Jan 31, 2012

ஸ்டாலின்


 

ஸ்டாலின்.

திமுக‌வின் அடுத்த‌ நம்பிக்கை. இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌வ‌லான‌ ஆத‌ர‌வு பெற்ற‌வ‌ர். நிர்வாக‌த்தில் சிற‌ந்த‌வ‌ர். அழ‌கிரி, க‌னிமொழி, த‌யாநிதி போலில்லாம‌ல் க‌டின‌மான‌ உழைப்பால் க‌ட்சியில் உய‌ர்ந்த‌வ‌ர்.அடுத்த‌ த‌லைமை. எல்லோரையும் போல‌ என‌க்கும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ள் இருந்த‌ன‌, சில‌ கால‌ம் முன்பு வ‌ரை. க‌ட‌ந்த‌ ஆட்சி திமுக‌ மீது பெரும் கோவ‌த்தையும், வெறுப்பையும் ஏற்ப‌டுத்தியெதென்றால், ஏனோ ச‌மீப‌த்திய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ஸ்டாலின் மீதான‌ ந‌ம்பிக்கையை சுக்கு நூறாக்குக்கின்ற‌ன‌.

இதில் ஸ்டாலினின் நேர்மையை விவாதிக்க‌ விரும்ப‌வில்லை. ஒரு த‌லைவ‌னுக்குண்டான‌ த‌குதிக‌ள் ப‌ற்றியே பேச‌ விரும்புகிறேன். ஒரு க‌ட்சிக்கு த‌லைவ‌னாக‌வோ, இந்தியா போன்ற‌ ஒரு நாட்டில் மாநில‌ முத‌ல்வ‌ராகாவோ விரும்புகிற‌வ‌ருக்கு வாய்ப்புக‌ளை உருவாக்க‌வும், கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌வும் தெரிய‌ வேண்டும். அண்ணா ம‌றைவுக்கு பிற‌கு ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளின் இடையில் சாம‌ர்த்திய‌மாக‌ த‌லைவ‌ர் ஆன க‌லைஞ‌ரின் புத்திசாலித்த‌ன‌ம் ஸ்டாலினிட‌ம் வெளிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ள் எதுவும் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. த‌யாநிதி & க‌லாநிதி க‌ட்சியை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌தில் 1% கூட‌ ஸ்டாலின் நினைக்க‌வில்லை. எல்லாம் தானாக‌ ந‌ட‌க்கும் என‌ இருப்ப‌வ‌ன் த‌லைவ‌ன் இல்லை.

அண்டை மாநில‌மான‌ ஆந்திராவை எடுத்துக் கொள்ள‌லாம். ச‌ந்திர‌பாபு நாயுடு எப்ப‌டி க‌ட்சியை கைப்ப‌ற்றினார்?அத‌ன்பின் அமைந்த‌ அவ‌ர‌து த‌லைமையிலான‌ 5 ஆண்டு ஆட்சி மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாக‌ ஆக‌வில்லையா? 2011 தேர்த‌லுக்கு முன்பு எப்போது அழ‌கிரியும், க‌னிமொழியும் போட்டிக்கு வ‌ந்தார்க‌ள்? 40 ஆண்டுக‌ளாக‌ க‌ட்சிக்கு உழைத்து வ‌ரும் ஸ்டாலின் அதை த‌டுக்க‌ ஏதும் யூக‌ம் அமைத்தாரா அல்ல‌து அவ‌ர் த‌லைவ‌ராக‌த்தான் ஏதும் திட்ட‌ம் தீட்டினாரா? எல்லாம் க‌னிந்து தானாக‌ த‌ன் கையில் வ‌ருமென‌ காத்திருப்ப‌வ‌ரை எப்ப‌டி ந‌ம்புவ‌து?

முல்லை பெரியாறு பிர‌ச்சினையை எடுத்துக் கொள்ள‌லாம். உண‌ர்வுப்பூர்வ‌மாக‌ போராடுவ‌து இருக்க‌ட்டும். திமுக‌ அத‌ற்காக‌ போராடிய‌ முறைக‌ள் ந‌கைப்புக்கு உரிய‌தாக‌த்தான் அமைந்த‌ன‌. த‌ன்னிச்சையாக‌ எழுந்த‌ ம‌க்க‌ள் புர‌ட்சி ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோரை எல்லையில் சேர்த்த‌து. க‌ள‌ம் சென்று அதை நெறிப்ப‌டுத்தாம‌ல் ம‌னித‌ ச‌ங்கிலி சென்னையிலாம். இறுதிவ‌ரை இந்த‌ விஷ‌ய‌த்தில‌ ஸ்டாலினின் க‌ருத்து இதுவென‌ எங்கேயும் ம‌க்க‌ள் ம‌ன‌ம் வ‌ரை செல்லுமாறு அவ‌ர் ப‌திவும் செய்ய‌வில்லை. சாத‌க‌மாக‌வோ,பாத‌க‌மாக‌வோ க‌லைஞ‌ர் பெய‌ரின்றி தின‌ப்ப‌த்திரிக்கை எதுவும் வ‌ருவ‌தில்லை. த‌ன்னைப் ப‌ற்றி செய்திக‌ள் வ‌ந்த‌வ‌ண்ண‌ம் இருக்க‌ வேண்டுமென்ப‌தில் த‌ந்தை காட்டிய‌ அக்க‌றை ம‌க‌னுக்கு ம‌ற‌ந்தே போன‌து ஆச்ச‌ரிய‌ம்தான்.

இளைஞ‌ர்க‌ள் திமுக‌வ‌ச‌ம் என்பார்க‌ள். கால‌த்திற்கேற்ப‌ இளைஞ‌ர்க‌ளை க‌வ‌ர்ந்திழுக்கும் கொள்கைக‌ளும், போராட்ட‌ முறைக‌ளும் கையாண்ட‌ திமுக‌ செத்து போயிற்று. இணைய‌ம் ப‌க்க‌ம் திமுக‌வின் செய‌ல்பாடுக‌ள் ஆர‌ம்பிக்க‌வே இல்லை. ல‌க்கி, அபிஅப்பா, அப்துல்லா போன்றோரின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை திமுக‌வின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளாக‌ என்னால் பார்க்க‌ இய‌லவில்லை. மேய‌ராக‌ இருந்த‌ போது இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் இருந்த‌ ந‌ம்பிக்கை, அவ‌ர் உள்ளாட்சித் துறை அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது கிடைக்காம‌ல் போன‌துதான் நித‌ர்ச‌ன‌ம்.

“க‌ண்ணிய‌மான‌ அர‌சிய‌ல் செய்கிறார். இதுவ‌ரை எந்த‌ ஊழ‌ல் புகாரிலும் சிக்க‌வில்லை.”   இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் நிச்ச‌ய‌ம் அவ‌ர் மீதான‌ ம‌திப்பை கூட்டுக்கின்ற‌ன‌. ஆனால் ஒரு த‌லைவ‌னுக்கு தேவையான‌ சாதூர்ய‌ங்க‌ள் இவ‌ரிட‌ம் இருந்து வெளிப்ப‌ட்ட‌துண்டா என்ப‌தே கேள்வி. இவ‌ரை போன்ற‌‌வ‌ர்க‌ள் ஒரு நிறுவ‌ன‌த்தில் மிக‌ முக்கிய‌ பொறுப்பில், CEO போன்று, இருக்க‌லாம். ஆனால் ஒரு Entrepreneur ஆக‌ இதைத் தாண்டி ஏதோ ஒன்று தேவைப்ப‌டுகின்ற‌தே. த‌லைவ‌ன் என்ப‌வ‌ன் ச‌ம்ப‌ள‌த்திற்கு வேலை செய்ப‌வ‌ன் அல்ல‌, ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌ வேண்டிய‌வ‌ன்.

காங்கிர‌ஸ் உட‌னான‌ உற‌வில் ப‌ல‌ சிக்க‌ல்க‌ள் இருந்த‌து என்ன‌வோ உண்மைதான். அத‌ற்காக‌ ஒவ்வொரு வாய்தாவின் போதும் வீராவேச‌மாக‌ பொதுக்குழுவை கூட்டுவ‌தும், போண்டா சாப்பிட்டப்பின் உற‌வு சிக்க‌லின்றி தொட‌ர்கிற‌து என்றும் அறிக்கை விட்ட‌தெல்லாம் கைப்புள்ள‌ காமெடி. 63 சீட்டுக‌ள் ப‌கிர்ந்த‌தும், அத‌ன் பின்ன‌ரும் இள‌‌ங்கோவ‌ன் போன்றோர் க‌ர்ஜித்த‌தும், அதை ஸ்டாலின் கூட‌ அமைதியாக‌ பார்த்த‌தும் திமுகைவை புலிகேசி அள‌விற்கு ம‌க்க‌ள் எண்ண‌ வ‌ழி செய்துவிட்ட‌ன‌. இனி புர‌ட்சிப்ப‌டை அமைத்தாலும் மீண்டு வ‌ருவ‌து சிர‌ம‌ம்.

இனியும் க‌லைஞ‌ரின் வார்த்தைக்காக‌ தாம‌திக்காம‌ல் க‌ட்சியை கைப்ப‌ற்ற‌ முய‌லாவிட்டால் ஸ்டாலின் எப்போதும் எட்டாம் வ‌குப்பு பாட‌ப்புத்த‌க‌த்தில் இடம்பெற‌வே முடியாது. அது கூட‌  பிர‌ச்சினையில்லை. விஜ‌ய்காந்த‌ அந்த‌ ப‌க்க‌த்தை நிர‌ப்ப‌லாம். சொல்ல‌ப் போனால், இந்த‌ப் ப‌திவு எழுத‌ வேண்டுமென‌ தோன்றிய‌த‌ன் மூல‌கார‌ண‌ம் ஸ்டாலின் அல்ல‌. அச்ச‌த்தை விளைவிக்கும் கேப்ட‌னின் வ‌ள‌ர்ச்சி.

32 கருத்துக்குத்து:

ராஜகோபால்.S.M on January 31, 2012 at 10:14 AM said...

//அச்ச‌த்தை விளைவிக்கும் கேப்ட‌னின் வ‌ள‌ர்ச்சி. //

ஆமா பாஸ்,கேப்டன் முன்னைவிட கொஞ்சம் குண்டாகிட்டாரு..

சங்கர் நாராயண் @ Cable Sankar on January 31, 2012 at 10:14 AM said...

கேப்டன் வளர்ச்சி என்று எதை சொல்கிறாய்.?

ராஜகோபால்.S.M on January 31, 2012 at 10:21 AM said...

//இதில் ஸ்டாலினின் நேர்மையை விவாதிக்க‌ விரும்ப‌வில்லை. ஒரு "த‌லைவ‌னுக்குண்டான‌" த‌குதிக‌ள் ப‌ற்றியே பேச‌ விரும்புகிறேன். //

குண்டாவரதுதான் தகுத்தினா அஞ்சாநெஞ்சன் சரியா வருவாரு..

Anonymous said...

wake up call...nicely written without bias ...well done karkey

ராஜகோபால்.S.M on January 31, 2012 at 10:22 AM said...

//அச்ச‌த்தை விளைவிக்கும் கேப்ட‌னின் வ‌ள‌ர்ச்சி. //
//கேப்டன் வளர்ச்சி என்று எதை சொல்கிறாய்.?//

கடைசி வரி இல்லாம இருந்தா, மத்த எல்லாம் சரி.

கார்க்கி on January 31, 2012 at 10:23 AM said...

கேபிள்,

கூட்ட‌ணி அமைத்த‌துதான் 28 சீட் என்றாலும் அதை கைப்ப‌றிய‌தை முக்கிய‌மான‌ நிக‌ழ்வாக‌ நான் பார்க்கிறேன். அம்மாவுட‌னே ஒட்டிக் கொண்டிருக்க‌மால‌ எதிர்த்து நிற்ப‌தையும் அவ்வாறே பார்க்கிறேன். என‌க்கு பிடிக்காவிட்டாலும் கேப்ட‌னின் பாதை வ‌ள‌ர்ச்சிக்கு ச‌ரியான‌ ஒன்ராக‌ ஆர‌ம்ப‌ம் முத‌லே சொல்லி வ‌ருகிறேன். இப்போது கூட‌ அவ‌ர் எதிர்கால‌த்தில் பிர‌தான‌ எதிர்க்க‌ட்சியாக‌ வ‌ர‌க்கூடுமென‌ யூகிக்கிறேன். அது ந‌ட‌க்காம‌ல் போனால் அதிக‌ம் ச‌ந்தோஷ‌ப்ப‌டுப‌வ‌ன் நானே. ஆனா வ‌ந்துவிடுவார் என்றே ந‌ம்புகிறேன். இது என் க‌ணிப்பு. அவ்வ‌ள‌வே

கார்க்கி on January 31, 2012 at 10:25 AM said...

போல‌வே, கேப்ட‌னின் வ‌ள‌ர்ச்சி ப‌ற்றி ம‌ட்டும் கேள்வியெழுப்பாம‌ல், ஸ்டாலின் செய்யாம‌ல் விட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் ப‌ற்றி ப‌திவில் இருப்ப‌தை குறித்தும் பேசினால் ச‌ரியான‌தாக‌ இருக்கும்.

vanila on January 31, 2012 at 10:35 AM said...
This comment has been removed by the author.
sanchana on January 31, 2012 at 10:35 AM said...

//அண்ணா ம‌றைவுக்கு பிற‌கு ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளின் இடையில் சாம‌ர்த்திய‌மாக‌ த‌லைவ‌ர் ஆன க‌லைஞ‌ரின் புத்திசாலித்த‌ன‌ம் ஸ்டாலினிட‌ம் வெளிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ள் எதுவும் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை.// மிகச் சரி !

vanila on January 31, 2012 at 10:36 AM said...

//எல்லாம் தானாக‌ ந‌ட‌க்கும் என‌ இருப்ப‌வ‌ன் த‌லைவ‌ன் இல்லை.//

Well said karki.

amas on January 31, 2012 at 10:39 AM said...

Stalin has never been pro active and never shown leadership qualities. One of the reasons is that he has always been under the shadow of his father. But that is not an excuse to for his lethargy. If he was not M.K's son would he even be in the current position that he is today? Would the public even give him the respect that he is enjoying now? The main reason why Vaiko was pushed out of DMK was M.K's fear that he had more potential to be the next leader in DMK and how could he allow that when he had such dumb kids?
Very well written article Karki :)
amas32

rathinamuthu on January 31, 2012 at 10:43 AM said...

திமுக ஆட்சியின் போதே ஸ்டாலின் முதல் அமைச்சர் பதவியை பெற்றோ பறித்தோ இருக்க வேண்டும். தவற விட்டு விட்டார். இனி அந்த வாய்ப்பு அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து மேலும் இது மாதிரி பதிவுகள் எதிர்பார்க்கிறேன். நன்றி

balu on January 31, 2012 at 11:11 AM said...

சிறப்பான பதிவு.
இஃது ஸ்டாலினுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த திமுகவிற்குமே பொருந்தும். IMHO, இன்னும் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தோமானால், விஜயகாந்த் மற்றும் வைகோவே எஞ்சியிருப்பர்.

The Chennai Pages on January 31, 2012 at 11:30 AM said...

http://faceofchennai.blogspot.in/

The Chennai Pages on January 31, 2012 at 11:31 AM said...

http://faceofchennai.blogspot.in/

Sanjai Gandhi on January 31, 2012 at 12:09 PM said...

daaaaiiiiii.. Stalin eppo home minister'a irunthar?

Athu ul thurai illa machi.. Ullatchi thurai..

Now what do u think about our great rahulji? :)

அசோகபுத்திரன் on January 31, 2012 at 12:35 PM said...

ஸ்டாலினுக்கு தலைவலி அழ‌கிரியோ, க‌னிமொழியோ, த‌யாநிதியோ அல்ல. அவருக்கு தலைவலி அவர் அப்பாதான். அதற்காக ஔரங்கசீப் செய்தது போல் அப்பாவை சிறையில் அடைக்க இது ஒன்றும் மன்னராட்சி அல்ல.. அதனால் ’வாய்ப்பை உருவாக்க’ முடியாது. கருணாநிதி மரணம் வரை அவர் தனது ’ச‌ந்த‌ர்ப்ப‌த்துக்காக’ காத்திருக்க வேண்டியதுதான்.

சந்திரபாபு விஷயத்தில் அவருக்கு சாதகமான அம்சம் கட்சியில் சிவபார்வதியின் தலையீட்டால் அதிருப்தியில் இருந்த மற்றவர்களை அவர்பக்கம் இழுக்க எந்த கஷ்டமும் படவேண்டியிருக்கவில்லை. அவர் முன்வைத்த கேள்வி வப்பாட்டியா மருமகனா என்பதே.. ஆனால் இங்கு மும்முனை தாக்குதலை ஸ்டாலின் எதிர்கொள்கிறார்.. அதுவும் கலைஞரின் ஆசியோடு மோதும் எதிரிகளை..

கலைஞரின் சாதுரியமே அண்ணாவின் மறைவில் இருந்துதானே தொடங்கியது.. ஆதலால் ஸ்டாலினின் சாமர்த்தியத்தை காண காத்திருப்போம் நண்பனே..

இப்போது ஸ்டாலின் சொல்லவேண்டியது ஒன்றுதான்..

“இறைவா.. என் அப்பாவிடமிருந்து என்னை காப்பாற்று.. என் உடன்பிறப்புகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.”

அசோகபுத்திரன் on January 31, 2012 at 12:37 PM said...

\\எல்லாம் தானாக‌ ந‌ட‌க்கும் என‌ இருப்ப‌வ‌ன் த‌லைவ‌ன் இல்லை.\\

அதற்காக வெண்ணை திரண்டு வரும்முன் தாழியை உடைக்க சொல்கிறீர்களா ??

கார்க்கி on January 31, 2012 at 12:49 PM said...

அசோக‌புத்திர‌ன், சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு வ‌ரை அழ‌கிரியோ, க‌னிமொழியோ, த‌யாநிதியோ ஒரு பொருட்டே இல்லை. எதிரிக‌ள் உருவாகும் வ‌ரை வேடிக்கைபார்த்த‌து ஸ்டாலின் தானே?? க‌லைஞ‌ர் ஆசியோடு மோதுகிரார்க‌ள் என்கிறீர்க‌ள். அப்போ, க‌லைஞ‌ரின் ஆசி ஸ்டாலினுக்கு இல்லையா???

கேடி பிர‌த‌ர்ஸ் என்ன‌ ஆட்ட‌ம் போட்டார்க‌ள்? மீண்டும் க‌ழ‌க்த்தில் சேர்ந்தும் விட்டார்க‌ள். அப்ப‌டி சான்ஸ் எடுத்து பார்த்தாரா????

க‌லைஞ‌ர் விடைபெறும் வ‌ரை காத்திருந்தால் ஸ்டாலின் கேப்ட‌னின் ம‌க‌ன்க‌ளோடு மோத‌ வேண்டி வ‌ந்தாலும் வ‌ர‌லாம்.

sutha on January 31, 2012 at 1:07 PM said...

நம்பவெ முடியல - மொக்கை எழுதர கார்க்கி தானா இது?

அசோகபுத்திரன் on January 31, 2012 at 1:13 PM said...

ஸ்டாலின் பற்றிய அழகிரியின் இன்றைய கமெண்டை பார்க்கவில்லையா ? இதை கலைஞர் வேடிக்கை பார்க்கிறார் என்றால் என்ன அர்த்தம் ?

கருணானிதி அவருக்கு நிகராக கட்சியில் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் தனிகவனம் இருக்கும். அது தன் மகனாக இருந்தாலும் கூட.

அதுபோல் னீங்கள் சொல்லும் சிலவருடங்களுக்கு முன்புவரை கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்காக இருந்த கலைஞரிடம் இருந்து கட்சியை கைப்பற்ற ஸ்டாலினுக்கு எந்த காரணகாரியமும் இல்லை. திடீரென எதிரிகள் உருவாகவில்லை. அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஸ்டாலினுக்கு போட்டி என்பது தெரிந்தே கலைஞர் அவர்களை களமிறக்கினார். இந்த விஷயத்தில் ஸ்டாலின் கலைஞரால் வஞ்சிக்கப்பட்டார் என்பதே உண்மை.

கேடி பிர‌த‌ர்ஸ் செய்தது ஒரு பூச்சாண்டி காட்டுவது.. அதைப்போல் இவரும் ஒரு சான்ஸ் எடுத்து பார்த்தால் பத்தோடு பதினொன்றாக போய்விடுவோம் என்பதை இவர் நன்றாக உணர்ந்திருக்கிறார். திமுக உடைந்தால் அது தேமுதிகவை விட சிறியதாகிவிட வாய்ப்புண்டு என்பது ஸ்டாலினிக்கு நன்றாகவே தெரியும். ஆகவேதான் அவர் மொத்த கட்சியும் கைக்கு வருவதற்காக ’காத்திருக்கிறார்.’

நீங்கள் தேமுதிகவை பெரிய இடத்தில் வைத்து கற்பனை செய்ய வேண்டாம். அவர்கள் ஸ்டாலினோடு மோதும் அளவுக்கு ஒர்த் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து..

தேசாந்திரி on January 31, 2012 at 1:26 PM said...

கார்க்கி,

ஸ்டாலினைப் பற்றி கட்டுரை எழுதுபவர்கள் பொதுவாக அவரை அளவுக்கதிகமாக புகழ்ந்தோ, அல்லது இகழ்ந்தோ எழுதுவது தான் வழக்கம். அப்படியில்லாமல், நடுனிலையாக எழுதியதற்கு மகிழ்ச்சி. அண்ணா, கலைஞர் , வைகோ போன்ற பேச்சாளர்களும், எம்.ஜி.ஆர், ஜெ., விஜயகாந்த் போல சினிமா கவர்ச்சியும் கொண்டவர்களே தமிழ் நாட்டு அரசியலில் நட்சத்திரங்களாக பார்க்கப்படுகின்றனர்.

ஸ்டாலின் இவர்கள் யார் மாதிரியும் இல்லாமல் இருப்பதை அவரின் பலவீனமாகவே பலரும் கருதுகின்றனர். ஆனால், அவர் தனக்கான பாதையை வகுக்காமல், தலைமையை பின்பற்றி நடக்கின்றார். அண்ணா இறந்தபின் தான் கலைஞர் தன்னை முன்னிறுத்தினாரே தவிர, அவர் இருக்கும்வரை தொண்டனாகவே பணியாற்றினார். அதையே தான் இன்று ஸ்டாலினும் செய்கின்றார்.

மற்றபடி, விஜயகாந்த் தமிழ்நாட்டு முதல்வராவதெல்லாம் அவர் எடுக்கும் சினிமாவில் மட்டுமே சாத்தியம்!

தேசாந்திரி on January 31, 2012 at 1:41 PM said...

அசோகபுத்திரன் சொன்னது மிகச்சரியான கருத்து! கலைஞரை underestimate செய்யக்குடாது, அவரை முந்த யார் முயற்சித்தாலும், அவர் ஆட்டத்தை கலைத்து விடுவார் என்பதே வரலாறு! இன்று ஸ்டாலினுக்கு கட்சிக்குள்ளேயே போட்டியாளர்களை கொம்பு சீவி விடுவதும் கலைஞர் தான் என்பது உள்ளே இருப்பவர்களுக்கு தெரியும். சும்மா இருக்கும் நேரத்தில் அரசியல் பேசும் நாமே இவ்வளவு யோசிக்கும் போது ஸ்டாலின் எல்லா வழிகளியும் யோசித்தே வைத்திருப்பார்! விஜயகாந்தை காலி செய்யும் பிரம்மாஸ்திரம் ஒன்றை கண்டிப்பாக திமுக கையில் எடுக்கும், காலம் வரும் போது!

கார்க்கி on January 31, 2012 at 3:00 PM said...

அசோக‌புத்திர‌ன், தேசாந்திரி,

நான் விஜ‌ய்காந்தை முத‌ல‌மைச்ச‌ர் ரேஞ்சுக்கு சொல்ல‌வில்லை. ஆனால் அர‌சிய‌லில் இதுதான் ந‌ட‌க்குமென‌ யாராலும் சொல்ல‌ முடியாது. சொன்ன‌துமில்லை. இதே கேப்ட‌ன் க‌ட்சி ஆர‌ம்பித்த‌போது ஒரு சீட்டும் கிடைக்காது. அதுவும் விருதாச்சால‌ம் பாம‌க‌ பெல்ட் என்றார்க‌ள். ஜெயித்தார். அடுத்து ரிஷிவ‌ந்திய‌த்தில் காங்கிர‌ஸ்தான் 30 வ‌ருட‌மா ஜெயிக்கும் என்றார்க‌ள். 5 சீட் வ‌ரும் என்றார்க‌ள் 28 ஆன‌து. இத‌னால் அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆவார் என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் வ‌லிமையான‌ எதிரிக்க‌ட்சி இல்லாத‌போது தானாக‌ அவ‌ர‌ இர‌ண்டாமிட‌ம் வ‌ந்துவிட‌லாம் என்ற‌ ப‌ய‌த்தினில் தான் சொன்னேன்.உங்க‌ளை போல‌ அவ‌ரெல்லாம் வ‌ர‌வே முடியாது என‌ ஒதுக்க‌ நான் துணிய‌வில்லை. கார‌ண‌ம், இவையெல்லாமே ந‌ம் க‌ணிப்புதானே த‌விர‌ நித‌ர்ச‌ன‌ம‌ல்ல‌.


க‌லைஞ‌ர் குறித்து. அவ‌ர் அண்ணாவிற்கு பிற‌‌கே த‌லைமைக்கு முய‌ன்றார். ஆனால் எல்லா மா.செக்க‌ளையும் த‌ன் கைக‌ளுக்கும் வைத்திருந்தார். அடிம‌ட்ட‌ தொண்ட‌ர்க‌ளை அர‌வ‌ணைக்காம‌ல் இருந்த‌ பெருந்த‌லைக‌ளை பின்னுக்கு த‌ள்ள‌ அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ பிர‌ம்மாஸ்திர‌ம் அது. ஆனா ஸ்டாலினுக்கு அந்த‌ அபிரித‌மான‌ செல்வாக்கு இன்று இருக்கிற‌தா என்ப‌து கேள்விக்குறி.

வைகோவையெல்லாம் ப‌ய‌ந்து அனுப்பியிருக்க‌வே வேண்டாம். அவ‌ர் ஒரு மொக்கை த‌லைவ‌ர் என்ப‌தை ம‌ணிக்கொரு த‌ர‌ம் நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறார்

அசோகபுத்திரன் on January 31, 2012 at 4:52 PM said...

\\எல்லா மா.செக்க‌ளையும் த‌ன் கைக‌ளுக்கும் வைத்திருந்தார்.\\
காமெடி பண்றீங்க... எம்ஜிஆர் என்ற ஒரு மனிதரின் ஆதரவு மட்டும் இல்லையெனில் கலைஞரின் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும்.

அதுமட்டுமில்லாமல் அண்ணா கட்சியில் உழைத்தவர்களை மேலேற்றினார். அப்படித்தான் கருணானிதி மேலே வரமுடிந்தது. அப்படி பார்த்தால் ஸ்டாலினை கருணானிதி இன்னேரம் வாரிசாக அறிவித்திருக்க வேண்டுமே.. அவர் ஒரு வார்த்தை சொன்னால் இந்த அழ‌கிரியோ, க‌னிமொழியோ, த‌யாநிதியோ ஒரு பொருட்டே அல்ல. ஆனால் அதை செய்ய மறுப்பதே கலைஞரின் சூழ்ச்சி..

மேலும் வைகோ, ஸ்டாலின் பற்றிய உங்களது மேலான கருத்துக்களை பார்க்கும்போது நாகராஜ சோழன், எம்எல்ஏ ரேஞ்சுக்கு ஏதாவது செய்தால்தான் தலைவராக முடியும் என்று நினைப்பதுபோல் உள்ளது.

விஜயகாந்த் பற்றிய உங்கள் கருத்துக்கு..

அய்யோ.. அய்யோ.. பச்ச மண்ணுப்பா நீ...

vinaa on January 31, 2012 at 5:16 PM said...

மிக நல்ல பதிவு. ஸ்டாலின் தானாக வளர்ந்த தலைவர் இல்லை. தன் தந்தையால் வளர்த்துவிடப்பட்டவர். அவருக்கு நிர்வாகத்திறமையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. மேயர் பொறுப்பிலும் அமைச்சர் பொறுப்பிலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஏதும் சாதிக்கவில்லை. அவரது அடிப்பொடிகளால் அவர்களது வளர்ச்சிக்காக தலைமைப்பண்புள்ளவராக முன்னிறுத்தப்பட்டவர். சொந்தத் திறமையில்லாமல் அவரது தந்தைக்காகவும் கட்சிப்பிரமுகர்களின் சுயலாபத்திற்காகவும் முன்னிறுத்தப்படுபவர் நாளை கட்சியின் முழுப்பொறுப்பையும் ஏற்றபின் சோதனையான காலகட்டங்களில் கட்சியினரை திறம்பட வழிநடத்தமுடியாமல் திணறுவார். இதனால் தொண்டர்கள் சோர்வடைந்து இயக்கம் பலவீனமடையும். அது தி. மு. கவிற்கும் மாற்று அரசியலுக்கும் நல்லதல்ல.

கார்க்கி on January 31, 2012 at 5:37 PM said...

அசோக‌ப்புத்திர‌ன், நான் ப‌ச்ச‌ ம‌ண்ணா இல்லையா என்ப‌தை நிரூபிக்க‌ இந்த‌ ப‌திவும் இல்லை. பின்னூட்ட‌மும் இல்லை. உங்க‌ள் மீதான‌ உங்க‌ள் ந‌ம்பிக்கை பிர‌மிக்க வைக்கிற‌து.

ந‌ல்ல‌வ‌ன் யார் என்றே பேச‌வில்லை. வ‌ல்ல‌வ‌ன் யாரென்ப‌தே. அதில் வைகோ வருவார் என‌ சொல்வீர்க‌ளேயேனால் என்னிட‌ம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிற‌து.அது

நைட்டு என்ன‌ பாஸ் டிஃப‌ன்?

நடராஜன் on January 31, 2012 at 8:22 PM said...

//இதில் ஸ்டாலினின் நேர்மையை விவாதிக்க‌ விரும்ப‌வில்லை.// என்னடா கார்க்கி எழுதி எந்த ஜோக்கும் இல்லையேன்னு நினைச்சேன்! குறும்பு குருவே உமக்கு

மாயன்:அகமும் புறமும் on February 1, 2012 at 12:22 AM said...

கருணாநிதி இளையபையனை மட்டும் ரொம்ப நல்லவரா(!)வளர்த்துட்டாரோ? இவ்வளவு நாள் காத்திருப்பதற்குப் பேர் பொறுமை இல்லை. இயலாமைதானோ? தவறு செய்துவிட்டார் ஸ்டாலின். இப்போதே அவருக்கு வயதாகிவிட்டது. பெரியவர் வாழ்நாள் முழுதும் தலைவராகவே இருக்க ஆசைப்படறாரா இல்லை வேறவழி இல்லையான்னு தெரியலை...ஆனா வாழ்நாள் தலைவர்தான்.

திமுக தொண்டனின் நிலமையை கொஞ்சம் கூட யோசிக்காமலா இருக்கிறார் கலைஞர் என்பது சில வருடமாகவே எனக்கு பேராச்சர்யமான விஷயம்.

தொண்டனை இவர் பக்கமா அவர் பக்கமா என்று குழப்பவிடலாமா கலைஞர்?.காலம் கடந்து கொண்டே இருக்கிறது. திமுக முக்கியமான எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் குறைவாக இருந்தாலும்.கலைஞருக்கே யோசிக்கும் திறன் குறைந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.குடும்பத்தினரை உள்ளே விட்டு குழப்படியாக விட்டுவிட்டார். ஸ்டாலின் இப்போது அதிரடியாக ஏதாவது செய்தால் நிச்சயம் மக்கள் பாராட்டுவார்கள்.பெரும்பான்மை திமுகவினர் கொண்டாடுவார்கள் என்றே தோன்றுகிறது.இப்பவே முடிவு எடுத்தால்தான் பாராளுமன்றத் தேர்தலை உருப்படியாக சந்திக்கமுடியும்.

கேப்டனை பற்றி என்னால் சொல்ல இயலவில்லை.வேறு வழியில்லாததால் ஸ்டாலின்-அழகிரி என்று இரண்டுபேரும் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கையில் அவருக்கு கொஞ்சம் கணிசமான வாக்குகள் போக வாய்ப்பிருக்கிறது என்று வேண்டுமானால் யூகிக்கலாம். யூகம்தான்.

இது பற்றி நான் எழுதிய ஒரு பதிவு;
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: தி.மு.க. இப்போதாவது உஷாராகுமா?

அசோகபுத்திரன் on February 1, 2012 at 10:27 AM said...

வைகோ நிச்சயம் வல்லவர் இல்லை. ஆனால் மிக நிச்சயமாக நல்லவர் என்பதை மறுக்கமுடியாது. அரசியலில் ஹீரோயிசத்தை எதிர்பார்க்காதீர்கள். வல்லவன் என்று சொல்லி ஒருவருக்கு ஓட்டளித்துவிட்டு அப்புறம் அவர் அத செய்யல இத செய்யல என்று புலம்புவதற்கு பதில் ஒரு நல்லவரை ஆதரியுங்கள்..

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

The Chennai Pages on February 1, 2012 at 11:48 AM said...

http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

ஷர்மி on February 1, 2012 at 11:35 PM said...

ஒரு உண்மையான ஸ்டாலின் அபிமானியின் கோபம் தெரிகிறது. நன்று.. ஆனால் இது ஸ்டாலினுக்குக் கேட்குமா?

 

all rights reserved to www.karkibava.com