Nov 14, 2011

என்னடா கார்க்கி குண்டாயிட்ட?


 

முன்னாடி எல்லாம் யாராச்சும் என்ன பார்த்தா “இளைச்சிட்டியேடா கண்ணு”ன்னு தான் கேட்பாங்க. 4 கிலோ ஏறியிருந்தாலும் அதே டயலாக்தான். ஆனா இப்ப எல்லாம் கஷ்டப்பட்டு ஜிம், டயட்ன்னு 750 கிராம் குறைச்சிட்டு போனா ஊதிட்டே போறியே மச்சின்னு உளர்றானுங்க. அட இது கூட பரவாயில்லை.. போன ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு “Karki.. You will look awesome if you loose few kgs.”ன்னு சொல்லுச்சு. நானும் செம கடுப்பாகி “அப்படி குறைச்சா நீ என்ன லவ் பண்ணுவியான்னு” கேட்டேன். திருதிருன்னு முழிச்சது.  “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா. அப்புறம் எதுக்கு நான் சாப்பிடாம காயணும்ன்னு சொல்லிட்டு சமோசா சாப்பிட போய்ட்டேன்.

சமோசான்னு சொன்ன உடனே எனக்கு டீக்கடைத்தான் ஞாபகத்துக்கு வருது. நல்ல கலரா, புஸுபுஸுன்னு பங்களா நாய்க்குட்டி மாதிரி இருந்தாலும் உருளைக்கிழங்கு சமோசா எனக்கு அவ்வளவா புடிக்கிறதில்லை. டீக்கடையில் கிடைக்கும் நம்ம ஊரு வெங்காய சமோசாதான் என் சாய்ஸ். அதுவும் ஹைஜீனா இருக்கணும்ன்னு ஒரு பட்டர் பேப்பர் பாக்கெட்டுல குட்டிக்குட்டியா 4,  5 சமோசா போட்டு தருவாங்களே.. அத பிரிக்கிறப்ப பாருங்க.. நாமளே செஞ்ச ராக்கேட்டு சக்ஸஸா போன சந்தோஷம் இருக்கும். காஞ்சு போன பிரெட்டை சாப்பிடற ஆளுங்களுக்கு இதெல்லாம் எங்க தெரியும்?

அது என்னவோ தெரில. நல்லா சாப்பிடறவனுங்கள கண்டாலே இப்பலாம் யாருக்கும் ஆக மாட்டேங்குது. உண்மையா மனசில எந்த தப்பும் இல்லைன்னா யாரா இருந்தாலும் கண்ண பார்த்துதானே பேசுவாங்க? ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. இவ்ளோ வருஷம் வாழ்ந்தும் கண்ண மட்டும் பார்த்து பேசுற ஒரு உண்மையான நண்பனை கூட நான் சம்பாதிக்கலன்னு நினைக்கும்போது… விடுங்க. இத நினைச்சு கஷ்டப்படுறதுக்கு பதிலா நான் போய் பானி பூரி சாப்பிடுவேன்.

தினம் மதிய சாப்பாடா 3 சப்பாத்தி சாப்பிட சொல்றாரு டாக்டர். ஏற்கனவே போதி தர்மர மறந்துட்டோம்ன்னு செம கோவத்துல இருக்காங்க முருகதாசும், உதயநிதி ஸ்டாலினும்.. இதுல நாம பஞ்சாப் நாட்டு கோதுமைல செஞ்ச சப்பாத்திய சாப்பிட்டா நம்ம ஊர் இட்லிய யார் சாப்பிடுவா? அப்படியே காலப்போக்குல இட்லியை மறந்தே போயிட மாட்டாங்களா? அப்புறம், அரிசி விளைச்சல் குறைஞ்சிடும். தஞ்சை பகுதி மக்கள் எல்லாம் என்ன வேலை செய்வாங்க? நம்ம நாட்டோட பொருளாதாரமே பாதாளத்துல விழுந்திடும். இதெல்லாம் நடக்காம இருக்கணும்ன்னா நான் உடனே இப்போ 4 இட்லி சாப்பிட்டாகணும்.

இட்லின்னு சொல்லும்போதே நாக்குல சாம்பார் ஊறுது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்ன்னு சொல்லுவா. அது போல ஆவியில வெந்தாலும் வெண்மையை தந்தருளும் பகவான் ஆச்சே இட்லி. அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின்  நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம். நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறார் என்பதை எத்தனை பேரு அறிவார்கள்?? நாம் இட்லிக்கு வருவோம். சூடாக சாப்பிடுவதுதான் இட்லியா? இல்லையில்லை. மறுநாள் காலை மீந்து போன இட்லியை உதிர்த்து உப்புமா செய்வதில் தொடங்கி குஷ்பூ இட்லி,  இட்லி ஃப்ரை வரை காலத்திற்கேற்ப வளர்கிறதே.. அதுதான் இட்லி. இட்லியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்வண்ணம், சிங்கம் திரைப்படத்தில் ஒரு பஞ்சாப் சிங் பாடியிருப்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். “சட்டினியை விட்டுப்புட்டு இட்டாலியை தொட்டுக்கிட்டேன்” என்கிறார் இந்த பஞ்சாப் நாட்டு பாடகர்.  இட்லி என்பதை நீட்டி இட்டாலி என்ற நாடு வரை கொண்டு சேர்ந்த அந்த தாடிக்காரருக்கு நாம் காலமெல்லாம் வெங்காய சாம்பர் செய்து போட்டால்தான் நன்றிக்கடன் தீரும்.

இட்லி சாப்பிடலாம்டா. ஆனா பூரியெல்லாம் ஆகவே ஆகாது என்போரும் உண்டு. நல்லா யோசிச்சு பாருங்க. தக்குணூண்டு பூரி வச்சிக்கிட்டு, அதுல ஓட்டையை வேற போட்டு சாப்பிடுறதுக்கே junk foodனு பேரு வச்சிக்கிறாங்க. நாம பல நூறு ஆண்டுகளா பெரிய பெரிய பூரி செஞ்சு அதுக்கு மசாலா வேற வச்சு சாப்பிடறோமே.. அந்த பரம்பரைல வந்துட்டு நாம காஞ்சு போன சேண்ட்விச்சும், ஃப்ரூட் சாலடும் சாப்பிடறதா? கடைசியா ஒரு பஞ்ச் சொல்லி முடிச்சிடறேன்.

பேசாம கொயட்டா இருக்கிறவனும், ஒழுங்கா சாப்பிடாம டயட்ல இருக்கிறவனும் தமிழனே இல்லை.

23 கருத்துக்குத்து:

shiva... on November 14, 2011 at 11:17 PM said...

nice one :))

ILA(@)இளா on November 14, 2011 at 11:18 PM said...

"என்னடா கார்க்கி குண்டாயிட்ட?" அப்படி கேட்டா தப்பு இல்லே..

"என்னடா கார்க்கி உண்டாயிட்ட?" அப்படின்னு கேட்டாதான் தப்பு

நடராஜன் on November 14, 2011 at 11:18 PM said...

//அப்பரம்பொருளை சாம்பார் என்னும் பக்தி வெள்ளத்தில முக்கி, திருநீறு போல நெய்யை விட்டு பின் நாவில் போட்டுக்கொண்டால்…அடடடடடா.. அதுவல்லவா தெய்வீகம்.// இட்லியை கடவுள் என்றதற்காகவே இட்லி இளவரசன் என்று உமக்கு ஒரு பட்டமே கொடுக்கலாம்! அதெல்லாம் சரி போட்டோ எடுக்கும் போது ஏன் மூச்சை பிடிக்கிறதா செய்தி உலாவுது அப்படியா?

Sen.. on November 15, 2011 at 12:07 AM said...

மச்சி.. நீஇட்லியின் அருமை பெருமைகளை உலகளவிற்கு கொண்டு சென்றதால் இன்றுமுதல் நீ "இட்லிகுண்டன்" என்று அன்போடு அழைக்கப்படிவாய்..ஜ்

சுசி on November 15, 2011 at 4:07 AM said...

செம சிரிப்புதான் போங்க.

//ஆனா என்கிட்ட பேசுற எல்லோரும் என் தொப்பையை பார்த்தே பேசுறாங்க. //

இது பொதுவான பிரச்னைங்க :)

சங்கர் நாராயண் @ Cable Sankar on November 15, 2011 at 8:37 AM said...

aamaa.. தமிழர்

KSGOA on November 15, 2011 at 8:38 AM said...

சொல்லுகிறவர்கள் சொல்லட்டும் நீங்க
உங்க வேலையை பாத்துட்டே இருங்க.
punch நல்லா இருக்கு.

பிரபா on November 15, 2011 at 11:20 AM said...

// “நீ குறைக்கலனாலும் லவ் பண்ணுவேண்டா செல்லம்”ன்னு அவ மனசு சொன்னது என் காதுல நல்லா கேட்டுது. ஆனா கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு மாட்டேன்னு சொன்னா.//

டேய் டேய் யாருக்குடா சுத்துறீங்க... அந்த பொண்ணு கன்னத்துல கொடுத்த அந்த 'பளார்' சத்தம் சிலோன் வரைக்கும் கேட்டுச்சுடா...

Renu on November 15, 2011 at 11:20 AM said...

துன்ற விஷயத்துல நீ என் இனமடா :)

Sen22 on November 15, 2011 at 11:43 AM said...

எனக்கும் வெங்காய சமோசானா ரொம்ப பிடிக்கும்...
குஷ்பூ இட்லி போல அழகான பதிவு....
கடைசி பன்ச் செம சூப்பர்... :))

tsjpraveen on November 15, 2011 at 12:02 PM said...

Nice to see ur new new blogs daily.. My first comment in blog world. Just thought to tell u how eagerly we are waiting for ur blogs. Keep writing Karki.. :)

Karthik on November 15, 2011 at 1:00 PM said...

Nice karki. Un Tamil thondu valzka! Valarga!

அமுதா கிருஷ்ணா on November 15, 2011 at 4:14 PM said...

சரி தமிழா...

தர்ஷன் on November 15, 2011 at 4:41 PM said...

கேட்டது யார் குஜ்ஜுவா சகா?
இட்லியை நீங்கள் சொன்ன மாதிரி சாப்பிடலாம்தான் இட்லியையும் உழுந்து வடையையும் சரி விகிதத்தில் பிய்த்தெடுத்துது அதை சாம்பாரில் முக்கி கொஞ்சம் காரமான சட்னியில் தோய்த்து சாப்பிட்டிருக்கிறீர்களா டிவைன்

பரிசல்காரன் on November 15, 2011 at 11:51 PM said...

///நம்ம கேபிள் சங்கர் இதைத்தான் ஒவ்வொரு சாப்பாடுக்கடை பதிவிலும் “divine” என்று சொல்கிறா//

குத்துன்னா குத்து இதாண்டா உள்குத்து!!

வெண்பூ on November 16, 2011 at 12:19 AM said...

செம பதிவு கார்க்கி...

//
ILA(@)இளா said...

"என்னடா கார்க்கி உண்டாயிட்ட?" அப்படின்னு கேட்டாதான் தப்பு
//

அது அப்படி இல்ல, “கார்க்கி குண்டானா தப்பில்ல, கார்க்கியினால யாராவது உண்டானாத்தான் தப்பு”... அவ்வ்வ்வ்வ்வ் :))

வெண்பூ on November 16, 2011 at 12:19 AM said...

//
Sen.. said...
மச்சி.. நீஇட்லியின் அருமை பெருமைகளை உலகளவிற்கு கொண்டு சென்றதால் இன்றுமுதல் நீ "இட்லிகுண்டன்" என்று அன்போடு அழைக்கப்படிவாய்..
//

இட்லி குண்டனா? இட்லி குண்டானா? :)))

சுரேகா.. on November 16, 2011 at 2:28 AM said...

யுடான்ஸ் நட்சத்திர வாழ்த்துகள் சகா!


சாப்பிடுறதை விட்றாதீங்க!

நல்ல்ல்ல்ல்ல்லா சாப்பிடுங்க!

இரசிகை on November 16, 2011 at 10:06 AM said...

:)))

இரசிகை on November 16, 2011 at 10:06 AM said...

:)))

கார்க்கி on November 16, 2011 at 10:10 AM said...

thanks alllllllllllll

touch vittu pogala.. :)

அன்புடன் அருணா on November 16, 2011 at 6:25 PM said...

உங்களைப் பார்த்து ஏழுவோட கமென்ட் என்னா???

பட்டாம்பூச்சி on December 3, 2011 at 5:16 PM said...

periiiiiiya bablu???

 

all rights reserved to www.karkibava.com