Nov 30, 2011

ப‌ப்லு


 

   போர் ந‌ட‌ந்து முடிஞ்ச‌ மாதிரி‌தான் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் வீடு விக்ர‌ம‌ன் ப‌ட‌ ஷூட்டிங் ந‌ட‌க்கிற‌ மாதிரி‌ க‌ல‌க‌லன்னு‌ இருந்த‌ச்சு. இன்னைக்குத்தானே வ‌ரும்ன்னு சொன்னான் ப‌ப்லு? என்ன‌ ஆச்சுன்னு ச‌ந்தேக‌ம், ர‌ம‌ண‌ன் சொல்லும் புய‌ல் மாதிரி வ‌லுத்துச்சு என‌க்கு. வெடிச்சிருப்புட‌ன் அம்மா ஒரு லெட்ட‌ர் த‌ந்தாங்க‌.

Dear mom,

I am sorry. I got less rank. But dont take my aim by that. I got the results because of not obeying parent’s words. So, I got less rank. From Now on wards, I will obey and study hard and get good marks. First read tamil book Pg.No:49. Then turn next page. You will find the report card.

அடுத்த‌ப் ப‌க்க‌த்தை திருப்பினால் PLAY STATION என்றிருந்த‌து.

2011-11-30 09.40.37

ச‌ரி, முத‌ல்ல‌ த‌மிழ் புக்க‌ பார்க்க‌லாம்ன்னு எடுத்தேன். இதாங்க‌ இருந்துச்சு.

2011-11-24 21.43.32

ப‌ய‌புள்ள‌ அடி வாங்குற‌துல‌ இருந்து த‌ப்பிச்ச‌து ம‌ட்டுமில்லாம‌ எல்லோரும் சூப்ப‌ர்டான்னு சொல்ற‌ மாதிரி சீன‌ மாத்திட்டான். மொக்கை க‌தைக்கு செம‌ ஸ்க்ரீன்ப்ளே எழுதி எஸ் ஆயிட்டான் ப‌ப்லு.

_________________

ப‌ப்லு யாரென‌ கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு.. அக்கா பைய‌ன். அக்கா எப்ப‌டி பைய‌னா இருக்க‌ முடியும்ன்னு எல்லாம் யோசிக்காதீங்க‌. இந்த‌ ஜோக்க‌(?) நான் 2009லே அடிச்சிட்டேன்.

ப‌ப்லுவின் ஊருக்கு போயிருந்த‌ப்ப‌ எல்லோரும் நீங்க‌தான் கார்க்கியான்னு கேட்டாங்க. ச‌ரி,ப‌ப்லு ந‌ம்மள‌ ப‌த்தி பெருமையா சொல்லியிருக்கான் போல‌ன்னு நினைச்சேன். வீட்டு ஹாலில் கிட்ட‌த்த‌ட்ட‌ 20 பேர் இருந்த‌ப்ப‌ ப‌ப்லு இழுத்துட்டு போய் "நான் சொன்னேன் இல்லை. கார்க்கி மாமா . இவ‌ன் தான்"னு சொன்னான். ச‌ந்தோஷ‌மா சிரிக்க‌ நினைச்ச‌ப்ப‌ ப‌ப்லு அடுத்த‌ ட‌ய‌லாக்க‌ சொன்னான் "டேய் மாமா. உன் மொக்கைல‌ 2 சொல்லுடா. இவ‌ங்க‌ எல்லாம் ஜோக் சொல்றேன்னு க‌டுப்பேத்துறாங்க‌" .

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

_________________

ச‌ரி.இப்ப எதுக்கு ப‌ப்லு புராண‌ம்ன்னா நேத்து ப‌ய‌புள்ளைக்கு ப‌ர்த்டே. ஃபோட்டோ கேக் எல்லாம் ஆர்ட‌ர் ப‌ண்ணி ந‌ல்லா போச்சு. ட‌புள் ச்சீஸ் ப‌ர்ஸ்ட் போய், ட்ரிபிள் ச்சீஸ் ப‌ர்ஸ்ட்டா வ‌ந்துடுச்சாம் டொமினாஸ்ல‌. அதையும் ஃபுல்லா க‌ட்டியாச்சு. இதெல்லாம் போஸ்ட்ல‌ போட‌லைன்னா கொண்டேபுடுவேன்னு மிர‌ட்டினான். அதான்.. என்ன‌, இப்ப‌ முத‌ல் மேட்ட‌ர‌ ஏன்டா போட்டேன்னு அடிப்பான்.. இதெல்லாம் பார்த்தா தொழில் ப‌ண்ண‌ முடியுமா பாஸ்?

babloo B'day

9 கருத்துக்குத்து:

ஆரூரான் on November 30, 2011 at 10:11 AM said...

பப்லு சொன்ன மாதிரி நல்லாவே மொக்க போட்ருக்கீக

தாரணி பிரியா on November 30, 2011 at 10:20 AM said...

சூப்பர்ர்ர்ர்ர்ர் , ஹேப்பி பர்த்டே பப்லு

vanila on November 30, 2011 at 11:59 AM said...

Wish you a very happy B'day Bablu, So what if it is belated.

மோகன் குமார் on November 30, 2011 at 12:23 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் பப்லூ. ப்ளாக் எல்லாம் பாக்குறானா என்ன?

அமுதா கிருஷ்ணா on November 30, 2011 at 2:33 PM said...

பப்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கார்க்கி on November 30, 2011 at 3:03 PM said...

thanks to all

சுசி on November 30, 2011 at 4:18 PM said...

மீண்டும் வாழ்த்துகள் பப்லு.. நீங்க மாமனை மிஞ்சிய மருமகன்னு இப்பவே புரியுது :))

இரசிகை on December 1, 2011 at 9:12 AM said...

belated wishes...puplu

பட்டாம்பூச்சி on December 3, 2011 at 5:04 PM said...

Belated wishes to bablu :)
Indru pol endrum un maamanai imsai seivaayaaga.......

 

all rights reserved to www.karkibava.com