Dec 31, 2011

Happy new year

13 கருத்துக்குத்து

 

எல்லோருக்கும் HAPPY NEW YEAR

எல்லா இட‌த்திலும் இதே பேச்சுதான் இருக்கும். இருந்தாலும் நானும் இந்த‌ வருஷ‌த்துல‌ என‌க்கு பிடிச்ச‌ விஷ‌ய‌ங்க‌ள‌ ப‌திவு செய்ய‌லாம்னு நினைக்கிறேன். இது முழுக்க‌ முழுக்க‌ என‌க்கு பிடிச்ச‌துதான். சிற‌ந்த‌துன்னு அர்த்த‌ம் ப‌ண்ணிக்காதீங்க‌ :)

 

சிற‌ந்த‌ ப‌திவ‌ர்   : ஓலைக்க‌ண‌க்க‌ன்

சிற‌ந்த‌ ட்விட்ட‌ர் :ஜெக‌ன் (@thoatta)

சிற‌ந்த‌ ப‌திவு    : க‌ண்ண‌ம்மா

என‌க்கு பிடிச்ச‌ என் ப‌திவு : மாப்பிள்ளை

சிற‌ந்த‌ கிரிக்கெட் வீர‌ர் : டேல் ஸ்டெயின்

 

சினிமா

சிற‌ந்த‌ ப‌ட‌ம்           காஞ்ச‌னா
சிற‌ந்த‌  இயக்குன‌ர் : வெற்றிமாற‌ன்
சிற‌ந்த‌ ந‌டிக‌ர்    த‌னுஷ் (ஆடுக‌ள‌ம், ம‌யக்க‌ம் என்ன‌)
சிற‌ந்த‌ ந‌டிகை அஞ்ச‌லி (எங்கேயும் எப்போதும்)
சிற‌ந்த‌ இசைய‌மைப்பாள‌ர் ச‌த்யா (எங்கேயும் எப்போதும்)
சிற‌ந்த‌ பாட‌க‌ர் கார்த்திக் (ச‌ட‌ச‌ட‌ச‌டெவ‌ன‌)
சிற‌ந்த‌ பாட‌கி பிரிய‌த‌ர்ஷினி (அழ‌கா பொற‌ந்துப்புட்ட‌ ‍-சிறுத்தை)
சிற‌ந்த‌ பாட‌லாசிரிய‌ர் ம‌த‌ன் கார்க்கி (என்ன‌மோ ஏதோ)
சிற‌ந்த‌ பாட‌ல் வ‌ரி : ஒரு குட்டி பூனை போல‌ ஆசை எட்டிப் பார்க்குதே. / அது அச்ச‌ம் ம‌ட‌ம் நாண‌மெல்லாம் த‌ட்டி பார்க்குதே (சொட்ட‌ சொட்ட‌ ந‌னைய‌ வைத்தாய்)
சிற‌ந்த‌ குறும்ப‌ட‌ம்

  : ப‌ண்ணையாரும் ப‌த்மினியும்

என்ன‌ள‌வில் ந‌ட‌ந்த‌ சில‌ ச‌ந்தோஷ‌ நிக‌ழ்வுக‌ள் :

1) இந்தியா உல‌க‌ கோப்பை வென்ற‌து, அப்போது ட்விட்ட‌ரில் லைவ் க‌மென்ட்ரியோடு நான் செய்த‌ க‌ணிப்புக‌ள் 10 போட்டிக‌ளில் 9 போட்டிக‌ள் ச‌ரியாக‌ அமைந்த‌து.

2) புது வேலையில் சேர்ந்து 6 மாத‌ங்க‌ளிலே ஒரு புர‌மோஷ‌ன் கிடைத்த‌து

3) இந்திய‌ அள‌வில் ந‌டைபெற்ற‌ ட்விட்ட‌ர்க‌ளுக்கான‌ தேர்வில் முத‌லிட‌த்தில் இருப்ப‌து. (இன்றோடு வாக்குப்ப‌திவு முடிகிற‌து.). இங்கே த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள்தான் அதிக‌ம் வாக்க‌ளித்திருக்கிறார்க‌ள் என்ப‌தை அறிவேன். இருந்தாலும் த‌மிழ் ட்விட்ட‌ர்க‌ள் வ‌ட்ட‌த்தில் முத‌லிட‌ம் என்ப‌தே ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம் தானே?

4) மொக்கையாக‌ எடுத்தாலும், 4,5 குறும்ப‌ட‌ங்க‌ள் எடுத்த‌து

5) இளைய‌ராஜா இசை நிக‌ழ்ச்சிக்கு சென்ற‌து

6) என் தோஸ்த் ப‌திவ‌ர்க‌ள் ர‌ம்யா ‍ கிர‌ண் திரும‌ண‌ நிக‌ழ்வு

7) இயக்குன‌ர் செல்வாவின் "ம‌ன‌சு" குறும்ப‌ட‌த்தில் ந‌டித்த‌து.

 

ம‌ற‌க்க‌ நினைப்ப‌து :

1) பைக் விப‌த்து

2) ம‌ங்காத்தா ப‌திவு :)))

 

My Fav click:

Dec 29, 2011

நேற்றுதான் செத்து போனேன்

30 கருத்துக்குத்து

 

ரெஸ்ட்ரூமில் இருவ‌ர் பேசிக் கொண்டிருந்தார்க‌ள் "அன்னைக்கு ப‌க்க‌த்துலே போய் பார்த்தோம். ப‌ச‌ங்க‌ 2 பேரும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்க‌.க‌ட‌வுள நேர்ல் பார்த்த‌ மாதிரி இருந்துச்சு எவ்ளோ பெரிய‌ ஜீனிய‌ஸ்!ந‌ம்ப‌வே முடிய‌ல‌ என்னால‌".

எட்டு பேர் கொண்ட‌ குழுவொன்று த‌லையில் பிர‌த்யேக‌மாய் வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌ தொப்பியில் அவ‌ர் புகைப்ப‌ட‌த்தோட‌ வ‌ந்திருந்தது.

அர‌ங்க‌ம் நிறைந்து போனதால் மேடைக்கு நேர் எதிரில் இருந்த‌ கேல‌ரியில் நூறு பேர் நின்றுக் கொண்டேயிருந்தார்க‌ள். 6 ம‌ணி நேர‌மும்

இன்னும் நீட்டித்துக் கொண்டே போக‌லாம்.ஆனால் இது நேற்று ந‌ட‌ந்த‌ இளைய‌ராஜா இசை நிக‌ழ்வு ப‌ற்றிய‌ ப‌திவு என்ப‌தை அறியாமாலா இருப்பீர்க‌ள்?

ச‌ரியாக‌ 3.30க்கு நேரு உள்விளையாட்ட‌ர‌ங்க‌ம் சென்றுவிட்டோம். தேவைய‌ற்ற‌ நெரிச‌லை உண்டாக்குவ‌தில் பி.எச்டி முடித்த‌ த‌மிழ‌க‌ காவ‌ல்துறையின‌ர் ப‌ணியை செவ்வனே செய்து கொண்டிருந்தார்க‌ள். முண்டிய‌டித்து உள்சென்று மேடைக்கு முன்னால் ஆக‌ச்சிற‌ந்த‌ இருக்கையில் இட‌ம் பிடித்து அம‌ர்ந்த‌போதே நிறைவான‌து ம‌ன‌து. திரைக‌ளில் ம‌ல‌பார்  விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் "அழ‌கும் த‌ர‌மும் ச‌ங்க‌ம‌ம்" என‌ பாடிக் கொண்டேயிருந்தார் ராஜா. இசைக்கு ஏத‌ய்யா மொழி?

(செட்டில் ஆயாச்சு.. செத்து போக‌.)

பிர‌காஷ்ராஜ்தான் தொகுத்து வ‌ழ‌ங்கினார். நிக‌ழ்ச்சியின் ஆர‌ம்ப‌த்தில் ராஜாவை ப‌ற்றிய‌ ஒரு டாகுமென்ட்ரியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ள். ராஜாவின் மன‌வி ஜீவா அவ‌ர்க‌ளுக்கு நிக‌ழ்வை காணிக்கையாக்கினார்க‌ள். பார்வையாள‌ர்க‌ள் ப‌க்க‌ம் கேம‌ரா திரும்பிய‌து. ராஜாவின் ப‌க்த‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ தேவி ஸ்ரீ பிர‌சாத் வ‌ந்திருந்தார். யுவ‌ன் மாப்பிள்ளை க‌ண‌க்காக‌ சூட்டில் வ‌ந்திருந்தார்.பாட‌க‌ர்க‌ளில் பாலு அண்ணா, ஜேசுதாஸ், பால‌முர‌ளி கிருஷ்ணா, ஹ‌ரிஹ‌ர‌ன், சித்ரா, கார்த்திக், ஹ‌ரிச‌ர‌ண், ஸ்ரீராம், உமா ர‌மண‌ன், தீப‌ன் ச‌க்ர‌வ‌ர்த்தி ம‌ற்றும் ப‌ல‌ர் வ‌ந்திருந்தார்க‌ள். எதிர்பார்த்த‌வ‌ர்க‌ளில் ஷ்ரேயா கோஷ‌லும், சிவ‌ம‌ணியும் வ‌ராத‌து மிக‌ப்பெரிய‌ குறை.

சூப்ப‌ர் சிங்க‌ரில் தோல்விய‌டைந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் கோர‌ஸாக‌ எதையோ ஹ‌ம் செய்துக் கொண்டிருந்தார்க‌ள். மேடையில் இருந்த‌ பிர‌ம்மாண்ட‌ க‌த‌வு திற‌க்க‌ வெள்ளை உடையில் ராக‌தேவ‌ன் உள்ளே வ‌ந்தார். கூக்குர‌ல் எழாம‌ல் இல்லை. தீவிர‌ ராஜா ர‌சிக‌ர்க‌ள், அவ‌ர்  எப்போது வாய் திற‌ப்பார்? என்ன‌ பாட‌ல் முத‌லில் பாடுவார் என்பதிலே ஆர்வ‌மாயிருந்த‌ன‌ர். நான் வேறு 200 ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டியிருந்தேன். “எங்க‌ என் ந‌ண்ப‌ன்? என் ஒரே ந‌ண்ப‌ன்” என‌ ஹார்மோனிய‌ப் பெட்டியை வாங்கி, என‌க்காக‌ 200 ரூபாய் ச‌ம்பாதித்த‌ ராஜா வாய் திற‌ந்தார்

"ஜ‌ன‌னி ஜ‌ன‌னி.. ஜ‌க‌ம் நீ அக‌ம் நீ".

ஸ்தம்பித்த‌து 7000 பேர் அமர்ந்திருந்த‌ அர‌ங்க‌ம்.Raja started singing. And we started sinking.

ராஜா. த‌மிழ‌ர்க‌ளின் வாழ்நாளை நீட்டித்த‌வ‌ன். இசையின் ஆழ‌த்தை எம‌க்கு க‌ற்பித்த‌வ‌ன். உல‌கின் ஒவ்வொரு த‌மிழ‌னின் வீட்டிலும் தின‌ம் தின‌ம் உழைத்துக் கொண்டிருக்கும் முத‌லாளி. ப‌ல‌ரின் சுமைக‌ளை தாங்கும் சுமைதாங்கி.வ‌ய‌லில் இற‌ங்கி வேலைப்பார்த்துக் கொண்டிருந்த‌வ‌ன் வ‌ய‌லினில் வேலை செய்ய‌ தொட‌ங்கிய‌தில் ஆர‌ம்ப‌மான‌து ஒரு இசை ச‌காப்த‌ம். தாய்ப்பாலோடு இவ‌னின் இசையும் க‌ல‌ந்தே எங்க‌ளுக்கு ஊட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. எங்க‌ள் நாடி,ந‌ர‌ம்பு, ச‌தை,புத்தி எல்லாமும் க‌ல‌ந்து போயிருக்கிற‌து இவ‌னின் த‌ந்தி மீட்ட‌ல்க‌ளும், தாள‌ ஜ‌திக‌ளும்.

  ராஜாவின் இசை க‌ல‌வியைப் போன்ற‌து. கேட்க‌ கேட்க‌ போதுமென‌ தோன்றினாலும் நிறுத்திய அடுத்த‌ நிமிட‌மே இன்னும் வேண்டுமென‌ ஏங்க‌ வைக்கும். ராஜாவின் இசை அருவியின் அடியில் வைக்க‌ப்ப‌ட்ட‌ பாத்திர‌ம் போன்ற‌து.. பொங்கி பொங்கி வழிந்தாலும் மீண்டும் வேண்டுமென்ப‌த‌ற்காக‌ நிர‌ம்புவ‌தேயில்லை. ராஜாவின் இசை ர‌யிலை போன்ற‌து. த‌ண்ட‌வாளமாகிய‌ எங்க‌ளை க‌ட‌ந்த‌ பின்னும் நாங்க‌ள் அதிர்ந்துக் கொண்டேயிருப்போம். ராஜாவின் இசை. எங்க‌ள் காத‌லி போன்ற‌து. கொஞ்சுவோம்.கெஞ்சுவோம்.மிர‌ட்டுவோம். காலில் விழுவோம்.வெகு இய‌ல்பாக, ராஜாவுக்கு இசை வ‌ரும். எங்க‌ளுக்கு அவ‌ர் இசையே வ‌ர‌ம்.

"இறைவ‌னை நான் பாடுவ‌தால் அது இறைவ‌னுக்கு புகழ‌ல்ல‌.இறைவ‌ன் இன்னும் பெரிய‌வ‌ன். அது என‌க்குத்தான் பெருமை  - ‍ ராஜா"”

இதில் இறைவ‌ன் என்னுமிட‌த்தில் ராஜாவின் பெய‌ரையும், ராஜாவுக்கு ப‌தில் என் பெய‌ரையும் மாற்றிப் ப‌டித்துக் கொள்ளுங்க‌ள்.

(தொட‌ரும்)

Dec 25, 2011

நண்பன்–the best friend of music lovers

17 கருத்துக்குத்து

 

இந்தப் பதிவுக்காக கேட்டவுடன் தமக்கு பிடித்தமான வரிகளை பகிர்ந்துக் கொண்ட பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி அவர்களுக்கும், நா.முத்துக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

_________________________________________________________________

அடிக்கடி நடந்திடாத விஷயம் இது. கடந்த சில வருடங்களில் பார்த்தால் வாரணம் ஆயிரம், பையா போன்று வெகு சில படங்களிலே எல்லா பாடல்களும் ஹிட் ஆகியிருக்கின்றன. அதுவும் பையா படத்தில் கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே காதல் பாடல்களாக இருந்தன. variety யாகவும், அதே சமயம் ஹிட்டாகவும் அமைந்த ஆல்பம் என்றால் கடைசியாக வாரணம் ஆயிரமை சொல்லலாம். அதே ஹாரீஸ், நண்பன் மூலம் மீண்டும் அப்படி ஒரு ஹிட் அடித்திருக்கிறார். அதை விட முக்கியமாக தனக்கென அவர் அமைத்துக் கொண்ட டெம்ப்ளேட்களில் இருந்து வெகு சுலபமாக வெளியே வந்திருக்கிறார். அந்நியனில் கூட இந்த மேஜிக் நடக்கவில்லை. நண்பன் படத்தில் ஒரே ஒரு(இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா) பாடலைத் தவிர மற்ற பாடல்களில் புது ஹாரீஸ் மிளிர்கிறார். விஜய்க்கும், விஜய் ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் ஒரு புது அனுபவம் என்பது தெரிந்த ஒன்றுதான்.

1) Aska Luska – விஜய் பிரகாஷ், சின்மயி – மதன் கார்க்கி

     காதல் என்பதற்கு 16 மொழிகளில்  வார்த்தைகள் பிடித்திருக்கிறார்கள். மீண்டும் உச்சரிப்பது கஷ்டம் என்றாலும் கேட்க இதமாய் இருக்கிறது மதன் கார்க்கியின் வரிகளும், விஜய் பிரகாஷின் குரலும். அதிக பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ள பாடலாம். தன் பங்கிற்கும் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளை கொண்டு மிரட்டியிருக்கிறார் ஹாரீஸ். ஹெட்ஃபோனில் கேட்கும்போது ஒவ்வொரு நோட்டும் ஆச்சரியப்படுத்துகிறது. இசையின் பிரம்மாண்டம் எனலாம்.

ப்ளூட்டோவில் உன்னை நான் கூடேற்றுவேன்.
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவன்

வெகு சிலப் பாடல்களிலே தனக்கென தனி முத்திரை பதித்து விட்டார் மதன் கார்க்கி. 2011ல் என்னமோ ஏதோ என ஆரம்பித்தவர் 2012ல் அஸ்கலஸ்க்கா என அதகளம் செய்திருக்கிறார்.  சின்மயி ஒவ்வொரு வரியிலும் கடைசி வார்த்தையின் கடைசி எழுத்தை மட்டும் விழுங்கிவிடும் காரணம் மட்டும் என்னவென்று தெரியவில்லை.

பாடலாசிரியருக்கு பிடித்த வரிகள்:

அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்...

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே

(என்ன ஒரு வில்லத்தனம்!!)

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை மண் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ - ஒரு
கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன்
உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே

2) All is well – ஹேமச்சந்திரன், முகேஷ்  - நா.முத்துக்குமார்

படத்தின் சாரம்சம் இதுதான். 3 இடியட்ஸின் புரமோவிலும் முக்கியமான விஷயம் இந்த All iz well தான். படத்திலும் மிக முக்கியமான பாடல் எனலாம். ஹிப்ஹாப் ஸ்டைலில் நல்ல peppy ஆன பாடலாக போட்டிருக்கிறார் ஹாரீஸ். பாடல்வரிகளில் காமெடி கலாட்டாவும் செய்து கருத்து கந்தசாமியாகவும் ஆகியிருக்கிறார் நா. முத்துக்குமார். கேட்டவுடனே பிடித்து போகும் ஹாரீஸ் வகை பாடலென்றாலும் வேறெந்த பழைய ஹாரீஸ் பாடலையும் நினைவுப்படுத்தாது பெரிய ப்ளஸ். ALl iz well என்ற வரியின்  மெட்டை மட்டும் ஹிந்தியில் இருந்து அப்படியே எடுத்திருக்கிறார். விஜயின் க்யூட் மேனரிசங்களை ஷங்கர் அழகாக படமாக்கும் வாய்ப்பிருக்கும் பாடல். மேக்கிங் வீடியோ வெளியிட்டிருக்கிரார்கள். Thanks to kolaiveri.

நா.முத்துக்குமாருக்கு பிடித்த வரிகள்

டைட்டாக லைஃபே ஆனாலும் லூசாக நீ மாறு
வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமியெங்கும் தொங்கும் தோட்டம்

மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா.
நீ லோடு மேல லோடு ஏற்ற மூளை லாரியா?

3) என் கண்முன்னே – ஆலாப் ராஜு – மதன் கார்க்கி

Give me some sunshine என்ற பாடல் தமிழில் என் கண்முன்னே என்றாகியிருக்கிறது. ஹாரீஸின் முதல் காதலான கிட்டாருக்கு செம தீனி. Strumming pattern வழமையான ஒன்றானாலும் ஃப்ரெஷான மெட்டமைத்திருகிறார். ஆலாப் ராஜுவுக்கு இன்னொரு அழகான வாய்ப்பு. வார்த்தையின் நடுவே ஒவ்வொரு எழுத்திலும் வித்தியாசம் காட்டி உயிர் கொடுத்திருக்கிறார். சின்ன பாட்டென்றாலும் இசைக் காதலர்களுக்கு இது best pick ஆக அமையலாம்.

மதன் கார்க்கிக்கு பிடித்த வரிகள்

எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?

இந்தப் பாடலுக்கு முதலில் அமைத்த சரணம் வேறு மெட்டாம். அதற்கு மதன் எழுதிய வரிகளையும் நம்மோடு பகிர்ந்துக் கொண்டார்.இதுதான் அவரது ஃபேவரட்டாம்.

வானம் ஏறிச் சென்று பூமியைக் காண
பொறியியல் கொண்டு பறவை செய்தேன்
அதன் சிறகினை முளையிலே அறுக்கிறேன்

வாழ்க்கை சொல்லித் தரும் பாடங்கள் வேறு
பாடம் சொல்லித் தரும் வாழ்க்கையும் வேறு
உன் பரிட்சையில் இரண்டையும் வெறுக்கிறேன்

4) என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான் – க்ரிஷ், சுசித் சுரேசன் – விவேகா

டைட்டில் பாடல். 3 இடியட்ஸில் லடாக் மலைத்தொடரில் கேமரா விர்ரென பறக்க மெல்லியதாய் தொடங்கும் பாடல். சங்கர் மஹாதேவனின் குரலில் இதமாய் ஒலிக்கும். தமிழில் முதலில் கேட்டபோது இப்படி ஃபாஸ்ட் பீட்டாக போட்டு விட்டார்களே என்ற உறுத்தல் இருந்தது. ஆனால் சரணத்தில் மாற்றி பாடலின் அழகை கெடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகனை புகழும் பாடல் தான். ஆனால் நாங்க உங்க வீட்டுப் பிள்ளை நான் ஆட்சிகு வந்தால் இருக்காது தொல்லை என்றெல்லாம் இல்லாமல் வேறு திசையில் ஹீரோயிசத்தை காட்டியிருக்கிறார்கள்

தோழனின் தோள் கூட அன்னை மடி
இவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி.

விவேகாவிற்கும் இதுதான் பிடித்தமான வரிகளாக இருக்கக்கூடும்.

5) நல்ல நண்பன் – இராமக்ரிஷ்ணன் மூர்த்தி – நா.முத்துக்குமார்

  முதல் தடவை கேட்கும்போதே யாருப்பா பாடினது என்று கேட்க வைக்கும் குரல். ஜீவா அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது வரும் பாடல். இந்தியில் இந்த பாடலை பார்க்கும்போதே காட்சிகளும், இசையும் நம்மை உருக வைக்கும். தமிழிலும் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஹாரீஸ். வீணை போன்ற கிளாசிக் கருவிகளை அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

3 இடியட்ஸ் பாடலின் வீடியோ இது. முடிந்தால் இந்தவீடியோவில் சத்தத்தை ம்யூட் செய்து ஹாரீஸ் வெர்ஷனோடு சேர்ந்து கேளுங்கள்.கடைசி 4 வரிகள் தவிர மற்ற காட்சிகளுக்கு ஹாரீஸீன் இசை எப்படி பொருந்தியிருக்கிறது?Thanks Harris

நா.முத்துக்குமாருக்கு பிடித்த வரிகள்:

நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கின்றதா?
சிறந்தவன் நீதானென்று உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா?

வா நண்பா வா நண்பா தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம் நான் உன்னை தாங்கவா?

6) இருக்காண்ணா – ஜாவித் அலி –சுனிதி செளஹான் – பா.விஜய்

விஜய் ரசிகர்களுக்காக அல்லது கமர்ஷியல் வாசனைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் பாடல். டிரெயிலரில் வந்த சில நொடிகளிலே விஜயின் நடனம் பரவலாக பேசப்படுகிறது. விஜயின் ட்ரேட்மார்க் “ண்ணா” என்பதை முதன் முதலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். பா. விஜய் பழைய துள்ளலோடு எழுதியிருக்கிறார். படத்தின் ஓட்டத்தை கெடுக்காமல் இப்பாடல் அமைந்திருந்தால் நிச்சயம் எல்லோருக்கும் visual treat தான். ஷங்கரின் டிபிக்கல் கலர்ஃபுல் ட்ரெயின், மலை, பிரம்மாண்ட கண்ணாடி செட் எல்லாம் இருக்குமென எதிர்பார்க்கலாம்.

நீ செங்கிஸ்கானா.. இனி உங்கிஸ்தானா
நான் மங்கூஸ்தானா. உன் கையில் கஜகஸ்தானா

இதில் ஒளிந்திருக்கும் டபுள் மீனிங் புரியாதவர்கள் 300 ரூபாய் டிடியுடன் என்னை தொடர்பு கொள்ளலாம்.

__________________

3 இடியட்ஸ் ஒரு கிளாசான ஹீரோயிச படம் எனலாம். அந்த வகையில் நண்பனின் இசையும் இரண்டு விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறது.

நிச்சயமாய் PongALL is well

Dec 21, 2011

ச‌வால் சிறுக‌தை போட்டியும் பின்னே ஞானும்

14 கருத்துக்குத்து

 

க‌ட‌ந்த‌ ஞாயிறு அன்று ஆதி & ப‌ரிச‌ல் யுடான்ஸ் திர‌ட்டியுட‌ன் இணைந்து ந‌ட‌த்திய‌ ச‌வால் சிறுக‌தை போட்டியின் ப‌ரிச‌ளிப்பு விழாவை தொகுத்து வ‌ழ‌ங்கும் வாய்ப்பு என‌க்கு கிடைத்த‌து. வேறு சில‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ மேடையேறி இருந்தாலும் தொகுத்து வ‌ழ‌ங்குவ‌து இதுவே முத‌ல்முறை. பெரும்பாலும் நான் முன்னேற்பாடுக‌ள் செய்து கொண்டு போன‌தில்லை. ப‌ல‌ நேர‌ங்க‌ளில் அதுவே சாத‌க‌மாக‌வும், சில‌ நேர‌ங்க‌ளில் பாத‌க‌மாக‌வும் ஆன‌துண்டு. இம்முறை யார் யார் பேச‌ வேண்டும், யார் யாருக்கு ப‌ரிசு என்ப‌தை ம‌ட்டும் மொபைலில் குறித்துக் கொண்டு தொட‌ங்கினேன்.ஒன்றும் சிற‌ப்பாய் அமைய‌வில்லை என் தொகுப்புரை. வ‌ந்திருந்த‌ ந‌ப‌ர்க‌ளில் பெரும்பாலானோர் என‌க்கு அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ள் அல்ல‌து சீரிய‌ஸ் ஆசாமிக‌ள் என்ப‌தை கார‌ண‌மாய் சொல்லி த‌ப்பித்துக் கொள்கிறேன்.

1324216486609 1324214235181

முத‌லில் கேபிள் ச‌ங்க‌ரை வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்த‌‌ அழைத்தேன்.நிக‌ழ்வுக்கு வ‌ந்திருக்கும் அனைவ‌ரையும் வ‌ர‌வேற்கும் வாய்ப்பு கேபிளுக்குத்தான் என்றாலும் அவ‌ர‌ பேச‌ அழைத்த‌ வாய்ப்பு என‌க்குத்தான் என்ற‌ முன்னுரையை சொல்ல‌ எப்ப‌டி ம‌ற‌ந்தேன் என்று தெரிய‌வில்லை. குறிப்புக‌ள் இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் நிச்ச‌ய‌ம் உத‌வி புரியும் என்ப‌தை புரிந்துக் கொண்டேன். சொற்ப‌ வார்த்தைக‌ளில் வ‌ர‌வேற்று சென்றார் கேபிள் ச‌ங்க‌ர். "சிறுக‌தை போட்டி என்ப‌தால் சுருக்க‌மாக‌ முடித்துக் கொண்டார் ச‌ங்க‌ர். ந‌ல்ல‌ வேளை க‌விதைப் போட்டி ந‌ட‌த்தியிருந்தால் எல்லோரும் வாங்க‌ என்ப‌தோடு நிறுத்தியிருப்பார் போலும்" என்றேன். குறிப்புக‌ள் இருந்திருந்தால் இதெல்லாம் தோன்றியிருக்காது என்றே நினைக்கிறேன். கூட்ட‌த்தில்(?) யாராவ‌து ஹைக்கூ போட்டியென்றால் "ஹாய்" ம‌ட்டும் சொல்லியிருப்பாரோ என்ற‌ க‌மென்ட்டை சொல்வார்க‌ளென‌ எதிர்பார்த்தேன். ம்ஹூம். விஜிபி தீம் பார்க் வாச‌ல் நாய‌க‌ர்க‌ளாக‌வே இருந்தார்க‌ள்.

அதை தொட‌ர்ந்து ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் ஆதியின் ப‌திவில் வாசிக்க‌லாம். நான் இப்ப‌திவை எழுதிய‌து இத‌ற்காக‌ அல்ல‌. ச‌வால் சிறுக‌தை போட்டி ப‌ற்றி அசை போட்ட‌ போது ம‌ன‌தில் தோன்றிய‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ப‌கிர‌ ஆசைப்ப‌டுகிறேன்.

எழுத்து என்ப‌து ஒரு க‌லை. அது எல்லோருக்கும் சாத்திய‌மாக‌ வேண்டுமென்ற‌ க‌ட்டாய‌ம் இல்லை. அவ‌சிய‌முமில்லை. இது போன்ற‌ போட்டிக‌ள் புதிதாய் எழுத‌ நிறைய‌ பேர் வ‌ர‌ வேண்டுமென்ற‌ அடிப்ப‌டையில் நிக‌ழ்வ‌தாக‌வே ப‌ல‌ராலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து. என‌க்கு அதில் உட‌ன்பாடில்லை. அவ‌ச‌ர‌ம் வேண்டாம். முழுவ‌துமாய் சொல்லி முடித்துவிடுகிறேன். எழுத‌ எழுத‌ எவ‌ர் ஒருவ‌ருக்கும் எழுத்து செம்மைப்ப‌டும் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து இல்லை. அத‌ற்கு ஏதுவாய் அமைந்த‌ ஒரு க‌ள‌ம் தான் வ‌லைப்பூ. ஆர்வ‌ம் இருக்கும் அனைவ‌ருமே வ‌லைப்பூக்க‌ளில் எழுதிக் கொண்டுதான் இருப்பார்க‌ள். ந‌ன்றாக‌ எழுதும் ப‌ல‌ருக்கும் சொற்ப‌மான‌ எண்ணிக்கையிலே வாசக‌ர்க‌ள் கிடைக்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் எழுதுவ‌தை நிறுத்த‌வில்லை.கார‌ண‌ம் எழுத்தின் மீதான் ஆர்வ‌ம். இந்த‌ ஆர்வ‌ம் தான் ஒருவ‌ரை ந‌ல்லெழுத்துக்கார‌னாக‌ மாற்றும். ம‌ற்ற‌ப‌டி அதீத‌மான‌ பார்வைக‌ளோ, க‌ருத்துக‌ளோ ம‌ட்டுமே ஒருவ‌ரை எழுத்தாளானாக‌ மாற்றும் வாய்ப்பு இல்லையென்ப‌து என் க‌ருத்து.

  வ‌லைப்பூக்க‌ளில் யாரும் எழுத‌லாம்.நிச்ச‌ய‌மாக‌. ஆனால் அவ‌ர்க‌ள் அதைத்தாண்டி எழுத்தாள‌ன் அவ‌தார‌மெடுக்க‌ புத்த‌க‌ங்க‌ள் அச்சிடும்போதுதான் இப்பிர‌ச்சினை வ‌ருகிற‌து. ஒவ்வொரு ஆண்டும் புத்த‌க‌ க‌ண்காட்சிக்கு போகும்போதெல்லாம் என‌க்கு ஒன்று தோன்றும். Air pollution, Noise pollution போன்று இதுவும் ஒரு வ‌கை Pollution தானே? எத்துணை எத்துணை புத்த‌க‌ங்க‌ள்? வாசிப்பின் இன்றிய‌மையாமை குறித்து ஒருவ‌ருக்கு நாம் சொல்லும் வேளையில் இது குறித்தும் நாம் க‌வ‌லைப்ப‌ட‌வேண்டிய‌து அவ‌சிய‌மில்லையா? சென்ற‌ வார‌ம் ர‌மேஷ் வைத்யாவிட‌ம் பேசிக் கொண்டிருந்த‌ போது சொன்னார் "200 ரூபாய் த‌ந்து ஒரு புத்த‌க‌ம் வாங்கி ப‌டிக்கும் ஒருவ‌னுக்கு எழுத்தாள‌ன் ஏதாவ‌தொன்றை த‌ர‌ வேண்டாமா? பிர‌க்ஞையோ, அறிவோ, த‌ர்க்க‌மோ.. ஏதேனும் ஒன்றை புதிதாய் அவ்வாசிப்பு த‌ர‌ வேண்டாமா? வெறும் வாசிப்பின்ப‌மோ, நேர‌க்க‌ட‌த்த‌லோ என்றால் அது வேறு"

   இத‌ற்காக‌த்தான் க‌ட்டுரை ஆர‌ம்ப‌த்தில் எழுத்தாள‌ர்க‌ள் பெருகுவ‌தை நான் விரும்ப‌வில்லை என்று சொன்னேன். வ‌லைப்பூவில் இருந்து புத்த‌க‌ எழுத்தாள‌ர் ஆகியிருக்கும் எல்லோருமே க‌தை, க‌விதைக‌ள் தான் பிர‌சுரிக்கிறார்க‌ள். சினிமா வியாபார‌ம் போன்ற‌ புத்த‌க‌ங்க‌ள் வேறு வ‌கை. அவை எழுத்து, இல‌க்கிய‌ம் என்ற‌ வ‌கையில் சேரா. அவை ஒரு த‌க‌வ‌ல் க‌ளஞ்சிய‌மாக‌ பார்க்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. நான் சொல்வ‌து மொழியின் வ‌டிவ‌ங்க‌ளாக‌ இருக்கும் க‌தை, க‌விதை போன்ற‌ ப‌டைப்புக‌ளை. நான் வாசித்த‌ வ‌ரையில் ப‌திவ‌ர்க‌ள் புத்த‌க‌ங்க‌ளில் தான் அதிக‌ பிழைக‌ள். அப்ப‌டியென்றால் ப‌திவ‌ர்க‌ள் புத்த‌க‌மே போட‌க்கூடாதா என்று கைக‌ளை முறுக்காதீர். அத‌ற்கான‌ உழைப்பை முத‌லில் வ‌லைப்பூவில் காட்டினால் ந‌ல‌ம். வ‌லைப்பூவில் இருந்துதான் அய்ய‌ணார், யுவ‌கிருஷ்ணா போன்ற‌ எழுத்தாள‌ர்க‌ள் வ‌ந்திருக்கிறார்க‌ள். நான் சொல்வ‌து எழுத்து எல்லோருக்கும் கைக்கூடி வ‌ர‌ வேண்டுமென்ற‌ க‌ருத்தை ம‌ட்டுமே.

நாம் செய்ய‌ வேண்டிய‌வை வ‌லைப்பூவிலே ஏராள‌ம் இருக்கின்ற‌ன‌. இன்றும் வ‌லைப்பூக்க‌ளை அச்சு ஊட‌க‌த்தின் நீட்சியாக‌த்தான் எல்லோரும் பார்க்கிறார்க‌ள். நாமும் அவ்வாறுதான் இருக்கிறோம். நான் முன்ன‌ரே சொன்ன‌து போல‌ க‌தை, க‌விதைக‌ள், த‌க‌வ‌ல் என்ப‌தை தாண்டி எந்த‌ புத்த‌க‌மும் ப‌திவ‌ர்க‌ளிட‌மிருந்து வ‌ர‌வில்லை.(ஏதேனும் வ‌ந்திருந்தால் குறிப்பிடுங்க‌ள்.மாற்றி விடுகிறேன்). இணைய‌ம் ஒரு புதிய‌ வ‌டிவ‌ம். புதிய‌ உல‌க‌ம்.  அது தரும் சாத்திய‌ங்க‌ள் ஏராள‌ம். அதை எந்த‌ அள‌விற்கு நாம் ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்? ச‌வால் போட்டியில் கூட‌ ஒரு புகைப்ப‌ட‌த்தை த‌ந்து அத‌ற்கேற்ற‌ க‌தையை எழுத‌ சொன்னார்க‌ள். அடுத்த‌ வருட‌ம் ஏன் ஒரு ஒலிக்குறிப்பை த‌ர‌க்கூடாது? இது கூடுத‌ல் சுவார‌ஸ்ய‌ம் த‌ர‌க் கூடுமல்ல‌வா?

ஒரு நல்ல கதாசிரியனால் ஒரு நல்ல திரைப்படம் எடுத்து விட முடியாது. சினிமா என்னும் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் மணிரத்னம் போன்றவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது. இரண்டையும் இணைக்கும் ஆற்றல் பெற்றவர்களே நல்ல திரைப்படம் கொடுக்க முடியும். இணையமும் அப்படித்தான். இணையத்தின் சாத்தியங்களை அறிந்த பலரால் நல்ல படைப்புகள் எழுத முடிவதில்லை. படைப்புகளின் ஆசான்களுக்கு இணையத்தின் அசாத்தியமான சாத்தியங்கள் குறித்து தெரிவதில்லை.சில உதாரணங்கள் பார்ப்போம்.

உங்கள் வலைப்பூவின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறம் என்று வைத்துக் கொள்வோம். எழுத்துகளின் நிறமும் வெள்ளையாய் இருந்தால் படிப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. ஆனால் அதையே “செலக்ட்” செய்தால் தெரியும். இந்த யுத்தியை பயன்படுத்தி ஒரு மொக்கை பதிவொன்றை எழுதியிருந்தேன். அதை பயன்படுத்தி ஒரு கதை எழுதினால் எப்படி இருக்கும்?

இன்னொரு ஐடியா. GIFF படங்கள் குறித்து அறிவோம். சலனப்படம் போன்றிருக்கும் இதை கதையின் நடுவே இணைத்து, கதைக்கு ஒரு முக்கிய திருப்பத்தை அதில் சேர்த்தால் சுவாரஸ்யமாக இருக்குமல்லவா?

ஒரு க்ரைம் கதை எழுதுவோம். 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கொலையை நேரவாரியாக பத்தி பிரித்து எழுதிக் கொள்வோம். ஒரு கடிகாரத்தை நம் பதிவில் சேர்த்துவிடுவோம். நேரம் மாற மாற கதையின் தொடக்கம் அதற்கேற்றது போல மாறிவிடும். இது சற்று சிரமம்தான். ஆனால் கணிணி ஜாம்பவான்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. நீங்கள் எந்த நேரத்தில் உண்மையில் அக்கதையை படிக்க தொடங்குகறீர்களோ அந்த சமயத்தில் கதை தொடங்கும். பிறிதொரு நாள் வேறு நேரத்தில் படிக்க நேர்ந்தால் கதை வேறு இடத்தில் தொடங்கும். இது இணையத்தில் மட்டும்தானே சாத்தியம்?

நானும் ஒரு ச‌ராச‌ரி ப‌திவ‌ன் என்ப‌தால் க‌ட்டுரை திசை மாறிப்போன‌தை த‌விர்க்க‌ இய‌ல‌வில்லை. ம‌ன‌தில் இருந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்லியிருக்கிறேன். த‌வ‌றாக‌ அர்த்த‌ம் கொள்ளாம‌ல் யோசித்து பாருங்க‌ள். அச்சு ஊட‌க‌த்தை விட‌ வ‌லையுல‌க‌மே ந‌ம‌க்கான‌ க‌ள‌ம். புத்த‌க‌மாய் அச்சிடுமுன் வ‌லையில் ப‌ட்டைத் தீட்டிக் கொள்வோமென்றே சொல்ல‌ வ‌ருகின்றேன்.அவ்வ‌ள‌வே!

Dec 16, 2011

take REST

11 கருத்துக்குத்து

நாம‌ளாம் ஸ்வீட் சாப்பிட்டாதான் "ஸ்வீட் சாப்பிடிறியா"ன்னு கேட்பாங்க‌. தோழி என்ன‌ சாப்பிட்டாலும் "ஸ்வீட்..சாப்பிட‌றியா"ன்னு கேட்கிறாங்க‌.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

பொண்ணுங்க அழகாகணும்ன்னா ப்யூட்டி பார்லருக்கு போறதுக்கு பதிலா உன் கண்ணுல பட்டா போதும்ன்னு சொல்றா தோழி.. கலாய்க்கிறாளான்னு தெரியலையே!

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

என் Twitter BIOவில் "mokkai lover" என்ப‌தை எடுக்க‌ சொல்கிறாள் தோழி. அவ‌ள் மொக்கை என்றும் அர்த்த‌ம் வ‌ருகிற‌தாம். #வேற‌ அர்த்த‌ம் கூட‌ இருக்கா???

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி அரட்டைப்பெட்டியில் ஹாய் சொல்கிறாள். அரட்டைப்பெட்டி அழகுப்பெட்டியாகிறது.. அப்பாலிக்கா வறேன்ப்பா

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

miss u chellam என்று டைப்புவதில் மட்டும் தவறே செய்ய மாட்டாள் தோழி. #கடுப்ஸ்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

அலைபேசி முத்தம் தந்த தோழி, கடைசியா take REST என்கிறாள். என்ன உள்ளர்த்தமோ தெரியலையே

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

ஒஸ்திக்கு இசை த‌ம‌ன்னா என்று கேட்டாள் தோழி.த‌ம‌ன்னா ந‌டிகை செல்ல‌ம் என்றால் அடிக்க‌ வ‌ருகிறாள்.#ஏம்ப்பா.நான் க‌ரெக்ட்டாதானே பேசுறேன்?

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

தோழி ஒரு ந‌ட‌மாடும் கால‌ண்ட‌ர்

திங்கள்        -  சேலை

செவ்வாய்    - அதிக‌ லிப்ஸ்டிக்

புத‌ன்            -  த‌ங்க‌ கொலுசு

வியாழ‌ன் -  _________

வெள்ளி      - ‍ஸ்லீவ்லெஸ்

Dec 13, 2011

Dont miss this!!

6 கருத்துக்குத்து

 

YUVAN ROCKSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

______________________

அப்ப‌டியே இதையும் கேளுங்க‌ :))

Dec 1, 2011

test

2 கருத்துக்குத்து
 

all rights reserved to www.karkibava.com