Dec 31, 2011

Happy new year


 

எல்லோருக்கும் HAPPY NEW YEAR

எல்லா இட‌த்திலும் இதே பேச்சுதான் இருக்கும். இருந்தாலும் நானும் இந்த‌ வருஷ‌த்துல‌ என‌க்கு பிடிச்ச‌ விஷ‌ய‌ங்க‌ள‌ ப‌திவு செய்ய‌லாம்னு நினைக்கிறேன். இது முழுக்க‌ முழுக்க‌ என‌க்கு பிடிச்ச‌துதான். சிற‌ந்த‌துன்னு அர்த்த‌ம் ப‌ண்ணிக்காதீங்க‌ :)

 

சிற‌ந்த‌ ப‌திவ‌ர்   : ஓலைக்க‌ண‌க்க‌ன்

சிற‌ந்த‌ ட்விட்ட‌ர் :ஜெக‌ன் (@thoatta)

சிற‌ந்த‌ ப‌திவு    : க‌ண்ண‌ம்மா

என‌க்கு பிடிச்ச‌ என் ப‌திவு : மாப்பிள்ளை

சிற‌ந்த‌ கிரிக்கெட் வீர‌ர் : டேல் ஸ்டெயின்

 

சினிமா

சிற‌ந்த‌ ப‌ட‌ம்           காஞ்ச‌னா
சிற‌ந்த‌  இயக்குன‌ர் : வெற்றிமாற‌ன்
சிற‌ந்த‌ ந‌டிக‌ர்    த‌னுஷ் (ஆடுக‌ள‌ம், ம‌யக்க‌ம் என்ன‌)
சிற‌ந்த‌ ந‌டிகை அஞ்ச‌லி (எங்கேயும் எப்போதும்)
சிற‌ந்த‌ இசைய‌மைப்பாள‌ர் ச‌த்யா (எங்கேயும் எப்போதும்)
சிற‌ந்த‌ பாட‌க‌ர் கார்த்திக் (ச‌ட‌ச‌ட‌ச‌டெவ‌ன‌)
சிற‌ந்த‌ பாட‌கி பிரிய‌த‌ர்ஷினி (அழ‌கா பொற‌ந்துப்புட்ட‌ ‍-சிறுத்தை)
சிற‌ந்த‌ பாட‌லாசிரிய‌ர் ம‌த‌ன் கார்க்கி (என்ன‌மோ ஏதோ)
சிற‌ந்த‌ பாட‌ல் வ‌ரி : ஒரு குட்டி பூனை போல‌ ஆசை எட்டிப் பார்க்குதே. / அது அச்ச‌ம் ம‌ட‌ம் நாண‌மெல்லாம் த‌ட்டி பார்க்குதே (சொட்ட‌ சொட்ட‌ ந‌னைய‌ வைத்தாய்)
சிற‌ந்த‌ குறும்ப‌ட‌ம்

  : ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்

என்ன‌ள‌வில் ந‌ட‌ந்த‌ சில‌ ச‌ந்தோஷ‌ நிக‌ழ்வுக‌ள் :

1) இந்தியா உல‌க‌ கோப்பை வென்ற‌து, அப்போது ட்விட்ட‌ரில் லைவ் க‌மென்ட்ரியோடு நான் செய்த‌ க‌ணிப்புக‌ள் 10 போட்டிக‌ளில் 9 போட்டிக‌ள் ச‌ரியாக‌ அமைந்த‌து.

2) புது வேலையில் சேர்ந்து 6 மாத‌ங்க‌ளிலே ஒரு புர‌மோஷ‌ன் கிடைத்த‌து

3) இந்திய‌ அள‌வில் ந‌டைபெற்ற‌ ட்விட்ட‌ர்க‌ளுக்கான‌ தேர்வில் முத‌லிட‌த்தில் இருப்ப‌து. (இன்றோடு வாக்குப்ப‌திவு முடிகிற‌து.). இங்கே த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள்தான் அதிக‌ம் வாக்க‌ளித்திருக்கிறார்க‌ள் என்ப‌தை அறிவேன். இருந்தாலும் த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள் வ‌ட்ட‌த்தில் முத‌லிட‌ம் என்ப‌தே ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம் தானே?

4) மொக்கையாக‌ எடுத்தாலும், 4,5 குறும்ப‌ட‌ங்க‌ள் எடுத்த‌து

5) இளைய‌ராஜா இசை நிக‌ழ்ச்சிக்கு சென்ற‌து

6) என் தோஸ்த் ப‌திவ‌ர்க‌ள் ர‌ம்யா ‍ கிர‌ண் திரும‌ண‌ நிக‌ழ்வு

7) இயக்குன‌ர் செல்வாவின் "ம‌ன‌சு" குறும்ப‌ட‌த்தில் ந‌டித்த‌து.

 

ம‌ற‌க்க‌ நினைப்ப‌து :

1) பைக் விப‌த்து

2) ம‌ங்காத்தா ப‌திவு :)))

 

My Fav click:

13 கருத்துக்குத்து:

amas on December 31, 2011 at 12:15 PM said...

Wow Karki. Excellent post. I agree with almost all your "best" selections. Congratulations on being promoted in your new job within 6 months. I wish you many more successes both in your career and personal life in the year 2012! You left of one event, your Thiruppavai podcast in KRS's Madhavi Pandhal :)
amas32

மோகன் குமார் on December 31, 2011 at 12:17 PM said...

எல்லாம் நைஸ். சிறந்த படம் காஞ்சனா என்பது தான் சற்று உதைக்குது

இந்த வருடம் குறும்படங்கள் விஷயத்தில் நிறைய முன்னேற்றம் உங்களுக்கு என நினைக்கிறேன்

Congrats for ur Twitter achievement and promotion too !

என். உலகநாதன் on December 31, 2011 at 12:46 PM said...

கார்க்கி,

என் பங்குக்கு நானும் ஒரு ஒட்டு டிவிட்டர்ல இப்ப போட்டுட்டேன்.

வந்தியத்தேவன் on December 31, 2011 at 12:57 PM said...

வாழ்த்துக்கள்
குஜ்ஜுவைப் பற்றி ஒரு வரியும் எழுதவில்லையே என்ன காரணம்?

siva sankar on December 31, 2011 at 1:01 PM said...

WISH YOU HAPPY NEW YEAR TO ALL

suryajeeva on December 31, 2011 at 1:32 PM said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

என்றும் இனியவன் on December 31, 2011 at 3:49 PM said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

சுசி on December 31, 2011 at 4:00 PM said...

அருமையான தேர்வுகள் :))

இந்த வருடம் உங்களுக்கு இன்னமும் இனியதாய் அமைய மனமார்ந்த வாழ்த்துகள் :)

நடராஜன் on January 1, 2012 at 1:44 AM said...

எனக்கு 2011 ஏதாவது ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தியது என்றால் இந்த பதிவுலகம் பக்கம் எட்டிப்பார்த்ததே! தங்கள் பதிவுகளைப் படித்து எழுதப் பழகிய இந்த inspired சீடனின் பதிவை தங்களுக்கு பிடித்த பதிவாக தாங்கள் கூறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தக் குழந்தையின் நடையை ரசித்து அடுத்த அடி வைக்க ஊக்கம் கொடுக்கும் ஒரு தந்தையின் கரமாகவே இந்த முயற்சியைக் கருதுகிறேன். நான் பிடித்த கரம் என்னை தொடர்ந்து வழிநடத்தவேண்டுகிறேன்!  இனி வரப்போகும் வருடங்கள் (டம்) எனக்கு என்ன தரப்போகிறது என அறியேன்! ஆயினும் 2011இன் இறுதி நாள் இப்படி இன்பத்தோடு முடியும் என கனவிலும் நினைக்கவில்லை! உங்கள் கரத்தை பிடித்து நடக்கும் இந்த இளைய சகோதரனின் இடமிருந்து மீண்டுமொரு நன்றிகள்!

KSGOA on January 1, 2012 at 3:12 PM said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!வரும் ஆண்டில் உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்!!!

Sen22 on January 2, 2012 at 2:37 PM said...

Happy New Year Karki...!!

Congrats for your tamil twitter rating...!!

தமிழ்தோட்டம் on January 4, 2012 at 9:40 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

இரசிகை on February 11, 2012 at 3:50 PM said...

m..
vaazhthukal
:)

 

all rights reserved to www.karkibava.com