Jan 10, 2012

blog.twitter.trek.sachin.vijay


 

myphoto

த‌மிழ்ம‌ண‌ம் சென்ற‌ ஆண்டின் டாப் 100 ப‌திவுக‌ளிலும் சாள‌ர‌ம் வ‌ர‌வில்லையென‌ ந‌ண்ப‌ர் மோக‌ன்குமார் ப‌திவில் சொல்லியிருந்தார். தொட‌ர்ந்து எழுதாத‌தும், ம‌ற்ற‌ ப‌திவுக‌ள் ப‌க்க‌ம் அதிக‌ம் எட்டிப் பார்த்து க‌மென்ட் போடாத‌தும் கார‌ண‌மாயிருக்க‌லாம். இதிலெல்லாம் என்ன‌ இருக்கிற‌து கார்க்கி என்று சொன்னாலும், பிளாக் என‌க்கு மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஒரு பெரிய‌ மாற்ற‌த்தை உங்க‌ளைப் போல‌ என‌க்கும் அது த‌ந்திருக்கிற‌து. அதில் இருந்து வில‌கி செல்வ‌து போல‌ ஒரு உண‌ர்வை இது த‌ந்த‌தாலே ச‌ற்று வருத்த‌மாயிருக்கிற‌து. அதுக்காக‌ வ‌சூல்ராஜா க‌ம‌ல் போல‌ ஏதேனும் ச‌ப‌த‌மெடுத்து உங்க‌ளை க‌ஷ்ட‌ப்ப‌டுத்த‌ போவ‌தில்லை. நிம்ம‌தியா‌ இருங்க‌ப்பா.

______________________________________________________________________

பிளாகை விட்டு ட்விட்ட‌ருகுத்தானே போனேன்!. அங்கே ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் ந‌ட‌ந்திருக்கிற‌து. Headlinesindia என்றொரு இணைய‌த்த‌ள‌ம் த‌ங்க‌ளை பிர‌ப‌ல‌மாக்கி கொள்வ‌த‌ற்காக‌ ஃபேஸ்புக், ட்விட்ட‌ர் இதிலெல்லாம் யார் பிர‌ப‌லமான‌வ‌ர்க‌ள் என‌ ஒரு தேர்த‌ல் வைத்திருந்தார்க‌ள். அர‌சிய‌ல், விளையாட்டு என‌ ப‌ல‌ பிரிவுக‌ளில் போட்டிக‌ள் ந‌ட‌ந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்ட‌ர் இதில் ம‌ட்டுமே நிஜ‌மான‌ பிர‌ப‌ல‌ம‌ல்லாத‌வ‌ர்க‌ள் போட்டியிட‌ முடிந்த‌து. இந்திய‌ அள‌வில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து என்றாலும் பெரும்பாலும் த‌மிழிணைய‌ ந‌ண்ப‌ர்க‌ளே அதிக‌ம் வாக்க‌ளித்தார்க‌ள். அத‌னாலே சிற‌ந்த‌ ட்விட்ட‌ர் * சிற‌ந்த‌ ஃபேஸ்புக்க‌ர் என‌ இர‌ண்டுமே த‌மிழ் இணைய‌ போட்டியாள‌ர்க‌ளே வெற்றி பெற்றிருக்கிறார்க‌ள். இந்திய‌ அளவில் என்று சொன்னால் இது ஹ‌ம்ப‌க் தான். ஆனால் த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள் என்ற‌ள‌வில் முத‌லாவ‌தாக‌ வ‌ந்த‌து சொல்லொண்ணா ம‌கிழ்ச்சியை த‌ந்த‌து என்ப‌து உண்மைதான். ட்விட்ட‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றியோ ந‌ன்றி

http://headlinesindia.mapsofindia.com/hiflyers/index.php

Untitled

______________________________________________________________________

வ‌ன‌ம் புகுத‌ல். 3 அல்ல‌து 4 மாத‌ங்க‌ளுக்கு ஒரு முறை ஒரு பிரேக் எடுப்ப‌தை வ‌ழ‌க்க‌மாக‌ வைத்திருக்கிறேன். எப்போதும் குடும்ப‌த்தின‌ர் அல்ல‌து நெருங்கிய‌ ந‌ட்புக‌ளுட‌னே இது சாத்தியாமாய் இருந்திருக்கிற‌து. இந்த‌ முறை ஒரு ட்ரெக்கிங் குழுவின‌ரோடு வ‌ன‌ம் புகும் வாய்ப்பு கிடைத்த‌து. அட‌ர்வ‌ன‌த்தின் ந‌டுவே இருந்த‌ அருவியில் குளித்து, ந‌ட்ட‌ ந‌டுக்காட்டில் டென்ட் அடித்துத் தூங்கி, சாலையே இல்லாத‌ வ‌ழியில் ஜீப்பை க‌ட்டி இழுத்து சென்று என‌ ப‌ல‌ சுவார‌ஸ்ய‌மான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் தொகுப்பாய் அமைந்த‌து. இது குறித்து விரிவாய் எழுத‌ வேண்டுமென்ற‌ எண்ண‌ம் இப்போது இருப்ப‌தால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

 

______________________________________________________________________

ச‌ச்சினுக்கு யார் யாரோ அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார்க‌ள். அவ‌ரால் 100 அடிக்க‌ முடிய‌வில்லையாம். அவ‌ர் அடிக்க‌ வேண்டிய‌து 100வது நூறு என்ப‌தை யாரும் க‌ணக்கில் கொண்ட‌தாய் தெரிய‌வில்லை. அவ‌ர் 100 அடித்து ஒரு வ‌ருட‌மாகிவிட்ட‌து என்றும் ஒரு செய்தி. உல‌க‌க்கோப்பையில் அடித்த‌து என்னவாம் என்றால் அது ஒரு நாள் போட்டியாம். அப்போ டெஸ்ட்டின் ம‌ட்டுமா அவ‌ர் 100வ‌து 100 அடிக்க‌ போகிறார்? 80,90 க‌ளை அவ‌ரால் 100 ஆக‌ க‌ன்வெர்ட் செய்ய‌ முடிய‌வில்லையாம். அத‌னால் அவ‌ர் ஓய்வு பெற‌ வேண்டுமாம். இப்ப‌டி ஐம்ப‌து ஐம்ப‌தாக‌ அடித்த‌தால் ச‌ச்சின் ச‌த்த‌மின்றி இன்னொரு சாத‌னையும் செய்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அதிக‌ 50 அடித்த‌வ‌ர் என்ற‌ சாத‌னையும் ச‌ச்சின் வ‌ச‌ம் இப்போது. ஆஸி. தொட‌ரில் ச‌ச்சிந்தான் அதிக‌ ர‌ன் குவித்த‌ இந்திய‌ வீர‌ர். அடுத்த‌ இட‌த்தில்... ந‌ம்புங்க‌ள் ந‌ம்ம‌ பைய‌ அஷ்வின். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில்தான் சச்சினை ஓய்வு பெற‌ சொல்கிறார்க‌ள். 4 இன்னிங்க்ஸீலும் ந‌ம்ம‌ சுவ‌ரில் ஓட்டையில் போட்டு போல்ட் ஆக்கியிருக்கிறார்க‌ள். அது குறித்து ஒரு பேச்சும் காண‌வில்லை. உற்று நோக்கினால் நெ.1 ஆக‌ இருப்ப‌த‌ன் சிக்க‌ல்க‌ளும், நெ.2 ஆக‌ இருப்ப‌த‌ன் செள‌க‌ரிய‌ங்க‌ளும் ந‌ம‌க்கு இதிலிருந்து விள‌ங்கும்.

த‌னிம‌னித‌ சாத‌னைக‌ளா முக்கிய‌ம் என்று கேட்க‌லாம். நிச்ச‌யம் இல்லை. ஆனால் எல்லா த‌னி ந‌ப‌ர்க‌ளும் இவ‌ரைப் போல் ஆடினால் அணி வெல்வ‌து நிச்ச‌ய‌ம் தானே?

_____________________________________________________________________

image

ந‌ண்ப‌ன் வியாழ‌க்கிழ‌மை வெளிகிற‌து. நான் ப‌திவெழுத‌ வ‌ந்த‌பின் வெளியான‌ பெரும்பாலான‌ விஜ‌ய் ப‌ட‌ங்க‌ள் என‌க்கு ஏமாற்ற‌த்தையே த‌ந்திருக்கின்ற‌ன‌. காவ‌ல‌ன் ம‌ட்டும் என‌க்கு பிடித்திருந்த‌து. ஆனால் வ‌சூலில் அதிக‌ம் மின்ன‌வில்லை. வேலாயுத‌ம் ம‌சாலா ப‌ட‌ம் என்ற‌ள‌வில் திருப்தியாய் இருந்த‌து. வ‌சூலிலும். இருந்தும் கில்லி போல் ஒரு Rivetting stuff இன்னும் வ‌ர‌வில்லை. ந‌ண்ப‌ன் அந்த‌ குறையை போக்க‌லாம். அதை விட‌ துப்பாக்கியும், கெள‌த‌ம் ப‌ட‌த்தையும் அதிக‌ம் எதிர்பார்க்கிறேன். துப்பாக்கியில் விஜ‌ய் இன்னும் இள‌மையாக‌, ஸ்மார்ட்டாக‌ இருக்கிறார். கெள‌த‌ம் ப‌ட‌ம் எப்ப‌டி இருந்தாலும் விஜ‌யை இன்னும் சிற‌ப்பாக‌ காட்டுவார் என்ப‌தில் ந‌ம்பிக்கை இருக்கிற‌து. இவ‌ர்க‌ளையெல்லாம் தாண்டி விஜ‌ய் சேர்ந்து ப‌ட‌ம் ப‌ண்ண‌ வேண்டிய‌ இயக்குன‌ர்க‌ளாக‌ நான் நினைப்ப‌து இவ‌ர்க‌ளைத்தான்.

1) ராஜேஷ்( பாஸ் எ பாஸ்க‌ர‌ன், சிவா ம‌ன‌சுல‌ ச‌க்தி)
2) ப்ரியா  (க‌ண்ட‌ நாள் முத‌ல் போல‌ ஒரு ப‌ட‌ம் விஜ‌ய் செய்ய‌ வேண்டுமென்ப‌து என் ஆசை)

8 கருத்துக்குத்து:

வேதாளம் அர்ஜுன் on January 10, 2012 at 10:34 AM said...

காக்டெயில்... கிக்கோ கிக்... படங்கள் அருமை.

"நண்பனு"க்கு வாழ்த்துகள்.

Sarav on January 10, 2012 at 11:49 AM said...

தட்டான் பூச்சி படம் அருமை...

vanila on January 10, 2012 at 11:50 AM said...

கெள‌த‌ம் ப‌ட‌ம் எப்ப‌டி இருந்தாலும் விஜ‌யை இன்னும் சிற‌ப்பாக‌ காட்டுவார் என்ப‌தில் ந‌ம்பிக்கை... God Bless.

amas on January 10, 2012 at 12:36 PM said...

கதம்ப மாலை, புத்தாண்டில்! வாழ்த்துகள் :-)
amas32

Butter_cutter on January 10, 2012 at 12:47 PM said...

அட சின்னார் ஆ வந்திருந்தீங்க சொல்லீட்டு வந்திருந்தா சந்திச்சு இருக்கலாம்

Rathnavel on January 10, 2012 at 1:08 PM said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

KSGOA on January 11, 2012 at 6:19 AM said...

ட்வீட்டரில் முதலிடத்திற்கு வாழ்த்துகள்.
போடோஸ் நல்லா இருக்கு.இந்த வருடமும் நிறைய எழுதுங்க.

vinu on January 11, 2012 at 10:57 AM said...

நமக்குத் தண்ணீர் தர மறுத்து பிராபளம் செய்யும் கேரளாவிற்கு சுற்றுலா சென்று அவர்களை வாழவைக்கும்!

திரு கார்கி அவர்களை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் கோவளம் கடற்கரையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது அனைவரும் வருக வருக!

 

all rights reserved to www.karkibava.com