Nov 30, 2011

Have a break Selva!


 

பின்ந‌வீன‌ சூழ‌லில் உய‌ர்ப‌டைப்புக‌ள் என‌ வித‌ந்தோம்ப‌ப்ப‌டும் ப‌டைப்புக‌ள் அனேக‌மாய் காம‌ம், வ‌ன்ம‌ம், துரோக‌ம் போன்ற‌ அதீத‌ உண‌ர்வுக‌ளின் எல்லைய‌ற்ற உய‌ர‌ங்க‌ளை தொடுவ‌த‌ற்கான‌ உன்ன‌த‌ அல்ல‌து அதிப‌ய‌ங்க‌ர‌ முய‌ற்சிக‌ளின் எச்ச‌ங்களாக‌ இருப்ப‌தை நீங்க‌ள் அவ‌தானித்திருக்க‌க்கூடும். ஒரேயொரு மிகுபுனைவு முய‌ற்சியான‌ ஆயிர‌த்தில் ஒருவ‌னை த‌விர்த்து பார்த்தால் அச்சுழ‌லிலே செல்வ‌ராக‌வ‌னும் சிக்கித் த‌விப்ப‌தை நாம் அறிய‌லாம். ம‌ய‌க்க‌ம் என்ன‌ திரைப்ப‌ட‌மும் அதில் ஒரு நீர்க்குமிழிதான் என்ப‌தை இந்நேர‌ம் உங்க‌ளுக்கு இணைய‌ம் வழி வ‌ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் எடுத்துயிய‌ம்பியிருக்கும். பெரிதாய்‌ சொல்ல‌ ஏதுமில்லையென்றாலும் என்னை க‌வ‌ர்ந்த‌ முத‌ல் பாதியை ப‌ற்றி கொஞ்ச‌மும், பொட‌னியில் பொளேர‌ன‌ அடித்த இர‌ண்டாம் பாதியைப் ப‌ற்றி கொஞ்ச‌மும், த‌னுஷை ப‌ற்றி நிறைய‌வும் பார்க்க‌லாம்.

  தேசிய‌ விருது பெற்ற‌ நாய‌க‌ன், பிரிட்னி ஸ்பிய‌ர்ஸ் த‌ற்போது முணுமுணுக்கும் ஒய் திஸ் கொலைவெறிடியின் கார‌ண‌க‌ர்த்தா என்ற‌ அடையாள‌ங்க‌ளைத் தாண்டி மாப்பிள்ளை, வேங்கையின் நாய‌க‌ன் என்ற‌ முத்திரையைத்தான் த‌மிழ் ர‌சிக‌ர்க‌ளுக்கு த‌ந்திருக்கிறார் த‌னுஷ். ஆனால் ஜீவாவை போல‌ எல்லா ப‌ட‌ங்க‌ளுக்கும் ஒரே உழைப்பை த‌ராம‌ல் தேர்ந்தெடுத்து சில‌ ப‌டைப்புக‌ளுக்கு ம‌ட்டும் த‌னிக்க‌வ‌ன‌ம் செலுத்துவ‌து த‌னுஷின் வ‌ழ‌க்க‌ம். அவ்வ‌கையில் ம‌ய‌க்க‌ம் என்ன‌ ப‌ட‌த்திற்கு இன்னும் அதீத‌ க‌வ‌ன‌ம் செலுத்தியிருக்கிறார். ப‌ட‌த்தில் ஆக‌ச் சிற‌ந்த‌து இவ‌ரின் ந‌டிப்பு. க‌தை, பாத்திர‌ம் தாண்டி சோக‌ம் என்றால் இதுதான், காத‌ல் என்றால் இதுதான் என‌ டெம்ப்ளேட் உண‌ர்வுக‌ளின் குத்தகைத்தார‌ரான‌ சூர்யாவை வெகு சாத‌ர‌ண‌மாக‌ இவ‌ரால் தாண்ட‌ முடிகிற‌து என்ப‌தை ந‌ம்புவ‌த‌ற்கு ச‌ற்று சிர‌ம‌ப்ப‌ட‌த்தான் வேண்டியிருக்கிற‌து. 3 ஐ தொட‌ர்ந்து, அத‌ன் பின்  இவ‌ர் ந‌டிக்கவிருக்கும் சில‌ப் ப‌ட‌ங்க‌ள் அதை இல‌குவாக்குமென‌ எதிர்பார்க்கிறேன். சூர்யா, விக்ர‌ம் வ‌ரிசை தாண்டி ர‌ங்காராவ், சிவாஜி, க‌ம‌ல் வ‌ரிசையில் இட‌ம்பிடிக்க‌ப் போகும் ந‌டிக‌ரென‌ த‌னுஷை நான் கொண்டாடுகிறேன். இவ‌ருக்காக‌ ம‌ட்டுமே ப‌ட‌ம் பார்க்க‌லாம். பார்க்க‌லாம்.

பாலாவின் நாய‌க‌ர்க‌ள், ம‌ணிர‌த்ன‌த்தின் நாய‌கிக‌ள் போல‌ செல்வ‌ராக‌வ‌னின் பாத்திர‌ங்க‌ள் எல்லாமுமே ஒரே அச்சில் வார்க்க‌ப்ப‌ட்ட‌ பிம்ப‌ங்க‌ளாக‌ இருப்ப‌து அசூசை உண‌ர்வை த‌ருகிற‌து. காத‌ல் கொண்டேன் திவ்யாவையும், ரெயின்போ கால‌னி அனிதாவையும் தாண்டி யாமினியிட‌ம் குறிப்பிட்டு‌ சொல்ல‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் ஏதுமில்லை, "உன் பொண்டாட்டிய‌ நீதான் தேடிக்க‌ணும்,அடுத்த‌வ‌ன் பொண்டாட்டி மேல‌ ஆசைப்ப‌ட‌க்கூடாது" என்ற‌ வ‌ச‌ன‌த்தை த‌விர‌. தீபா வெங்க‌ட்டின் குர‌லும், ரிச்சாவின் உட‌ல்மொழியும் ந‌டிப்பு என்ற‌ வ‌கையில் பாராட்ட‌த்த‌க்க‌து. த‌னுஷிட‌ம் முத்த‌ம் வாங்கிய‌ பின் வ‌ரும் காட்சிக‌ளில் ரிச்சாவின் உட‌ல்மொழியில் காண‌ப்ப‌டும் சின்ன‌ சின்ன‌ துள்ள‌ல்க‌ள் எல்லாம் அவ‌ரைத் தாண்டி இய‌க்குனரை திரையில் காட்டும் காட்சிக‌ள். இவ‌ரின் அடுத்த‌ ப‌ட‌ம் சிம்புவின் ஒஸ்தி என்ற திடுக்கிற‌ செய்யும் செய்தியான‌து இங்கு தேவைய‌ற்ற‌ ஒன்றாக‌ என‌க்கு தோன்ற‌வில்லை.

க‌தை ப‌ற்றி க‌தைப்போம். த‌னுஷும் அவ‌ரின் த‌ங்கையும் பெற்றோரை இழ‌ந்து ந‌ண்ப‌ர்க‌ள் உதவியில் வாழ்கிறார்க‌ள். த‌னுஷிற்கு புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ன் ஆக‌ விருப்ப‌ம். பிர‌ப‌ல‌ புகைப்ப‌ட‌ க‌லைஞ‌ரிட‌ம் உத‌வியாளாராக சேர‌ ஆசை‌‌ப்படுகிறார். ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் த‌னுஷின் ந‌ண்ப‌ன் த‌ன‌து தோழியை ந‌ண்ப‌ர்க‌ள் குழாமிற்கு அறிமுக‌ப்ப‌டுத்துகிறார். த‌னுஷ் ஒரு புகைப்ப‌ட‌ வேலை தொட‌ர்பாக‌ காட்டுக்குள் செல்ல‌ நேரிடும்போது, ந‌ண்ப‌னும் அவ‌ர்த‌ம் தோழியும் இணைந்துக் கொள்கிறார்க‌ள். கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நாய‌கிக்கு த‌னுஷின் மீது ஈர்ப்பு வ‌ருகிறது. ஒரு க‌ட்ட‌த்தில் த‌னுஷிற்கும் ரிச்சாவிற்கும் திரும‌ண‌ம் ந‌ட‌ந்து விடுகிற‌து. இடையில், த‌னுஷின் புகைப்ப‌ட‌த்தை அந்த‌ பிர‌ப‌ல‌ க‌லைஞ‌ர் அவ‌ர் புகைப்ப‌ட‌மென‌ ஏமாற்றி ஒரு போட்டியில் வென்றுவிடுகிறார். இதை பார்த்த‌ த‌னுஷ், மாடியில் இருந்து கீழே விழுந்து ம‌ன‌ந‌ல‌ம் பிற‌ழ்ந்த‌வ‌ர் ஆகி விடுகிறார். அத‌ன் பின் அவ‌ரை நாய‌கி எப்ப‌டி பார்த்துக் கொன்டார், த‌னுஷ் மீண்டாரா, புகைப்ப‌ட‌த்துறையில் சாதித்தாரா என்ப‌தை மீதிப் ப‌ட‌ம் சொல்கிற‌து. கொல்கிற‌து.

செல்வ‌ராக‌வ‌னின் க‌தையை, க‌தையாக‌ சொல்வ‌தில் இருக்கும் சிக்க‌ல் அலாதியான‌து. நாம் பார்த்த‌ க‌தையை குதூக‌ல‌ ம‌ன‌தோட‌ த‌ட்ட‌ச்சிய‌ பின் வாசித்துப் பார்க்கையில் ம‌ன‌ம் ஏனோ துணுக்குற‌ செய்கிற‌து. முக‌த்திலைறையும் ய‌தார்த்தம் தான் எனினும் "ஐஷ்வ‌ர‌யா ராயா இருந்தாலும் ஆய் போனா அசிங்க‌மாக‌த்தான் இருக்கும்" என்ப‌தை கூசாம‌ல் சொல்ல‌ முடிவ‌தில்லை என்னால். ஆனால் செல்வ‌ராக‌வ‌னோ குசு விடுவ‌திலே ரொமான்ஸ் காட்சியை வைக்கிறார். முத‌ல் பாதி செல்வ‌ராக‌வ‌னின் வ‌ழ‌மையான‌ பாணியில் செல்கிற‌து. ர‌சிக்க‌வும் வைக்கிற‌து. பேருந்து எங்கு செல்கிற‌து என்று தெரியாவிடினும் ம‌லை முக‌டுக‌ளும், அருவிக‌ளும் ந‌ம் ப‌ய‌ண‌த்தை சுவார‌ஸ்ய‌மாக்க‌க்கூடும். முத‌ல் பாதி அவ்வாறுதான் ப‌ய‌ணிக்கிற‌து. ஆனால் அப்பேருந்தே ஷெட்டுக்கு போகிற‌து என்று தெரியும்போது வ‌ரும் எரிச்ச‌லை இர‌ண்டாம் பாதி தருகிற‌து. இல‌க்க‌ற்று அலையும் திரைக்க‌தை அய‌ர்ச்சியை உண்டாக்குகிறது. செல்வ‌ராக‌வ‌ன் மீண்டும் நா.முத்துக்குமாரோடு இணைந்துக் கொண்டு க‌தை, திரைக்க‌தை எழுதும் வேலையை ம‌ட்டும் செவ்வ‌னே செய்ய‌லாம்.

முத‌ல் பாதியில் பாட‌ல்க‌ள் ஆர‌ம்பிக்கும் புள்ளிக‌ள் எல்லாமே எதிர்பாராத‌து. அதுவே அத‌ற்கு ஒரு அழ‌கு சேர்க்கிற‌து. ஆனால் காத‌ல் என் காத‌ல் பெரிய‌ ஏமாற்ற‌ம். அப்போது த‌னுஷ் காத‌லிக்க‌வேயில்லை. அத‌னால் தோல்வியுமில்லை. ஆனால் அந்த‌ப் பாட‌லை அவ‌ர்தான் பாடுகிறார். இப்ப‌டி ஒரு தெளிவ‌ற்ற‌ சூழ‌லில் செல்வ‌ராக‌வ‌ன் இதுவ‌ரை பாட‌ல் வைத்த‌தில்லை. ஆயிர‌த்தில் ஒருவ‌னில் வ‌ரும் குத்துப்பாட‌லுக்கு கூட‌ அவ‌ர்க‌ள் போதையில் இருப்ப‌தாக‌ ஒரு கார‌ண‌ம் சொல்லியிருப்பார். ப‌ட‌த்திற்கு இன்னொரு ப‌ல‌ம் ராம்ஜியின் ஒளிப்ப‌திவு. ந‌ல்ல‌ வேளை த‌னுஷ் இசைத்துறையில் சாதிக்க‌ நினைவில்லை. ஜி.வி.பிர‌காஷின் இசையை வைத்துக்கொண்டு செல்வ‌ராக‌வ‌னால் அதை செய்திருக்க‌ முடியாது. இசையினூடாக‌ ப‌ல‌ காட்சிக‌ள் ப‌ய‌ண‌ம் செய்கின்ற‌ன‌. செல்வ‌ராக‌வ‌னின் அந்த‌ யுத்திக்கு யுவ‌ன் தான் தோதான‌வ‌ர். மொத்த‌மே 2.20 ம‌ணி நேர‌ம் தான் ப‌ட‌ம். ந‌ல்ல‌ விஷ‌ய‌மென்றாலும் திரைக்க‌தையில் ஆங்காங்கே இருக்கும் ஓட்டைக‌ளுக்கு இது கார‌ண‌மோ என்ற‌ எண்ண‌ம் எழாம‌லில்லை.

ம‌ய‌க்க‌ம் என்ன‌ உட்ப‌ட‌ எல்லா செல்வ‌ராக‌வ‌னின் ப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் க்ளிஷேக்க‌ளை நேச‌மித்ர‌ன் இப்ப‌டி ப‌ட்டிய‌லிடுகிறார்

 

எப்படியேனும்  ஒரு கழிவறை சார்ந்த ஒரு காட்சி/உரையாடல் இடம்பெற்று விடுவதும் தற்செயலானதல்ல என்றே தோன்றுகிறது.முதல் படத்தில் இருந்து கா.கொ. கல் அடையாளம் வைப்பது, 7ஜியில் போஸ்டர்களை அலங்கரித்த மேற்கத்திய பாணி கழிவறை சித்திரம் .ஆ.ஒ-னிலும் காட்டுப் பயணத்தில் ஓர் உரையாடல் ,ம.எ வில் ஒரு காட்சி மற்றும் சொல்லாடல்.(செல்வராகவன் கதை எழுதிய யா.நீ.மோ -விலும் )

நெருப்பு /மழை நடனம் ,புறக்கணிக்கும் ஆசிரியர்கள்/மேலாளர்கள்/தகப்பன்மார்களின் வசையில் முண்டம்/முண்டக் கலப்பை (து.இ-தலைவாசல் விஜய்,கா.கொ-டஸ்டர் எறியும் ஆசிரியர்,யா.நீ.மோ ரகுவரன்,7ஜி- விஜயன்,ம.எ.வில் தனுஷ்)வெறித்த கண்களுடன் ஒரு பாடல் /காட்சி,சட்டை அல்லது சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு ஒரு காட்சி உறுதி(பாலுமகேந்திரா வினோதினி துவங்கி ரோகிணி,மணிரத்னத்தின் மதுபாலா வரை பயன்படுத்திய உத்தி) ,நாயகனின் நோக்காடு அல்லது நோய்க்காலத்தில் மருந்திடும்/கவனிக்கும் ஒரு காட்சி ,நாயகணைத் தவிர மொத்த உலகமும் வாகனங்களாய் /சாலை மாந்தர்களாய் விரையும் ஒரு ஷாட், கண்டிப்பாய் ஒரு மொட்டைமாடித் துயர நிகழ்வு/புலம்பல் காட்சி ,விஜய குமார், நாகேஷ்,நண்பனின் தகப்பன் என்று கலாச்சாரப் பாலம் கேரக்டர் ஒன்று,
தாடியுடன் கோணல் நடை நடக்கும் மங்கிய நிறத்தில் மட்டும் உடுத்தும் நாயகன் காஸ்ட்யூம்,எழ மறுத்து மீண்டும் போர்த்தும் ஒரு போர்வை , விரல்கள் தீண்டும் பேருந்து காட்சியை மூன்று படங்களோடு விட்டு விட்டது பெரும் மகிழ்ச்சி. நிச்சயமாய் ஒரு அழும் நைட்டித் தங்கை,நாயகன் நாயகி அணுக்கமாக கூடவே இருக்கும் அப்பாவிக் காதலனுடன் ஒரு தியேட்டர் சீக்வன்ஸ் ,நாயகனுக்கு நாயகி கையால் ஒரு அறை,மாதவிடாய் பஞ்சு ,கண்ணாடி நாயகன்....

நீரின் ஆழ‌ம‌றியா த‌க்கை‌யை போல‌வே திரைப்ப‌ட‌ங்க‌ளை பார்க்க‌ ப‌ழ‌கிவிட்ட‌ த‌மிழ்ப் பார்வையாள‌னுக்கு, ச‌ல‌ன‌ம‌ற்ற‌ ந‌தியின் ஆழ‌த்தில் இருக்கும் வேக‌ம் போல‌ இக்க‌தையின் அடிநாத‌மாக‌ இய‌க்குன‌ர் சொல்ல‌ வ‌ந்த‌து புரியும‌ள‌விற்கு பிர‌க்ஞை இருக்க‌ வாய்ப்பில்லை. ஆங்காங்க‌ வ‌ச‌ன‌ம் மூல‌மும், காட்சிக‌ள் மூல‌மும் செல்வ‌ராக‌வ‌ன் சொல்ல‌ வ‌ருவ‌தை எழுதி இப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"அடுத்த‌வ‌ன் ஃபோட்டோவ‌ ஆட்ட‌ய போட்டா த‌ப்பு.அடுத்த‌வ‌ன் பொண்டாட்டியை ஆட்டையை போட‌ நினைச்சாலும் த‌ப்பு. ஆனா அடுத்த‌வ‌ன் ஃபிக‌ரை ஆட்டையை போடுற‌து த‌ப்பேயில்லை"

முத‌ல் பாதி           - ம‌யக்க‌ம்
இர‌ண்டாம் பாதி -  என்ன‌

22 கருத்துக்குத்து:

ராம்குமார் - அமுதன் on November 30, 2011 at 3:02 PM said...

மூன்றாம் பாதி - ஏன் ?

vinu on November 30, 2011 at 3:02 PM said...

sorry :(

amas on November 30, 2011 at 3:12 PM said...

Excellent write up. Every line crisp and not an unwanted word to express what you wanted to convey. Did not see the movie though I had booked tickets since I found out that it will not be to my taste, but I was waiting for your review.
amas32

Manoj Reuben on November 30, 2011 at 3:21 PM said...

நீங்கள் சொன்ன பல குறைகள் குறைகளாகவே தெரிந்தாலும், visual narrative எனும் இவரது கருவியில் contemporary directors யாரும் இல்லை எனலாம். எனவே இவர் படங்கள் எப்போதும் தனித்தன்மையுடன் எனக்கு தெரிகிறது.

மாங்கனி நகர செல்லக் குழந்தை on November 30, 2011 at 3:48 PM said...

"அடுத்த‌வ‌ன் ஃபோட்டோவ‌ ஆட்ட‌ய போட்டா த‌ப்பு.அடுத்த‌வ‌ன் பொண்டாட்டியை ஆட்டையை போட‌ நினைச்சாலும் த‌ப்பு. ஆனா அடுத்த‌வ‌ன் ஃபிக‌ரை ஆட்டையை போடுற‌து த‌ப்பேயில்லை"

அருமை........

சுசி on November 30, 2011 at 4:09 PM said...

செம்ம்மம்ம விமர்சனம் கார்க்கி. கலக்ஸ் :)

Anonymous said...

படம் பார்த்து தி௫ம்பிய மனநிலை தான் தங்களின் இந்த விமர்சன பதிவு

சத்யா on November 30, 2011 at 5:11 PM said...

திரைப்படம் செல்வராகான் டச் என்றால், விமர்சனத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை உஙகள் டச்

பிரியமுடன் பிரபு on November 30, 2011 at 7:05 PM said...

:)

பரிசல்காரன் on November 30, 2011 at 8:05 PM said...

படம் நல்லாருக்கு நல்லால்லை எல்லாத்தையும் விடு. மங்காத்தாக்கு கவுண்டரை வெச்சு எழுதினதுக்கு இந்த மாதிரி எழுதி பிராயச்சித்தம் தேடிகிட்ட.

குட் ரைட்டப்!!

sweet on November 30, 2011 at 8:24 PM said...

idhula engayya surya varrar?

vijay rasigan putthi ippadi thaan psycho type-la irukkumo?

matthapadi review okey

KSGOA on December 1, 2011 at 9:44 AM said...

விமர்சனம் நல்லா இருக்கு.உங்கள் எழுத்து நடை நல்லா இருக்கு.

Ram on December 1, 2011 at 11:17 AM said...

Sooper தல.. அந்த சூர்யா பத்துன comment, liked very very much...

ponsiva on December 1, 2011 at 4:41 PM said...

nice

இரசிகை on December 1, 2011 at 6:30 PM said...

முத‌ல் பாதி - ம‌யக்க‌ம்
இர‌ண்டாம் பாதி - என்ன‌


remba nalla yezhuthiyirukkeenga,
niraiya idangal superb-aa irukku.

vaazhthukal...

கத்தார் சீனு on December 1, 2011 at 7:38 PM said...

படம் எப்படி வேணாலும் இருந்துட்டு போகட்டும்...உங்களின் இந்த பதிவு மிக அருமை...மிக மிக வித்தியாசம்.
உங்கள் சாயல் இல்லாமல் மிக கவனமாக எழுதப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது.....

param on December 2, 2011 at 3:15 AM said...

GV பிரகாஷ் குறித்த உங்களது விமர்சனம் ஏற்புடையது அல்ல .படத்தின் வெற்றிக்கு அவரது இசையும் ஒரு காரணம் .
மிக நன்றாக இசைத்துள்ளார் (எங்கிருந்தும் சுடாமல் இருந்தால் :-)
அருமையான எழுத்துநடை நண்பரே ....
-நச் "முக‌த்திலைறையும் ய‌தார்த்தம் தான் எனினும் "ஐஷ்வ‌ர‌யா ராயா இருந்தாலும் ஆய் போனா அசிங்க‌மாக‌த்தான் இருக்கும்"

Cheliyans

Azhagesan on December 2, 2011 at 9:14 AM said...

Padam paakka paakka onnum puriyala

பட்டாம்பூச்சி on December 3, 2011 at 5:07 PM said...

romba ilakiyathanama eludha aarambichitinga...mokkaila kummi adicha payapullaya idhu?namba mudiyavillai....anyways,good style boss!!

Rishvan on December 7, 2011 at 3:00 PM said...

nice review.... www.rishvan.com

நாய் சேகர் on December 12, 2011 at 2:43 PM said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

ஸ்ரீநாராயணன் on December 13, 2011 at 2:24 AM said...

First line super a vandhu irukku :-)

Nalla sirichen .....

 

all rights reserved to www.karkibava.com