய்து இருக்றேன். எல்லாரும் நல்லாக கேட்டுகொள்ளுங்க, கேட்டுகொள்ளுங்க...........

சக்ரி :- பில்லாவில் பார்வதி ஓமகுட்டான் தான் உங்களுக்கு ஜோடி.
தவளை :- பார்வதி மட்டும் போதும் ஓமகுட்டான் வேண்டாம்.

நிருபர் :- ஆக்சன் படத்தில ஏன் ராஜசேகரை ஒளிபதிவாளர் ஆக்கினீர்கள்?
சக்ரி :- அப்படியாவது தொப்பையை மறைக்கலாம என்றுதான்.

விஷ்ணுவர்த்தன் :- இந்த சீனில நீங்க கண்டிப்பா நடித்து ஆகணும்.
அசித் :- இது டூயட் சீன் எதுக்கு கண்டிப்பா? அன்பா நடிக்கிறன்...

சுசி on January 29, 2012 at 8:07 PM said...

கலக்ஸ் விமர்சனம் கார்க்கி :)

இரசிகை on February 11, 2012 at 3:42 PM said...

"ந‌ண்ப‌ன் -‍ எல்லோருக்கும்(karki)"

:)

remba nallaayirukku..

இரசிகை on February 11, 2012 at 3:44 PM said...

enakku viyai..tta

dance plus voice pidikkum.
ilaiyaraja tave 2 paattu paadittaare!!
2me nallaayirukkum.

 

all rights reserved to www.karkibava.com