Jan 11, 2012

த‌வ‌ளைக்க‌ல்


 

குஜ்ஜு யாரென‌ தெரியாத‌வ‌ர்க‌ள் இங்கே ப‌டித்துக் கொள்ளுங்க‌ள்.

சில‌ நாட்க‌ள் விடுமுறையில் இருந்த‌ குஜ்ஜு இன்று ராஜினாமா செய்து விட்டாள். :((

____________________________

image

வ‌ற‌ண்ட‌ நில‌த்தை
வ‌ள‌மாக்க‌ வ‌ந்த‌வ‌ளே!!

வாச‌ம‌ற்ற‌ பூமியில்
வான‌வில்லாக‌ மின்னிய‌வ‌ளே!!

தாண்டியா ஆட்ட‌மாட‌ எண்ணியிருந்த‌போது ‍என்னை
தாண்டி த‌னியே செல்ல‌ எப்ப‌டி முடிகிற‌துன்னால்?

ஸ்லீவ்லெஸ்ஸில் ம‌ய‌க்கிவிட்டு
லைஃப்லெஸ்ஸாக‌ ஆக்கிவிட்டாயே

மோடியின் மாநில‌த்தில் பிற‌ந்து
மோடி ம‌ஸ்தான் வேலை செய்ய‌வா வ‌ந்தாய்?

இனி என் காலை எப்ப‌டி விடியும்?
இனி என் இர‌வுக‌ள் எங்க‌னம் உற‌ங்கும்?

வொய் திஸ் கொலைவெறிடி பாட‌ச்சொல்லி ர‌சித்த‌து
இதை ம‌ன‌தில் வைத்துதானா!!!!

நேற்றுதான் பெள‌ர்ண‌மி.
இன்றே அமாவாசை ஆகிப்போன‌தென‌க்கு.

இனி நீயில்லாத‌ இருக்கை
உண்ண‌ முடியாத‌ ப‌ருக்கை

பார் போற்றிய‌ குஜ்ஜு அப்டேட்ஸை
BAR போற்றும்ப‌டி செய்துவிட்டாயே

எங்கே பார்த்தாலும் உன் முக‌மென‌ வாச‌ன் ஐகேர் சென்றேன்
இனி, எதுவுமே தெரிய‌வில்லையென‌ செல்ல‌ வேண்டிய‌துதான்..

உன் கால‌டி மீண்டும் ப‌ட்ட‌தால் அஹ‌ம‌தாகுட் என‌ பெய‌ர் மாற்ற‌ போகிறார்க‌ளாம்.

ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் ச‌ங்கீத‌ சீச‌ன் தானே முடியும்?
ச‌ங்கீத‌மே முடிவ‌தென்ன‌ நியாய‌ம்?

குஜ‌ராத் தோக்ளா போனா கேர‌ளா ரேக்ளா வ‌ர‌லாம்.
வாழ்க்கை போனா வாழ‌க்காவா வ‌ரும்?

உன் ராஜினாமா க‌டித‌ம் உன் வேலை முடிவ‌ல்ல‌..
என் வாழ்க்கை முடிவு..

அஹிம்சையின் ராஜா காந்தி பிற‌ந்த‌ ம‌ண்ணில்
இம்சை ராணி பிற‌ந்த‌தை என்னவென்று சொல்ல‌!

நீ

வேலையை விட்டு போக‌லாம்
சென்னையை விட்டு போக‌லாம்
என்னை விட்டு…..முடியாது

என்றென்றும் உன் நினைவில்,
கார்க்கி

_______________________

16 கருத்துக்குத்து:

amas on January 11, 2012 at 11:36 AM said...

தத்துவப் பாடல்! ரொம்ப feel
பண்ணி எழுதியிருக்கீங்க, என்ன பண்றது,life must go on :)
amas32

கோம்பை சண்முகம் on January 11, 2012 at 11:37 AM said...

கும்பலோடு கும்மாளம் போட்டவரை, இப்படி தனியாக புலம்ப வைத்துவிட்டாயே குஜ்ஜு...
(@pattaasu)

manjoorraja on January 11, 2012 at 12:09 PM said...

உங்க ஃபீலிங்க்ஸ் ம் அவங்க வந்தபோது நீங்க எழுதியதும் சூப்பர்.

கார்க்கி நீ எங்கேயோ போயிட்டெடா!

காவேரிகணேஷ் on January 11, 2012 at 12:13 PM said...

என்னமாய் ஒரு கவிதை.. ஒவ்வொரு பிரிதுவுயர் கொண்ட காதலனும் படித்து, உணர வேண்டிய கவிதையை படைத்த் உங்களை பார் போற்றும்..

மோகன் குமார் on January 11, 2012 at 1:10 PM said...

ஐ யாம் வெரி ஹாப்பி

தாரணி பிரியா on January 11, 2012 at 1:14 PM said...

இந்த டான்ஸை பார்த்துட்டுதான் அவங்க ரிசைன் செஞ்சாங்களா கார்க்கி :)

தாரணி பிரியா on January 11, 2012 at 1:16 PM said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா on January 11, 2012 at 1:16 PM said...

அடுத்த போஸ்ட் திரும்ப நலம் வாழ என் நல்வாழ்த்துகள்தானே

//ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்!!!!//

சுசி on January 11, 2012 at 3:38 PM said...

அவங்களுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான் கார்க்கி.

அதிலை on January 11, 2012 at 8:03 PM said...

//வாழ்க்கை போனா வாழ‌க்காவா வ‌ரும்//

welcome back!!

deepak on January 11, 2012 at 8:43 PM said...

இந்த கவிதையை அவங்களுக்கு படிச்சு காட்டினீங்களா ..::)

தர்ஷன் on January 11, 2012 at 10:06 PM said...

நார்த் இந்தியன்ஸ் வெளுப்பா இருப்பாங்கன்னு தெரியும் ஆனாலும் குஜ்ஜு அநியாயத்திற்கு பால் வெள்ளையா இருக்குறாங்க ஒன்னுமே தெரில்ல.
அப்புறம் சகா மீண்டுமொருமுறை நிகரற்ற மொக்கைத் திலகம் நீங்கள்தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்

பரிசல்காரன் on January 11, 2012 at 10:55 PM said...

உங்க HR பாலிஸி படி ஒரே ஆஃபீஸ்ல இருந்து கடலை போட்டு கல்யாணம் பண்ணிக்க முடியாததாலதான் நீயா ப்ளான் பண்ணி அவங்களை ரிசைன் பண்ண வெச்சு, வேற எடத்துல வேலை வாங்கிக் குடுத்து, ஒண்ணுந் தெரியாத மாதிரி இப்படி பதிவு போடறதா அங்கங்க பேசிக்கறாங்களே..

அப்டியா சகா?

KSGOA on January 12, 2012 at 8:01 AM said...

சரிங்க!சரிங்க!ரொம்ப வருத்தப்படாதிங்க.

அசோகபுத்திரன் on January 12, 2012 at 3:38 PM said...

ஏ.. தண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நீ...

ARUNA on January 13, 2012 at 7:37 PM said...

போனால் போகுது . ஜீன்ஸ் போனால் சல்வார், சல்வார் போனால் தாவணி

 

all rights reserved to www.karkibava.com