Dec 21, 2011

ச‌வால் சிறுக‌தை போட்டியும் பின்னே ஞானும்


 

க‌ட‌ந்த‌ ஞாயிறு அன்று ஆதி & ப‌ரிச‌ல் யுடான்ஸ் திர‌ட்டியுட‌ன் இணைந்து ந‌ட‌த்திய‌ ச‌வால் சிறுக‌தை போட்டியின் ப‌ரிச‌ளிப்பு விழாவை தொகுத்து வ‌ழ‌ங்கும் வாய்ப்பு என‌க்கு கிடைத்த‌து. வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ மேடையேறி இருந்தாலும் தொகுத்து வ‌ழ‌ங்குவ‌து இதுவே முத‌ல்முறை. பெரும்பாலும் நான் முன்னேற்பாடுக‌ள் செய்து கொண்டு போன‌தில்லை. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் அதுவே சாத‌க‌மாக‌வும், சில‌ நேர‌ங்க‌ளில் பாத‌க‌மாக‌வும் ஆன‌துண்டு. இம்முறை யார் யார் பேச‌ வேண்டும், யார் யாருக்கு ப‌ரிசு என்ப‌தை ம‌ட்டும் மொபைலில் குறித்துக் கொண்டு தொட‌ங்கினேன்.ஒன்றும் சிற‌ப்பாய் அமைய‌வில்லை என் தொகுப்புரை. வ‌ந்திருந்த‌ ந‌ப‌ர்க‌ளில் பெரும்பாலானோர் என‌க்கு அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ள் அல்ல‌து சீரிய‌ஸ் ஆசாமிக‌ள் என்ப‌தை கார‌ண‌மாய் சொல்லி த‌ப்பித்துக் கொள்கிறேன்.

1324216486609 1324214235181

முத‌லில் கேபிள் ச‌ங்க‌ரை வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்த‌‌ அழைத்தேன்.நிக‌ழ்வுக்கு வ‌ந்திருக்கும் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்கும் வாய்ப்பு கேபிளுக்குத்தான் என்றாலும் அவ‌ர‌ பேச‌ அழைத்த‌ வாய்ப்பு என‌க்குத்தான் என்ற‌ முன்னுரையை சொல்ல‌ எப்ப‌டி ம‌ற‌ந்தேன் என்று தெரிய‌வில்லை. குறிப்புக‌ள் இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் நிச்ச‌ய‌ம் உத‌வி புரியும் என்ப‌தை புரிந்துக் கொண்டேன். சொற்ப‌ வார்த்தைக‌ளில் வ‌ர‌வேற்று சென்றார் கேபிள் ச‌ங்க‌ர். "சிறுக‌தை போட்டி என்ப‌தால் சுருக்க‌மாக‌ முடித்துக் கொண்டார் ச‌ங்க‌ர். ந‌ல்ல‌ வேளை க‌விதைப் போட்டி ந‌ட‌த்தியிருந்தால் எல்லோரும் வாங்க‌ என்ப‌தோடு நிறுத்தியிருப்பார் போலும்" என்றேன். குறிப்புக‌ள் இருந்திருந்தால் இதெல்லாம் தோன்றியிருக்காது என்றே நினைக்கிறேன். கூட்ட‌த்தில்(?) யாராவ‌து ஹைக்கூ போட்டியென்றால் "ஹாய்" ம‌ட்டும் சொல்லியிருப்பாரோ என்ற‌ க‌மென்ட்டை சொல்வார்க‌ளென‌ எதிர்பார்த்தேன். ம்ஹூம். விஜிபி தீம் பார்க் வாச‌ல் நாய‌க‌ர்க‌ளாக‌வே இருந்தார்க‌ள்.

அதை தொட‌ர்ந்து ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ஆதியின் ப‌திவில் வாசிக்க‌லாம். நான் இப்ப‌திவை எழுதிய‌து இத‌ற்காக‌ அல்ல‌. ச‌வால் சிறுக‌தை போட்டி ப‌ற்றி அசை போட்ட‌ போது ம‌ன‌தில் தோன்றிய‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர‌ ஆசைப்ப‌டுகிறேன்.

எழுத்து என்ப‌து ஒரு க‌லை. அது எல்லோருக்கும் சாத்திய‌மாக‌ வேண்டுமென்ற‌ க‌ட்டாய‌ம் இல்லை. அவ‌சிய‌முமில்லை. இது போன்ற‌ போட்டிக‌ள் புதிதாய் எழுத‌ நிறைய‌ பேர் வ‌ர‌ வேண்டுமென்ற‌ அடிப்ப‌டையில் நிக‌ழ்வ‌தாக‌வே ப‌ல‌ராலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து. என‌க்கு அதில் உட‌ன்பாடில்லை. அவ‌ச‌ர‌ம் வேண்டாம். முழுவ‌துமாய் சொல்லி முடித்துவிடுகிறேன். எழுத‌ எழுத‌ எவ‌ர் ஒருவ‌ருக்கும் எழுத்து செம்மைப்ப‌டும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து இல்லை. அத‌ற்கு ஏதுவாய் அமைந்த‌ ஒரு க‌ள‌ம் தான் வ‌லைப்பூ. ஆர்வ‌ம் இருக்கும் அனைவ‌ருமே வ‌லைப்பூக்க‌ளில் எழுதிக் கொண்டுதான் இருப்பார்க‌ள். ந‌ன்றாக‌ எழுதும் ப‌ல‌ருக்கும் சொற்ப‌மான‌ எண்ணிக்கையிலே வாசக‌ர்க‌ள் கிடைக்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் எழுதுவ‌தை நிறுத்த‌வில்லை.கார‌ண‌ம் எழுத்தின் மீதான் ஆர்வ‌ம். இந்த‌ ஆர்வ‌ம் தான் ஒருவ‌ரை ந‌ல்லெழுத்துக்கார‌னாக‌ மாற்றும். ம‌ற்ற‌ப‌டி அதீத‌மான‌ பார்வைக‌ளோ, க‌ருத்துக‌ளோ ம‌ட்டுமே ஒருவ‌ரை எழுத்தாளானாக‌ மாற்றும் வாய்ப்பு இல்லையென்ப‌து என் க‌ருத்து.

  வ‌லைப்பூக்க‌ளில் யாரும் எழுத‌லாம்.நிச்ச‌ய‌மாக‌. ஆனால் அவ‌ர்க‌ள் அதைத்தாண்டி எழுத்தாள‌ன் அவ‌தார‌மெடுக்க‌ புத்த‌க‌ங்க‌ள் அச்சிடும்போதுதான் இப்பிர‌ச்சினை வ‌ருகிற‌து. ஒவ்வொரு ஆண்டும் புத்த‌க‌ க‌ண்காட்சிக்கு போகும்போதெல்லாம் என‌க்கு ஒன்று தோன்றும். Air pollution, Noise pollution போன்று இதுவும் ஒரு வ‌கை Pollution தானே? எத்துணை எத்துணை புத்த‌க‌ங்க‌ள்? வாசிப்பின் இன்றிய‌மையாமை குறித்து ஒருவ‌ருக்கு நாம் சொல்லும் வேளையில் இது குறித்தும் நாம் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா? சென்ற‌ வார‌ம் ர‌மேஷ் வைத்யாவிட‌ம் பேசிக் கொண்டிருந்த‌ போது சொன்னார் "200 ரூபாய் த‌ந்து ஒரு புத்த‌க‌ம் வாங்கி ப‌டிக்கும் ஒருவ‌னுக்கு எழுத்தாள‌ன் ஏதாவ‌தொன்றை த‌ர‌ வேண்டாமா? பிர‌க்ஞையோ, அறிவோ, த‌ர்க்க‌மோ.. ஏதேனும் ஒன்றை புதிதாய் அவ்வாசிப்பு த‌ர‌ வேண்டாமா? வெறும் வாசிப்பின்ப‌மோ, நேர‌க்க‌ட‌த்த‌லோ என்றால் அது வேறு"

   இத‌ற்காக‌த்தான் க‌ட்டுரை ஆர‌ம்ப‌த்தில் எழுத்தாள‌ர்க‌ள் பெருகுவ‌தை நான் விரும்ப‌வில்லை என்று சொன்னேன். வ‌லைப்பூவில் இருந்து புத்த‌க‌ எழுத்தாள‌ர் ஆகியிருக்கும் எல்லோருமே க‌தை, க‌விதைக‌ள் தான் பிர‌சுரிக்கிறார்க‌ள். சினிமா வியாபார‌ம் போன்ற‌ புத்த‌க‌ங்க‌ள் வேறு வ‌கை. அவை எழுத்து, இல‌க்கிய‌ம் என்ற‌ வ‌கையில் சேரா. அவை ஒரு த‌க‌வ‌ல் க‌ளஞ்சிய‌மாக‌ பார்க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. நான் சொல்வ‌து மொழியின் வ‌டிவ‌ங்க‌ளாக‌ இருக்கும் க‌தை, க‌விதை போன்ற‌ ப‌டைப்புக‌ளை. நான் வாசித்த‌ வ‌ரையில் ப‌திவ‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ளில் தான் அதிக‌ பிழைக‌ள். அப்ப‌டியென்றால் ப‌திவ‌ர்க‌ள் புத்த‌க‌மே போட‌க்கூடாதா என்று கைக‌ளை முறுக்காதீர். அத‌ற்கான‌ உழைப்பை முத‌லில் வ‌லைப்பூவில் காட்டினால் ந‌ல‌ம். வ‌லைப்பூவில் இருந்துதான் அய்ய‌ணார், யுவ‌கிருஷ்ணா போன்ற‌ எழுத்தாள‌ர்க‌ள் வ‌ந்திருக்கிறார்க‌ள். நான் சொல்வ‌து எழுத்து எல்லோருக்கும் கைக்கூடி வ‌ர‌ வேண்டுமென்ற‌ க‌ருத்தை ம‌ட்டுமே.

நாம் செய்ய‌ வேண்டிய‌வை வ‌லைப்பூவிலே ஏராள‌ம் இருக்கின்ற‌ன‌. இன்றும் வ‌லைப்பூக்க‌ளை அச்சு ஊட‌க‌த்தின் நீட்சியாக‌த்தான் எல்லோரும் பார்க்கிறார்க‌ள். நாமும் அவ்வாறுதான் இருக்கிறோம். நான் முன்ன‌ரே சொன்ன‌து போல‌ க‌தை, க‌விதைக‌ள், த‌க‌வ‌ல் என்ப‌தை தாண்டி எந்த‌ புத்த‌க‌மும் ப‌திவ‌ர்க‌ளிட‌மிருந்து வ‌ர‌வில்லை.(ஏதேனும் வ‌ந்திருந்தால் குறிப்பிடுங்க‌ள்.மாற்றி விடுகிறேன்). இணைய‌ம் ஒரு புதிய‌ வ‌டிவ‌ம். புதிய‌ உல‌க‌ம்.  அது தரும் சாத்திய‌ங்க‌ள் ஏராள‌ம். அதை எந்த‌ அள‌விற்கு நாம் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்? ச‌வால் போட்டியில் கூட‌ ஒரு புகைப்ப‌ட‌த்தை த‌ந்து அத‌ற்கேற்ற‌ க‌தையை எழுத‌ சொன்னார்க‌ள். அடுத்த‌ வருட‌ம் ஏன் ஒரு ஒலிக்குறிப்பை த‌ர‌க்கூடாது? இது கூடுத‌ல் சுவார‌ஸ்ய‌ம் த‌ர‌க் கூடுமல்ல‌வா?

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை.சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். இந்த யுத்தியை பயன்படுத்தி ஒரு மொக்கை பதிவொன்றை எழுதியிருந்தேன். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும்?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

நானும் ஒரு ச‌ராச‌ரி ப‌திவ‌ன் என்ப‌தால் க‌ட்டுரை திசை மாறிப்போன‌தை த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை. ம‌ன‌தில் இருந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்லியிருக்கிறேன். த‌வ‌றாக‌ அர்த்த‌ம் கொள்ளாம‌ல் யோசித்து பாருங்க‌ள். அச்சு ஊட‌க‌த்தை விட‌ வ‌லையுல‌க‌மே ந‌ம‌க்கான‌ க‌ள‌ம். புத்த‌க‌மாய் அச்சிடுமுன் வ‌லையில் ப‌ட்டைத் தீட்டிக் கொள்வோமென்றே சொல்ல‌ வ‌ருகின்றேன்.அவ்வ‌ள‌வே!

14 கருத்துக்குத்து:

முகில் on December 21, 2011 at 10:32 AM said...

//எழுத்தின் மீதான் ஆர்வ‌ம். இந்த‌ ஆர்வ‌ம் தான் ஒருவ‌ரை ந‌ல்லெழுத்துக்கார‌னாக‌ மாற்றும். //

நிஜம் தான் இது.

மோகன் குமார் on December 21, 2011 at 10:39 AM said...

என்ன கார்க்கி சீரியஸா கருத்து கந்தசாமி ஆகிடீங்க .

உங்க பேச்சை அன்னிக்கு கேட்க முடியலைன்னு எனக்கு வருத்தம் தான்

அசோகபுத்திரன் on December 21, 2011 at 10:46 AM said...

கேபிள் பாஷையில சொன்னா ‘செய்வன திருந்த செய்’ அப்படித்தானே ? ரொம்ப நாளா உங்கள காணாம உங்க மொக்கைய கேக்காம என்னவோ போல இருக்குபா... ட்விட்டர்லயே தூங்காம அப்பப்ப இந்த பக்கம் வந்து போகலாம்ல..

அனுஜன்யா on December 21, 2011 at 11:05 AM said...

முக்கியமான கருத்து தான் கார்க்கி. வலைப்பூவின் தொழில் நுட்ப சாத்தியங்களை நாம் சரிவர பயன்படுத்தவில்லை. நீ சொல்ற மாதிரி படைப்பு, தொழில் நுட்ப புலமை இரண்டும் சேரப் பெறுவதில்லை பலருக்கு. 'அதீதம்', 'பண்புடன்' போன்ற இணைய இதழ்கள் இதில் ஏதாவது செய்யலாம்.

இணையத்தின் சாத்தியங்கள் பற்றி - ஜ்யோவ் பலமுறை ஹைபர் லிங்க் பற்றி சொல்லியிருப்பார். எஸ்ரா அவர் தளத்தில் சொல்லியிருந்தார். அதை ஒட்டி நானும் ஒரு இடுகை எழுதியிருந்தேன்.

பஸ் தொலைந்து போனதில் சிலராவது ப்ளாக் பக்கம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.

சங்கர் நாராயண் @ Cable Sankar on December 21, 2011 at 11:06 AM said...

//"200 ரூபாய் த‌ந்து ஒரு புத்த‌க‌ம் வாங்கி ப‌டிக்கும் ஒருவ‌னுக்கு எழுத்தாள‌ன் ஏதாவ‌தொன்றை த‌ர‌ வேண்டாமா? பிர‌க்ஞையோ, அறிவோ, த‌ர்க்க‌மோ.. ஏதேனும் ஒன்றை புதிதாய் அவ்வாசிப்பு த‌ர‌ வேண்டாமா? வெறும் வாசிப்பின்ப‌மோ, நேர‌க்க‌ட‌த்த‌லோ என்றால் அது வேறு"//

perception differs.. karki.. அவருக்கும் உனக்கும் பிடிக்காதது இன்னொருவருக்கு பிடிக்கும்.:)

சங்கர் நாராயண் @ Cable Sankar on December 21, 2011 at 11:07 AM said...

@அனுஜன்யா

//பஸ் தொலைந்து போனதில் சிலராவது ப்ளாக் பக்கம் வருவார்கள் என்று நினைக்கிறேன்.//

உங்களையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தலைவரே..

கார்த்திகை on December 21, 2011 at 11:20 AM said...

Agree!!

கார்க்கி on December 21, 2011 at 11:59 AM said...

ந‌ன்றி முகில்

மோக‌ன், சில‌ச‌ம‌ய‌ம் இப்ப‌டி ஆகிவிடுவ‌துண்டு. நானும் ஈரோடு வ‌ர‌ வேண்டுமென்று விரும்பினேன். எங்க‌ள் ப‌ட‌ம் வேறு அங்கு வெளியான‌து :))

ந‌ன்றி அசோக‌புத்திர‌ன். இனி தொட‌ர்ந்து வ‌ருவேன் என‌ நினைக்கிறேன்

ப‌ஸ் ம‌ட்டுமே கார‌ணமென‌ நினைக்க‌வில்லை அனு(அதுவும்). திரட்டிக‌ளின் மீதும் ப‌ழி சும‌த்த‌ விரும்புகிறேன் நான். நிஜ‌ எழுத்தாள‌ன் இதையெல்லாம் தாண்டிய‌வ‌ன் என்ப‌தையும் க‌ருத்தில் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.

ஆனால், இது போன்ற‌ புது முய‌ற்சிக‌ளை என்னை போன்ற‌‌ ஆர்வ‌க்கோளாறுக‌ளே தொட‌ங்க‌ வேண்டியிருக்கிற‌து. அவ‌ர்க‌ள் ப‌ஸ்ஸீலும், ட்விட்ட‌ரிலும் அடைக்க‌ல‌ம் ஆன‌தும், திர‌ட்டிக‌ளின் போக்கும் கார‌ண‌ம் என‌லாம்(திர‌ட்டிக‌ள் குறித்தும் விரிவாய் எழுத‌ வேண்டும்.இல்லையேல் த‌வ‌றாய் புரிந்துக் கொள்ள‌ நேரிட‌லாம்)

கேபிள்,
பிடிப்ப‌து பிர‌ச்சினையில்லை. மொழியின் வ‌டிவ‌மாக‌ ஒரு ப‌டைப்பை ஒருவ‌ர் முன்வைக்கும் போது அத‌ற்குறிய‌ நியாய‌ம் இருக்க‌ வேண்டும் என்கிறேன். அது கைக்கூடும் வ‌ரை பொறுமை வேண்டுமல்ல‌வா?

ந‌ன்றி கார்த்திகை

மோகன் குமார் on December 21, 2011 at 1:58 PM said...

//மொழியின் வ‌டிவ‌மாக‌ ஒரு ப‌டைப்பை ஒருவ‌ர் முன்வைக்கும் போது அத‌ற்குறிய‌ நியாய‌ம் இருக்க‌ வேண்டும் என்கிறேன்//

கார்க்கி ஐ.டி யில் யாரோ விளையாடுறாங்க. !! நேசமித்திரன் எழுத்து மாதிரில்ல இருக்கு ! :))

சுசி on December 21, 2011 at 4:05 PM said...

கலக்ஸ் கார்க்கி.

நீங்களும் நிறைய்ய்ய எழுதணும்.. பிளாக்ல..

shortfilmindia.com on December 21, 2011 at 6:33 PM said...

//பிடிப்ப‌து பிர‌ச்சினையில்லை. மொழியின் வ‌டிவ‌மாக‌ ஒரு ப‌டைப்பை ஒருவ‌ர் முன்வைக்கும் போது அத‌ற்குறிய‌ நியாய‌ம் இருக்க‌ வேண்டும் என்கிறேன். அது கைக்கூடும் வ‌ரை பொறுமை வேண்டுமல்ல‌வா?//

இதுதான் உனக்கு கைகூடும் மொழியின் வடிவமா? அப்படியென்று நீ நினைத்தால் சாரி.. எனக்கு பிடிக்கவில்லை.:)

அது மட்டுமில்லாமல் எவரும் மொழியின் வடிவமாய் ஒருவர் தன் படைப்பை வைக்கும் போது அதற்குரிய நியாயம்? என்பது யார் அளவில்?. அதை நிர்ணையிப்பது யார்? கார்க்கியா? அப்படி கார்க்கியோ அல்லது வேறு யாராவது என்றால் அது என் நிர்ணையிப்பில் வராது என்கிற போது. அதற்கான தகுதி குறைந்து விடுகிறதா?

உனக்கு சாருவை பிடிக்கவில்லை. என்னை பிடிக்கிறது. அதற்காக சாரு மொழியின் படைப்பாக சாருவின் படைப்பு நியாயம் செய்யவில்லை என்று சொல்வது நியாயமில்லை என்பது என் நியாயம்.

திரும்பவும் சொல்கிறேன். ஒவ்வொரு புத்தகத்திலும் தவறும், குறைகளும் இருந்து கொண்டேத்தான் இருக்கிறது. அதையும் அவர்கள் ஏதோ ஒன்றை சொல்ல முயன்று ஜெயித்திருக்கலாம். அல்லது தோற்றிருக்கலாம். ஆனால் அதுவும் ஒரு படைப்பு தான். அதை நியாயப்படுத்தி அதற்கு குரிய தகுதியை கொடுப்பது ஐ.எஸ்.ஐ முத்திரை, கொடுப்பது காலம். நீயோ, அல்லது நானோ அல்ல.

கார்க்கி on December 21, 2011 at 10:28 PM said...

கேபிள்,

முடியல. அதற்கான இலக்கணத்தை நான் வரையறுக்கல. தமிழ் இலக்கணம் என்ற பெயரில் தமிழ் சான்றோர்கள் சொல்லி வச்சிருக்காங்க.

”என் சிறுகதைகள் பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது”

என்றால் அது தவறு.

“வந்திருக்கின்றன” என்று சொன்னால்தான் அது சரி. ஒருமைக்கும், பன்மைக்கும் இதுதான் வித்தியாசம்.

இதையெல்லாம் சொல்ல நீ யாருடா என என்னிடம் சண்டை போட்டு என்ன பண்ண?

_________

நன்றி சுசி

வெண்பூ on December 21, 2011 at 11:15 PM said...

கார்க்கி, ஏற்கனவே இதுபத்தி நீ எழுதியிருந்த நினைவு.

எல்லா கருத்துகளுடனும் ஒத்துப் போகிறேன். முக்கியமா பதிவர்கள் எழுத்துலகில் தங்களோட வளர்ச்சியின் அடுத்த கட்டமா பிரிண்ட்டை நினைக்குறது நிச்சயமா தப்புதான், பிரிண்டுக்கான மாற்று ஊடகம்தான் இணையம்ன்றதை கரெக்டா யூஸ் பண்ணினாலே போதும்.

இரசிகை on February 11, 2012 at 4:15 PM said...

neenga sollurathu sarithaan..

 

all rights reserved to www.karkibava.com