Dec 29, 2011

நேற்றுதான் செத்து போனேன்


 

ரெஸ்ட்ரூமில் இருவ‌ர் பேசிக் கொண்டிருந்தார்க‌ள் "அன்னைக்கு ப‌க்க‌த்துலே போய் பார்த்தோம். ப‌ச‌ங்க‌ 2 பேரும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்க‌.க‌ட‌வுள நேர்ல் பார்த்த‌ மாதிரி இருந்துச்சு எவ்ளோ பெரிய‌ ஜீனிய‌ஸ்!ந‌ம்ப‌வே முடிய‌ல‌ என்னால‌".

எட்டு பேர் கொண்ட‌ குழுவொன்று த‌லையில் பிர‌த்யேக‌மாய் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ தொப்பியில் அவ‌ர் புகைப்ப‌ட‌த்தோட‌ வ‌ந்திருந்தது.

அர‌ங்க‌ம் நிறைந்து போனதால் மேடைக்கு நேர் எதிரில் இருந்த‌ கேல‌ரியில் நூறு பேர் நின்றுக் கொண்டேயிருந்தார்க‌ள். 6 ம‌ணி நேர‌மும்

இன்னும் நீட்டித்துக் கொண்டே போக‌லாம்.ஆனால் இது நேற்று ந‌ட‌ந்த‌ இளைய‌ராஜா இசை நிக‌ழ்வு ப‌ற்றிய‌ ப‌திவு என்ப‌தை அறியாமாலா இருப்பீர்க‌ள்?

ச‌ரியாக‌ 3.30க்கு நேரு உள்விளையாட்ட‌ர‌ங்க‌ம் சென்றுவிட்டோம். தேவைய‌ற்ற‌ நெரிச‌லை உண்டாக்குவ‌தில் பி.எச்டி முடித்த‌ த‌மிழ‌க‌ காவ‌ல்துறையின‌ர் ப‌ணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்க‌ள். முண்டிய‌டித்து உள்சென்று மேடைக்கு முன்னால் ஆக‌ச்சிற‌ந்த‌ இருக்கையில் இட‌ம் பிடித்து அம‌ர்ந்த‌போதே நிறைவான‌து ம‌ன‌து. திரைக‌ளில் ம‌ல‌பார்  விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் "அழ‌கும் த‌ர‌மும் ச‌ங்க‌ம‌ம்" என‌ பாடிக் கொண்டேயிருந்தார் ராஜா. இசைக்கு ஏத‌ய்யா மொழி?

(செட்டில் ஆயாச்சு.. செத்து போக‌.)

பிர‌காஷ்ராஜ்தான் தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்ச்சியின் ஆர‌ம்ப‌த்தில் ராஜாவை ப‌ற்றிய‌ ஒரு டாகுமென்ட்ரியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ள். ராஜாவின் மன‌வி ஜீவா அவ‌ர்க‌ளுக்கு நிக‌ழ்வை காணிக்கையாக்கினார்க‌ள். பார்வையாள‌ர்க‌ள் ப‌க்க‌ம் கேம‌ரா திரும்பிய‌து. ராஜாவின் ப‌க்த‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ தேவி ஸ்ரீ பிர‌சாத் வ‌ந்திருந்தார். யுவ‌ன் மாப்பிள்ளை க‌ண‌க்காக‌ சூட்டில் வ‌ந்திருந்தார்.பாட‌க‌ர்க‌ளில் பாலு அண்ணா, ஜேசுதாஸ், பால‌முர‌ளி கிருஷ்ணா, ஹ‌ரிஹ‌ர‌ன், சித்ரா, கார்த்திக், ஹ‌ரிச‌ர‌ண், ஸ்ரீராம், உமா ர‌மண‌ன், தீப‌ன் ச‌க்ர‌வ‌ர்த்தி ம‌ற்றும் ப‌ல‌ர் வ‌ந்திருந்தார்க‌ள். எதிர்பார்த்த‌வ‌ர்க‌ளில் ஷ்ரேயா கோஷ‌லும், சிவ‌ம‌ணியும் வ‌ராத‌து மிக‌ப்பெரிய‌ குறை.

சூப்ப‌ர் சிங்க‌ரில் தோல்விய‌டைந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் கோர‌ஸாக‌ எதையோ ஹ‌ம் செய்துக் கொண்டிருந்தார்க‌ள். மேடையில் இருந்த‌ பிர‌ம்மாண்ட‌ க‌த‌வு திற‌க்க‌ வெள்ளை உடையில் ராக‌தேவ‌ன் உள்ளே வ‌ந்தார். கூக்குர‌ல் எழாம‌ல் இல்லை. தீவிர‌ ராஜா ர‌சிக‌ர்க‌ள், அவ‌ர்  எப்போது வாய் திற‌ப்பார்? என்ன‌ பாட‌ல் முத‌லில் பாடுவார் என்பதிலே ஆர்வ‌மாயிருந்த‌ன‌ர். நான் வேறு 200 ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டியிருந்தேன். “எங்க‌ என் ந‌ண்ப‌ன்? என் ஒரே ந‌ண்ப‌ன்” என‌ ஹார்மோனிய‌ப் பெட்டியை வாங்கி, என‌க்காக‌ 200 ரூபாய் ச‌ம்பாதித்த‌ ராஜா வாய் திற‌ந்தார்

"ஜ‌ன‌னி ஜ‌ன‌னி.. ஜ‌க‌ம் நீ அக‌ம் நீ".

ஸ்தம்பித்த‌து 7000 பேர் அமர்ந்திருந்த‌ அர‌ங்க‌ம்.Raja started singing. And we started sinking.

ராஜா. த‌மிழ‌ர்க‌ளின் வாழ்நாளை நீட்டித்த‌வ‌ன். இசையின் ஆழ‌த்தை எம‌க்கு க‌ற்பித்த‌வ‌ன். உல‌கின் ஒவ்வொரு த‌மிழ‌னின் வீட்டிலும் தின‌ம் தின‌ம் உழைத்துக் கொண்டிருக்கும் முத‌லாளி. ப‌ல‌ரின் சுமைக‌ளை தாங்கும் சுமைதாங்கி.வ‌ய‌லில் இற‌ங்கி வேலைப்பார்த்துக் கொண்டிருந்த‌வ‌ன் வ‌ய‌லினில் வேலை செய்ய‌ தொட‌ங்கிய‌தில் ஆர‌ம்ப‌மான‌து ஒரு இசை ச‌காப்த‌ம். தாய்ப்பாலோடு இவ‌னின் இசையும் க‌ல‌ந்தே எங்க‌ளுக்கு ஊட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. எங்க‌ள் நாடி,ந‌ர‌ம்பு, ச‌தை,புத்தி எல்லாமும் க‌ல‌ந்து போயிருக்கிற‌து இவ‌னின் த‌ந்தி மீட்ட‌ல்க‌ளும், தாள‌ ஜ‌திக‌ளும்.

  ராஜாவின் இசை க‌ல‌வியைப் போன்ற‌து. கேட்க‌ கேட்க‌ போதுமென‌ தோன்றினாலும் நிறுத்திய அடுத்த‌ நிமிட‌மே இன்னும் வேண்டுமென‌ ஏங்க‌ வைக்கும். ராஜாவின் இசை அருவியின் அடியில் வைக்க‌ப்ப‌ட்ட‌ பாத்திர‌ம் போன்ற‌து.. பொங்கி பொங்கி வழிந்தாலும் மீண்டும் வேண்டுமென்ப‌த‌ற்காக‌ நிர‌ம்புவ‌தேயில்லை. ராஜாவின் இசை ர‌யிலை போன்ற‌து. த‌ண்ட‌வாளமாகிய‌ எங்க‌ளை க‌ட‌ந்த‌ பின்னும் நாங்க‌ள் அதிர்ந்துக் கொண்டேயிருப்போம். ராஜாவின் இசை. எங்க‌ள் காத‌லி போன்ற‌து. கொஞ்சுவோம்.கெஞ்சுவோம்.மிர‌ட்டுவோம். காலில் விழுவோம்.வெகு இய‌ல்பாக, ராஜாவுக்கு இசை வ‌ரும். எங்க‌ளுக்கு அவ‌ர் இசையே வ‌ர‌ம்.

"இறைவ‌னை நான் பாடுவ‌தால் அது இறைவ‌னுக்கு புகழ‌ல்ல‌.இறைவ‌ன் இன்னும் பெரிய‌வ‌ன். அது என‌க்குத்தான் பெருமை  - ‍ ராஜா"”

இதில் இறைவ‌ன் என்னுமிட‌த்தில் ராஜாவின் பெய‌ரையும், ராஜாவுக்கு ப‌தில் என் பெய‌ரையும் மாற்றிப் ப‌டித்துக் கொள்ளுங்க‌ள்.

(தொட‌ரும்)

30 கருத்துக்குத்து:

பாண்டியன் on December 29, 2011 at 10:42 AM said...

சூப்பர் பிரதர். ரெம்ப நல்லா இருக்கு..

Thangarajah Keerthiraj on December 29, 2011 at 10:43 AM said...

கொடுத்து வைத்தவர் நீங்கள் கார்க்கி... நேரிலேயே அமுதகானம் கண்டு கேட்டு ரசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள், ஜெயா டீவியில் வெளிவரும் வரை பொறுத்திருக்கவேண்டும் நாங்கள்.. தொடர்ந்தும் காத்திருக்கிறோம் இப்பதிவின் மிகுதிக்காக

வித்யா on December 29, 2011 at 10:44 AM said...

Nallave irunga :x

amas on December 29, 2011 at 10:46 AM said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. நடந்ததை, நிகழ்ந்ததை, மனதில் அவர் இசையால் ஏற்படும் தாக்கத்தை, நமக்கு அவர் கிடைத்த புண்ணியத்தை, உண்மையை, பகிர்ந்தமைக்கு நன்றி.
amas32

குசும்பன் on December 29, 2011 at 10:55 AM said...

//ராஜாவின் இசை க‌ல‌வியைப் போன்ற‌து. கேட்க‌ கேட்க‌ போதுமென‌ தோன்றினாலும் நிறுத்திய அடுத்த‌ நிமிட‌மே இன்னும் வேண்டுமென‌ ஏங்க‌ வைக்கும். //

அனுபவ அறிவா? இல்ல கேள்வி ஞானமா ராசா?:))

Kaarthik on December 29, 2011 at 11:00 AM said...

Good one Karki. U r Lucky :-)

மோகன் குமார் on December 29, 2011 at 11:09 AM said...

//ராஜாவின் இசை க‌ல‌வியைப் போன்ற‌து. கேட்க‌ கேட்க‌ போதுமென‌ தோன்றினாலும் நிறுத்திய அடுத்த‌ நிமிட‌மே இன்னும் வேண்டுமென‌ ஏங்க‌ வைக்கும். //

இந்த வரியை படிக்கும் போதே "கல்யாணம் ஆகாத பேச்சிலர் எழுதும் வரியா இது !" என தோன்றியது. குசும்பன் தன் ஸ்டெயிலில் கரெக்டா கேட்டுட்டார். பதில் சொல்லுங்க கார்க்கி

shortfilmindia.com on December 29, 2011 at 11:19 AM said...

மோகன்.. கலவிக்கு கல்யாணம் ஆகணுமா? என்று கேட்க நினைத்து பாவம் நீங்க அப்பாவியா இருக்கீங்களேன்னு வருத்தப்பட்டு விட்டுடேன்..:))

கார்க்கி on December 29, 2011 at 11:33 AM said...

ந‌ன்றி பாண்டிய‌ன்

ந‌ன்றி தங்க‌ராஜ்

வித்யா, :))

ந‌ன்றி அம‌ஸ் :)

ந‌ன்றி கார்த்திக்

@குசும்ப‌ம்,மோக‌ன்,கேபிள்,

வில்ல‌ன் ப‌ட‌த்துல‌ வைர‌முத்து ஒரு பவ‌ரி எழுதி இருப்பாரு.

"இருப‌து வ‌ருட‌ங்க‌ள் இந்த‌ சுக‌ம் போதுமென்று சாயுது இளைய‌க்கொடி.
இருப‌து நிமிட‌த்தில் இன்னும் கொஞ்ச‌மென்று ஏங்குது ப‌ழைய‌ப‌டி"

இதுதான் அந்த‌ வரிக்கு இன்ஸ்பிரேஷ‌ன். போதுமா? :))

தர்ஷன் on December 29, 2011 at 11:36 AM said...

சூப்பர் பதிவு சகா, தொடரும் பாகங்களுக்கு வெயிட்டிங்
அப்புறம் இதில் ஒரு பத்திய சுட்டு ஃபேஸ்புக்ல போட்டுட்டேன், அனுமதி கேட்காமலே பரவாயில்லைத்தானே

முரளிகண்ணன் on December 29, 2011 at 11:40 AM said...

அசத்தலா இருக்கு கார்க்கி

VANJOOR on December 29, 2011 at 12:24 PM said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

மோகன் குமார் on December 29, 2011 at 12:27 PM said...

//shortfilmindia.com on December 29, 2011 11:19 AM said...
மோகன்.. கலவிக்கு கல்யாணம் ஆகணுமா? என்று கேட்க நினைத்து பாவம் நீங்க அப்பாவியா இருக்கீங்களேன்னு வருத்தப்பட்டு விட்டுடேன்..:))


கேபிள் : கலவிக்கு கல்யாணம் தேவையில்லை தான். ஆனா வெளிப்படையா சொல்லிக்க மாட்டாங்க இல்ல :))

கார்க்கி: நீங்க எப்படியும் சமாளிப்பீங்கன்னு தெரியும் :))

எத்தனை ரகுமான், ஹாரிஸ் வந்தாலும் ராஜா ராஜா தான் !!

என்ன ஒன்னு அவரின் இப்போதைய பாடல்கள் அவ்வளவு அருமையா இல்லை. ஆனால் இருபது வருஷத்துக்கும் மேல் காலத்தால் அழியாத பாட்டுக்களை நமக்கு தந்திருக்காரே. ராஜா அளவு தாக்கம் யாரும் ஏற்படுத்த முடியாது ; இத்தனை காலம் நம்பர் ஒன் ஆக இருக்கவும் முடியாது.

கிரிகெட்டுக்கு சச்சின் எப்படியோ அப்படி ... இசைக்கு ராஜா !

அன்புடன் அருணா on December 29, 2011 at 12:33 PM said...

ஒரே பொறாமையா இருக்கு! :(

பிரபல பதிவர் on December 29, 2011 at 1:11 PM said...

1990 களில் வந்த‌ பதிவோ?

கார்க்கி அப்பப்ப நைஸா மீள்பதிவு போடுவார்னு தெரியும்

ஆனா இருபத்தோரு வருஷம் கழிச்சி போடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்

சுசி on December 29, 2011 at 3:02 PM said...

செம்ம்ம்ம கார்க்கி.. தொடருங்க..

தினேஷ் on December 29, 2011 at 3:08 PM said...
This comment has been removed by the author.
தினேஷ் on December 29, 2011 at 3:10 PM said...

2004 or 2005 நான் இராமநாதபுரம் தாயுமானவ சுவாமி கோயில் வாசலில் உட்கார்ந்து படிக்கும் போது ராஜா அதே வெள்ளை உடையில் அவரின் மனைவி ஜீவாவுடன் வந்து தாயுமானவரின் பாடல்களை பாட ஆரம்பித்தார், அட அட மடத்துல உள்ள 10 பேரும் சுமார் அவர் 30 நிமிடம் எந்த ஓர் இசை கருவியின்றி அவர் பாடியதை கேட்டுகிட்டே இருந்தோம்.. போட்டோவும் எடுக்க தோணல ஆட்டோகிராப் வாங்குற பழக்கம் இல்லாததால் அதுவும் பண்ணல ...

குழந்தபையன் on December 29, 2011 at 4:48 PM said...

நான் எழுத நினைத்திருந்த அனைத்து வார்த்தைகளும் இங்கு ஒரு சேர இருக்கிறது..ராஜா ராஜா தான்..

KSGOA on December 29, 2011 at 5:21 PM said...

பொறாமையா இருக்கு!ஜெயா டிவில வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அடுத்த பாகங்களை விரைவில்
எதிர்பார்க்கிறேன்.

Thirunaresh on December 29, 2011 at 5:25 PM said...

Nanum vanthirunthen... ennai maranthen... Your lines are all super...

Thirunaresh on December 29, 2011 at 5:26 PM said...
This comment has been removed by the author.
கத்தார் சீனு on December 29, 2011 at 7:03 PM said...

அருமையான பதிவு கார்க்கி....
எங்களுக்கு கொடுத்து வைக்கலை....
நீங்க தொடர்ந்து கலக்கலா எழுதுங்க......அத படிசிக்கிட்டே, ராஜா பாட்டு கேட்டுகிட்டே நாங்க பிறவி பலன் அடையறோம்....

இசைப்பிரியன் on December 29, 2011 at 9:38 PM said...
This comment has been removed by the author.
இசைப்பிரியன் on December 29, 2011 at 9:38 PM said...

//// இதுதான் அந்த‌ வரிக்கு இன்ஸ்பிரேஷ‌ன். போதுமா? :)) ///


Avlo nallavaraa saar neenga ??? :)

Rathnavel on December 29, 2011 at 10:19 PM said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

கோபிநாத் on December 30, 2011 at 12:32 AM said...

\\மேடைக்கு நேர் எதிரில் இருந்த‌ கேல‌ரியில் நூறு பேர் நின்றுக் கொண்டேயிருந்தார்க‌ள்.\\

சகா சைடுல கூட நின்னுக்கிட்டே இருந்தோம் சகா ;-))

உங்களை போலவே ஆசிர்வதிக்கப்பட்டவன் ! ;-)

Radio for Free Voices on December 30, 2011 at 10:27 AM said...

நாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

RADIO FOR FREE VOICES
நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல்

http://rffvtamil.blogspot.com

Aishwarya Govindarajan on December 31, 2011 at 1:37 PM said...

karki :-) was expecting one post from u on the concert.. :-) lucky u..I missed being thr..thou booked for tickets.. :-(
expecting a detailed a post from u on each and every songs tht was performed..

இரசிகை on February 11, 2012 at 3:59 PM said...

thodarchi yeppo??

 

all rights reserved to www.karkibava.com