Jan 5, 2012

God bless


 

நேற்றைய‌ ஹாட் நியூஸ் த‌னுஷிற்கும் சுருதிக்கும் காத‌ல் என்ப‌துதான். இது வ‌த‌ந்தி என்று சில‌ர் சொல்கிறார்க‌ள். சில‌ர் உண்மை என்கிறார்க‌ள். ஆனால் ப‌ல‌ர் இது ஒரு விள‌‌ம்ப‌ர‌ யுக்தி என்கிறார்க‌ள். முற்றிலும் உண்மைக்கு புற‌ம்பாக‌ இருக்க‌ வாய்ப்புக‌ளே இல்லை என்ப‌தே என் க‌ணிப்பு. உண்மையாக‌வே இருந்தாலும் அடுத்த‌வ‌ர் பெர்ச‌ன‌ல் விஷ‌ய‌த்தில் த‌லையிட‌ வேண்டுமா என்ப‌து சில‌ரின் எண்ண‌ம். ச்சும்மா‌ ஜாலிக்குத்தானே என‌ நேற்று ட்விட்ட‌ரில் "காட்டு காட்டினேன்". ஜ‌ஸ்ட் ஃபார் ஃப‌ன் என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்காக‌வும், ட்விட்ட‌ரில் ப‌ழைய‌ ட்விட்டுக‌ள் காணாம‌ல் போவ‌தாலும் இங்கே ப‌திகிறேன்.

மு.கு:

1) எங்கேயும் சுருதியை குறை சொல்ல‌வில்லை. த‌னுஷைத்தான்... :)))

2) God bless என்ப‌து த‌னுஷ் த‌ன‌து எல்லா ட்விட்டிலும் சேர்க்கும் ஒரு வார்த்தை.

_______________________________

இனிமேல‌ இசை விம‌ர்ச‌க‌ர்க‌ள் த‌னுஷ‌ பார்த்து "சுருதி சேர‌ல‌"ன்னு சொல்ல‌ முடியாது

அப்போ வொய் திஸ் கொலைவெறிடின்னு ஸ்ருதிய‌ பார்த்து பாட‌லையா? அப்பாக்கிட்ட‌ சொல்லிட்டியான்னு ஐஷ்வ‌ர்யாவ‌ பார்த்துதான் பாடினாரா?

3 ப‌ட‌ம் காத‌ல் தோல்வி ப‌ற்றிய‌ ப‌ட‌மாம். ம்ஹூம். இதில் த‌னுஷ் வ‌ழ‌க்க‌ம்போல் வாழ‌வில்லையாம். வெறும் ந‌டிப்புதானாம் #godbless

காட் பிளஸ் தம்பி் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு.போயிருந்தா வீடாச்சும் கிடைச்சிருக்கும். #உங்களில்யாரடுத்தபிரபுதேவா

அப்ப‌வே சொல்லுச்சு அந்த‌ த‌னுஷ் த‌ம்பி என்னை பார்த்தா பிடிக்காது.. பார்க்க‌ பார்க்க‌த்தான் பிடிக்கும்னு..

நான் த‌னுசு ராசி, மூல‌ ந‌ட்ச‌த்திர‌ம். ஆனா த‌னுசு அள‌வுக்கு என‌க்கு ராசியில்லை. :((( #god bless

Task Completed.. ந‌ம்ம‌ அடுத்த‌ டார்கெட். சிம்பு இப்ப‌ ரூட் விடுற‌ ச‌ர‌த்குமார் பொண்ணு வ‌ர‌லட்சுமி -த‌னுஷின் ம‌ன‌சாட்சி #godbless

அய்ய‌ய்யயோ.. இவ‌ன‌ டின்ன‌ருக்கு வேற‌ கூப்பிட்டேனே!! மாம‌னார்கிட்ட‌ த‌ப்பிச்ச‌து, மாப்பிள்ளைக்கிட்ட‌ போயிடுமோ - அமிதாப்ஜி க‌வ‌லை

ஒரே வ‌ருஷ‌த்துல‌ இன்டெர்னேஷ‌ன‌ல் ஃபேம், நேஷ‌ன‌ல் அவார்ட்,ஸ்டேட் லெவ‌ல் ஃபிக‌ர் பிடிச்ச‌ த‌னுஷ‌ சின்ன‌ வ‌ய‌சுல‌ ஒரு வாத்தி எதுக்கும் லாய‌கில்லைன்னாராம்

ந‌ல்ல‌ வேளை.. விஜ‌ய்காந்துக்கு ரெண்டும் ப‌ச‌ங்க‌ளா போச்சு #god bless

அப்ப‌வே சொன்னான் என் ஃப்ரென்டு. த‌னுஷ், ர‌ஜினி+க‌ம‌ல் மாதிரின்னு.. இத‌த்தான் சொல்லியிருக்கான். என‌க்குத்தான் புரிய‌ல‌.

God blessன்னு போடுற‌ப்ப‌ கிண்ட‌ல் ப‌ண்ணோமே.க‌டைசில காடு பிள‌ஸ்ஸிட்டாரே.ஃபிக‌ர் வேண்டுவோர் இனி ட்விட்டில் காட் பிள‌ஸ் விகுதி சேர்க்க‌வும்

க‌ம‌ல்கிட்ட‌ இருந்து ந‌டிப்ப‌தானே வாங்க‌ சொன்னாங்க‌? இவ‌ன் என்ன‌டான்னா.. :)

ப‌ய‌புள்ள‌ உட‌ம்ப‌ த‌விர‌ ச‌கலவித‌மான‌ திற‌மையும் வ‌ள‌ர்த்து வ‌ச்சிருக்கு #Godbless

சூர்யா விட‌ த‌னுஷுக்குத்தான் தெற‌மை அதிக‌ம்ன்னு சொன்ன‌ப்ப‌ எகிறிய‌வ‌ங்க‌ எல்லாம் வாங்க‌ப்பா.. இப்ப‌ ஒத்துக்கிறீங்க‌ளா? #godbless

க‌டைசியா ஒண்ணு சொல்றேன்.இதெல்லாம் சொம்புவ‌ க‌திக‌ல‌ங்க‌ செய்யுமென்ப‌தால் என‌க்கு நெம்ப‌ ச‌ந்தோஷ‌ம். க‌ல‌க்குப்பா காட் ப்ள‌ஸ்

ஹைஃபை ஃபிக‌ர க‌ரெக்ட் செய்ய‌ பீட்ட‌ர் இங்லீஷு தெரிய‌ணும் என்ற‌ மாயையை உடைத்த‌ ம‌கானே!! #க‌ட‌வுட்டுக்கு வ‌ச‌ன‌ம் ரெடிப்பா #godbless

துள்ளுவ‌து இள‌மை என்ப‌தால் முத‌லில் காத‌ல் கொண்டேன். பின் சுள்ளானாக‌ இருந்தாலும் என் ட்ரீம்ஸ்ல‌ சூப்ப‌ர் ஸ்டார் ஆகுற‌‌ மாதிரி நினைச்சேன்.அப்ப‌தான் என் தேவ‌தையை க‌ண்டேன். ம்ம். அது ஒரு க‌னாக்கால‌ம். புதுப்பேட்டை நாய‌க‌னின் ம‌க‌ளோடு என் திருவிளையாட‌ல் ஆர‌ம்ப‌ம் ஆன‌து. சில‌ர் நீ ஒரு ப‌ர‌ட்டை என்கிற‌ அழ‌குசுந்த‌ர‌ம் என‌ எள்ளி ந‌கையாடி என்னை பொல்லாத‌வ‌ன் ஆக்க‌ பார்த்தார்க‌ள்.யார‌டி நீ மோகினியென‌ ந‌ய‌ன் தாராவை பார்த்து கேட்ட‌த்தை த‌டுத்தார்க‌ள்..ப‌டிக்காத‌வ‌ன், குட்டி என்றெல்லாம் ஏள‌ன‌ம் செய்தாலும் உத்த‌ம‌புத்திரான‌க‌வே இருந்தேன்.திரும‌ண‌த்திற்கு பின் என் ஆடுக‌ள‌ம் தான் என்றாலும் சூப்ப‌ர்ஸ்டாருக்கு சீட‌னாக‌வே இருந்தேன். பாயும் புலியின் மாப்பிள்ளையான‌ நான் வேங்கையாக‌ இருக்க‌ கூடாதா? இனியும் ம‌ய‌க்க‌ம் என்ன‌ , உன‌க்கு த‌ய‌க்க‌ம் என்ன‌ என்று கிள‌ம்பினேன். இதோ ஐஷ்வ‌ர்யா, ந‌ய‌ன் தாராவுக்கு பின் 3வ‌தாக‌ சுருதியை சேர்ந்திருக்கிறேன். God bless

8 கருத்துக்குத்து:

amas on January 5, 2012 at 10:09 AM said...

"God blessன்னு போடுற‌ப்ப‌ கிண்ட‌ல் ப‌ண்ணோமே.க‌டைசில காடு பிள‌ஸ்ஸிட்டாரே.ஃபிக‌ர் வேண்டுவோர் இனி ட்விட்டில் காட் பிள‌ஸ் விகுதி சேர்க்க‌வும்" No wonder I see so many tweets with this tag now :-) All your doing , I guess! Way to go Karki :)
amas32

தராசு on January 5, 2012 at 11:46 AM said...

ங்கொய்யால

Sen22 on January 5, 2012 at 12:23 PM said...

Sema Tweets.. Karki... :))

ilavarasan on January 5, 2012 at 12:33 PM said...

எப்படித்தான் யோசிக்குறாய்ங்களோ ஐயோ ஐயோ..

சிவகுமார் on January 5, 2012 at 12:56 PM said...

ங்கொய்யால , Why this , this ,this !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ILA(@)இளா on January 5, 2012 at 9:14 PM said...

கருப்பு வண்ணம்தான் டாப்பு, செவுப்பு எல்லாம் டூப்பு
#காட்பிளசு

அக்கப்போரு on January 6, 2012 at 12:47 PM said...

//எங்கேயும் சுருதியை குறை சொல்ல‌வில்லை//
ஏன் சொல்லித்தான் பாருங்களேன் ...

அக்கப்போரு on January 6, 2012 at 12:49 PM said...

//ஹைஃபை ஃபிக‌ர க‌ரெக்ட் செய்ய‌ பீட்ட‌ர் இங்லீஷு தெரிய‌ணும் என்ற‌ மாயையை உடைத்த‌ ம‌கானே!! //
GOD bless u KARKI

 

all rights reserved to www.karkibava.com