Dec 25, 2011

நண்பன்–the best friend of music lovers


 

இந்தப் பதிவுக்காக கேட்டவுடன் தமக்கு பிடித்தமான வரிகளை பகிர்ந்துக் கொண்ட பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி அவர்களுக்கும், நா.முத்துக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

_________________________________________________________________

அடிக்கடி நடந்திடாத விஷயம் இது. கடந்த சில வருடங்களில் பார்த்தால் வாரணம் ஆயிரம், பையா போன்று வெகு சில படங்களிலே எல்லா பாடல்களும் ஹிட் ஆகியிருக்கின்றன. அதுவும் பையா படத்தில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே காதல் பாடல்களாக இருந்தன. variety யாகவும், அதே சமயம் ஹிட்டாகவும் அமைந்த ஆல்பம் என்றால் கடைசியாக வாரணம் ஆயிரமை சொல்லலாம். அதே ஹாரீஸ், நண்பன் மூலம் மீண்டும் அப்படி ஒரு ஹிட் அடித்திருக்கிறார். அதை விட முக்கியமாக தனக்கென அவர் அமைத்துக் கொண்ட டெம்ப்ளேட்களில் இருந்து வெகு சுலபமாக வெளியே வந்திருக்கிறார். அந்நியனில் கூட இந்த மேஜிக் நடக்கவில்லை. நண்பன் படத்தில் ஒரே ஒரு(இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா) பாடலைத் தவிர மற்ற பாடல்களில் புது ஹாரீஸ் மிளிர்கிறார். விஜய்க்கும், விஜய் ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் ஒரு புது அனுபவம் என்பது தெரிந்த ஒன்றுதான்.

1) Aska Luska – விஜய் பிரகாஷ், சின்மயி – மதன் கார்க்கி

     காதல் என்பதற்கு 16 மொழிகளில்  வார்த்தைகள் பிடித்திருக்கிறார்கள். மீண்டும் உச்சரிப்பது கஷ்டம் என்றாலும் கேட்க இதமாய் இருக்கிறது மதன் கார்க்கியின் வரிகளும், விஜய் பிரகாஷின் குரலும். அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ள பாடலாம். தன் பங்கிற்கும் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளை கொண்டு மிரட்டியிருக்கிறார் ஹாரீஸ். ஹெட்ஃபோனில் கேட்கும்போது ஒவ்வொரு நோட்டும் ஆச்சரியப்படுத்துகிறது. இசையின் பிரம்மாண்டம் எனலாம்.

ப்ளூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்.
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவன்

வெகு சிலப் பாடல்களிலே தனக்கென தனி முத்திரை பதித்து விட்டார் மதன் கார்க்கி. 2011ல் என்னமோ ஏதோ என ஆரம்பித்தவர் 2012ல் அஸ்கலஸ்க்கா என அதகளம் செய்திருக்கிறார்.  சின்மயி ஒவ்வொரு வரியிலும் கடைசி வார்த்தையின் கடைசி எழுத்தை மட்டும் விழுங்கிவிடும் காரணம் மட்டும் என்னவென்று தெரியவில்லை.

பாடலாசிரியருக்கு பிடித்த வரிகள்:

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்...

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே

(என்ன ஒரு வில்லத்தனம்!!)

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ - ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

2) All is well – ஹேமச்சந்திரன், முகேஷ்  - நா.முத்துக்குமார்

படத்தின் சாரம்சம் இதுதான். 3 இடியட்ஸின் புரமோவிலும் முக்கியமான விஷயம் இந்த All iz well தான். படத்திலும் மிக முக்கியமான பாடல் எனலாம். ஹிப்ஹாப் ஸ்டைலில் நல்ல peppy ஆன பாடலாக போட்டிருக்கிறார் ஹாரீஸ். பாடல்வரிகளில் காமெடி கலாட்டாவும் செய்து கருத்து கந்தசாமியாகவும் ஆகியிருக்கிறார் நா. முத்துக்குமார். கேட்டவுடனே பிடித்து போகும் ஹாரீஸ் வகை பாடலென்றாலும் வேறெந்த பழைய ஹாரீஸ் பாடலையும் நினைவுப்படுத்தாது பெரிய ப்ளஸ். ALl iz well என்ற வரியின்  மெட்டை மட்டும் ஹிந்தியில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறார். விஜயின் க்யூட் மேனரிசங்களை ஷங்கர் அழகாக படமாக்கும் வாய்ப்பிருக்கும் பாடல். மேக்கிங் வீடியோ வெளியிட்டிருக்கிரார்கள். Thanks to kolaiveri.

நா.முத்துக்குமாருக்கு பிடித்த வரிகள்

டைட்டாக லைஃபே ஆனாலும் லூசாக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமியெங்கும் தொங்கும் தோட்டம்

மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா.
நீ லோடு மேல லோடு ஏற்ற மூளை லாரியா?

3) என் கண்முன்னே – ஆலாப் ராஜு – மதன் கார்க்கி

Give me some sunshine என்ற பாடல் தமிழில் என் கண்முன்னே என்றாகியிருக்கிறது. ஹாரீஸின் முதல் காதலான கிட்டாருக்கு செம தீனி. Strumming pattern வழமையான ஒன்றானாலும் ஃப்ரெஷான மெட்டமைத்திருகிறார். ஆலாப் ராஜுவுக்கு இன்னொரு அழகான வாய்ப்பு. வார்த்தையின் நடுவே ஒவ்வொரு எழுத்திலும் வித்தியாசம் காட்டி உயிர் கொடுத்திருக்கிறார். சின்ன பாட்டென்றாலும் இசைக் காதலர்களுக்கு இது best pick ஆக அமையலாம்.

மதன் கார்க்கிக்கு பிடித்த வரிகள்

எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?

இந்தப் பாடலுக்கு முதலில் அமைத்த சரணம் வேறு மெட்டாம். அதற்கு மதன் எழுதிய வரிகளையும் நம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.இதுதான் அவரது ஃபேவரட்டாம்.

வானம் ஏறிச் சென்று பூமியைக் காண
பொறியியல் கொண்டு பறவை செய்தேன்
அதன் சிறகினை முளையிலே அறுக்கிறேன்

வாழ்க்கை சொல்லித் தரும் பாடங்கள் வேறு
பாடம் சொல்லித் தரும் வாழ்க்கையும் வேறு
உன் பரிட்சையில் இரண்டையும் வெறுக்கிறேன்

4) என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான் – க்ரிஷ், சுசித் சுரேசன் – விவேகா

டைட்டில் பாடல். 3 இடியட்ஸில் லடாக் மலைத்தொடரில் கேமரா விர்ரென பறக்க மெல்லியதாய் தொடங்கும் பாடல். சங்கர் மஹாதேவனின் குரலில் இதமாய் ஒலிக்கும். தமிழில் முதலில் கேட்டபோது இப்படி ஃபாஸ்ட் பீட்டாக போட்டு விட்டார்களே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சரணத்தில் மாற்றி பாடலின் அழகை கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகனை புகழும் பாடல் தான். ஆனால் நாங்க உங்க வீட்டுப் பிள்ளை நான் ஆட்சிகு வந்தால் இருக்காது தொல்லை என்றெல்லாம் இல்லாமல் வேறு திசையில் ஹீரோயிசத்தை காட்டியிருக்கிறார்கள்

தோழனின் தோள் கூட அன்னை மடி
இவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி.

விவேகாவிற்கும் இதுதான் பிடித்தமான வரிகளாக இருக்கக்கூடும்.

5) நல்ல நண்பன் – இராமக்ரிஷ்ணன் மூர்த்தி – நா.முத்துக்குமார்

  முதல் தடவை கேட்கும்போதே யாருப்பா பாடினது என்று கேட்க வைக்கும் குரல். ஜீவா அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது வரும் பாடல். இந்தியில் இந்த பாடலை பார்க்கும்போதே காட்சிகளும், இசையும் நம்மை உருக வைக்கும். தமிழிலும் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஹாரீஸ். வீணை போன்ற கிளாசிக் கருவிகளை அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

3 இடியட்ஸ் பாடலின் வீடியோ இது. முடிந்தால் இந்தவீடியோவில் சத்தத்தை ம்யூட் செய்து ஹாரீஸ் வெர்ஷனோடு சேர்ந்து கேளுங்கள்.கடைசி 4 வரிகள் தவிர மற்ற காட்சிகளுக்கு ஹாரீஸீன் இசை எப்படி பொருந்தியிருக்கிறது?Thanks Harris

நா.முத்துக்குமாருக்கு பிடித்த வரிகள்:

நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?
சிறந்தவன் நீதானென்று உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா?

வா நண்பா வா நண்பா தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா?

6) இருக்காண்ணா – ஜாவித் அலி –சுனிதி செளஹான் – பா.விஜய்

விஜய் ரசிகர்களுக்காக அல்லது கமர்ஷியல் வாசனைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் பாடல். டிரெயிலரில் வந்த சில நொடிகளிலே விஜயின் நடனம் பரவலாக பேசப்படுகிறது. விஜயின் ட்ரேட்மார்க் “ண்ணா” என்பதை முதன் முதலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பா. விஜய் பழைய துள்ளலோடு எழுதியிருக்கிறார். படத்தின் ஓட்டத்தை கெடுக்காமல் இப்பாடல் அமைந்திருந்தால் நிச்சயம் எல்லோருக்கும் visual treat தான். ஷங்கரின் டிபிக்கல் கலர்ஃபுல் ட்ரெயின், மலை, பிரம்மாண்ட கண்ணாடி செட் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கலாம்.

நீ செங்கிஸ்கானா.. இனி உங்கிஸ்தானா
நான் மங்கூஸ்தானா. உன் கையில் கஜகஸ்தானா

இதில் ஒளிந்திருக்கும் டபுள் மீனிங் புரியாதவர்கள் 300 ரூபாய் டிடியுடன் என்னை தொடர்பு கொள்ளலாம்.

__________________

3 இடியட்ஸ் ஒரு கிளாசான ஹீரோயிச படம் எனலாம். அந்த வகையில் நண்பனின் இசையும் இரண்டு விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறது.

நிச்சயமாய் PongALL is well

17 கருத்துக்குத்து:

Sarav on December 25, 2011 at 11:51 AM said...

Super Bro.. already All is Well...உங்க விமர்சனத்துக்கு அப்புறம் இன்னும் கேக்க நல்ல இருக்கு..

தர்ஷன் on December 25, 2011 at 11:54 AM said...

எங்கேயோ கேட்ட ஃபீலை ஏற்படுத்தினாலும் ரொம்ம்ம்ப்ப்ப நாட்களுக்கு பிறகு ஹாரிஸ் ரசிக்க வைக்கிறார் “நண்பன்” பாடல்களில். யாரை எப்படி வேலை வாங்க வேண்டுமென்று ஷங்கருக்கு தெரிந்திருக்கிறது.

இடுப்பு பாட்டின் “குக் குக் குக்” என்ற ஆரம்பம் அப்படியே “வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே”

நண்பனைத் தேடிப் போகும் பாடல்களிலேயே இளைய தளபதி ரசிகர்களுக்கான பில்ட் அப் போதுமான அளவு கொடுக்கப்பட்டிருக்கு

ஆல் இஸ் வெல் துள்ளாட்டம் போட வைக்கிறது

அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ரசிக்க வைக்கும் மெலடி ஆனால் எங்கேயோ கேட்ட ஃபீலிங்கை தவிர்க்க முடியவில்லை

மத்த ரெண்டும் பெருசா சொல்ற மாதிரி இல்ல

prasanth s on December 25, 2011 at 12:03 PM said...

all is well. unga vimarsanam migavum arumai nanbare

சுசி on December 26, 2011 at 8:57 AM said...

கலக்ஸ் விமர்சனம்.

//நிச்சயமாய் PongALL is well//
சர்வ நிச்சயமாய் :)

thamizhparavai on December 26, 2011 at 1:50 PM said...

முழு ஆல்பம் ஹிட்டுன்னு சொல்லமுடியுமா தெரியலை.. ஆனா பிடிச்சிருக்கு...

டிரைலர் பட்டையக் கிளப்புது...வெயிட்டிங் ஃபார் பொங்கால் இஸ் வெல்...

‘வேட்டை’ பாடல்கள் இன்னொரு ‘பையா’வாகுமென்பது எனது எதிர்பார்ப்பு

erk - ராமகிருஷ்ணன் on December 26, 2011 at 7:34 PM said...

gr8 description for each song...
Nanban gonna rock...! :)

erk - ராமகிருஷ்ணன் on December 26, 2011 at 7:35 PM said...

gr8 description for each song...
Nanban gonna rock...! :)

Thamizhmaangani on December 26, 2011 at 7:51 PM said...

அருமையான விமர்சனம்!! askku lasku பாடலை தினமும் ஒரு 50 முறையாவது கேட்கிறேன்!! பட்டைய கிளப்பிட்டாரு ஹாரிஸ்!!

சரியில்ல....... on December 26, 2011 at 10:26 PM said...

மியூஸிகல் ட்ரீட் பை ஹாரீஷ்!

vasan on December 27, 2011 at 7:13 AM said...

next year best song of the year 2012 askku laskku kandepa ennala solla moudeyum,,oru naalaiku ethai murai keyka moudeyamoy athhanai murai keykourayn,,enna thalapathi inna ennaku uzir,,i love vijay,i allways support and takecare vijay nanban..,.,,,,,,,,,,,,,,,,

vasan on December 27, 2011 at 7:16 AM said...

sema super duper hit song askku laskku next year best song of the year 2012 kandepa i hope.,,,,,,,,,,,,,,,,

Anonymous said...

super intro for all songs. thanks for sharing..

SShathiesh-சதீஷ். on December 28, 2011 at 1:39 AM said...

karki annoi!

En Friend pola song sung by Krish, not shankar mahadevan.

SShathiesh-சதீஷ். on December 28, 2011 at 1:39 AM said...

:)

KSGOA on December 28, 2011 at 2:02 PM said...

நல்லதொரு இசை விமர்சனம்.உங்க
இளைய தளபதி படம் வேற!!என் மகனுக்கும் உங்களைப் போலவே விஜய்
பிடிக்கும்.

இசைப்பிரியன் on December 29, 2011 at 2:56 AM said...

Thiruvallikeni rani (From 'Udaya') paata konjam maathi potta maadhiri irukku (En frienda pola yaaru machan).

கார்க்கி on December 29, 2011 at 11:37 AM said...

ச‌தீஷ், ச‌ரியா ப‌டிங்க‌ :)

 

all rights reserved to www.karkibava.com