Jan 31, 2012

ஸ்டாலின்

32 கருத்துக்குத்து

 

ஸ்டாலின்.

திமுக‌வின் அடுத்த‌ நம்பிக்கை. இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌வ‌லான‌ ஆத‌ர‌வு பெற்ற‌வ‌ர். நிர்வாக‌த்தில் சிற‌ந்த‌வ‌ர். அழ‌கிரி, க‌னிமொழி, த‌யாநிதி போலில்லாம‌ல் க‌டின‌மான‌ உழைப்பால் க‌ட்சியில் உய‌ர்ந்த‌வ‌ர்.அடுத்த‌ த‌லைமை. எல்லோரையும் போல‌ என‌க்கும் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ம்பிக்கைக‌ள் இருந்த‌ன‌, சில‌ கால‌ம் முன்பு வ‌ரை. க‌ட‌ந்த‌ ஆட்சி திமுக‌ மீது பெரும் கோவ‌த்தையும், வெறுப்பையும் ஏற்ப‌டுத்தியெதென்றால், ஏனோ ச‌மீப‌த்திய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ஸ்டாலின் மீதான‌ ந‌ம்பிக்கையை சுக்கு நூறாக்குக்கின்ற‌ன‌.

இதில் ஸ்டாலினின் நேர்மையை விவாதிக்க‌ விரும்ப‌வில்லை. ஒரு த‌லைவ‌னுக்குண்டான‌ த‌குதிக‌ள் ப‌ற்றியே பேச‌ விரும்புகிறேன். ஒரு க‌ட்சிக்கு த‌லைவ‌னாக‌வோ, இந்தியா போன்ற‌ ஒரு நாட்டில் மாநில‌ முத‌ல்வ‌ராகாவோ விரும்புகிற‌வ‌ருக்கு வாய்ப்புக‌ளை உருவாக்க‌வும், கிடைக்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌வும் தெரிய‌ வேண்டும். அண்ணா ம‌றைவுக்கு பிற‌கு ந‌ட‌ந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ளின் இடையில் சாம‌ர்த்திய‌மாக‌ த‌லைவ‌ர் ஆன க‌லைஞ‌ரின் புத்திசாலித்த‌ன‌ம் ஸ்டாலினிட‌ம் வெளிப்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ள் எதுவும் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. த‌யாநிதி & க‌லாநிதி க‌ட்சியை கைப்ப‌ற்ற‌ முய‌ன்ற‌தில் 1% கூட‌ ஸ்டாலின் நினைக்க‌வில்லை. எல்லாம் தானாக‌ ந‌ட‌க்கும் என‌ இருப்ப‌வ‌ன் த‌லைவ‌ன் இல்லை.

அண்டை மாநில‌மான‌ ஆந்திராவை எடுத்துக் கொள்ள‌லாம். ச‌ந்திர‌பாபு நாயுடு எப்ப‌டி க‌ட்சியை கைப்ப‌ற்றினார்?அத‌ன்பின் அமைந்த‌ அவ‌ர‌து த‌லைமையிலான‌ 5 ஆண்டு ஆட்சி மிக‌ முக்கிய‌மான‌ ஒன்றாக‌ ஆக‌வில்லையா? 2011 தேர்த‌லுக்கு முன்பு எப்போது அழ‌கிரியும், க‌னிமொழியும் போட்டிக்கு வ‌ந்தார்க‌ள்? 40 ஆண்டுக‌ளாக‌ க‌ட்சிக்கு உழைத்து வ‌ரும் ஸ்டாலின் அதை த‌டுக்க‌ ஏதும் யூக‌ம் அமைத்தாரா அல்ல‌து அவ‌ர் த‌லைவ‌ராக‌த்தான் ஏதும் திட்ட‌ம் தீட்டினாரா? எல்லாம் க‌னிந்து தானாக‌ த‌ன் கையில் வ‌ருமென‌ காத்திருப்ப‌வ‌ரை எப்ப‌டி ந‌ம்புவ‌து?

முல்லை பெரியாறு பிர‌ச்சினையை எடுத்துக் கொள்ள‌லாம். உண‌ர்வுப்பூர்வ‌மாக‌ போராடுவ‌து இருக்க‌ட்டும். திமுக‌ அத‌ற்காக‌ போராடிய‌ முறைக‌ள் ந‌கைப்புக்கு உரிய‌தாக‌த்தான் அமைந்த‌ன‌. த‌ன்னிச்சையாக‌ எழுந்த‌ ம‌க்க‌ள் புர‌ட்சி ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோரை எல்லையில் சேர்த்த‌து. க‌ள‌ம் சென்று அதை நெறிப்ப‌டுத்தாம‌ல் ம‌னித‌ ச‌ங்கிலி சென்னையிலாம். இறுதிவ‌ரை இந்த‌ விஷ‌ய‌த்தில‌ ஸ்டாலினின் க‌ருத்து இதுவென‌ எங்கேயும் ம‌க்க‌ள் ம‌ன‌ம் வ‌ரை செல்லுமாறு அவ‌ர் ப‌திவும் செய்ய‌வில்லை. சாத‌க‌மாக‌வோ,பாத‌க‌மாக‌வோ க‌லைஞ‌ர் பெய‌ரின்றி தின‌ப்ப‌த்திரிக்கை எதுவும் வ‌ருவ‌தில்லை. த‌ன்னைப் ப‌ற்றி செய்திக‌ள் வ‌ந்த‌வ‌ண்ண‌ம் இருக்க‌ வேண்டுமென்ப‌தில் த‌ந்தை காட்டிய‌ அக்க‌றை ம‌க‌னுக்கு ம‌ற‌ந்தே போன‌து ஆச்ச‌ரிய‌ம்தான்.

இளைஞ‌ர்க‌ள் திமுக‌வ‌ச‌ம் என்பார்க‌ள். கால‌த்திற்கேற்ப‌ இளைஞ‌ர்க‌ளை க‌வ‌ர்ந்திழுக்கும் கொள்கைக‌ளும், போராட்ட‌ முறைக‌ளும் கையாண்ட‌ திமுக‌ செத்து போயிற்று. இணைய‌ம் ப‌க்க‌ம் திமுக‌வின் செய‌ல்பாடுக‌ள் ஆர‌ம்பிக்க‌வே இல்லை. ல‌க்கி, அபிஅப்பா, அப்துல்லா போன்றோரின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை திமுக‌வின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளாக‌ என்னால் பார்க்க‌ இய‌லவில்லை. மேய‌ராக‌ இருந்த‌ போது இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் இருந்த‌ ந‌ம்பிக்கை, அவ‌ர் உள்ளாட்சித் துறை அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது கிடைக்காம‌ல் போன‌துதான் நித‌ர்ச‌ன‌ம்.

“க‌ண்ணிய‌மான‌ அர‌சிய‌ல் செய்கிறார். இதுவ‌ரை எந்த‌ ஊழ‌ல் புகாரிலும் சிக்க‌வில்லை.”   இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் நிச்ச‌ய‌ம் அவ‌ர் மீதான‌ ம‌திப்பை கூட்டுக்கின்ற‌ன‌. ஆனால் ஒரு த‌லைவ‌னுக்கு தேவையான‌ சாதூர்ய‌ங்க‌ள் இவ‌ரிட‌ம் இருந்து வெளிப்ப‌ட்ட‌துண்டா என்ப‌தே கேள்வி. இவ‌ரை போன்ற‌‌வ‌ர்க‌ள் ஒரு நிறுவ‌ன‌த்தில் மிக‌ முக்கிய‌ பொறுப்பில், CEO போன்று, இருக்க‌லாம். ஆனால் ஒரு Entrepreneur ஆக‌ இதைத் தாண்டி ஏதோ ஒன்று தேவைப்ப‌டுகின்ற‌தே. த‌லைவ‌ன் என்ப‌வ‌ன் ச‌ம்ப‌ள‌த்திற்கு வேலை செய்ப‌வ‌ன் அல்ல‌, ச‌ம்ப‌ள‌ம் த‌ர‌ வேண்டிய‌வ‌ன்.

காங்கிர‌ஸ் உட‌னான‌ உற‌வில் ப‌ல‌ சிக்க‌ல்க‌ள் இருந்த‌து என்ன‌வோ உண்மைதான். அத‌ற்காக‌ ஒவ்வொரு வாய்தாவின் போதும் வீராவேச‌மாக‌ பொதுக்குழுவை கூட்டுவ‌தும், போண்டா சாப்பிட்டப்பின் உற‌வு சிக்க‌லின்றி தொட‌ர்கிற‌து என்றும் அறிக்கை விட்ட‌தெல்லாம் கைப்புள்ள‌ காமெடி. 63 சீட்டுக‌ள் ப‌கிர்ந்த‌தும், அத‌ன் பின்ன‌ரும் இள‌‌ங்கோவ‌ன் போன்றோர் க‌ர்ஜித்த‌தும், அதை ஸ்டாலின் கூட‌ அமைதியாக‌ பார்த்த‌தும் திமுகைவை புலிகேசி அள‌விற்கு ம‌க்க‌ள் எண்ண‌ வ‌ழி செய்துவிட்ட‌ன‌. இனி புர‌ட்சிப்ப‌டை அமைத்தாலும் மீண்டு வ‌ருவ‌து சிர‌ம‌ம்.

இனியும் க‌லைஞ‌ரின் வார்த்தைக்காக‌ தாம‌திக்காம‌ல் க‌ட்சியை கைப்ப‌ற்ற‌ முய‌லாவிட்டால் ஸ்டாலின் எப்போதும் எட்டாம் வ‌குப்பு பாட‌ப்புத்த‌க‌த்தில் இடம்பெற‌வே முடியாது. அது கூட‌  பிர‌ச்சினையில்லை. விஜ‌ய்காந்த‌ அந்த‌ ப‌க்க‌த்தை நிர‌ப்ப‌லாம். சொல்ல‌ப் போனால், இந்த‌ப் ப‌திவு எழுத‌ வேண்டுமென‌ தோன்றிய‌த‌ன் மூல‌கார‌ண‌ம் ஸ்டாலின் அல்ல‌. அச்ச‌த்தை விளைவிக்கும் கேப்ட‌னின் வ‌ள‌ர்ச்சி.

Jan 12, 2012

ந‌ண்ப‌ன் -‍ எல்லோருக்கும்(karki)

21 கருத்துக்குத்து

 

அலுவ‌‌ல‌க‌த்திலே அவ‌ன் தான் சுமாரான‌வ‌ன். க‌ட்ட‌ம் போட்ட‌ ச‌ட்டை, ப‌ச்சை க‌லர் பேன்ட் எல்லாம் போடுவான். ஒரு நாள் டீம் அவுட் சென்றிருந்த‌ போது பாம்பு ஒன்று வ‌ந்துவிட்ட‌து. ரோமியோக்க‌ள் எல்லாம் குருவி விஜ‌ய் போல‌ ஜ‌ம்ப் ப‌ண்ணி ப‌ற‌ந்துவிட்டார்க‌ள். ப‌ச்சை பேன்ட்தான் குச்சியால் அதை ஓர‌ங்க‌ட்டி சில‌ பெண் க‌லீக்ஸை காப்பாற்றினான். அன்று முத‌ம் அவ‌ன் தான் ஹீரோ எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தில். ஹீரோயிச‌ம் என்ப‌து ஒற்றை ப‌ரிணாம‌ம் கொண்ட‌த‌ல்ல‌.அதை இன்னொரு கோண‌த்தில் காட்டிய‌ ப‌ட‌ம்தான் 3 இடிய‌ட்ஸ். இதை த‌மிழில் விஜ‌ய் செய்கிறார்‌ என்ற‌ போதே நான் சொன்ன‌து,இது ஒண்ணும் ஆஃப் பீட் ப‌ட‌ம‌ல்ல‌. இன்னொரு ஹீரோயிச‌ ப‌ட‌ம் தான், மாறுப்ப‌ட்ட‌ கோண‌த்தில்.

ஃப்ளைட் கிள‌ம்புகிற‌து. உள்ளே இருக்கும் ஸ்ரீகாந்திற்கு பாரி கிடைத்துவிட்டான் என‌ ஃபோன் வருகிற‌து. மார‌டைப்பு போல் நாட‌கமாடி இற‌ங்குகிறார். பேன்ட் போடாத‌து கூட‌ தெரியாம‌ல் ஜீவாவும் இணைகிறார். "இவ‌ன் தூர‌த்தில் பூத்திட்ட‌ அன்னை ம‌டி" என்ற‌ பிண்ண‌னி பாட‌லோடு பாரியை தேடி கிள‌ம்புகிறார்க‌ள்.பாரிதான் விஜ‌ய். இதை விடவா ஒரு மாஸ் ஓப்ப‌னிங் விஜ‌ய்க்கு அமைந்திருக்கிற‌து?

ப‌ட‌ம் முழுக்க‌வே எல்லோருக்கும் காட்ஃபாத‌ர் போல‌ இருக்கிறான் நாய‌க‌ன். "டேய் அவ‌ர் யாரு தெரியுமாடா" என்ற‌ கூச்ச‌ல் எதை செய்ய‌ வேண்டுமோ, அதை ச‌த்த‌மில்லாம‌ல் இன்னும் வீரிய‌த்தோடு செய்திருக்கிறார்க‌ள். கூட‌வே விஜ‌யின் ப்ள‌ஸ் ஆன‌ காமெடி, குறும்புக‌ள் க‌தையோடே அமைந்த‌து கொடுப்பினைதான்.

க‌தை ம‌ண்ணாங்க‌ட்டி எல்லாம் தெரிந்திருக்கும். நாம் த‌மிழில் எப்ப‌டி செய்திருக்கிறார்க‌ள் என்று ம‌ட்டும் பார்ப்போம். ஏனெனில் ந‌ண்ப‌ன் 3 இடிய‌ட்ஸின் க்ரிஸ்ட‌ல் க்ளிய‌ர் ஃபோட்டோக்காப்பி. ஆங்காங்கே லேசான‌ க‌ரும்புள்ளிக‌ள். ஆனால் அவை க‌ண்க‌ளுக்கு தெரியாம‌ல் பார்த்துக் கொண்ட‌து ஷ‌ங்க‌ரின் சாமர்த்திய‌ம். இது போன்ற‌ ஒரு ப‌ட‌த்திற்கு ஷ‌ங்க‌ர் தேவையா என்று யோசித்தேன். ஆனால் 3 இடிய‌ட்ஸ் ஷ‌ங‌க்ருக்கு ஏற்ப‌டுத்திய‌ பாதிப்பு அவ‌ரை ச‌ரியான‌ தேர்வாக‌ ஆக்கியிருக்கிற‌து. த‌மிழுக்கு ஏற்ற‌து போல் மாற்றியிருக்கிறேன் என்ற‌ ஜ‌ல்லிய‌டித்து திரைக்க‌தையில் த‌ங்க‌ள் பெய‌ர் போட்டுக் கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் வெறும் இய‌க்க‌ம் ம‌ட்டுமே என‌ சொல்லியிருப்ப‌து பார‌ட்ட‌த்த‌க்க‌து.

அடுத்து ச‌த்ய‌ராஜ். வேறு யாரையும் யோசிக்க‌ முடியாத‌ தோற்ற‌ம். எல்லோரும் எதிர்பார்த்த‌ தேர்வுதான். குழைத்து குழைத்து பேசி அம‌ர்க்க‌ள‌ப்ப‌டுத்தியிருக்கிறார். ப‌ட‌த்தின் ப‌ல‌ம‌ல்ல‌, ப‌ல‌வீன‌முமல்ல‌. கொடுத்து வேலையை ச‌ரியாக‌ செய்திருக்கிறார்.

ஜீவா. இந்த‌ த‌லைமுறை ந‌டிக‌ர்க‌ளில் த‌னுஷிற்கு அடுத்து என‌க்கு மிக‌வும் பிடித்த‌ ந‌டிக‌ர். விஜ‌யோடு ஒன்றாக‌ பார்த்த‌போது துள்ளினேன் நான். குறைந்த‌ ப‌ந்துக‌ளே எதிர்கொண்ட‌தால் ச‌த‌ம் ந‌ழுவிய‌ வீர‌ர் என‌லாம். என்னைப் பொறுத்த‌வ‌ரை பெர்ஃபெக்ட் காஸ்டிங் என்றால் அது இவ‌ர‌து கேர‌க்ட‌ர்தான். ஹேட்ஸ் ஆஃப் ஜீவா.

ஸ்ரீகாந்த் சிற‌ப்பாக‌ செய்திருக்கிறார். மாண‌வ‌ன் ரோலுக்கு மீசையெடுத்து, உட‌ம்பை குறைந்துக் கொண்டு ஓர‌ள‌வு  வெற்றியும் பெற்றிருக்கிறார். என்னைக் கேட்டால் ஜெய‌ம் ர‌வி போன்ற‌ யாரையாவ‌து போட்டிருக்க‌லாம்.

இலியானா. முனிம்மா க‌ல‌க்கியிருக்கிறார். இவ‌ர‌து எந்த‌ ப‌ட‌த்தையும் நான் பார்த்த‌து இல்லை. பொண்ணு சும்மா சுர்ருன்னு ந‌டிச்சிருக்கு. பாட‌ல்க‌ளில் ம‌ட்டும் ந‌ம்முட‌ன் சேர்ந்து விஜ‌யை ர‌சிக்குது.

ஹாரீஸ். பாட‌ல்க‌ள் ஹிட் என்ப‌தை தாண்டி ப‌ட‌த்தில் இருக்கிறார் ஹாரீஸ். என் க‌ண் முன்னே & ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் பாட‌ல்க‌ள் காட்சிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் தான். எங்கேயும்  உன்னாலே உன்னாலே மெட்டுக‌ளை கேட்க‌ முடியாம‌ல் இருந்த‌தே பெரிய‌ விஷ‌ய‌ம்.

கார்க்கி. பாட‌ல்க‌ளோடு வ‌ச‌ன‌மும் எழுதியிருக்கிறார். இந்தியில் ச‌க்கை போடு போட்ட‌ ச‌மாத்கார் / ப‌லாத்கார் காட்சியை அழ‌காக‌ த‌மிழ்ப்ப‌டுத்தியிருக்கிறார். என்ன‌ன்னு கேட்காம‌ நீங்க‌ளே பாருங்க‌. 2 வ‌ரியில் ஒரு சிறுவ‌ன் ஃப்ளாஷ்பேக்கை சொன்ன‌வுட‌ன் "என்ன‌டா திருக்கிற‌ள் சைசுல‌ ஃப்ளாஷ்பேக்கை முடிச்சிட்ட" என்று ர‌சிக்க‌ வைக்கிறார். “ரெண்டு காலு உடைஞ்ச‌பிற‌குதான் சார் நான் சொந்த‌க்காலிலே நிற்கிறேன்"” இன்னும் ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள். இன்று மாலை பார்க்கும்போது நோட் ப‌ண்ணிட்டு வ‌றேன். ஆமாங்க‌. மாலை காட்சியும் போறேன்.

விஜ‌ய். வெல். ஹ‌வ் டூ சே????? என‌க்கு விஜ‌யை பிடிக்கும்தான். ஆனால் எப்போதும் அவ‌ரை சிற‌ந்த‌ ந‌டிக‌ர் என‌ வாதிட்ட‌தில்லை. அதே ச‌ம‌ய‌ம் வ‌யித்தெரிச்ச‌ல் எஸ்.எம்.எஸ் ஆசாமிக‌ள் சொல்வ‌து போல‌ ஒரேய‌டியாக‌ நிராக‌ரிக்க‌வும் முடியாது. வேலாயுதித்தில்‌ வ‌ந்த‌ அதே விஜ‌ய். ச‌ட்டையை ம‌ட்டுமே மாற்றியிருக்கிறார். த‌லைமுடி கூட‌ மாற‌வில்லை. ஆனால் ப‌ட‌த்தில் விஜ‌ய் எவ்வ‌ள‌வு க‌ச்சித‌மாக‌ ரோலை ந‌டித்திருக்கிறார் என்று பாருங்க‌ள். அதுதான் விஜ‌ய். அவ‌ருக்கே உரிய‌ குறும்பும், காமெடியும் குஷி, ச‌ச்சினுக்கு பிற‌கு ச‌ரியாக‌ அமைந்திருக்கிற‌து. ஒரு சில‌ காட்சிக‌ளில் ம‌ட்டும் அமிர்கான் த‌ந்த‌ ரியாக்ஷ‌ன்க‌ளை த‌ர‌ முய‌ற்சி செய்திருக்கிறார். ம‌ற்ற‌ப‌டி, த‌ன‌க்கு என்ன‌ வ‌ருமோ அதை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். நேற்று ட்விட்ட‌ரில் "சத்யன்,ஜுவா, விஜய்,சத்யராஜ், ஸ்ரீகாந்த். இந்த வரிசையில் நடிப்பு இருக்குமென யூகிக்கிறேன்" என்று சொல்லியிருந்தேன். அதை பொய்யாக்கி விஜ‌ய் வென்றுவிட்டார். கில்லி ஒரு ஆக்ஷ‌ன் ப‌ட‌ம். அதோடு இதை ஒப்பிட‌ முடியாது. ஆனால் கில்லிதான் என‌க்கு விஜ‌யின் சிற‌ந்த‌ ப‌ட‌மாக‌ இருந்த‌து. ஆம், இருந்த‌து.

ப‌ட‌த்தில் விஜ‌ய் யாரையும் அடிக்க‌வில்லை. ஆனால் ச‌த்ய‌ராஜ்,ஜீவா,ஸ்ரீகாந்த், இலியானா.. அட‌ அவங்க‌ அக்கா கூட‌ விஜ‌யை அடிக்கிறார்.அர‌ங்கில், இருக்கும் எல்லா கெட்ட‌ வார்த்தைக‌ளும் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு வெற்றிக்காக‌ இத்த‌னை பேரிட‌மா அடி வாங்குவ‌து என‌ வ‌ழ‌க்க‌ம் போல் வ‌க்க‌னையா குறுஞ்செய்தி அனுப்ப‌லாம். ஆனால் த‌ன‌க்கென‌ இமேஜ் எதுவும் எல்லாம் இல்லையென்ப‌தை திட்ட‌வ‌ட்ட‌மாக‌ நிரூபிக்கிறார் விஜ‌ய்.

ப‌ட‌த்தின் குறைக‌ளாக‌ பார்த்தால் நீள‌த்தை சொல்ல‌லாம். அது எல்லா ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்திலும் இருக்கும் ஒரு குறை. ஆனால் எல்லா காட்சிக‌ளையும் க‌தையோடு பிண்ணிய‌து திரைக்க‌தை ஆசிரிய‌ரின் சாம‌ர்த்திய‌ம். ப‌ட‌ம் முடிந்த‌ பின் வரும் 5,10 நிமிட‌ காட்சிக‌ள் சில‌ருக்கு பிடிக்காம‌ல் போக‌லாம்.

ந‌ண்ப‌ன் – Honest remake. And a best feel good movie in tamil.

Jan 11, 2012

த‌வ‌ளைக்க‌ல்

16 கருத்துக்குத்து

 

குஜ்ஜு யாரென‌ தெரியாத‌வ‌ர்க‌ள் இங்கே ப‌டித்துக் கொள்ளுங்க‌ள்.

சில‌ நாட்க‌ள் விடுமுறையில் இருந்த‌ குஜ்ஜு இன்று ராஜினாமா செய்து விட்டாள். :((

____________________________

image

வ‌ற‌ண்ட‌ நில‌த்தை
வ‌ள‌மாக்க‌ வ‌ந்த‌வ‌ளே!!

வாச‌ம‌ற்ற‌ பூமியில்
வான‌வில்லாக‌ மின்னிய‌வ‌ளே!!

தாண்டியா ஆட்ட‌மாட‌ எண்ணியிருந்த‌போது ‍என்னை
தாண்டி த‌னியே செல்ல‌ எப்ப‌டி முடிகிற‌துன்னால்?

ஸ்லீவ்லெஸ்ஸில் ம‌ய‌க்கிவிட்டு
லைஃப்லெஸ்ஸாக‌ ஆக்கிவிட்டாயே

மோடியின் மாநில‌த்தில் பிற‌ந்து
மோடி ம‌ஸ்தான் வேலை செய்ய‌வா வ‌ந்தாய்?

இனி என் காலை எப்ப‌டி விடியும்?
இனி என் இர‌வுக‌ள் எங்க‌னம் உற‌ங்கும்?

வொய் திஸ் கொலைவெறிடி பாட‌ச்சொல்லி ர‌சித்த‌து
இதை ம‌ன‌தில் வைத்துதானா!!!!

நேற்றுதான் பெள‌ர்ண‌மி.
இன்றே அமாவாசை ஆகிப்போன‌தென‌க்கு.

இனி நீயில்லாத‌ இருக்கை
உண்ண‌ முடியாத‌ ப‌ருக்கை

பார் போற்றிய‌ குஜ்ஜு அப்டேட்ஸை
BAR போற்றும்ப‌டி செய்துவிட்டாயே

எங்கே பார்த்தாலும் உன் முக‌மென‌ வாச‌ன் ஐகேர் சென்றேன்
இனி, எதுவுமே தெரிய‌வில்லையென‌ செல்ல‌ வேண்டிய‌துதான்..

உன் கால‌டி மீண்டும் ப‌ட்ட‌தால் அஹ‌ம‌தாகுட் என‌ பெய‌ர் மாற்ற‌ போகிறார்க‌ளாம்.

ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் ச‌ங்கீத‌ சீச‌ன் தானே முடியும்?
ச‌ங்கீத‌மே முடிவ‌தென்ன‌ நியாய‌ம்?

குஜ‌ராத் தோக்ளா போனா கேர‌ளா ரேக்ளா வ‌ர‌லாம்.
வாழ்க்கை போனா வாழ‌க்காவா வ‌ரும்?

உன் ராஜினாமா க‌டித‌ம் உன் வேலை முடிவ‌ல்ல‌..
என் வாழ்க்கை முடிவு..

அஹிம்சையின் ராஜா காந்தி பிற‌ந்த‌ ம‌ண்ணில்
இம்சை ராணி பிற‌ந்த‌தை என்னவென்று சொல்ல‌!

நீ

வேலையை விட்டு போக‌லாம்
சென்னையை விட்டு போக‌லாம்
என்னை விட்டு…..முடியாது

என்றென்றும் உன் நினைவில்,
கார்க்கி

_______________________

Jan 10, 2012

blog.twitter.trek.sachin.vijay

8 கருத்துக்குத்து

 

myphoto

த‌மிழ்ம‌ண‌ம் சென்ற‌ ஆண்டின் டாப் 100 ப‌திவுக‌ளிலும் சாள‌ர‌ம் வ‌ர‌வில்லையென‌ ந‌ண்ப‌ர் மோக‌ன்குமார் ப‌திவில் சொல்லியிருந்தார். தொட‌ர்ந்து எழுதாத‌தும், ம‌ற்ற‌ ப‌திவுக‌ள் ப‌க்க‌ம் அதிக‌ம் எட்டிப் பார்த்து க‌மென்ட் போடாத‌தும் கார‌ண‌மாயிருக்க‌லாம். இதிலெல்லாம் என்ன‌ இருக்கிற‌து கார்க்கி என்று சொன்னாலும், பிளாக் என‌க்கு மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஒரு பெரிய‌ மாற்ற‌த்தை உங்க‌ளைப் போல‌ என‌க்கும் அது த‌ந்திருக்கிற‌து. அதில் இருந்து வில‌கி செல்வ‌து போல‌ ஒரு உண‌ர்வை இது த‌ந்த‌தாலே ச‌ற்று வருத்த‌மாயிருக்கிற‌து. அதுக்காக‌ வ‌சூல்ராஜா க‌ம‌ல் போல‌ ஏதேனும் ச‌ப‌த‌மெடுத்து உங்க‌ளை க‌ஷ்ட‌ப்ப‌டுத்த‌ போவ‌தில்லை. நிம்ம‌தியா‌ இருங்க‌ப்பா.

______________________________________________________________________

பிளாகை விட்டு ட்விட்ட‌ருகுத்தானே போனேன்!. அங்கே ஒரு ந‌ல்ல‌ விஷ‌ய‌ம் ந‌ட‌ந்திருக்கிற‌து. Headlinesindia என்றொரு இணைய‌த்த‌ள‌ம் த‌ங்க‌ளை பிர‌ப‌ல‌மாக்கி கொள்வ‌த‌ற்காக‌ ஃபேஸ்புக், ட்விட்ட‌ர் இதிலெல்லாம் யார் பிர‌ப‌லமான‌வ‌ர்க‌ள் என‌ ஒரு தேர்த‌ல் வைத்திருந்தார்க‌ள். அர‌சிய‌ல், விளையாட்டு என‌ ப‌ல‌ பிரிவுக‌ளில் போட்டிக‌ள் ந‌ட‌ந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்ட‌ர் இதில் ம‌ட்டுமே நிஜ‌மான‌ பிர‌ப‌ல‌ம‌ல்லாத‌வ‌ர்க‌ள் போட்டியிட‌ முடிந்த‌து. இந்திய‌ அள‌வில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து என்றாலும் பெரும்பாலும் த‌மிழிணைய‌ ந‌ண்ப‌ர்க‌ளே அதிக‌ம் வாக்க‌ளித்தார்க‌ள். அத‌னாலே சிற‌ந்த‌ ட்விட்ட‌ர் * சிற‌ந்த‌ ஃபேஸ்புக்க‌ர் என‌ இர‌ண்டுமே த‌மிழ் இணைய‌ போட்டியாள‌ர்க‌ளே வெற்றி பெற்றிருக்கிறார்க‌ள். இந்திய‌ அளவில் என்று சொன்னால் இது ஹ‌ம்ப‌க் தான். ஆனால் த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள் என்ற‌ள‌வில் முத‌லாவ‌தாக‌ வ‌ந்த‌து சொல்லொண்ணா ம‌கிழ்ச்சியை த‌ந்த‌து என்ப‌து உண்மைதான். ட்விட்ட‌ர் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் ந‌ன்றியோ ந‌ன்றி

http://headlinesindia.mapsofindia.com/hiflyers/index.php

Untitled

______________________________________________________________________

வ‌ன‌ம் புகுத‌ல். 3 அல்ல‌து 4 மாத‌ங்க‌ளுக்கு ஒரு முறை ஒரு பிரேக் எடுப்ப‌தை வ‌ழ‌க்க‌மாக‌ வைத்திருக்கிறேன். எப்போதும் குடும்ப‌த்தின‌ர் அல்ல‌து நெருங்கிய‌ ந‌ட்புக‌ளுட‌னே இது சாத்தியாமாய் இருந்திருக்கிற‌து. இந்த‌ முறை ஒரு ட்ரெக்கிங் குழுவின‌ரோடு வ‌ன‌ம் புகும் வாய்ப்பு கிடைத்த‌து. அட‌ர்வ‌ன‌த்தின் ந‌டுவே இருந்த‌ அருவியில் குளித்து, ந‌ட்ட‌ ந‌டுக்காட்டில் டென்ட் அடித்துத் தூங்கி, சாலையே இல்லாத‌ வ‌ழியில் ஜீப்பை க‌ட்டி இழுத்து சென்று என‌ ப‌ல‌ சுவார‌ஸ்ய‌மான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் தொகுப்பாய் அமைந்த‌து. இது குறித்து விரிவாய் எழுத‌ வேண்டுமென்ற‌ எண்ண‌ம் இப்போது இருப்ப‌தால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

 

______________________________________________________________________

ச‌ச்சினுக்கு யார் யாரோ அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார்க‌ள். அவ‌ரால் 100 அடிக்க‌ முடிய‌வில்லையாம். அவ‌ர் அடிக்க‌ வேண்டிய‌து 100வது நூறு என்ப‌தை யாரும் க‌ணக்கில் கொண்ட‌தாய் தெரிய‌வில்லை. அவ‌ர் 100 அடித்து ஒரு வ‌ருட‌மாகிவிட்ட‌து என்றும் ஒரு செய்தி. உல‌க‌க்கோப்பையில் அடித்த‌து என்னவாம் என்றால் அது ஒரு நாள் போட்டியாம். அப்போ டெஸ்ட்டின் ம‌ட்டுமா அவ‌ர் 100வ‌து 100 அடிக்க‌ போகிறார்? 80,90 க‌ளை அவ‌ரால் 100 ஆக‌ க‌ன்வெர்ட் செய்ய‌ முடிய‌வில்லையாம். அத‌னால் அவ‌ர் ஓய்வு பெற‌ வேண்டுமாம். இப்ப‌டி ஐம்ப‌து ஐம்ப‌தாக‌ அடித்த‌தால் ச‌ச்சின் ச‌த்த‌மின்றி இன்னொரு சாத‌னையும் செய்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அதிக‌ 50 அடித்த‌வ‌ர் என்ற‌ சாத‌னையும் ச‌ச்சின் வ‌ச‌ம் இப்போது. ஆஸி. தொட‌ரில் ச‌ச்சிந்தான் அதிக‌ ர‌ன் குவித்த‌ இந்திய‌ வீர‌ர். அடுத்த‌ இட‌த்தில்... ந‌ம்புங்க‌ள் ந‌ம்ம‌ பைய‌ அஷ்வின். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில்தான் சச்சினை ஓய்வு பெற‌ சொல்கிறார்க‌ள். 4 இன்னிங்க்ஸீலும் ந‌ம்ம‌ சுவ‌ரில் ஓட்டையில் போட்டு போல்ட் ஆக்கியிருக்கிறார்க‌ள். அது குறித்து ஒரு பேச்சும் காண‌வில்லை. உற்று நோக்கினால் நெ.1 ஆக‌ இருப்ப‌த‌ன் சிக்க‌ல்க‌ளும், நெ.2 ஆக‌ இருப்ப‌த‌ன் செள‌க‌ரிய‌ங்க‌ளும் ந‌ம‌க்கு இதிலிருந்து விள‌ங்கும்.

த‌னிம‌னித‌ சாத‌னைக‌ளா முக்கிய‌ம் என்று கேட்க‌லாம். நிச்ச‌யம் இல்லை. ஆனால் எல்லா த‌னி ந‌ப‌ர்க‌ளும் இவ‌ரைப் போல் ஆடினால் அணி வெல்வ‌து நிச்ச‌ய‌ம் தானே?

_____________________________________________________________________

image

ந‌ண்ப‌ன் வியாழ‌க்கிழ‌மை வெளிகிற‌து. நான் ப‌திவெழுத‌ வ‌ந்த‌பின் வெளியான‌ பெரும்பாலான‌ விஜ‌ய் ப‌ட‌ங்க‌ள் என‌க்கு ஏமாற்ற‌த்தையே த‌ந்திருக்கின்ற‌ன‌. காவ‌ல‌ன் ம‌ட்டும் என‌க்கு பிடித்திருந்த‌து. ஆனால் வ‌சூலில் அதிக‌ம் மின்ன‌வில்லை. வேலாயுத‌ம் ம‌சாலா ப‌ட‌ம் என்ற‌ள‌வில் திருப்தியாய் இருந்த‌து. வ‌சூலிலும். இருந்தும் கில்லி போல் ஒரு Rivetting stuff இன்னும் வ‌ர‌வில்லை. ந‌ண்ப‌ன் அந்த‌ குறையை போக்க‌லாம். அதை விட‌ துப்பாக்கியும், கெள‌த‌ம் ப‌ட‌த்தையும் அதிக‌ம் எதிர்பார்க்கிறேன். துப்பாக்கியில் விஜ‌ய் இன்னும் இள‌மையாக‌, ஸ்மார்ட்டாக‌ இருக்கிறார். கெள‌த‌ம் ப‌ட‌ம் எப்ப‌டி இருந்தாலும் விஜ‌யை இன்னும் சிற‌ப்பாக‌ காட்டுவார் என்ப‌தில் ந‌ம்பிக்கை இருக்கிற‌து. இவ‌ர்க‌ளையெல்லாம் தாண்டி விஜ‌ய் சேர்ந்து ப‌ட‌ம் ப‌ண்ண‌ வேண்டிய‌ இயக்குன‌ர்க‌ளாக‌ நான் நினைப்ப‌து இவ‌ர்க‌ளைத்தான்.

1) ராஜேஷ்( பாஸ் எ பாஸ்க‌ர‌ன், சிவா ம‌ன‌சுல‌ ச‌க்தி)
2) ப்ரியா  (க‌ண்ட‌ நாள் முத‌ல் போல‌ ஒரு ப‌ட‌ம் விஜ‌ய் செய்ய‌ வேண்டுமென்ப‌து என் ஆசை)

Jan 5, 2012

God bless

8 கருத்துக்குத்து

 

நேற்றைய‌ ஹாட் நியூஸ் த‌னுஷிற்கும் சுருதிக்கும் காத‌ல் என்ப‌துதான். இது வ‌த‌ந்தி என்று சில‌ர் சொல்கிறார்க‌ள். சில‌ர் உண்மை என்கிறார்க‌ள். ஆனால் ப‌ல‌ர் இது ஒரு விள‌‌ம்ப‌ர‌ யுக்தி என்கிறார்க‌ள். முற்றிலும் உண்மைக்கு புற‌ம்பாக‌ இருக்க‌ வாய்ப்புக‌ளே இல்லை என்ப‌தே என் க‌ணிப்பு. உண்மையாக‌வே இருந்தாலும் அடுத்த‌வ‌ர் பெர்ச‌ன‌ல் விஷ‌ய‌த்தில் த‌லையிட‌ வேண்டுமா என்ப‌து சில‌ரின் எண்ண‌ம். ச்சும்மா‌ ஜாலிக்குத்தானே என‌ நேற்று ட்விட்ட‌ரில் "காட்டு காட்டினேன்". ஜ‌ஸ்ட் ஃபார் ஃப‌ன் என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்காக‌வும், ட்விட்ட‌ரில் ப‌ழைய‌ ட்விட்டுக‌ள் காணாம‌ல் போவ‌தாலும் இங்கே ப‌திகிறேன்.

மு.கு:

1) எங்கேயும் சுருதியை குறை சொல்ல‌வில்லை. த‌னுஷைத்தான்... :)))

2) God bless என்ப‌து த‌னுஷ் த‌ன‌து எல்லா ட்விட்டிலும் சேர்க்கும் ஒரு வார்த்தை.

_______________________________

இனிமேல‌ இசை விம‌ர்ச‌க‌ர்க‌ள் த‌னுஷ‌ பார்த்து "சுருதி சேர‌ல‌"ன்னு சொல்ல‌ முடியாது

அப்போ வொய் திஸ் கொலைவெறிடின்னு ஸ்ருதிய‌ பார்த்து பாட‌லையா? அப்பாக்கிட்ட‌ சொல்லிட்டியான்னு ஐஷ்வ‌ர்யாவ‌ பார்த்துதான் பாடினாரா?

3 ப‌ட‌ம் காத‌ல் தோல்வி ப‌ற்றிய‌ ப‌ட‌மாம். ம்ஹூம். இதில் த‌னுஷ் வ‌ழ‌க்க‌ம்போல் வாழ‌வில்லையாம். வெறும் ந‌டிப்புதானாம் #godbless

காட் பிளஸ் தம்பி் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு.போயிருந்தா வீடாச்சும் கிடைச்சிருக்கும். #உங்களில்யாரடுத்தபிரபுதேவா

அப்ப‌வே சொல்லுச்சு அந்த‌ த‌னுஷ் த‌ம்பி என்னை பார்த்தா பிடிக்காது.. பார்க்க‌ பார்க்க‌த்தான் பிடிக்கும்னு..

நான் த‌னுசு ராசி, மூல‌ ந‌ட்ச‌த்திர‌ம். ஆனா த‌னுசு அள‌வுக்கு என‌க்கு ராசியில்லை. :((( #god bless

Task Completed.. ந‌ம்ம‌ அடுத்த‌ டார்கெட். சிம்பு இப்ப‌ ரூட் விடுற‌ ச‌ர‌த்குமார் பொண்ணு வ‌ர‌லட்சுமி -த‌னுஷின் ம‌ன‌சாட்சி #godbless

அய்ய‌ய்யயோ.. இவ‌ன‌ டின்ன‌ருக்கு வேற‌ கூப்பிட்டேனே!! மாம‌னார்கிட்ட‌ த‌ப்பிச்ச‌து, மாப்பிள்ளைக்கிட்ட‌ போயிடுமோ - அமிதாப்ஜி க‌வ‌லை

ஒரே வ‌ருஷ‌த்துல‌ இன்டெர்னேஷ‌ன‌ல் ஃபேம், நேஷ‌ன‌ல் அவார்ட்,ஸ்டேட் லெவ‌ல் ஃபிக‌ர் பிடிச்ச‌ த‌னுஷ‌ சின்ன‌ வ‌ய‌சுல‌ ஒரு வாத்தி எதுக்கும் லாய‌கில்லைன்னாராம்

ந‌ல்ல‌ வேளை.. விஜ‌ய்காந்துக்கு ரெண்டும் ப‌ச‌ங்க‌ளா போச்சு #god bless

அப்ப‌வே சொன்னான் என் ஃப்ரென்டு. த‌னுஷ், ர‌ஜினி+க‌ம‌ல் மாதிரின்னு.. இத‌த்தான் சொல்லியிருக்கான். என‌க்குத்தான் புரிய‌ல‌.

God blessன்னு போடுற‌ப்ப‌ கிண்ட‌ல் ப‌ண்ணோமே.க‌டைசில காடு பிள‌ஸ்ஸிட்டாரே.ஃபிக‌ர் வேண்டுவோர் இனி ட்விட்டில் காட் பிள‌ஸ் விகுதி சேர்க்க‌வும்

க‌ம‌ல்கிட்ட‌ இருந்து ந‌டிப்ப‌தானே வாங்க‌ சொன்னாங்க‌? இவ‌ன் என்ன‌டான்னா.. :)

ப‌ய‌புள்ள‌ உட‌ம்ப‌ த‌விர‌ ச‌கலவித‌மான‌ திற‌மையும் வ‌ள‌ர்த்து வ‌ச்சிருக்கு #Godbless

சூர்யா விட‌ த‌னுஷுக்குத்தான் தெற‌மை அதிக‌ம்ன்னு சொன்ன‌ப்ப‌ எகிறிய‌வ‌ங்க‌ எல்லாம் வாங்க‌ப்பா.. இப்ப‌ ஒத்துக்கிறீங்க‌ளா? #godbless

க‌டைசியா ஒண்ணு சொல்றேன்.இதெல்லாம் சொம்புவ‌ க‌திக‌ல‌ங்க‌ செய்யுமென்ப‌தால் என‌க்கு நெம்ப‌ ச‌ந்தோஷ‌ம். க‌ல‌க்குப்பா காட் ப்ள‌ஸ்

ஹைஃபை ஃபிக‌ர க‌ரெக்ட் செய்ய‌ பீட்ட‌ர் இங்லீஷு தெரிய‌ணும் என்ற‌ மாயையை உடைத்த‌ ம‌கானே!! #க‌ட‌வுட்டுக்கு வ‌ச‌ன‌ம் ரெடிப்பா #godbless

துள்ளுவ‌து இள‌மை என்ப‌தால் முத‌லில் காத‌ல் கொண்டேன். பின் சுள்ளானாக‌ இருந்தாலும் என் ட்ரீம்ஸ்ல‌ சூப்ப‌ர் ஸ்டார் ஆகுற‌‌ மாதிரி நினைச்சேன்.அப்ப‌தான் என் தேவ‌தையை க‌ண்டேன். ம்ம். அது ஒரு க‌னாக்கால‌ம். புதுப்பேட்டை நாய‌க‌னின் ம‌க‌ளோடு என் திருவிளையாட‌ல் ஆர‌ம்ப‌ம் ஆன‌து. சில‌ர் நீ ஒரு ப‌ர‌ட்டை என்கிற‌ அழ‌குசுந்த‌ர‌ம் என‌ எள்ளி ந‌கையாடி என்னை பொல்லாத‌வ‌ன் ஆக்க‌ பார்த்தார்க‌ள்.யார‌டி நீ மோகினியென‌ ந‌ய‌ன் தாராவை பார்த்து கேட்ட‌த்தை த‌டுத்தார்க‌ள்..ப‌டிக்காத‌வ‌ன், குட்டி என்றெல்லாம் ஏள‌ன‌ம் செய்தாலும் உத்த‌ம‌புத்திரான‌க‌வே இருந்தேன்.திரும‌ண‌த்திற்கு பின் என் ஆடுக‌ள‌ம் தான் என்றாலும் சூப்ப‌ர்ஸ்டாருக்கு சீட‌னாக‌வே இருந்தேன். பாயும் புலியின் மாப்பிள்ளையான‌ நான் வேங்கையாக‌ இருக்க‌ கூடாதா? இனியும் ம‌ய‌க்க‌ம் என்ன‌ , உன‌க்கு த‌ய‌க்க‌ம் என்ன‌ என்று கிள‌ம்பினேன். இதோ ஐஷ்வ‌ர்யா, ந‌ய‌ன் தாராவுக்கு பின் 3வ‌தாக‌ சுருதியை சேர்ந்திருக்கிறேன். God bless

Jan 4, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி

7 கருத்துக்குத்து

 

என்னை பரிசாய் வைத்து ஒரு போட்டி நடத்த போறாளாம் தோழி. #நீங்களும் வெல்லலாம் ஒரு கேடி

___________________________________________________________________________     

நண்பன் சற்று முன்பு அழைத்து ஒரு நல்ல செய்தி சொன்னான். #தோழி எடு. கொண்டாடு

___________________________________________________________________________     

மொக்கை நோக்கியா ஃபோன் ஒன்றில் எனது ஃபோட்டோவை வால்பேப்பராக வைத்துவிட்டு ஸ்மார்ட்ஃபோன் என்று போங்காட்டம் ஆடுகிறாள் தோழி

___________________________________________________________________________     

தோழிக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லையாம். பரிகாரம் பண்ண சொன்னாராம் ஜோசியர். அவ செய்தா பரிஸ்வீட் தானே? பரிகாரம் எப்படி?

___________________________________________________________________________     

cold என்பதை "கோல்டு” என தமிழில் டைப்பி விட்டேன் தோழியுடனான சேட்டில்.

” நீ gold தான்னு தெரியுமே தங்கம்” என்கிறாள்.

___________________________________________________________________________     

நீதான் உலகம் என்கிறாள் தோழி. உருண்டையாக இருப்பதில் தான் எத்தனை வசதிகள்???

___________________________________________________________________________

Jan 3, 2012

க‌ட‌வுள்

5 கருத்துக்குத்து

 

ஒரு ப‌க்த‌ன் தின‌மும் க‌ட‌வுளிட‌ம் சென்று ஏதாவது ஒரு வ‌ர‌ம் கேட்டுக் கொண்டே இருந்தானாம். வ‌ர‌ம் கேட்ட‌பின் பூசாரியிட‌ம் விபூதி வாங்கிக் கொண்டு திரும்புவ‌து வ‌ழ‌க்க‌மாம். அடிக்க‌டி அவ‌ன் கேட்கும் வ‌ர‌ங‌க்ளை க‌ட‌வுளும் த‌ந்துக் கொண்டே இருப்பாராம். ஆனால் எப்போது வ‌ர‌ம் கிடைக்குமென்ப‌து அவ‌னுக்கு தெரியாதாம். க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ தொட‌ர்ந்து ஒரு பெரிய‌ வ‌ர‌த்தை கேட்டுக் கொண்டிருக்கிறானாம். ஆனால் க‌ட‌வுள் கொடுப்ப‌தாய் தெரிய‌வில்லையாம். ஆனால் பூசாரி தின‌மும் விபூதியை த‌வ‌றாம‌ல் கொடுத்துக் கொண்டே இருக்கிறாராம்.

ப‌க்த‌னை க‌ண்டு க‌டுப்பான‌ அவ‌ர் ம‌னைவி "அதான் பூசாரி த‌வ‌றாம‌ கொடுக்கிறாரே.. அவ‌ர்கிட்ட‌ கேட்க‌லாமே உங்க‌ வ‌ர‌த்தை" என்றாராம். அத‌ற்கு அந்த‌ ப‌க்த‌ன் "கொடுக்க‌ லேட்டானாலும் இந்த‌ மாதிரி வ‌ர‌ங்க‌ளை க‌ட‌வுளால் தான் த‌ர‌ முடியும். பூசாரியால் விபூதியைத்தான் த‌ர‌ முடியும் " என்றானாம்.

Now click here

 

all rights reserved to www.karkibava.com